Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 30 March 2014

Sfi Puducherry " Protesting against Injustice " - High Court of Madras...!

2 comments

The Hon'ble High Court of Madras states that the members of SFI - Students Federation of India " Protest against Injustice" of Indecent behavior of school teacher in a molestation case against a girl student, while the petition filed by the Sfi Leaders for granting Anticipatory Bail Justice Devdass mentioned in the order. Moreover complaint given against the Sfi Puducherry leaders by the school teacher's sister is alleged that as a Counter Blast against the protestors who raised their voice for justice. 



"பாலியல் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் - அநீதிக்கு எதிரான போராட்டமே" என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு...!

புதுவை மாநிலத்தில் ஆரம்பபள்ளி முதல் பல்கலைகழகம் வரை மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளநிலையில், இந்திய மாணவர் சங்கம் இக்கொடுமையினை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. சில நாட்களுக்கு முன் சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் விரிவுரையாளர் சுப்ரமணியன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததை கண்டித்து கடந்த 14/03/2014 அன்று இந்திய மாணவர் சங்கம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மேற்கண்ட விரிவுரையாளரின்  வீட்டினை முற்றுகையிட்டு போராடியது. அநீதிக்கு எதிராக போராடுபவர்களை  பொய் வழக்கின் மூலம் ஒடுக்கி விடலாம் என்கிற எண்ணத்தில்    இப்போராட்டத்தினை கொச்சை படுத்தும் விதமாக இலாசுபேட்டை காவல் நிலைய ஆய்வாளரின் உத்தரவுபடி இந்திய மாணவர் சங்க தலைவர்கள் மீது ஒரு பொய் வழக்கு தொடரப்பட்டது.

இப்பொய்வழக்கில்இந்திய மாணவர் சங்க தலைவர்களுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி அளித்துள்ள உத்தரவில், "இந்திய மாணவர் சங்கத்தின் இப்போராட்டம் அநீதிக்கு எதிரான போராட்டம்" என்றும்,மேலும் "குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள புகார் போராடிய மாணவர்களின் மீதுள்ள வெறுப்பினால் அளிக்கப்பட்டது" என்றும் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இக்கருத்து ஜனநாயக வழியில் அநீதிக்கு எதிராக போராடும் அனைவருக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் என்று இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது. மேலும் இந்த உத்தரவு, பொய் வழக்கின் மூலம் அநீதிக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்க நினைக்கும் லாசுபேட்டை காவல்நிலைய ஆய்வாளரின் எண்ணத்திற்கு கிடைத்த சவுக்கடி என இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் மாணவிகள் இனியும் இக்கொடுமைகளை சகித்துக்கொள்ளாமல் அநீதிக்கு எதிராக போராடும்படி இந்திய மாணவர் சங்கம் அறைகூவல்விடுகின்றது. மேலும் இது சம்பந்தமாக இந்திய மாணவர் சங்கத்திடம் புகார் அளித்தால், குழந்தைகள் நலக்குழு மூலமாக பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் வெளிவராமல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறது. இந்திய மாணவர் சங்க தலைவர்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்  திரு. ஸ்டாலின் அபிமன்யு அவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேசகுழு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறது.

 தலைவர்                                                               செயலாளர்
எஸ்.அருண்குமார்                                               அ.ஆனந்த்

29/03/2014.




Read more...
Saturday, 22 March 2014

Democratic Organisations demanded not to support the accused of sexual harassment...!

0 comments


Sfi Puducherry Pradesh Committee 

organises protest against the school 

teacher who allegedly made an 

attempt to molest a school 

girl in a class on International 

Women's Day. Various democratic 

organisations including School 

Teachers Federation of India, 

Puducherry State Government Employees Confederation, All India Lawyers Union, 

Puducherry Makkal Urimai Koottamaippu, Puducherry Subbaiyaah People Front, 

All India Students Federation, Puducherry Students Federation, Democratic Youth 

Federation of India, All India Democratic Womens' Association, All India Youth 

Federation and several students - parent, teachers association participated in the 

demonstration. 

*பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன் மீது கடும் நடவடிக்கை எடுத்திடு...!

*புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்விநிலையங்களில் உச்சநீதிமன்ற வழிகாட்டல் படி பாலியல் புகார் குழுக்களை உடனே அமைத்துவிடு....!

*பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சுப்ரமணியனை ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் பாதுக்காக்க முயற்சிக்காதே, தவறுக்கு துணை போகாதே...!

*புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் பாலியல் சீண்டல் - ராகிங்கால் பாதிக்கப்பட்ட புகார் அளித்த மாணவிகள் புகார் மீது விசாரணை நடத்து...தேர்வு எழுத அனுமதியளி...!

*மாணவர் சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற கோரி...!


இந்த போராட்டத்திற்கு  இந்திய மாணவர் சங்க தலைவர் அருண் குமார் தலைமை வகிக்க, இந்திய மாணவர் சங்க இணைசெயலாளர் ஜீவா ரஞ்சித் முன்னிலை வகித்தார். இப்போராட்டத்தில்  இந்திய பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆசிரியர் திரு.ஜெயராமன், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் து.தலைவர் இளங்கோவன், அகில இந்திய வழகரிஞர்கள் சங்கம் தலைவர்  லெனின்துரை, புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன், புதுச்சேரி சுப்பையா மக்கள் இயக்க தலைவர் ஆனந்த், புதுச்சேரி பெற்றோர் - மாணவர் நல சங்கம் பாலா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநில செயலாளர் பிரசன்னா, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் மாணவர் நல சங்க தலைவர் நாராயணசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி து.தலைவர் ஜெயலக்ஷ்மி, இந்திய மாணவர் சங்கம் இணைசெயலாளர் சக்தி ப்ரியா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர், தோழர் ஜி கே நன்றி கூறினார்.


மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் 22/03/2014 காலை 10.00 மணிக்கு தலைமை தபால் நிலையம்  கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
Read more...
Thursday, 20 March 2014

Law Students Protest false cases against SFI Activists...!

0 comments
PUDUCHERRY: The students of Dr Ambedkar Government Law College here boycotted classes and picketed the senior superintendent of police's office on Monday to register their protest against 'foisting false cases' against the Students Federation of India (SFI) activists. The SFI activists are accused of throwing rotten eggs and tomatoes at a government school teacher last week before he was arrested on charges of molesting two Class 12 girl students.

மாணவர் சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு : புதுச்சேரி காவல்துறை அலுவலகம் முற்றுகை...!

புதுச்சேரி, மார்ச் 17- 2014.
இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை திருட்டு வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து புதுச்சேரி காவல்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்திற்கு புகார் கடிதம் வந்துள்ளது.இப்புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித், செயலாளர் ஆனந்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் அதிகாரிகளை சந்தித்து நடந்த சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.

முற்றுகை : 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மாணவர்கள் இலாஸ்பேட்டை அவ்வை நகரில் உள்ள ஆசிரியர் சுப்பிரமணியனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
.
காவல்துறை வழக்கு :

ஆசிரியர் வீட்டு அருகே முற்றுகையில் ஈடுபட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் ஆனந்து, ரஞ்சித் ஆகியோர் மீது திருட்டு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலாஸ்பேட்டை காவல்நிலைய ஆய்வாளரின் தூண்டுதலாலே இந்தப் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாணவர் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
வகுப்பு புறக்கணிப்பு : இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதை கண்டித்தும், மாணவர் சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை உடனே திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவரும், சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவருமான சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் உறுதி :

முதுநிலை கண்காணிப்பாளர் பிரவீண்குமார் திரிபாதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கு திரும்ப பெறப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.இதேபோல் மோதிலால்நேரு பாலிடெக்னிக் மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more...
Saturday, 15 March 2014

Sfi Puducherry filed a complaint of Molestation involving male teacher...!

0 comments

Yet another complaint of  molestation involving a male teacher of a Government Girls Higher Secondary School has been reported here on Thursday.


The economics teacher, Subramanian (51), of Suseela Bai Govt Girls Higher Secondary School on Vysial Street allegedly attempted to molest two Class XII students a couple of days ago. The victims approached the Child Welfare Committee and gave a complaint.

MEMORANDUM :- 

பொருள்:- அரசு பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் வல்லுறவு - ஆசிரியர் மீது நடவடிக்கை கோருதல் தொடர்பாக.


மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்! புதுச்சேரி நகர பகுதியில் உள்ள வைசியாள் வீதி, சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் கடந்த சனிக்கிழமையன்று ( 09/03/2014) சிறப்பு வகுப்பு என்று சொல்லி அதே பள்ளியில் பணிபுரிய கூடிய பொருளாதார ஆசிரியர் சுப்ரமணியன் என்பவர் மாணவிகளை பள்ளிக்கு வரசொல்லியுள்ளார். மேற்படி அவர் சொல்கேட்டு பள்ளிக்கு வந்த ஐந்து மாணவிகளில் மூன்று மாணவிகளை ஒரு வகுப்பறையிலும், மீதம் உள்ள இரண்டு மாணவிகளை தனித்தனியாக வெவ்வேறு வகுப்பறைகளிலும் அமர்ந்து படிக்கச்சொல்லியுள்ளார். அப்போது தனியாக ஒரு வகுப்பறையில் படித்திருந்த மாணவியருகே சென்ற ஆசிரியர் சுப்ரமணியன் அவர்கள் திடீரென்று தவறான முறையில் அம்மாணவியிடம் அணுகி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அவரின் இச்செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி தன்னை விடுவித்து கொள்ள கடுமையாக போராடியுள்ளார். பின் தன் கையில் இருந்த பென்சிலை பயன்படுத்தி அவரை தாக்கிய போதும் கூட அவர் மாணவியை விடாமல் தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்துள்ளார். கடும் போராட்டத்திற்கு பின் அவரை தள்ளி விட்டு மாணவி தன்னை விடுவித்து கொண்டுள்ளார். ஆசிரியரின் ஈனச்செயலால் பாதிக்கப்பட்டு கதறி அழுத மாணவியிடம் அந்த ஆசிரியர் நன்றி என்று சொல்லிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் அவர் பல மாணவிகளிடம் தவறான முறையில் அணுகியுள்ளார் என்று எங்களுக்கு புகார் வந்துள்ளது. தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகள் பலர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மேற்படி ஆசிரியரால் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மாணவிகளிடம் பாலியல் உறவுகளுக்கு அழைப்பது, ஆபாசமாக திட்டுவது, மேற்படி சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்களை தேர்ச்சி பெறாமல் செய்துவிடுவேன் என்றும், நீங்கள் தவறான மாணவிகள் என்று உங்களை சித்தரித்து பிற மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் இருந்து தனிமை படுத்தி அவமானபடுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார். எனவே மாணவிகளிடம் அத்துமீறியும், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றும், ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தியும், மாணவிகளை சீரழிக்க முயலும் ஆசிரியர் சுப்ரமணியன் மீது தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் அவரை பணியை விட்டு நீக்கிடவும், கைது செய்து சிறையில் அடைக்குமாறும் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பாக கேட்டுகொள்கிறோம். மேலும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுகொள்கிறோம். ஆகவே உச்சநீதிமன்றம் விசாகா மற்றும் ராஜஸ்தான் அரசு ஆகியவற்றுக்கு இடையிலான வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தடைசட்டத்தின் கீழ் ஆசிரியர் சுப்ரமணியனை கைது செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பாக கேட்டுகொள்கிறோம்.

news paper links:-
http://timesofindia.indiatimes.com/city/puducherry/Yet-another-Puducherry-teacher-accused-of-molesting-schoolgirls/articleshow/31956176.cms 

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Molestation-Charge-on-One-More-Teacher/2014/03/14/article2108081.ece#.UyNKYmf7ndg.facebook





Read more...
Monday, 10 March 2014

Sfi PU demands for 25% reservation in Pondicherry University...!

0 comments
Demands made by SFI Unit Committee, Pondicherry University to the University Administration:
  1. 25% of the seats need to be reserved for the students from Pondicherry.


  2. The suspension of the two victims of sexual harassment needs to be revoked. 
  3. Health Center should be run by Government appointed doctors 24/7. Currently the JIPMER wing is run only till 5. 
  4. Mess food quality is not increased in spite of the increased mess fees. Therefore the mess needs to be run by students.
  5. Library should be run 24/7. Currently it is run only till 8 PM
  6. Moral policing needs to be stopped inside the campus.
  7. Internal harassment by the faculty needs to be stopped.
  8. The bad condition of the roads inside campus should be repaired.
  9. The university has started collecting 'Advanced Laboratory Fees' despite the already existing 'Laboratory Fees.' That needs to be stopped.
  10. All the scholarships and stipends entitled to the students need to be given on time.
  11. The transportation services inside the campus needs to be handled by government agencies and not by private agencies.
  12. The Wi-Fi facility provided inside the university has not increased despite the doubled number of students. This needs to be taken into consideration. 
                                                                                              ( Akhil VIjayan )
                                                                            SFI Unit Secretary, Pondicherry University

Students Federation of India already arises the above mentioned demands. Sfi PU Unit continuously made a protest against the University administration that PU is the place for study, but not the multiplex complex. Sfi Puducherry Pradesh Committee also remind a quote to the Pondicherry University Vice - Chancellor that Education, Employment is not a Subsidy...It's our Birth Right". 
                                                                                     A.Anand,
                                                                                 State Secretary,
                                                                          Puducherry Pradesh Committee.

Previous Struggles...!

http://www.sfipuducherry.com/2012/04/pondicherry-central-university-fee-hike.html

http://www.sfipuducherry.com/2012/06/sfi-plans-to-protest-against-steep-fee.html

http://www.sfipuducherry.com/2012/05/pondy-vc-manipulate-university-low.html

http://www.sfipuducherry.com/2012/05/blog-post_17.html
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com