Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 20 June 2015

Sfi Tamilnadu - Puducherry 24th State Conference Logo Released @ Puducherry...!

0 comments
Students' Federation of India, Tamilnadu - Puducherry 24th State Conference holds at the Union Territory of Puducherry on 2015 Sep 4,5,6. Sfi Puducherry Pradesh Committee Secretary A Anand, Sfi Tamilnadu State Secretary J Rajmohan, Reception Committee Chairperson Educationalist J Krishnamoorthy released the Logo in a Press Meet held at Puducherry on 19/06/2015. Sfi Tamilnadu State Secretary J Rajmohan addressed the press conference explaining the motto of the conference in puducherry.

Press Release:-
கல்வி வணிகமயத்திற்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில மாநாடு...!
       கல்வி வணிகமயதிற்க்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில 24வது மாநாடு இன்றைய கல்வி பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கும் வகையில் வரும் 2015 செப் 4,5,6 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் எழுச்சியோடு நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கல்வி வணிகம் மிகவும் உச்சத்தில் உள்ளது. ஆரம்ப கல்வி துவங்கி உயர்கல்வி வரை பெரும் வணிகமயமாகியுள்ளது. கல்வி உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த பின்னும் இச்சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். ஆகவே கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் எனவும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளை உறுதியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு தடுத்திட வேண்டும்.

       தனியார் கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை தடுக்கப்படவேண்டும். புதுச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை துவங்குவதோடு, முதுகலை பாடப்பிரிவுகளையும் கல்லூரிகளில் புதுச்சேரி அரசு துவங்கிட வேண்டும். பள்ளிகல்வியில் தொடர் குழப்பத்தை ஏற்படுத்தாமல் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தை தாய்மொழி வழியில் வழங்குவதை புதுச்சேரி அரசு உறுதி செய்திட வேண்டும்.
       மத்திய அரசின் காவிமய நடவடிக்கைக்கு எதிராகவும் மத்திய மாநில அரசுகள் பொதுக்கல்வியை பலப்படுத்த வேண்டும், கல்விக்கு உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமும், பட்ஜெட்டில் 10 சத்தமும், மாநில பட்ஜெட்டில் 30சதமும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டினை உறுதி செய்திட வேண்டுமெனவும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகின்றது. இந்த கோரிக்கை முழக்கங்களை வலியுறுத்துகின்றது. இந்த கோரிக்கை முழக்கங்களை முன் வைத்து இம்மாநாடு நடைபெற உள்ளது.
       இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு 200 பேர் கொண்ட மாநாட்டை வர்வேர்ப்புக்குழு அமைக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. அதன் முதன் நிகழ்வாக இன்று மாநாட்டு சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டையொட்டி பள்ளி கல்வி குறித்தும் உயர்கல்வி குறித்தும் சமூக பிரச்சனைகள் குறித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் கலைவிழாக்கள், பல்லாயிரக்கனக்கான மாணவர்கள் பங்கேற்கும் போதை எதிர்ப்பு மினி மராத்தான் போட்டிகள் புதுச்சேரி மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
          கல்வி வரலாறு குறித்த கண்காட்சியும் புதுவையில் நடைபெற உள்ளது, மேலும் மாற்று கல்வி குறித்தும் சமூக பிரச்சனைகள் குறித்தும் 10 புத்தகங்கள் வெளிவர உள்ளன. இம்மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட மாணவ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். புகழ்பெற்ற கல்வியாளர்களும் மாணவர் இயக்க அகில இந்திய தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர். செப்டம்பர் 4இல் இலட்சம் மாணவர்கள் பங்கேற்கும் மாணவர் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகின்றன.
            இன்றைய கல்வி சூழலில் நல்ல மாற்றத்தை உருவாக்கிட நடைபெறும் இம்மாநாட்டு நடவடிக்கைகளை, செய்திகளை வெளியிட்டு உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இப்பதிரிக்கையாளர் சந்திப்பில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஜோ.ராஜ்மோகன், வரவேற்பு குழு கௌரவ தலைவர் முனைவர்.க.பஞ்சாங்கம், புரவலர்கள் எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர்.லெனின் தங்கப்பா, தா.முருகன், சி.எச்.பாலமோகன், வரவேற்ப்பு குழு தலைவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, வரவேற்ப்பு குழு செயலாளர் ஆனந்த், பொருளாளர் கதிரவன்.
இச்செய்தியினை தங்கள் பத்திரிக்கை/ தொலைகாட்சியில் வெளியிடுமாறு கேட்டுகொள்கிறோம்.
அ. ஆனந்த்,                                          ஜோ.ராஜ்மோகன்,
இந்திய மாணவர் சங்கம்,                  இந்திய மாணவர் சங்கம்,
புதுவை பிரதேச செயலாளர்              தமிழ்மாநில செயலாளர்
Read more...
Monday, 8 June 2015

Govt School Students are not a Laboratory...? CBSE only upto Class V - Sfi Puducherry...!

0 comments
The Chief Minister of Puducherry Mr N Rangasamy last year (2014 - 2015) announced that the Govt.of Puducherry wants to standardize the school education by following the CBSE Syllabus in all the Govt and aided schools. CBSE Syllabus were implemented upto Class I - V and later it will be extend upto X std in the year of 2019 - 2020. Unfortunately now the Government of Puducherry made an U - Turn from its stand by issuing a G.O. stating that in this academic year no CBSE Syllabus will be followed for the Class VI. Meanwhile Sfi slams the Pondicherry NR Congress for its retrograde action without making a discussion with the experts, teachers, student bodies, parents and the educationalists views and thoughts before taking a decision to change the Education System. It is ridiculous now the Govt of Puducherry withdrawn from its stand again the State Board syllabus will be followed in this current academic year 2015 - 16.

Is Govt School Students a Lab - Sfi Puducherry...?Upto class V CBSE Syllabus No CBSE Syllabus will be followed for class VI th...!

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.ஈ.பாடபிரிவு ரத்து - அரசு பள்ளி மாணவர்கள் சோதனை கருவிகளா? இந்திய மாணவர் சங்கம் கண்டனம்...!

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் மகாத்மா காந்தியடிகள். கடந்த ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டத்தை அமுல்படுத்தியது. அதன்படி கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டமும் படிப்படியாக 2015 - 16 கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு, ஏழு என பன்னிரெண்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் எனவும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டம் கடைபிடிக்கபடும் என அறிவித்தது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் தொடரப்படவேண்டும். மாறாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தற்போது மீண்டும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறையே தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் முறையே 2019 - 2020ல் ஆறாம் வகுப்பிற்கு வரும் போதுதான் சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டம் தொடரப்படும். அதுவரை அரசுபள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டமும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்விமுறையே பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு மாணவர்களின் கல்வி குறித்த கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என எந்த மட்டத்திலும் விவாதிக்காமல், அவசரகதியில் எந்தவித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் சி.பி.எஸ்.ஈ.பாடத்திட்டத்தை அமுல்படுத்தியது என்பது நாடுளுமன்ற தேர்தலுக்காகவோ என சந்தேகம் ஏற்படுகிறது. புதுச்சேரி அரசின் கொள்கையற்ற தன்மை என்பது ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவும் வேண்டுமென்றே அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சீரழிக்கவே வழிவகை செய்கிறது என இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

மேலும் புதுச்சேரி அரசு, மாணவர்களின் கல்வி கொள்கை குறித்து தொலைநோக்கற்ற தன்மை ஏதோ அரசு பள்ளி மாணவர்களை சோதனை கூட பரிசோதனை கருவிகளாக மாற்றியிருப்பது என்பது கடும் கண்டனதிற்க்குரியது என்பது மட்டுமல்ல இதனை கண்டித்து ஜனநாயக அமைப்புகளும் போராட்டம் நடத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் - புதுச்சேரி பிரதேச குழு கேட்டுக்கொள்கிறது.

அ. ஆனந்த்,
செயலாளர்,
இந்திய மாணவர் சங்கம்,
புதுச்சேரி பிரதேச குழு.
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com