Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 24 October 2013

ராகிங் - பாலியல் சீண்டல் மீது உறுதியான நடவடிக்கை தேவை ...!

0 comments
ராகிங் - பாலியல் சீண்டல் மீது உறுதியான நடவடிக்கை எடுத்துவிடு...!
புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்துக்கு எஸ்.எப்.ஐ. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்:-
 
புதுச்சேரி,அக்.23- 2013.
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவி மீது பாலியல் சீண்டல் நடைபெற்றதை கண்டித்து கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராகிங் மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பாக புதுச்சேரி மத்திய பல்கலைகழக மாணவி அளித்த புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் ராகிங் தடைச்சட்டம் இயற்ற வேண்டும்.அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்,அலுவலகங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும்.புதுச்சேரி மகளிர் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
 
புதுச்சேரி பல்கலைகழக மாணவிகள் அளித்துள்ள பாலியல் சீண்டல் - ராகிங் புகார் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காவிடில் பல்கலைகழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்திற்கு இந்த கண்டன ஆர்பாட்டம் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலைவகித்தார்.மாதர் சங்கத்தின் பிரதேச செயலாளர்  மாரிமுத்து,துணைத்தலைவர் சுமதி,மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மாணவர்கள்,பெண்கள் இப்போராட்டத்தில்  பங்கேற்றனர்.முன்னதாக பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர்.
                                                                                                        நன்றி : தீக்கதிர்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com