Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 8 June 2015

Govt School Students are not a Laboratory...? CBSE only upto Class V - Sfi Puducherry...!

0 comments
The Chief Minister of Puducherry Mr N Rangasamy last year (2014 - 2015) announced that the Govt.of Puducherry wants to standardize the school education by following the CBSE Syllabus in all the Govt and aided schools. CBSE Syllabus were implemented upto Class I - V and later it will be extend upto X std in the year of 2019 - 2020. Unfortunately now the Government of Puducherry made an U - Turn from its stand by issuing a G.O. stating that in this academic year no CBSE Syllabus will be followed for the Class VI. Meanwhile Sfi slams the Pondicherry NR Congress for its retrograde action without making a discussion with the experts, teachers, student bodies, parents and the educationalists views and thoughts before taking a decision to change the Education System. It is ridiculous now the Govt of Puducherry withdrawn from its stand again the State Board syllabus will be followed in this current academic year 2015 - 16.

Is Govt School Students a Lab - Sfi Puducherry...?Upto class V CBSE Syllabus No CBSE Syllabus will be followed for class VI th...!

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.ஈ.பாடபிரிவு ரத்து - அரசு பள்ளி மாணவர்கள் சோதனை கருவிகளா? இந்திய மாணவர் சங்கம் கண்டனம்...!

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் மகாத்மா காந்தியடிகள். கடந்த ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டத்தை அமுல்படுத்தியது. அதன்படி கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டமும் படிப்படியாக 2015 - 16 கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு, ஏழு என பன்னிரெண்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் எனவும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டம் கடைபிடிக்கபடும் என அறிவித்தது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் தொடரப்படவேண்டும். மாறாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தற்போது மீண்டும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறையே தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் முறையே 2019 - 2020ல் ஆறாம் வகுப்பிற்கு வரும் போதுதான் சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டம் தொடரப்படும். அதுவரை அரசுபள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டமும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்விமுறையே பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு மாணவர்களின் கல்வி குறித்த கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என எந்த மட்டத்திலும் விவாதிக்காமல், அவசரகதியில் எந்தவித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டத்தை அமுல்படுத்தியது என்பது நாடுளுமன்ற தேர்தலுக்காகவோ என சந்தேகம் ஏற்படுகிறது. புதுச்சேரி அரசின் கொள்கையற்ற தன்மை என்பது ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவும் வேண்டுமென்றே அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சீரழிக்கவே வழிவகை செய்கிறது என இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

மேலும் புதுச்சேரி அரசு, மாணவர்களின் கல்வி கொள்கை குறித்து தொலைநோக்கற்ற தன்மை ஏதோ அரசு பள்ளி மாணவர்களை சோதனை கூட பரிசோதனை கருவிகளாக மாற்றியிருப்பது என்பது கடும் கண்டனதிற்க்குரியது என்பது மட்டுமல்ல இதனை கண்டித்து ஜனநாயக அமைப்புகளும் போராட்டம் நடத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் - புதுச்சேரி பிரதேச குழு கேட்டுக்கொள்கிறது.

அ. ஆனந்த்,
செயலாளர்,
இந்திய மாணவர் சங்கம்,
புதுச்சேரி பிரதேச குழு.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com