Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 15 March 2014

Sfi Puducherry filed a complaint of Molestation involving male teacher...!

0 comments

Yet another complaint of  molestation involving a male teacher of a Government Girls Higher Secondary School has been reported here on Thursday.


The economics teacher, Subramanian (51), of Suseela Bai Govt Girls Higher Secondary School on Vysial Street allegedly attempted to molest two Class XII students a couple of days ago. The victims approached the Child Welfare Committee and gave a complaint.

MEMORANDUM :- 

பொருள்:- அரசு பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் வல்லுறவு - ஆசிரியர் மீது நடவடிக்கை கோருதல் தொடர்பாக.


மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்! புதுச்சேரி நகர பகுதியில் உள்ள வைசியாள் வீதி, சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் கடந்த சனிக்கிழமையன்று ( 09/03/2014) சிறப்பு வகுப்பு என்று சொல்லி அதே பள்ளியில் பணிபுரிய கூடிய பொருளாதார ஆசிரியர் சுப்ரமணியன் என்பவர் மாணவிகளை பள்ளிக்கு வரசொல்லியுள்ளார். மேற்படி அவர் சொல்கேட்டு பள்ளிக்கு வந்த ஐந்து மாணவிகளில் மூன்று மாணவிகளை ஒரு வகுப்பறையிலும், மீதம் உள்ள இரண்டு மாணவிகளை தனித்தனியாக வெவ்வேறு வகுப்பறைகளிலும் அமர்ந்து படிக்கச்சொல்லியுள்ளார். அப்போது தனியாக ஒரு வகுப்பறையில் படித்திருந்த மாணவியருகே சென்ற ஆசிரியர் சுப்ரமணியன் அவர்கள் திடீரென்று தவறான முறையில் அம்மாணவியிடம் அணுகி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அவரின் இச்செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி தன்னை விடுவித்து கொள்ள கடுமையாக போராடியுள்ளார். பின் தன் கையில் இருந்த பென்சிலை பயன்படுத்தி அவரை தாக்கிய போதும் கூட அவர் மாணவியை விடாமல் தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்துள்ளார். கடும் போராட்டத்திற்கு பின் அவரை தள்ளி விட்டு மாணவி தன்னை விடுவித்து கொண்டுள்ளார். ஆசிரியரின் ஈனச்செயலால் பாதிக்கப்பட்டு கதறி அழுத மாணவியிடம் அந்த ஆசிரியர் நன்றி என்று சொல்லிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் அவர் பல மாணவிகளிடம் தவறான முறையில் அணுகியுள்ளார் என்று எங்களுக்கு புகார் வந்துள்ளது. தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகள் பலர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மேற்படி ஆசிரியரால் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மாணவிகளிடம் பாலியல் உறவுகளுக்கு அழைப்பது, ஆபாசமாக திட்டுவது, மேற்படி சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்களை தேர்ச்சி பெறாமல் செய்துவிடுவேன் என்றும், நீங்கள் தவறான மாணவிகள் என்று உங்களை சித்தரித்து பிற மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் இருந்து தனிமை படுத்தி அவமானபடுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார். எனவே மாணவிகளிடம் அத்துமீறியும், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றும், ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தியும், மாணவிகளை சீரழிக்க முயலும் ஆசிரியர் சுப்ரமணியன் மீது தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் அவரை பணியை விட்டு நீக்கிடவும், கைது செய்து சிறையில் அடைக்குமாறும் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பாக கேட்டுகொள்கிறோம். மேலும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுகொள்கிறோம். ஆகவே உச்சநீதிமன்றம் விசாகா மற்றும் ராஜஸ்தான் அரசு ஆகியவற்றுக்கு இடையிலான வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தடைசட்டத்தின் கீழ் ஆசிரியர் சுப்ரமணியனை கைது செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பாக கேட்டுகொள்கிறோம்.

news paper links:-
http://timesofindia.indiatimes.com/city/puducherry/Yet-another-Puducherry-teacher-accused-of-molesting-schoolgirls/articleshow/31956176.cms 

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Molestation-Charge-on-One-More-Teacher/2014/03/14/article2108081.ece#.UyNKYmf7ndg.facebook





Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com