Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 30 May 2014

Implement RTE in Puducherry - SFI, DYFI protest...!

0 comments

SFI - DYFI jointly made a protest in front of school education department in Puducherry on 29th may, 2014. 
*To implement Right to Education Act in this academic year in pondicherry...
*To regularize the fees of private self financing schools in Puducherry...
*To fulfill the basic facilities & teachers vacancies in government schools...
*To constitute a separate school education for Puducherry...
*To implement reservation for Government school students in Government Medical & Engineering colleges...
*To get 50% of Government reservation in Private Self Financing medical colleges...
The school education director Mr.Vallavan says that soon the government of puducherry will implement the RTE act in this academic year and demands which are raised by the Sfi - Dyfi will be fulfilled soon...! 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி புதுச்சேரியில் கல்வித்துறை இயக்குநர் முற்றுகை...!


புதுச்சேரி,மே 29- 2014.
புதுச்சேரியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கல்வித்துறை இயக்குநரை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னர்.


தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2010 கீழ் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 விழுக் காடு அரசு இட ஒதுக் கீட்டை அமல்படுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங் களில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடையை தடுத்து நிறுத்த வேண்டும். கட்டணங்களை முறை படுத்த உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் இந்த ஆண்டே கட்டண நிர்ணய குழுவை அமைத்திட வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும். அரசுப் பள்ளி களில் ஆசிரியர் பற்றாக் குறையைப் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் எதிரில் உள்ள கல்வித்துறை அலு வலகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித், வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து, டிஒய் எப்ஐ பிரதேச செயலாளர் பி.சரவணன் நிர்வாகிகள் பாஸ்கர், ஜெயராஜ், சத்தியா, ஜெயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கல்விதுறை இயக்குனர் வல்லவனை முற்றுகையிட்ட மாணவர்களிடம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட் டத்தின் கீழ் தனியார் பள்ளி களில் 25 விழுக்காடு இடத் தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்ததை தொடர்ந்து மாணவர்கள்முற்றுகைபோ ராட்டத்தை கைவிட்டனர்.
                                                                                                 நன்றி: தீக்கதிர் 




Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com