Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 22 January 2014

பேருந்து சேவையை பல்கலை நிர்வாகமே நடத்தவேண்டும் - எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்..!

0 comments
                                                        பத்திரிக்கை செய்தி:-                                              22/01/2014

புதுச்சேரி பல்கலை விபத்து தனியார் பேருந்து சேவை ஒப்பந்தத்தை ரத்து செய்க - எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்..!

புதுச்சேரி மத்திய பல்கலைகழக மாணவர்கள் பேருந்து ஓட்டுனரின் கவன குறைவால் இன்று காலை பொம்மையார்பாளையம் அருகே கவிழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான உடனே மாணவர்களை நேரில் சந்திக்காமல் பல்கலைகழக  நிர்வாகம்  3 மணி நேரம்  கால  தாமதமாக  சந்தித்தது  என்பது  மாணவர்கள்  மீதான பல்கலைகழக நிர்வாகத்தின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுவது மட்டும் இன்றி கடும் கண்டனத்திற்குரியது.  

புதுச்சேரியை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் மத்திய பல்கலை பேருந்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். புதுச்சேரி மத்திய பல்கலைகழக நிர்வாகம் மாணவர்களுக்காக இயக்கும் பேருந்து தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கபடுகிறது. ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் பேருந்து மாணவர்களுக்கு  போக்குவரத்து  வசதியை  சேவை  அடிப்படையில் செய்யாமல் லாப நோக்குடன் செய்வதால் பேருந்து பராமரிப்பு போன்ற பல விஷயங்கள் கவனிக்கபடாமல் உள்ளது. ஓட்டுனருக்கான மாத ஊதியம் மிக  குறைவான அளவில் வழங்கபடுவதால் அவர்களும் மனநிறைவின்றி பணியாற்றுகின்றனர்.
மேலும் போதிய அனுபவம் இல்லாத ஓட்டுனர்கள் பேருந்தை இயக்குகின்றனர். எனவே  இது போன்ற காரணங்கள் தான் மாணவர்களின் உயிர் பளிவாங்கபடுகிறது.

மத்திய பல்கலைகழக நிர்வாகமும் தனது பொருபில்லிருந்து தன்னை விடுவித்து கொள்ளும் வகையில்  மாணவர்  நலன்  சார்ந்த  பல்வேறு பணிகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகின்றது. புதுச்சேரி மத்திய பல்கலைகழகம் தனியாரிடம் ஒப்படைத்துள்ள பேருந்து சேவையை ரத்து செய்து விட்டு பல்கலைகழகமே முழுமையாக மாணவர் - ஊழியர்கள் பயணிக்கும் பேருந்துகளை இயக்கவேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு வலியுறுத்துகிறது. மேலும் புதுச்சேரி அரசும் மாணவர் சிறப்பு பேருந்துக்கான தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதுச்சேரி மாநில மாணவர்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு புதுச்சேரி  சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று மாநில முதலமைச்சரை இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு கேட்டுகொள்கிறது. 

தலைவர்                         செயலாளர் 
எஸ். அருண்குமார்        அ. ஆனந்த்


thanks the New Indian Express...!


Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com