Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 24 October 2013

ராகிங் - பாலியல் சீண்டல் மீது உறுதியான நடவடிக்கை தேவை ...!

0 comments
ராகிங் - பாலியல் சீண்டல் மீது உறுதியான நடவடிக்கை எடுத்துவிடு...!
புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்துக்கு எஸ்.எப்.ஐ. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்:-
 
புதுச்சேரி,அக்.23- 2013.
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவி மீது பாலியல் சீண்டல் நடைபெற்றதை கண்டித்து கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராகிங் மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பாக புதுச்சேரி மத்திய பல்கலைகழக மாணவி அளித்த புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் ராகிங் தடைச்சட்டம் இயற்ற வேண்டும்.அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்,அலுவலகங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும்.புதுச்சேரி மகளிர் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
 
புதுச்சேரி பல்கலைகழக மாணவிகள் அளித்துள்ள பாலியல் சீண்டல் - ராகிங் புகார் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காவிடில் பல்கலைகழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்திற்கு இந்த கண்டன ஆர்பாட்டம் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலைவகித்தார்.மாதர் சங்கத்தின் பிரதேச செயலாளர்  மாரிமுத்து,துணைத்தலைவர் சுமதி,மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மாணவர்கள்,பெண்கள் இப்போராட்டத்தில்  பங்கேற்றனர்.முன்னதாக பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர்.
                                                                                                        நன்றி : தீக்கதிர்

Read more...
Saturday, 12 October 2013

புதுச்சேரி பல்கலைகழகம் ராகிங் புகார் மீது உறுதியான நடவடிக்கை தேவை.....!!!

0 comments
புதுச்சேரி பல்கலைகழகம் ராகிங் புகார் மீது உறுதியான நடவடிக்கை தேவை - எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்..!
                                                                   பத்திரிக்கை செய்தி:-அக்.8, 2013.

மாணவிகள் மீது ராகிங் புகார் குறித்து புதுச்சேரி பல்கலைகழகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்த இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் அருண்,செயலாளர் ஆனந்து ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவிகள் காவியா, வித்யா உடற்கல்வி  துறை மாணவன் மீது ராகிங் மற்றும் பாலியல் சீண்டல் குறித்து பல்கலை நிர்வாகத்துக்கு அளித்துள்ள புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அச்சத்தில் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. 

இந்நிலையில் பாலியல் சீண்டல், ராகிங் புகார் அளித்துள்ள நிலையில் செய்த குற்றத்தை மூடிமறைத்து, வழக்கை திசை திருப்பிட, புகாரில் தொடர்புடைய நபருக்கு ஆதரவாக வேறொரு மாணவன் பெயரில் Pஊசு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தநிலையில் பல்கலைக்கழக கல்வித்துறை இயக்குனர் பேராசிரியர் மு. இராமதாஸ் பாலியல் சீண்டலோ, ராகிங்கோ நடைபெறவில்லை. மாறாக இருதரப்பு மோதல் என குரல் கொடுத்துள்ளதும், புகார் அளித்த மாணவிகள்,புகாரை திரும்ப பெற்றதாகவும், ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளது உண்மையை மூடிமறைக்க முயற்சித்துள்ளார். மேலும் ராகிங் புகார் அளித்துள்ள மாணவிகள் புகாரை திரும்பப் பெறப்பட்டதாக கூறுவதும் உண்மையல்ல. இந்தப்போக்கு கவலை அளிப்பதாகும். இது பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஒரு சாரர் சார்பு நிலை எடுத்துள்ளதும், ஆணாதிக்க சிந்தனையோடு மாணவிகளின் புகாரை உதாசீனம் செய்துள்ளதும் தெரிகின்றது. ராகிங் புகாரை விசாரித்த  பேராசிரியர் மு.இராமதாஸ் அவர்களின் இந்த அணுகுமுறை கவலையளிக்கக்கூடியதும், பெண்களுக்கு எதிரான தாக்குதலாகும்.

மேலும் புகார் அளித்த மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் தொடர்ந்து மிரட்டப்படுவதாகவும், வழக்கை திரும்பப்பெற நிர்பந்திப்பதாகவும் புகார்கள் வருகிறது. மேலும் பாதிப்புக்குள்ளான மாணவியையே மிரட்டுவதும், மாணவிக்கு உதவியாக உள்ள சக மாணவர்களை துறை தலைவர்களைக் கொண்டு மிரட்டுவது என்பதும் கட்டாய விடுப்பிற்கு அனுப்புவதும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். ஆகவே பல்கலைக்கழக துணைவேந்தர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்கவும், மாணவர்களின் கல்வி நிலைய ஜனநாயக செயல்பாட்டையும், பல்கலைக்கழக ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் பணியிடத்தில் பாலியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கும்  கமிட்டியை அமைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com