Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 30 March 2014

Sfi Puducherry " Protesting against Injustice " - High Court of Madras...!

2 comments

The Hon'ble High Court of Madras states that the members of SFI - Students Federation of India " Protest against Injustice" of Indecent behavior of school teacher in a molestation case against a girl student, while the petition filed by the Sfi Leaders for granting Anticipatory Bail Justice Devdass mentioned in the order. Moreover complaint given against the Sfi Puducherry leaders by the school teacher's sister is alleged that as a Counter Blast against the protestors who raised their voice for justice. 



"பாலியல் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் - அநீதிக்கு எதிரான போராட்டமே" என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு...!

புதுவை மாநிலத்தில் ஆரம்பபள்ளி முதல் பல்கலைகழகம் வரை மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளநிலையில், இந்திய மாணவர் சங்கம் இக்கொடுமையினை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. சில நாட்களுக்கு முன் சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் விரிவுரையாளர் சுப்ரமணியன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததை கண்டித்து கடந்த 14/03/2014 அன்று இந்திய மாணவர் சங்கம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மேற்கண்ட விரிவுரையாளரின்  வீட்டினை முற்றுகையிட்டு போராடியது. அநீதிக்கு எதிராக போராடுபவர்களை  பொய் வழக்கின் மூலம் ஒடுக்கி விடலாம் என்கிற எண்ணத்தில்    இப்போராட்டத்தினை கொச்சை படுத்தும் விதமாக இலாசுபேட்டை காவல் நிலைய ஆய்வாளரின் உத்தரவுபடி இந்திய மாணவர் சங்க தலைவர்கள் மீது ஒரு பொய் வழக்கு தொடரப்பட்டது.

இப்பொய்வழக்கில்இந்திய மாணவர் சங்க தலைவர்களுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி அளித்துள்ள உத்தரவில், "இந்திய மாணவர் சங்கத்தின் இப்போராட்டம் அநீதிக்கு எதிரான போராட்டம்" என்றும்,மேலும் "குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள புகார் போராடிய மாணவர்களின் மீதுள்ள வெறுப்பினால் அளிக்கப்பட்டது" என்றும் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இக்கருத்து ஜனநாயக வழியில் அநீதிக்கு எதிராக போராடும் அனைவருக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் என்று இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது. மேலும் இந்த உத்தரவு, பொய் வழக்கின் மூலம் அநீதிக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்க நினைக்கும் லாசுபேட்டை காவல்நிலைய ஆய்வாளரின் எண்ணத்திற்கு கிடைத்த சவுக்கடி என இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் மாணவிகள் இனியும் இக்கொடுமைகளை சகித்துக்கொள்ளாமல் அநீதிக்கு எதிராக போராடும்படி இந்திய மாணவர் சங்கம் அறைகூவல்விடுகின்றது. மேலும் இது சம்பந்தமாக இந்திய மாணவர் சங்கத்திடம் புகார் அளித்தால், குழந்தைகள் நலக்குழு மூலமாக பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் வெளிவராமல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறது. இந்திய மாணவர் சங்க தலைவர்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்  திரு. ஸ்டாலின் அபிமன்யு அவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேசகுழு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறது.

 தலைவர்                                                               செயலாளர்
எஸ்.அருண்குமார்                                               அ.ஆனந்த்

29/03/2014.




2 Responses so far.

  1. HAT OF TO SFI --GOOD- SUCH A WAY A CASE HAS BEEN filed against in Namakkal district also-For representing unrecognized college students issue the SFI NAMAKKAL DT PRESIDENT A.T.Kannan proceeded a delegation to collector- The private colleges issues were taken by the Namakkal dt SFI IN THE PAST- SO they gave money to police and a police Inspector himself gave a complaint and harassed the dt president- compelled him to give a Rs 50000/ bond for release-Now the case is in the madras HC -Mr.Senthil nathan Lawyer is attending
    ---vimalavidya

  2. thanks a lot for being a reader of sfi website and comments...! keep in touch with us...!

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com