Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 30 June 2014

Run Extra Buses in Rural for School Students - SFI Blocked the Roads...!

0 comments
Students Federation of India - Bagour Commune Committee, Puducherry blocked the roads in Education Minister Mr. T Thiyagarajan Constituency to run extra special buses for the school students in the rural areas. Morethan hundreds of school students participated in the protest.

புதுச்சேரி கல்வி அமைச்சர் தொகுதியில் கூடுதல் பேருந்து இயக்க கோரி போராட்டம்...!                                                                           
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த மாணவர் சிறப்பு பேருந்து பள்ளிதுவங்கியது முதல் கரையாம்புதூர் முதல் பாகூர் வரை செல்லகூடிய பேருந்து  இயக்கபடாதால் கடந்த 2 வாரமாக 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பேருந்துகளில் சென்றுவருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த மாணவர் சிறப்பு பேருந்து நடப்பு கல்வி ஆண்டு முதல் இயக்கபடாததை கண்டித்து உடனடியாக இயக்க கோரி இந்திய மாணவர் சங்கம் - பாகூர் இடைகமிட்டி சார்பாக கடுவனூரில் இன்று (17/06/2014) காலை 8.30 மணிக்கு மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தை நடைபெற்றது. இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் சரவணன், பாகூர் இடைகமிட்டி இந்திய மாணவர் சங்க செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்த், து.தலைவர் ரஞ்சித் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் திவானந்த்,பிரஷாந்த், கெளசி, கெளதம் ஆகியோர் பங்கேற்றனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொரடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதுச்சேரி கல்வியமைச்சர் தொகுதியிலேயே நூற்றுகணக்கான மாணவர்கள் பயணித்து வந்த கரையாம்புத்துர் முதல் பாகூர் வரை இயக்கப்பட்டு வந்த  மாணவர் சிறப்பு பேருந்து உடனடியாக இயக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் - பாகூர் இடைகமிட்டி சார்பாக போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com