Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 4 November 2013

ஹைதரபாத் பல்கலை பேரவை - எஸ்.எப்.ஐ. பெரும் வெற்றி

0 comments

Photo: Comrades,
SFI wins all the major posts in HCU Students’ Union Election
SFI registered an emphatic victory in the HCU Students’ Union election 2013. It is the 4th consecutive year that SFI has registered victory on all major executive posts in the Students’ Union. Com. Shirisha V. from Integrated Masters Economics became the first ever woman President of the Students’ Union in the history of HCU by defeating the nearest rival candidate of ABVP by more than 90 votes. The post of General Secretary was won by another SFI candidate Com.Sandeep Kumar who is pursuing MCA at the University and who won the post with a margin of more than 50 votes. Com.Aditya Harish won the post of Joint Secretary by defeating nearest candidate of ABVP by more than 90 votes. The post of Vice President was won by UDA, an alliance of 6 political parties of the campus. ABVP managed to get the mandate for Cultural Secretary and Sports Secretary with a margin of 19 and 24 votes respectively.
Laal Salaam HCU..!!
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

ஹைதராபாத், நவ. 3- 2013.

பேரவையின் அனைத்து முக்கியமான நிர்வாகப் பொறுப்புகள் அனைத்திலும் இந்திய மாணவர் சங்கம் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இந்த ஆண்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது. தெலுங்கானா பிரச்சனை பெரிய அளவில் கிளப்பிவிடப்பட்டுள்ள சூழலிலும் எஸ்எப்ஐ இந்தசாதனையை நிகழ்த்தியிருக் கிறது. பேரவையின் தலைவராக முதுநிலை பொருளாதார மாணவி வி.ஷிரிஷா தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பின் வேட்பாளரை விட 90 வாக்கு கள் அதிகம் பெற்ற ஷிரிஷா, மாணவர் பேரவையின் தலை வராக பொறுப்பேற்கிற முதல் பெண் என்பது குறிப்பிடத் தக்கது.பொதுச் செயலாளராக எம்சிஏ மாணவர் சந்திப்குமார் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளராக மற் றொரு எஸ்எப்ஐ வேட்பாளர் ஆதித்யா ஹரிஷ் 90 வாக்கு கள் வித்தியாசத்தில் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.
துணைத்தலைவராக ஐக் கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மணிகந்தா தேர்வு பெற்றார். ஏபிவிபி வேட்பாளர்கள் கலாச்சார பிரிவு செயலர் (ஸ்வாதி), விளையாட்டுப் பிரிவு செயலர் (கிருஷ்ணா சைதன்யா) ஆகிய இருவர் மட்டுமே முறையே 19, 24 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

தொடக்கத்திலிருந்தே மாணவர் பேரவைத் தேர்தலை எஸ்எப்ஐ ஒரு தெளிவான கண்ணோட்டத்தை முன் வைத்து அணுகி வந்தது. கல்விவணிகமயமாக்கப்படுவதை யும், கல்வி நிறுவனங்கள்தனியார் மயமாக்கப்படுவதை யும், கல்லூரி வளாகங்களுக்குள் மதவெறி அரசியல் நுழைவதை யும் எதிர்த்து எஸ்எப்ஐ உறுதியாகப் போராடி வந்துள்ளது.

கடந்தஆண்டுகளில் மத்திய - மாநில அரசுகளின் தாராள மய கொள்கைகளின் தாக்குதல்களுக்கு இந்த பல்கலைக்கழகம் உள்ளாக்கப் பட்டபோது அதை எதிர்த்தும் எஸ்எப்ஐ உறுதியாகப் போரா டியது.கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதை யும், சேவைக் கட்டணம் என்றபெயரில் மறைமுகமாக புதிய கல்விக் கட்டணங்கள் புகுத்தப்பட்டதையும் அம்பலப் படுத்தி அதனை தடுப்பதிலும் எஸ்எப்ஐ முக்கியப் பங்காற் றியது. பல்கலைக்கழக நிலங்கள் கல்வி சாராத வர்த்தக நோக்கங்களுக்குத் தாரைவார்க் கப்படுவதைத் தடுத்ததிலும் தலையாய பங்கு வகித்த மாணவர் சங்கம், பிற்போக்கு சக்திகள் கலாச்சாரத்தின் பெயரால், குறிப்பாக பெண்கள் மீது தொடுத்த கண்காணிப்புத் தாக்குதலையும் முறியடித்தது.

இத்தகைய போராட்டங் களைத் தொடர்வதற்கு பேரவைத் தேர்தல் வெற்றி ஊக்கமளிப்பதாக உள்ளது என்று எஸ்எப்ஐ தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com