Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 2 July 2013

3 வது நாளாக புதுச்சேரி உயர்கல்வித்துறை முற்றுகை - எஸ்.எப்.ஐ. தொடர் போராட்டம்..!

0 comments
3 வது நாளாக முற்றுகையிட்டு போராட்டம்...! 
பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேர்வதற்கு ஒவ்வொரு துறையிலும் 12இடங்கள் சேர்க்கப்படுகின்றன.அந்த இடங்களுக்கு சென்டாக் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இதனால் தகுதியும்,திறமையும் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் போட்டிபோட்டு பெரும் பகுதி இடங்களை கைப்பற்றி பயின்று வருகின்றனர்.தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.இந்நிலையில் மாநில அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிற நுழைவத்தேர்வை ரத்து செய்து நடப்பு கல்வியாண்டு முதல் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் அன்று அறிவித்துள்ளதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் உயர்கல்வித்துறையை 2மணிநேரத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏற்கனவே நடைமுறையில் இருந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு முறையை தொடர வேண்டும் என இந்திய மாணவர் சங்கம்
வலியுறுத்தி  புதுச்சேரி மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள பிப்மேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
முதல்வரை சந்தித்து முறையிடல்:
இதனை தொடர்ந்து உயர்கல்வி துறை இயக்குனர் கரிகாலனை சந்தித்து மாணவர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் திருப்தி அளிக்காததால் காவல் துறை அதிகாரிகள் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்திருந்திருந்தனர். இரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுடன் இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த், து.தலைவர் ரஞ்சித், பவித்ரன், நந்தா, மாணவிகள் கலைவாணி, திவ்யா உள்ளிட்ட மாணவர் பிரதிநிதிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். மாணவர் சங்க நிர்வாகிகளிடம் கூறியதாவது அரசு கல்லூரி மாணவர்கள் பாதிக்கபடுவார்களேயானால் அரசு பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் பாலிடெக்னிக்ன் இறுதி ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து இறுதி முடிவு என்பது அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா என்று கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாக இந்திய மாணவர் சங்கம், தெரிவித்துக்கொள்கிறது.

இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க து.தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார், பிரதீப், நந்தா, ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்கம் பிரதேச செயலாளர் ஆனந்த், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க து.தலைவர் பாஸ்கர் கண்டன உரையாற்றினர்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com