Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 15 June 2014

Common platform to Implement RTE act in Puducherry - Students, Youths and Social Forum...!

0 comments
Students' Federation of India & Democratic Youth Federation of India - Puducherry Pradesh Committee jointly organize a meeting of All Students Union and Social Forums at the Confederation of State Government Employees office on 14th June, Saturday, 2014. As a special invitee, Justice M. David Annoussamy, retired judge of Madras High Court explained about the importance of Right to Education act and why there is a need of students and social forums to form a Common Platform to intensify the struggle to implement the RTE Act in Puducherry. In this meeting various students and social organisations joined their hands for a sustained struggle which is initiated by the "Common Platform for RTE". Students wing incharge SP Manimaran from DMK( Dravida Munnetra Kazhagam - ), AISF ( All India Students' Federation ) Puducherry State Secretary Ezhilarasan, PSF ( Puducherry Students Federation ) Saaminathan, Parents - Teachers welfare association Baala, Educationalists and Puducherry Education Protection Committee President J Krishnamurthy, SFI ( Students Federation of India ) Puducherry State Secretary A Anand, DYFI ( Democratic Youth Federation of India ) State Secretary P Saravanan, Puducherry Science Forum activists and the Educationalist R Datchinamoorthy and many other student organisation give assurance that from the next meeting all other students and social organisations will join their hands with us. And various resolutions were passed.

புதுச்சேரி கல்வி உரிமை சட்டத்துக்கான பொது மேடை...! 

இந்திய மாணவர் சங்கம்(SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) தலைமையில் கல்வி உரிமை சட்டத்தை புதுச்சேரியில் அமுல்படுத்துவது குறித்து அனைத்து மாணவர் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய பொது மேடை அமைப்பது குறித்து புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அனைத்து ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளடக்கிய   "கல்வி உரிமை சட்டத்துக்கான பொது மேடை" உருவாக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. தாவீத் அன்னுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கல்வியாளரும், புதுச்சேரி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க து.தலைவர். இரா.தட்சிணாமூர்த்தி, விஜயமுர்த்தி, பெற்றோர் - மாணவர் நல சங்கம் பாலா,  தி.மு.க.மாணவரணி சார்பில் மணிமாறன் (DMK STUDENT WING), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் செயலாளர் எழில்(AISF), புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சாமிநாதன்(PUTSF), தலைவர் அழகுமுருகன், இந்திய மாணவர் சங்கத்தின்(SFI) செயலாளர் ஆனந்த், து.தலைவர் ரஞ்சித், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) செயலாளர் சரவணன், தலைவர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

*ஏழை மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி நடப்பு கல்வி ஆண்டே தனியார் பள்ளிகளில் கீழ் 25% இடஒதுக்கீட்டை உறுதிபடுத்த வேண்டும்.

*உச்சநீதிமன்ற ஆணை படி 90% சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மட்டுமே சிறுபான்மை பள்ளிகள் என்று வரையரைத்துள்ளது. ஆகவே புதுச்சேரியில் எந்தெந்த தனியார் பள்ளிகள் 90% சிறுபான்மை சமுதாய மாணவர்களை கொண்டு இயங்குகிறது என்பதை புதுச்சேரி கல்வித்துறை வெளியிடவேண்டும். புதுச்சேரியில் சிறுபான்மை பள்ளிகள் எவை என்பதை உச்சநீதிமன்ற வழிகாட்டலோடு புதுச்சேரி கல்வித்துறை அதன் பட்டியலை வெளியிட வேண்டும்.

*புதுச்சேரி கல்வித்துறை 2011 ம் ஆண்டு அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் "கட்டாய கல்வி உரிமை சட்டத்தை" நடப்பு கல்விஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்று அறிவித்துவிட்டு இது வரை அச்சட்டத்தை நிறைவேற்றாததன் காரணம் என்ன என்பதை பொதுமக்களுக்கு தெரியபடுத்தவேண்டும்.

*புதுச்சேரி கல்வித்துறை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அருகாமை பள்ளிகளுக்கான வரைபடத்தை உடனே வெளியிடவேண்டும்.

*தனியார் பள்ளிகளில் அதிகமாக வசூலிக்கப்படும் நன்கொடை மற்றும் கல்விகட்டணத்தை முறைபடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும்.

*கட்டாய கல்வி உரிமை சட்டத்தை புதுச்சேரியில் அமுல்படுத்த புதுச்சேரி கல்வித்துறை இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

மேற்கூறிய தீர்மானங்கள் புதுச்சேரி கல்வி உரிமை சட்டத்துக்கான பொது மேடை நிறைவேற்றப்பட்டது. 

இப்போது மேடைக்கு ஓய்வுபெற்ற கல்வியாளர் - ஜே.கிருஷ்ணமூர்த்தி கன்வீனராகவும், து.ஒருங்கினைப்பாளர்களாக தட்சிணாமூர்த்தி - புதுச்சேரி அறிவியல் இயக்கம், மணிமாறன் - தி.மு.க.மாணவரணி, எழில் - அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அழகுமுருகன் - புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு, சரவணன் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பாலா - பெற்றோர் மாணவர் நல சங்கம், ஆனந்த் - இந்திய மாணவர் சங்கம் தேர்ந்தேடுக்கபட்டனர். மேலும் பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் இவ்வமைப்பில் அடுத்து நடக்க இருக்கும் போராட்டங்களில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர்.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/common-platform-formed-to-fight-for-rte-act-implementation/article6116053.ece

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com