Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 3 September 2017

NEET destroys the Dream of Anitha - SFI, DYFI Protest...!

0 comments
காவுகேட்கும் மத்திய அரசு...காவுகேட்ட மாநில அரசு...! நீட் தேர்விலிருந்து விளக்கு அளிக்க தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய்யான தகவலை கொடுத்தார். தமிழக அரசும் நீட் தேர்விலிருந்து விளக்கு பெறுவோம் என்று கூறி லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை பறித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவ கல்வி கலந்தாய்வில் 196 . 5 சதவீத மதிப்பெண்கள் எடுத்தும் கூட நீட் தேர்வு காரணமாக அவரின் மருத்துவக்கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டு கனவாகியுள்ளது. இச்சூழலில் தன்னுடைய லட்சியம் கனவாகிய சூழலில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல அது "திட்டமிட்ட படுகொலை" என இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. கிராமப்புற ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவம் பயிலும் வாய்ப்பை திட்டமிட்டு மத்திய பா.ஜ.க அரசு பறித்துள்ளதை கண்டித்து தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொள்வோம். Read more...