Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 31 August 2013

சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு....பொருளாதார மேதையாம் தலைப்பாக்கட்டிய தாத்தா....!

0 comments
புதிய பொருளாதார கொள்கையின் தாக்கம்...!

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசு பின்பற்றி வந்த நவீன தாராளமய கொள்கைகளை அமுல்படுத்தியதன் தாக்கமே இன்று வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. இது வெறும் துவக்கம் மட்டுமே என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 2009ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியை விட இது மோசமான நிலைமைக்கு இட்டுச்செல்லும் என்று கூறுகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியின் போது கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீடுகளை இழந்து, வேலைகளை இழந்து வீதிக்கு வந்தார்கள். அதுபோல் ஒரு நிலைமையை இந்தியா சந்திக்க நேரிடும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். 
  
அன்றாட நிகழ்விலிருந்து இவை...!

குறிப்பாக சாதாரண டூவீலர் மெக்கானிக் ஷெட்டில் கூட பொருளாதார மந்தநிலை என்பது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் இருசக்கர வாகனத்தின் என்ஜின் ஆயில் விலை ஏறிக்கொண்டு இருக்கிறதாம். ஆகவே மொத்தமாக கொள்முதல் செய்து இருப்பு வைத்திருப்பதாகவும் மேலும் விலை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். சராசரியாக 220 ரூபாய் விற்ற டூவீலர் என்ஜின் ஆயில் தற்போது 1 வாரத்தில் 250 ரூபாய்க்கு விற்க்கபடுகிறதேயானால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை என்னவாக உயரும் ?

இது கூடவா தெரியாது சீனாதானாவுக்கும்...மண்ணுமோகனுக்கும்...!

சரிந்து கொண்டு இருக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த மேலும் நாசகர கொள்கைகளை அமுல்படுத்தியே தீருவோம் என்று திட்டவட்டமாக பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த 20 வருடங்களாக மத்திய அரசு அமுல்படுத்தி வந்த நாசகர நவீன தாராளமய கொள்கையின் விளைவாக 3,00,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது போதாதென்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து மேலும் பல லட்சம் சில்லறை வர்த்தகத்தையும் சீரழிக்க முயல்கிறது. நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டு இருக்கிறது சரி செய்வதற்கு மாற்று பொருளாதார கொள்கையை தவிர வேறு வழிகள் இல்லை.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்...!போராடுவோம்...!!
                                                                                   கட்டுரையாளர்: அ. ஆனந்த்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com