Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 11 July 2014

All College Strike - Reservation for Pondicherry Students in University - SFI, DYFI...!

0 comments

Students Federation of India and Democratic Youth Federation of India, Puducherry Pradesh Committee gives a call for a all college strike on 10th July, 2014 demanding the Pondicherry Central University to give reservation of 25% for the pondicherry students in all the departments. Mean while the University is providing 25% reservation for the students of pondicherry only in 16 out of 54 departments. We the SFI - DYFI jointly calls a protest to give 25% of regional reservation in all the departments of University as assured by the University when its established on 1985. And also demanded the MHRD Ministry for immediate intervention against the irregularities of the present Vice - Chancellor Mrs. Chandra Krishnamurthy is appointed in Pondicherry University. To fulfill the 159 Lecturers vacancies in all the government arts and science colleges throughout the State. SFI Calls for a statewide strike. Morethan 15,000 students from Tagore Arts College, Indira Gandhi Arts and Science College, Pondicherry University Community College, Motilaal Nehru Government Polytechnic, Government Womens Polytechnic, Madagadipet Perunthalaivar Kamarajar Arts and Science College, Thavalakuppam Rajiv Gandhi Arts and Science College, Bharathidasan Govt Womens Colleges were boycotted the class in the state wide protest call by SFI. Nearly 400 Students of various colleges assembled near the Pondicherry University Vice - Chancellor residence started procession and raising slogans against the University Vice-Chancellor Mrs. Chandra Krishnamurthy irregularities and administration lapses, hitting the roads of University. SFI & DYFI activists made a protest in front of the University Gate No.1, later arrested by the police.


புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் 1985 ல் துவங்கிய போது புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.  பல புதிய துறைகளில் 25% இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.  தற்போதுள்ள 54 துறைகளில் 16ல் மட்டுமே 25% புதுச்சேரி மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படுகிறது.  இதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய 560 இடங்கள் பறிக்கப்படுகிறது.  இது மாணவர்களின் உரிமையை பறிக்கிறமாநில வளர்ச்சியை தடுக்கிற துரோகமாகும்.

             
         பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி. சந்திரா கிருஷ்ணமூர்த்தி (1.2.2013) பொறுப்பேற்றது முதல் பல்கலைக்கழகத்தின் நிர்வாகமும்கல்விச்சூழலும் சீர்கெட்டுவருகிறது.  பல்கலைகழகத்தின் தரமும்மதிப்பும் குறைந்துவருகிறது.  குறிப்பாக பாலியல் சீண்டல் - ராக்கிங் கொடுமைக்கு உள்ளான மாணவிகள் மீதே நடவடிக்கைசந்தேகத்தின் பேரில் மாணவர் ராதாகிருஷ்ணனை பேராசிரியர்கள் அரிஹரன்பூ­ன்தாகர் மற்றும் பாதுகாவலர்களால் 27 மணிநேரம் தனிமை சிறைபிடித்துசித்ரவதைவிதிமுறைகளை மீறி ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ராமபத்திரன் சட்ட ஆலோசகராக நியமனம்துணைவேந்தரின் முறையற்ற நடவடிக்கைகளை ஆட்சேபிக்கும் பல்கலைக்கழக பதிவாளரை நீக்க முயற்சிசிபிஐ குற்ற வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியர் அரிஹரனுக்கு சகல பொறுப்பும்அதிகாரமும் வழங்கல்நியாயம் கேட்கும் பேராசிரியர்கள்அதிகாரிகள்ஊழியர்கள் பணியிடமாற்றம்முறையற்ற நியமனங்கள்முறையற்ற செலவீனங்கள் என காட்டுத்தர்பார் நடத்துகிறது.  புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்குவதிலும் கபட நாடகத்தை அரங்கேற்றிவருகிறது. 
           
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் துவங்கும்போது 50% இட ஒதுக்கீடு அளிப்பதாக உறுதியளித்தன.  ஆனால் உறுதியளித்தபடி எந்த மருத்துவக்கல்லூரியும் 50% இடஒதுக்கீடு வழங்கவில்லை.   ஒவ்வொரு ஆண்டும் 36 மருத்துவ இடங்களை வழங்கி பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மதச்சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று சொல்லி அர• ஒதுக்கீட்டை வழங்க மருத்துவருகிறது.  சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி புதுச்சேரி மாநில உரிமையை பறிப்பதை அனுமதிக்க முடியாது.
           
            புதுச்சேரியில் உள்ள அர• கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறிப்பாக பாரதிதாசன் மகளிர் கல்லூரிதாகூர் கலைக்கல்லூரிகதிர்காமம்தவளக்குப்பம்மதகடிப்பட்டு கல்லூரிகளில் 159 -க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளது. கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  
                                                           
             ஆகவேபுதுச்சேரி பல்கலையில் 25% இடஒதுக்கீடு பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதுபிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 50% அர• இட ஒதுக்கீடு பெறஅர• கல்லூரிகளில் காலியாக உள்ள விரைவுரையாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி நடைபெறும் மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் அனைத்து மாணவர்களும்இளைஞர்களும்பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.

       ஆகவே, புதுச்சேரி பல்கலையில் 25% இடஒதுக்கீடு பல்கலைக்கழகத்தை பாதுகாப்பது,  பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 50% அர• இட ஒதுக்கீடு பெற, அர• கல்லூரிகளில் காலியாக உள்ள விரைவுரையாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி நடைபெறும் போராட்டத்தில் புதுச்சேரி  முழுவதும் உள்ள தாகூர் கலைகல்லூரி, மோதிலால் நேரு, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, வில்லியனூர் கஸ்தூரிபாய் பெண்கள் கல்லூரி, மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஜர், தவளகுப்பம் ராஜிவ்காந்தி, கதிர்காமம் இந்திரா காந்தி, சமுதாய கல்லூரி, பாரதியார் பல்கலைகூடம் உள்ளிட்ட 10கல்லூரிகலை சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு எதிராக புதுச்சேரி மாநில முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சருக்கும், பல்கலைகழக நிர்வாக சீர்கேடு குறித்து புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர்  ஆகியோருக்கு புகார் மனுக்களை அனுப்புகிறோம். இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க  -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர்கள் ரஞ்சித், சரவணன் தலைமையில் இந்திய மாணவர் சங்க, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த், சரவணன் முன்னிலையில் பல்கலைகழகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.



                                          நன்றி,

செயலாளர்(SFI)                                                              செயலாளர்(DYFI)

அ. ஆனந்த்                                                                     ப. சரவணன். 

News Paper Links:-

http://www.thehindu.com/news/cities/puducherry/college-students-boycott-classes-demanding-25-pc-quota/article6200400.ece 

http://timesofindia.indiatimes.com/city/puducherry/Students-boycott-classes-demanding-reservation-in-Pondicherry-University/articleshow/38212710.cms 

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=342352&cat=504 

          

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com