Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 21 August 2013

கும்பகோணம் குழந்தைகள் நினைவு ஜோதி பயணத்திற்கு உற்சாக வரவேற்பு...!

0 comments
கல்வி வியாபாரத்திற்கு எதிரான கும்பகோணம் குடந்தை குழந்தைகள் நினைவு  ஜோதி பயணத்திற்கு வழிநெடுகிலும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு....!
இந்திய மாணவர் சங்கத்தின் மாநில அளவிலான எண்ணற்ற பல தலைவர்களை உருவாக்கிய புதுச்சேரி நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் பயணகுழுவிற்கு அளித்த உற்சாகமான வரவேற்ப்பு...!




புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானாலும் சரி, பெண்கள் மீதான வந்முரைகலானாலும் சரி, அரசு பள்ளி, கல்லூரிகளை பாதுக்காக்கும் போராட்டங்களில் முன்னிலையில் நின்று களம் காணும் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்ப்பு...!


புதுச்சேரி, ஆக-20, 2013.
 
இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்மாநில மாநாடு ஆகஸ்ட் 22முதல் 24வரை சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டையொட்டி  கும்பகோனம் தீயில் பலியாகிய குழந்தைகள் நினைவு ஜோதி பயணக்குழு சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் கரிகாலன் தலைமையில் புதுச்சேரி வந்தனர்.புதுச்சேரி எல்லையான பாகூருக்கு வருகைதந்த ஜோதி பயணக்குழுவை எஸ்எப்ஐ பிரதேச தலைவர் அருண், செயலாளர் ஆனந்து,கொம்யூன் தலைவர் ஜெயராஜ், செயலாளர் பிரவீன்,வாலிபர் சங்க முன்னால் செயலாளர் தமிழ்ச்செல்வன், தற்போதைய செயலாளர் ப.சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.பாகூர் கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
புதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரி முன்பு டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,நிர்வாகி பாஸ்கர், இலாஸ்பேட்டையில் மோதிலால்நேரு பாலிடெக்னிக் மாணவ மாணவிகள், கரிகலாம்பாக்கம், மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் ஜோதி பயணக்குழுவிற்கு வரவேற்ப்பு அளித்தனர். 




Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com