Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 30 July 2013

அரசு சுற்றறிக்கையை மதிக்காத கல்லூரிகளை கண்டித்து போராட்டம்..!

0 comments
                                                    பத்திரிக்கைச் செய்தி - 1
அரசு  சுற்றறிக்கையை மதிக்காத தனியார் கல்லூரிகளை கண்டித்து போராட்டம் - எஸ்.எப்.ஐ. எச்சரிக்கை...!

ஜூலை - 30, 2013.
புதுச்சேரி சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூளிக்ககூடாது என புதுச்சேரி அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் தனியார் கல்வி நிறுவங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களை முழு பணத்தையும் கட்ட நிர்பந்திப்பதாக புகார்கள் வருகின்றன. புதுச்சேரி அரசின் சுற்றறிக்கையை மதிக்காத தனியார் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு கேட்டுக்கொள்கிறது. மேலும் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.எப்.ஐ. வலியுறுத்துகிறது. தொடர்ந்து அரசு விதிகளை மீறும் தனியார் கல்லூரிகளை கட்டுபடுத்தாமல் செயலற்று இருக்குமேயானால் புதுச்சேரி உயர்கல்வி துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
செ.அருண்குமார்             அ.ஆனந்த் 
    (தலைவர்)                      (செயலாளர்)  
Read more...
Tuesday, 23 July 2013

கல்வி வியாபாரத்துக்கு எதிராக போராட இந்திய மாணவர் சங்க புதுச்சேரி மாநாட்டில் அறைகூவல்...!

0 comments
தனியார்  கட்டண கொள்ளையை தடுத்துநிறுத்த சட்டம் இயற்ற வேண்டும் இந்திய மாணவர் சங்க, புதுச்சேரி 14வது  பிரதேச  மாநாடு அறைகூவல்:
 புதுச்சேரி,ஜுலை-21
இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 14வது மாநாடு பிரதேச தலைவர் அரிகரன் தலைமையில் நடைபெற்றது.மாணவர் சங்கத்தின் முன்னால் தலைவர்  வெ.பெருமாள் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் சரவணன் மாநாட்டை வாழ்த்தி பேசினார்.மாநாட்டு வேலை அறிக்கை சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து தாக்கல் செய்தார். இறுதியாக மாநாட்டை சங்கத்தின தமிழ்மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் நிறைவு செய்து வைத்து பேசினார்.முன்னதாக பெரியார் சிலை எதிரிலிருந்து துவங்கிய ஊர்வலத்தை சங்கத்தின் முன்னால் தலைவர் கதிரவன் துவக்கி வைத்தார். 

புதிய நிர்வாகிகள்:

இம்மாநாட்டில் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச புதிய தலைவராக அருண்,மீண்டும் செயலாளராகஆனந்த்,துணை தலைவராக ரஞ்சித்குமார்,அரிகரன்,இணைசெயலாளராக சக்திபிரியா,ஜீவா.ரஞ்சித்  செயற்குழு உறுபினர்களாக ஷாபானு, தேவா, ஜெயராஜ், பிரவீன்குமார், கவியரசன், க்லமண்ட், கிரிதரன்  உள்ளிட்ட 29பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது. 

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

புதுச்சேரி அரசு வழங்கி வரும் காமராஜர் உயர்கல்வி நிதி உதவி தொகையை  கடந்த ஆண்டு வழங்க வேண்டிய  நிலுவையில் உள்ள இத்தொகையை (சென்டாக் நிதி)உடனே வழங்க வேண்டும்.கல்வி நிறுவனங்களில் வசூலிக்கும் கட்டாய நன்கொடையை தடை செய்ய வேண்டும். மாநில பல்கலைகழகத்தை உடனே துவங்க வேண்டும், புதுச்சேரி அரசு பள்ளியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம்,பொறியியல் போன்ற உயர்கல்வி படிக்க முன்னூரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
                                                                    நன்றி : தினமலர்...!

Read more...
Thursday, 18 July 2013

புதுச்சேரி பட்ஜெட்:மாநில வளர்ச்சிக்கு உகந்தது அல்ல: எஸ்.எப்.ஐ. குற்றச்சாட்டு

0 comments
புதுச்சேரி:- 17-07-2013.
புதுச்சேரி முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட் மாநில வளர்ச்சிக்கு உகந்ததாக அமையவில்லை என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடந்த ஜூலை 15ல் தாக்கல் செய்த வரவு-செலவு அறிக்கை மாநில வளர்ச்சிக்கு பயனுள்ள பட்ஜெட்டாக அமையவில்லை. தேர்தல் வாக்குறுதிகளான வீடுகட்ட மானியம்,                      மாணவர்களுக்கு மடிக்கணினி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற எந்த திட்டத்தையும் அறிவிக்காதது மக்களை ஏமாற்றக்கூடியது. தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 12ஆயிரத்தி 986 ஆக உயர்ந்திருக்கிறது என்று பட்ஜெட் டில் கூறியுள்ளார். அப்படி என்றால் புதுச்சேரியில் வேலையின்மை குறைந்திருக்கிறதா? கடந்த 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி 22.7சத வீதம் பேர் புதுச்சேரியில் வறுமை கோட்டின் கீழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மேலும் உயர்ந்து இருக்கக்கூடும்.

29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ள நிலையில் புதுச்சேரியில் மட்டுமே தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக உள்ளது என்று தேசிய குற்றவியல் ஆணையம் கூறியுள்ளது. அப்படி என்றால் மக்கள் வளர்ச்சி எந்த நிலை யில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. மின்கட்டணம் உயர்வு குறித்து பரிசீலிக்க எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வாட்வரி குறைக்கப்பட்டுள்ளதையும், சென்டாக்  மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவி தொகை வழங்குவதாக அறிவித்திருப்பதை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. ஆனால், ஒட்டு  மொத்தத்தில் இந்த பட்ஜெட் மாநில வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை எனவும் புதுச்சேரி மக்கள் வாழ்நிலையை உயர்த்த போவதும் இல்லை என இந்திய மாணவர் சங்கம், புதுச்சேரி பிரதேச குழு குற்றம் சாட்டுகிறது.

தலைவர் : கி.ஹரிஹரன்                             செயலாளர் : அ. ஆனந்த் 


Read more...
Saturday, 6 July 2013

வன்முறையால் கொல்லப்படும் காதல் - சுபாஷினி அலி

0 comments
வன்முறையால் கொல்லப்படும் காதல் 
                                               - சுபாஷினி அலி
திவ்யா -இளவரசன்
இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக வந்துள்ள செய்தி இளம் காதல்மண இணைகள் எந்த அளவுக்கு சாதிய, அரசியல் நிர்ப்பந்தங்களால் பிரிக்கப்படுகிறார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. நவீன இந்தியா என்ற ஒப்பனை சாதி மறுப்புத் திருமணங்கள் முறிக்கப்படுகிற ஒவ்வொரு முறையும் கலைகிறது. இளவரசன்-திவ்யா கதையைப் போல, காதலித்து மணந்துகொண்ட வர்களில் ஒருவர் தலித் என்றால் ஒரு கும்பல் வெறிகொள்வது என்பது ஒரு மரபாகிவிட்டது.ஓராண்டுக்கு முன்பு, வன்னியர்-தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்களான, இன்று ‘தருமபுரி இணை’ என்று அறியப்படுகிற திவ்யா-இளவரசன் இருவரது கலப்புத் திருமணம் பற்றிய செய்தி வந்தபோதே இந்த இணைப்பு எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ என்று நிகழ்வுகளைக் கவனித்து வந்த பலரும் நினைக்கவே செய்தார்கள். மனப்பூர்வமாகக் காதலித்த அந்த இருவரையும் பொறுத்தவரையில் அவர்களது திருமண உறவு வேதனையான முறையில் குலைந்துபோனது. சில நாட்களுக்கு முன்னர்தான் ‘தி ஹிண்டு’ நாளேட்டிற்கு பேட்டியளித்த இளவரசன், “நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். திவ்யா தன்னுடைய குடும்பத்தைவிடவும் என்னோடு மிகமகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஆனால், நாங்கள் ஒரு அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டோம்,” என்று கூறினார். திவ்யாவே கூட முன்பு பத்திரிகையாளரிடம், தானும் தனது கணவரும் பெரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் “எனது காதலையும் திருமணத்தையும்” சாதியின் பிடியில் சிக்கியுள்ள சமுதாயத்திற்காக தியாகம் செய்ய முடிவு செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இவ்வாறு திருமணத்தை முறிப்பதற்குக் கட்டாயப் படுத்திய அமைப்புகளில் ஒன்றாகக் கூறப்படும் பாட்டாளி மக்கள் கட்சி தனக்கும் இதற்கும் எந்த வெளிப்படையான பங்கும் கிடையாது என்று கூறுகிறது. ஆனாலும், தங்களது பிள்ளைகளின் திருமணத்தை முடிவு செய்கிற உரிமை பெற்றோருக்கு உண்டு என்று அக்கட்சி வலியுறுத்துகிறது. மகிழ்ச்சிகரமாகத் தொடங்கிய ஒரு திருமண வாழ்வு இப்படி ஒரு சோக முடிவை அடைந்திருப்பது சில மாதங்களுக்கு முன் மதுரைக்கு நான் மேற்கொண்ட ஒரு அசாதாரணமான பயணத்தை நினைவுபடுத்துகிறது. குடும்பத்தின் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் மீறி துணிவுடன் சாதி விட்டு சாதி திருமணம் செய்துகொண்ட பல தம்பதிகள் இவ்வாண்டு ஜனவரி 24 அன்று, அங்கு நடந்த ஒரு விழாவில் பாராட் டப்பட்டனர். அவர்களது அந்தத் துணிவைப் பாராட்டுகிற விழாவுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. விழாவின் ஒரு பகுதியாக அந்த மேடையிலேயே ஒரு சாதி மறுப்புத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்னொரு காட்சி : 
மற்றொரு நிகழ்வில், துயரத்தில் மூழ்கி யிருந்த 24 வயது அபிராமி கூறிய அவரது சோகக் கதை நமது நாட்டின் சமுதாய வாழ் வில் எந்த அளவிற்கு காட்டுமிராண்டித்தனம் நெருக்கமானதாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியது. அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் அனுபவிக்கிற காட்டுமிராண்டித்தனம் அது. நிகழ்ச்சியில் கூடியிருந்த மகிழ்ச்சிகரமான ஒவ்வொரு காதல் இணையையும் அச்சுறுத்திய காட்டுமிராண்டித்தனம் அது.தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் சூரக் கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரான அபிராமி, தனது ஊருக்கு அருகில் உள்ள ஒரத்தநாடு நகரின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்திருந்தார். கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் தலித் இளைஞன் மாரிமுத்துவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 

இது அபிராமியின் குடும்பத் தினருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தார்கள். குடிகாரனான 35 வயது தாய்மாமனுக்கு அவரை வலுக்கட்டாயமாக மணமுடிக்க முயன்றார்கள். மாரிமுத்துவுடன் அபிராமி தொடர்புகொண்டார். பின்னர் இருவரும் ஊரைவிட்டு ஓடினர். திக்கற்றவர்களாக அவர்கள் ஊர் ஊராகச் சென்றனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலரை சந்தித்த பிறகுதான் அவர்களால் கும்ப கோணத்திற்குச் சென்று திருமணம் செய்து கொள்ள முடிந்தது. 2010 செப்டம்பர் 16ல் அந்தத் திருமணம் நடைபெற்றது. சென்னை யில் ஒரு போராட்ட வாழ்க்கையை நடத்திய அவர்கள், மகள் சௌந்தர்யா பிறந்த பிறகு மாரிமுத்துவின் குடும்பத்துடன் வாழ்வதற்காக ஊர் திரும்பினர். ஆனால், சௌந்தர்யாவின் முதல் பிறந்தநாள் வருவதற்கு சில நாட்களே இருந்தபோது அபிராமியின் அண்ணன் அந்தக் குழந்தைக்கு ஒரு தங்கச் சங்கிலி பரிசளிக்க விரும்புவதாகக் கூறி மாரிமுத்துவைத் தொடர்பு கொண்டார். 2012 மே 25 அன்று தனது மச்சானை சந்திப்பதற்காக வீட்டைவிட்டுச் சென்றார் மாரிமுத்து. ஆனால், திரும்பி வர வில்லை. மறுநாள் காலையில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட அவரது உடல் ஆற்றுக்கு அருகில் கிடந்தது. அபிராமியின் தந்தையும் அண்ணனும் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறையிடம் சரணடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விரைவிலேயே விடுவிக்கப்பட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் முன் வரவில்லை. 

அபிராமி பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தலித் மரணங்களுக்கான இழப்பீட்டுத் தொகை அவருக்குக் கிடைக்காது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஒரு நல்வாய்ப்பாக இந்த வழக்கு ஒரு பொது விசாரணையின் போது தேசிய மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர் முன் வந்தது. அபிராமிக்கும் அவரது மகளுக்கும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிட்டது. அத்துடன் அபிராமிக்கு ஒரு வேலை அல்லது அவரது வாழ்க்கைக்காக நிலம் அளிக்கவும் ஆணையம் பணித்தது. தனக்குக் கிடைத்த பணத்தை அவர் மாரிமுத்துவின் பெற்றோருக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், இன்று வரையில் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை. மாரிமுத்துவின் குடும்பத்தினர், தங்கள் ஊரில் உள்ள நில உடைமையாளர்களான சாதியின ரின் பொருளாதார புறக்கணிப்புக்கு உள்ளான வர்களாக, வீட்டைவிட்டுச் சென்றுவிடுமாறு அபிராமியிடம் கூறிவிட்டனர்.தொடுக்கப்படும் வன்முறை சாவில் முடிந் தாலும் சரி, மணமக்கள் பிரிக்கப்படுவதில் முடிந்தாலும் சரி, அல்லது சமூகப் புறக்கணிப் பில் முடிந்தாலும் சரி - ஒவ்வொரு பிரச்சனை யும் “கௌரவக் குற்றங்கள்” என்பதைக் கை யாள்வதற்கான ஒரு தனிச்சட்டம் தேவை என்பதையே வலியுறுத்துகிறது. 

மத்திய அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அளித்துள்ள மனுவில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று ஒரு தனிச்சட்டம் தேவை என்பதை 242வது சட்ட ஆணையமும், அண்மையில் வெளி யிடப்பட்ட நீதிபதி வர்மா குழு அறிக்கையும் வலியுறுத்தியுள்ளன. இந்தக் குற்றங்களின் பல்வேறு அம்சங்கள் அந்தப் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கட்டப் பஞ்சாயத் துகள், சாதிப் பஞ்சாயத்துகள் ஆகியவை செய் கிற வேலைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள் ளன. சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளுக் கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு கெடுவாய்ப்பாக, பிற்போக்கான சாதிப் பாகுபாட்டு நடைமுறைகளாலும், அதன் மூலம் கெட்டிப்படுத்தப்படுகிற வலுவான ஆணாதிக் கக் கட்டமைப்புகளாலும் நிகழ்த்தப்படுகிற இத்தகைய மனிதத் தன்மையற்ற குற்றங் களைச் செயல்முனைப்புடன் கையாள வேண்டியதன் அவசியத்தை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொஞ்சமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.மத்தியில் ஆட்சி செய்கிற கட்சிதான் ஹரியானா மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இருக்கிறது.

கட்டப்பஞ்சாயத்துகளின் பிற்போக்குத்தனமான செயல்கள் மிக அதிகமாக நடைபெறுகிற மாநிலம் அது. பிரச்சனையின் அடிவேரில் தாக்குதல் தொடுக்க வேண்டு மென்றால் சமூக சமத்துவமும் பாலின சமத்து வமும் தேவை. கட்டப் பஞ்சாயத்துகளுக்கும் அரசியல் செல்வாக்குள்ள சாதி-மத அமைப்பு களுக்கும் இடையே ஒன்றை ஒன்று சார்ந்தி ருப்பது அந்த அடிவேர். ஆனால், அதைத் தாக்குவதற்கான சமூக, பாலின சமத்துவம் தொடர்பான கொள்கை உறுதிப்பாடு காங்கிரஸ் கட்சிக்கும் இல்லை. இதர பெரிய கட்சிகளுக்கும் இல்லை. பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் ஆதரவு திரட்டுவதற்கு இந்த கட்டப் பஞ்சாயத்துகள் தேவைப்படுகின்றன. ஒன்றை ஒன்று அனுசரித்துப்போகிற ஒரு நாசகரமான நிலைமையை இது உரு வாக்கியிருக்கிறது. அது சாதி அரசியலையும் அடையாள அரசியலையும் மேலும் வலுப் படுத்தியிருக்கிறது.நடப்பு ஆண்டில் “கௌரவம்” என்ற பெய ரால் பல இந்திய இளைஞர்கள் கொல்லப் பட்டுவிட்டார்கள். ஒரு செயலூக்கமுள்ள சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை என்பதைத் தான் இந்தக் கொடூர மரணங்கள் உணர்த்து கின்றன.

கட்டுரையாளர்: (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில் ஒருவரான சுபாஷினி அலி, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமாவார்) 

                                      நன்றி : தி இந்து(ஜூலை 5)
                                   தமிழில்: அ. குமரேசன்.
Read more...
Tuesday, 2 July 2013

உலகில் ஊட்டச்சத்து குறைவானோர் - 40 விழுக்காட்டினர் இந்தியர்களே..!

0 comments



உலகில் ஊட்டச்சத்து குறைவுடையோரில் 40 விழுக்காட்டினர் இந்தியர்கள்...!
உலகில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டோர், மற்றும் அரசின் கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் குறைவான எடை கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் நாற்பது விழுக்காட்டினர் இந்தியாவில் அதிகம் உள்ளனர்.

வளரும் பொருளாதார வல்லரசு என்று அழைக்கப்படும் இந்தியா சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய அம்சங்களில் பிரேசில், நேபாளம், வங்கதேசம், சீனா ஆகியவற்றை விட பின் தங்கியுள்ளது என்று கனடாவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான மைக்ரோநியூட்ரியண்ட் இனிஷியேடிவ் அமைப்பின் தலைவரான எம்.ஜி.வெங்கடேஷ் மன்னார் கூறியுள்ளார். இந்தியாவில் இவற்றுக்குரிய அனைத்து திட்டங்களும் உள்ளன. அதற்குரிய கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதில் மத்திய சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் ஊடாடி வருகின்றன. ஆயினும் இவற்றை முன்னின்று நடத்தும் பொறுப்பாளர்கள் இல்லை. செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் விளக்கம் கூறும் ஆட்களும் இல்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் இல்லை. 

2005ம் ஆண்டு முதல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்படவில்லை என்பது திகைப்பளிக்கும் விஷயமாகும். பழைய புள்ளிவிவரங்கள் மட்டும் கையில் உள்ளதால் இவ்விஷயங்களில் நாம் முன்னேறியிருக்கிறோமா அல்லது பின்னடைந்திருக்கிறோமா என்று அறியமுடியவில்லை என்று அமைப்பின் ஆய்வு கூறுகிறது. இந்திய நாடு தனது முன்னோடிகளை தேடி அலைய வேண்டியதில்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய கொள்கைகளும், திட்டங்களும், ஆதாரங்களும் அதனிடம் உள்ளன. எனவே அரசு நடவடிக்கைகளை தொடங்க வேண்டியது மட்டுமே பாக்கி என்று மன்னார் சொல்கிறார். யுனிசெப் தயாரித்த 2013ம் ஆண்டில் உலக குழந்தைகள் அறிக்கையில் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதத்தில் இந்தியா 49வது இடத்தில் இருப்பதாக கூறுகிறது. அதே வேளையில் நேபாளம், வங்கதேசம் ஆகியவை முறையே 57, 60ம் இடங்களில் உள்ளன. இந்தியாவில் உயிருடன் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு நடுவில் 32 விழுக்காடு குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன் என்று அந்த அறிக்கை சொல்கிறது.

அதேவேளையில் பிரேசிலில் அந்த விகிதாசாரம் 10 ஆகவும், வங்கதேசத்தில் 26 ஆகவும் உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் பிறந்த சிசுக்கள் இறப்பு விகிதம் 1990ல் 81 விழுக்காடாக இருந்தது. 2011ல் இது 47 ஆக குறைந்துள்ளது இதே காலகட்டத்தில் இந்த விகிதம் பிரேசிலில் 49ல் இருந்து 14 ஆக குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு எட்டு விழுக்காடாக உள்ளது. இந்த வளர்ச்சி மத்திய தர வர்க்கத்தின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியுள்ளது. பிரிட்டனை விட அதிகமாக கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அதேவேளையில் குழந்தைகளுக்கு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் இரண்டு லட்சம் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மடிகின்றனர். அசுத்தமான தண்ணீர், முறையான துப்புரவு வசதிகள் இல்லாமை ஆகிய காரணங்களால் உருவாகும் வயிற்றுபோக்கு வியாதியால் இவை மடிகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நீரால் உருவாகும் வியாதிகள் உற்பத்தியையும் பாதிக்கின்றன. ஆண்டு தோறும் 7.3 கோடி வேலைநாட்கள் இதனால் இழப்புக்கு ஆளாகின்றன. 

சுகாதாரமற்ற சூழலில் வாழும் குழந்தைகள் கிருமிகளையும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இவை குழந்தைகளின் குடல், இரைப்பை போன்ற பகுதிகளில் குடியேறுகின்றன. குடல் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வளையங்களால் இவைகள் உருவாக்கும் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. இக்கிருமிகள் ஊட்டச்சத்துகள் குடல் சுவர்கள் மூலமாக ரத்தத்துக்குள் உறிஞ்சப்படுவதை தடுத்து விடுகின்றன. எனவே ஊட்டச்சத்து எவ்வளவு கொடுத்தாலும் அது குழந்தைகள் மத்தியில் பிரதிபலிப்பதில்லை என்று பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்த நிலைமையை தூய்மையான குடிநீர் வழங்குவதாலும், ஆரோக்கியமான இலவச உணவு வழங்குவது மூலம் அகற்ற முடியும். இந்தியாவில் நாள்தோறும் 600 கோடி காலன் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. 

அதில் 26 விழுக்காடு மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இந்தியாவில் போதுமான கழிப்பறை வசதிகள், துப்புரவு வசதிகள் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றன. கடந்த அறுபது ஆண்டுகளில் குடிநீர், துப்புரவு வசதிகள் திட்டங்களுக்காக இந்தியா சுமார் 2800 கோடி டாலர்களை செலவிட்டுள்ளது. ஆயினும் அதிகரிக்கும் மக்கள் தொகையின் தேவைகளை ஈடுகட்டுவது பெரும் போராட்டமாகவே உள்ளது. அரசின் மெத்தனமும், அதிகாரிகள்-அரசியல்வாதிகள்-மோசடி பேர்வழிகளின் கூட்டு இவற்றில் பெரும் தொகையை ஏப்பம் விட்டுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
                                                                              
                                                                                                                      நன்றி: தீக்கதிர்...!
Read more...

3 வது நாளாக புதுச்சேரி உயர்கல்வித்துறை முற்றுகை - எஸ்.எப்.ஐ. தொடர் போராட்டம்..!

0 comments
3 வது நாளாக முற்றுகையிட்டு போராட்டம்...! 
பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேர்வதற்கு ஒவ்வொரு துறையிலும் 12இடங்கள் சேர்க்கப்படுகின்றன.அந்த இடங்களுக்கு சென்டாக் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இதனால் தகுதியும்,திறமையும் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் போட்டிபோட்டு பெரும் பகுதி இடங்களை கைப்பற்றி பயின்று வருகின்றனர்.தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.இந்நிலையில் மாநில அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிற நுழைவத்தேர்வை ரத்து செய்து நடப்பு கல்வியாண்டு முதல் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் அன்று அறிவித்துள்ளதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் உயர்கல்வித்துறையை 2மணிநேரத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏற்கனவே நடைமுறையில் இருந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு முறையை தொடர வேண்டும் என இந்திய மாணவர் சங்கம்
வலியுறுத்தி  புதுச்சேரி மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள பிப்மேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
முதல்வரை சந்தித்து முறையிடல்:
இதனை தொடர்ந்து உயர்கல்வி துறை இயக்குனர் கரிகாலனை சந்தித்து மாணவர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் திருப்தி அளிக்காததால் காவல் துறை அதிகாரிகள் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்திருந்திருந்தனர். இரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுடன் இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த், து.தலைவர் ரஞ்சித், பவித்ரன், நந்தா, மாணவிகள் கலைவாணி, திவ்யா உள்ளிட்ட மாணவர் பிரதிநிதிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். மாணவர் சங்க நிர்வாகிகளிடம் கூறியதாவது அரசு கல்லூரி மாணவர்கள் பாதிக்கபடுவார்களேயானால் அரசு பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் பாலிடெக்னிக்ன் இறுதி ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து இறுதி முடிவு என்பது அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா என்று கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாக இந்திய மாணவர் சங்கம், தெரிவித்துக்கொள்கிறது.

இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க து.தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார், பிரதீப், நந்தா, ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்கம் பிரதேச செயலாளர் ஆனந்த், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க து.தலைவர் பாஸ்கர் கண்டன உரையாற்றினர்.
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com