Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 23 August 2014

No Permanent Building for College in CM Constituency - SFI Strike...!

0 comments
 No permanent Building for Govt Arts College in CM Constituency - SFI Strike on 22/08/2014...!

Sfi Puducherry Indira Gandhi Arts and Science College Unit staged a protest demanding permanent building for college, to fulfill basic facilities. Morethan 500 students boycotted the class, gathered in front of the college and raising slogans against the Higher Education Department and the Ruling party. Sfi Puducherry State Secretary Com. A Anand, Joint Secretary Jeeva Ranjith greets the struggle.

முதலமைச்சர் தொகுதியில் 12 வருடமாக அரசு கல்லூரிக்கு சொந்த கட்டிடம் இல்லை -  இந்திய மாணவர் சங்கம் போராட்டம்...!

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளி கட்டிடத்தில் இயங்கிவருகிறது. இக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசின் சார்பாக 2005ம் ஆண்டு கல்லூரி அருகே 6-1/2 ஏக்கர் நிலம் கையகபடுத்தபட்டதோடு எந்த பணிகளும் துவங்கப்படவில்லை. தற்போது கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இடநெருக்கடி அதிகமாகவே கல்லூரி நடைபெறும் ஒருபகுதியில் பள்ளிக்கென கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிவழியாக செல்லும் கழிவுநீர் வாய்க்கால் காரணமாக ஏற்படும் துர்நாற்றத்தால் வகுப்பறைக்குள் நாற்றம் வீசுவதால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறது. இதனால் வெயில் காலங்களில் மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். கொழிபன்னைகள் போல் ஆஸ்பெட்டாஸ் கூரையின் கீழ் வகுப்பறைகள் இயங்குவதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கண் எரிச்சல், தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டில் இக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை துவங்கவேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்  என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் ஜீவா ரஞ்சித் கண்டன உரையாற்றினர். மேலும் கதிர்காமம் கலை அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகளை துவங்கும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் - புதுச்சேரி அரசுக்கும், உயர்கல்விதுறைக்கும் தெரிவித்துகொள்கிறது.
Read more...
Tuesday, 12 August 2014

Fulfill Teachers Vacancies - SFI School Unit organises a token strike...!

0 comments


Sfi Puducherry - Bahoor Area Committee organises a strike in Karaiyamputhur Government Higher Secondary School on Tuesday 12/08/2014 to fulfill the Teachers Vacancies, basic facilities. The protest led by the SFI State Secretariat member and the Area Committee Secretary Com. Jeyaraj and DYFI State Secretary Com. P Saravanan.


புதுச்சேரி கல்வி அமைச்சர் தொகுதியில் தொடரும் அரசுப் பள்ளி அவலங்கள் –
இந்திய மாணவர் சங்க போராட்டம்



புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூர் அரசு மேனிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது, மாணவிகளுக்கான கழிப்பறை வசதியின்மை, தரமற்ற மதிய உணவு, சுகாதாரமற்ற குடிநீர் வசதி ஆகியவற்றை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் பாகூர் கொம்யூன் செயலாளர் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 12.08.2014 அன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் ப. சரவணன் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் மாணவர் சங்க நிர்வாகிகள் கௌசிக், பாஸ்கரன், அஜித் அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி துணை முதல்வர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களுக்குள் பிரச்சனைகளை தீர்வு காண்பதாக சொல்லியதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்தில் வகுப்புகளை புறக்கணித்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Read more...
Friday, 1 August 2014

Students Protest made the Govt to Withdraw Fees Hike in Law College, Puducherry...!

0 comments

PUDUCHERRY: Students of Dr B R Ambedkar Government Law College boycotted classes and  protested against the hike in fees during the current academic session from Rs 750 to Rs 3,500.
Stating that the hike was enormous and adversely affected the students, particularly those from lower economic strata of society, they sought withdrawal of the hike. The students led by Anand, secretary of Students Federation of India and Swaminathan, secretary Students Association came to the Legislative Assembly and called on CM N Rangasamy at his chamber and discussed the issue. The students called off their strike after the Chief Minister assured them that he would consider fixing the fee at Rs 1,000 instead of Rs 3,500, said Anand.
The college has a strength of around 1,200.
புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டண உயர்வை கண்டித்து சட்டமன்றம் முற்றுகை :-
புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் மொத்தம் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைந்த கல்விகட்டனத்தில் சட்டக்கல்வியை பயின்று வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஜூலை 29ம் தேதி தீடீரென சட்டகல்லூரியின் கல்வி கட்டணம் நடப்பு கல்வி ஆண்டில் 740 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்தி புதுச்சேரி உயர்கல்வித்துறை உத்தரவிட்டதை கண்டித்து 2வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க செயலாளரும் சட்டகல்லூரியின் இறுதி ஆண்டு மாணவருமான தோழர் ஆனந்த், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் தோழர் சரவணன், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் ஆகியோர் சட்டக்கல்லூரி மாணவர்களோடு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் சட்ட மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று 2500 ரூபாய் குறைத்து 1000 ரூபாய் மட்டுமே கல்விக்கட்டணம் என்று அறிவித்தார். முதலமைச்சர் கல்விகட்டன உயர்வை நியாபடுத்தி பேசிய போதும் மாணவர்களின் போராட்டத்தால் உயர்த்தப்பட்ட கல்விக்கட்டணம் குறைக்கப்பட்டது. இது மாணவர்களின் ஒன்று பட்ட போராட்த்திற்கு கிடைத்த வெற்றி என இந்திய மாணவர் சங்கம், புதுச்சேரி பிரதேச குழு கருத்து தெரிவித்துள்ளது.
Press Links;-
http://www.newindianexpress.com/states/tamil_nadu/Law-College-Students-Protest-Fee-Hike/2014/08/01/article2358730.ece 
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com