Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 12 February 2014

Sfi Puducherry - Demands for Separate Education Board...!

0 comments

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் கேட்டு - எஸ்.ஐ.யிடம் SFI மனு..!


பெறுனர்,
உயர்திரு.உதவி ஆய்வாளர் அவர்கள்,
லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம்,
புதுச்சேரி.

ஐயா,
வணக்கம் !
*புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் நடப்பு கல்வி ஆண்டுமுதல் ஏற்படுத்த கோருகிறோம்,

*2006ம் ஆண்டு புதுவை சட்டமன்றத்தில் அறிவிக்கபட்ட மாநில பல்கலைகழகம் அமைத்திட உறுதியான நடவடிக்கை எடுக்கவும்,

*தாகூர் கலைகலூரியில் கடந்த 5ஆண்டுகளாக காலியாக உள்ள 39 விரிவுரையாளர் நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,

*தனியார் பள்ளி/கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறோம்,

*அரசு பள்ளி/கல்லூரிகளில் நிலவிவரகூடிய ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் 

*க்ளூனி, மாருதி மேட்ரிகுலேஷன், ஆதித்யா ஆகிய பள்ளிகள் மட்டும் இன்றி நன்கொடை வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மாணவர் சிறப்பு பேருந்தை மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என்று தனியாக PRTC மூலம் பேருந்துகள் இயக்க வேண்டும் 

*மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு என்று புதிய கட்டிடம் கட்டித்தர கோரியும், விடுதி வசதியை ஏற்படுத்தி தர கோருகிறோம்,

*புதுச்சேரி பல்கலைகழகம் முதல் அணைத்து பள்ளி/கல்லூரிகளிலும் பாலியல் புகார்களை விசாரிக்க புகார் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகளை புதுச்சேரி லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் உயர்திரு. ஜெயகுரு நாதன் ஐயா அவர்கள் 11/02/2014 அன்று மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாணவர் சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்ககோரி நடத்திய போராட்டத்தின் போது உங்களோட கோரிக்கைகள் அனைத்தையும் என்னிடம் அளியுங்கள் நான் இரண்டு நிமிடத்தில் முடித்து தருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஆகவே கல்வித்துறை செயலர், அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை காவல் துறை உதவி ஆய்வாளர் திரு.ஜெயகுருனாதன் அவர்கள் இரண்டு நிமிடத்தில் தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளதால் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை குறைந்தது ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையில் இம்மனுவை அளித்துள்ளோம். 

மனு அளிக்கும்போது மாணவர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய எஸ்.ஐ.இல்லாத காரணத்தால் இம்மனுவை முதல்நிலை எஸ்.ஐ.திரு. இளங்கோவிடம் அளிக்கப்பட்டது.   இம்மனுவளிக்கும் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க துணை தலைவர் ரஞ்சித் குமார் தலைமையில், செயலாளர் ஆனந்த் முன்னிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் சரவணன், துணை தலைவர் பாஸ்கர், முன்னால் தலைவர் சந்துரு, ஜீவா ரஞ்சித், பிரவின், ஜெயப்ரகாஷ், அஜய் உள்ளிட்ட திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் ஒரு வாரத்திற்குள் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் உள்ள அணைத்து பள்ளி, கல்லூரி  மாணவர்களையும் ஒன்று திரட்டி காவல் துறை தலைமை அலுவலகத்தை 20ம் தேதி முற்றுகையிட்டு புகார் அளிப்போம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

Copy To:
1.Hon'ble. Lt. Governor, Govt.of.Puducherry.
2. Chief Minister, Govt.of.Puducherry.
3. Chief Secretary, Govt.of.Puducherry.
4.District Collector, Govt.of.Puducherry.
5.Director General of Police, Govt.of.Puducherry.
6.Superintendent of Police, (North)
7.Inspector, Lawspet Circle.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com