Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 7 February 2014

மாணவர் சிறப்பு பேருந்துகளை பி.ஆர்.டி.சி. மூலம் இயக்க எஸ்.எப்.ஐ. வலியுறுத்தல்...!

0 comments
புதுச்சேரி அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மாணவர் சிறப்பு பேருந்துகள் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளான பாகூர், மதகடிப்பட்டு,நெட்டப்பாக்கம் வழிகளில் இயங்கும் மாணவர் சிறப்பு பேருந்துகள் கடந்த திங்கட்கிழமை முதல் சரி வர   இய்யகபடுவதில்லை. அப்படியே இயக்கப்பட்டாலும் உரிய வழி தடங்கல் வழியாக செல்வதில்லை. மேலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்பட்டு வரும் மாணவர் சிறப்பு பேருந்துகளை அனைத்து வழி தடங்களிலும் இயக்க வலியுறுத்தி பல முறை முறையிட்டும் பலனில்லை.ஆகவே தனியார் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் போதிய பராமரிப்புகள் இன்றியும், அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றுவதால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. ஆகவே புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் மூலம் மாணவர் சிறப்பு பேருந்துகளை இயக்கவேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சார்பில் கேட்டுகொள்கிறோம். மேலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மாணவிகள் கூட்ட நெரிசலில் மாணவர் சிறப்பு பேருந்துகளில் சொல்ல முடியாத துயரத்தில் பயணிக்கின்றனர். எனவே மாநிலம் முழுவதும் அனைத்து வழி தடங்களிலும் மாணவிகளுக்கு என்று பிரத்யேகமாக மாணவர் சிறப்பு பேருந்துகளை இயக்கவேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க து.தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி, சமுதாய கல்லூரி, தாகூர் கலைகல்லூரி, இந்திரா காந்தி கலை கல்லூரி, மேட்டுபாளையம் ஐ.டி.ஐ யை சேர்ந்த  இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் மானவர்களுமான 50 க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர் இல்லாத காரணத்தினால் முதல்வரின் தனிசெயலரை சந்தித்து மனு அளித்தனர்.


  

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com