Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 18 July 2013

புதுச்சேரி பட்ஜெட்:மாநில வளர்ச்சிக்கு உகந்தது அல்ல: எஸ்.எப்.ஐ. குற்றச்சாட்டு

0 comments
புதுச்சேரி:- 17-07-2013.
புதுச்சேரி முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட் மாநில வளர்ச்சிக்கு உகந்ததாக அமையவில்லை என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடந்த ஜூலை 15ல் தாக்கல் செய்த வரவு-செலவு அறிக்கை மாநில வளர்ச்சிக்கு பயனுள்ள பட்ஜெட்டாக அமையவில்லை. தேர்தல் வாக்குறுதிகளான வீடுகட்ட மானியம்,                      மாணவர்களுக்கு மடிக்கணினி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற எந்த திட்டத்தையும் அறிவிக்காதது மக்களை ஏமாற்றக்கூடியது. தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 12ஆயிரத்தி 986 ஆக உயர்ந்திருக்கிறது என்று பட்ஜெட் டில் கூறியுள்ளார். அப்படி என்றால் புதுச்சேரியில் வேலையின்மை குறைந்திருக்கிறதா? கடந்த 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி 22.7சத வீதம் பேர் புதுச்சேரியில் வறுமை கோட்டின் கீழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மேலும் உயர்ந்து இருக்கக்கூடும்.

29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ள நிலையில் புதுச்சேரியில் மட்டுமே தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக உள்ளது என்று தேசிய குற்றவியல் ஆணையம் கூறியுள்ளது. அப்படி என்றால் மக்கள் வளர்ச்சி எந்த நிலை யில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. மின்கட்டணம் உயர்வு குறித்து பரிசீலிக்க எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வாட்வரி குறைக்கப்பட்டுள்ளதையும், சென்டாக்  மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவி தொகை வழங்குவதாக அறிவித்திருப்பதை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. ஆனால், ஒட்டு  மொத்தத்தில் இந்த பட்ஜெட் மாநில வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை எனவும் புதுச்சேரி மக்கள் வாழ்நிலையை உயர்த்த போவதும் இல்லை என இந்திய மாணவர் சங்கம், புதுச்சேரி பிரதேச குழு குற்றம் சாட்டுகிறது.

தலைவர் : கி.ஹரிஹரன்                             செயலாளர் : அ. ஆனந்த் 


Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com