Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 1 November 2013

ஆரம்பம் - கருப்பு பணம் காங்கிரஸ், பி.ஜே.பி. ஊழல்...!

0 comments
 

ஆரம்பம் திரைப்படம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி ஊழலில்லா தேசத்தை உருவாக்க எதிர்வரும் தேர்தலில் ஓட்டுக்கு பணம் பெறாமலும், நாம் செய்யும் சிறு தவறுகள் தான் நாளடைவில் பெரிய பெரிய ஊழல்களுக்கு விதையாகிறது என்பதை தெளிவாக புரிந்து கொண்டு நம்முடைய வாக்கை செலுத்த வேண்டும் என்றும் அழுத்தமாக இல்லாவிட்டாலும் மேலோட்டமாக எடுத்துரைத்துள்ளது.

படத்தின் ஆரம்பமும் சரி முடிவிலும் சரி நடிகர் அஜித் பெரிய அளவுக்கு பில்ட்அப் ( ஆரவாரம் ) இல்லாமல் வருவது எதார்த்தமாக அமைந்துள்ளது. கதையின் சுருக்கத்தை பார்ப்போம். தீவிரவாதிகள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் இண்டெலிஜென்ஸ் ஆபீசரான அஜித் அவருடைய நண்பர் ரானா ஒரு தீவிரவாத  தாக்குதலில் விலை குறைவான, தரம் இல்லாத லைப் ஜாக்கெட் ( புல்லெட் ப்ரூப் ) அணிந்திருந்திருந்ததால் உயிர் பிரிந்தது. காவல்துறைக்கு பாதுகாப்பு ஆயுதங்கள் வாங்கும் போது வெளிநாட்டு கம்பெனி கொடுக்கும் கமிஷனுக்காக தரம் குறைந்த ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை  தரமானது என்று சர்டிபிக்கேட் அளித்த  காவல் துறை அதிகாரி மற்றும் அதற்கு பின்னால் உள்ளவர்களை கண்டுபிடிக்கிறார்.

அஜித்தின் தன்னுடைய  நண்பர்  மரணத்திற்கு காரணம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த உயிர் காக்கும் கவசங்களை அணிந்திருந்ததாலே என்பதை கண்டுபிடித்து அதனை உள்துறை அமைச்சரிடம் தகுந்த ஆதாரங்களோடு காண்பிப்பதும், அதற்கு அவர் உன் நண்பன் சாகும் போது இந்த நாட்டுக்கு தியாகியாக தானே செத்தான் என்றும், இது ஒரு சாதாரண சம்பவம் என்று கூறுவதும் உண்மையில் "கார்கில் போரின் போது பி.ஜே.பி. ஆட்சியின் போது நடைபெற்ற ராணுவ வீரர்கள் அடக்கம் செய்ய வாங்கப்பட்ட தரம் குறைந்த சவப்பெட்டி, போர்வைகள், பாதுகாப்பு கவசங்கள் தொடர்பான ஊழலையும், சமீபத்தில் மும்பையில் காங்கிரஸ் அரசின் ஆதர்ஷ் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பு ஊழலையும்" அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ஆரம்பம்  காங்கிரஸ், பி.ஜே.பி. மாறிமாறி செய்த ஊழல்களையும்  நம் நாட்டின்  ஜனநாயகத்தை பாதுகாக்கும் நான்காவது தூணாக இருக்க சில தொலைக்காட்சி சேனல்கள் ஊடக தர்மத்தை காட்டிலும் பணம் சம்பாதிக்கும் லாப நோக்கை மட்டும் குறிக்கோளாக வைத்து மக்களுக்கு உண்மையை உரக்க பேசாமல் மூடிமறைக்க முயற்சிப்பதையும் காட்டுகிறது.

ஆரம்பம் - எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு ஒரு மாற்று கொள்கையோடு காங்கிரஸ் - பி.ஜே.பி.க்கு எதிரான மாற்று பொருளாதார பாதையில் பயணிப்போம்.....!வரலாற்றில் ஒரு புதிய தடம் பதிப்போம்....!!

                                                               கட்டுரையாளர் : அ.ஆனந்த்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com