Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 9 June 2013

புதுச்சேரியில் தனியார் பள்ளியின் வளர்ச்சியும் அரசு பள்ளியின் வீழ்ச்சியும்..!

0 comments
ஜூன் 1, 2013 SFIன் புதியபாதை இதழ் 

புதுச்சேரி மாநிலம் விடுதலைக்கு முன்பு பிரெஞ்சு  ஆட்சி காலத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு கல்வி  என்பது எட்டாக்கனியாயிருந்தது கல்வியில் வேற்றுமை பாரட்டப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு என தனிக் கல்வி நிலையங்கள் இருந்தன. அந்தக்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். மிகுந்த செல்வாக்கின் காரணமாகச் சேர்த்தவர்களும் நிறவேற்றுமை பாரட்டப்பட்டதால் வெளியேறினர். கல்வியில் காட்டப்பட்ட இந்த வேற்றுமையைக் களைய உள்ளுர் மக்கள் தலைவர்கள் முயன்றனர். எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அப்போழுது கல்வே சுப்புராய்ச்செட்டியார் என்பவர் உள்ளளூர் மாணவர்கள் சிறந்த கல்வி பெறவேண்டும் என்னும் நோக்கத்தில் ஒரு பள்ளியை நிறுவினார். கலவைக் கல்லூரி (CALVEY COLLEGE)  என்ற அப்பள்ளியின் மாணவர்கள் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராக 1927இல் கிளர்ச்சி செய்தனர்.பிரெஞ்சிந்தியக் கல்வித்துறையின் அதிகாரத்தால் மாணவர் தலைவர்களை பிரெஞ்சு கல்வி துறை இடைநீக்கம் செய்தது, இதனால் மாணவர்கள் போராட்டம் வலுப்பெற தங்களின் பிள்ளைகளுக்காக பெற்றோர்களும் மாணவர் அமைப்புகளும் சேர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக பிரெஞ்சு அரசு மாணவர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து இடைநீக்கம் செய்தமாணவர்களை மீண்டும் அப்பள்ளியில் சேர்த்துக்கொண்டனர் என வரலாற்று சிறப்புமிக்க விடுதலை போராட்டத்தில் கிளர்ச்சி செய்த பள்ளி கலவை கல்லூரி தற்போது மிஷன் வீதியில் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. அப்பள்ளியின் தற்பொதைய நிலைமை கட்டிடங்களை முறையாக பாதுகாக்க பராமரிக்க தவறியதன் விளைவு  அப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையையும் வகுப்புகளையும் ஆண்டுதோறும் அரசும் கல்வித்துறையும் குறைத்துக்கொண்டே வருகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் அப்பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்படும். பிரெஞ்சிந்திய மாணவர்களுக்கு இணையாக புதுச்சேரி மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்று கட்டிய பள்ளிக்கூடத்தை இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள் ஏழை, எளிய மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளி கட்டிடங்களை பாதுகாக்கவும் ஏழை மாணவர்களுக்கு தரமான இலவச கல்வி அளிப்பதற்கு  அரசிடம் பணம் இல்லை என கூறுகிறது.



இதே நிலைமை தான் ..சி மேல்நிலைப்பள்ளிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் முதலில் தேர்ந்தேடுக்கும் அரசுப்பள்ளி ..சி. பள்ளி, ஆனால் இன்றைக்கு நிலைமை  கட்டிடங்கள் சரியில்லை என்று 10ஆம் வகுப்பு வரை நீக்கிவிட்டனர். அரசு பள்ளிகளை பாதுகாக்காமல் அரசாங்கம் தனியார் கல்வி நிறுவனங்களை சீரும் சிறப்போடும் வளர்த்து வருகின்றது.




அரசாங்கம் அரசு பள்ளிகளை நவீனப்படுத்தி, ஆசிரியர் பற்றக்குறையை நிவர்த்தி செய்யவும் முன்வருவதில்லை. இதன் விளைவாக   அரசு பள்ளிகளில் ஆண்டுதோரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது.


அரசுப்பள்ளியில் 1 - 5ம் வகுப்பு வரை சராசரியாக  கடந்த 4 ஆண்டுகளில்  ஆண்டுக்கு 4000 மாணவர்கள் தனியார் பள்ளியை நாடுவதும், அரசு பள்ளி எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது.  இதனால் பல அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்சேர்க்கை குறைவாக உள்ளது. இதனால் பல அரசு ஆரம்ப்ப பள்ளிகள் மூடும் நிலையிலும்  உள்ளது.

1-5ம் வகுப்பு வரை கடந்த 4 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளை நாடிசெல்வோரின் எண்ணிக்கை  சராசரியாக 3500 மாணவர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து பெரும்வளர்ச்சியை அடைந்துள்ளது


அரசுப்பள்ளியில் 6-10 வகுப்பு வரை சராசரியாக 4 ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு 1200 மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது.    ஆனால் தனியார்ப்பள்ளியில் 6-10ம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் சராசரியாக 3500 மாணவர்கள் வரை உயர்ந்துள்ளது. தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுக்கு 1000 மாணவர்கள் வரை கூடுதலாக எண்ணிக்கை என்பது உயர்ந்து வருகின்றது.



அரசு பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை
அரசுப்பள்ளயின் அண்டுக்கு மாணவர்களின்  சேர்க்கை குறைவு எண்ணிக்கை
தனியார் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை
தனியார்பள்ளகளின் மாணவர்களின்  சேர்க்கை உயர்வு  எண்ணிக்கை 




2008-09
84,845

1,01,352


2009-10
81,122
3,723
1,09,749
8,397

2010-11
76,118
5,004
1,14,007
4,258

2011-12
71,785
4,333
1,19,924
5,917
அனைவருக்கும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு 2009ல் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.  கட்டாய கல்வி உரிமை சட்டம் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இலவச கல்வியை கட்டாய படுத்த அரசு முன்வருவதில்லை. கல்வி உரிமை சட்டம் சம்பந்தமாக கல்வி  துறை அதிகாரியிடம் என்னாயிற்று என்று கேட்டால் அனைத்தும் சட்டசபையில் அமைச்சர் மேற்பாற்வையில் உள்ளது என்ற பதில் அளித்தார். கல்வி உரிமை சட்டத்தை அமுல்படுத்தாதது குறித்து அரசுக்கு எந்த கவலையும் இல்லை.

கடந்த 15 ஆண்டுக்கு முன்பு தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 92 ஆரம்ப பள்ளிகள்,  38 நடுநிலைப்பள்ளிகள்,  51 உயர்நிலை பள்ளிகள்,  17 மேல்நிலைப்பள்ளிகளாக இருந்த நிலையில், புதுச்சேரியை ஆண்ட காங்கிரஸ், தி.மு. ஆட்சியில் கல்வியில் தனியார்மயத்தை திறந்து விட்ட விளைவு இப்போது காங்கிரஸ் போன பாதையிலே சற்றும் தவறாமல் தன் ஆட்சியை வழி நடத்தும் என்.ஆர் காங்கிரஸ் அரசும் தனியார் தான் தரமாக கல்வியை தருவதாக சித்தரித்ததின் விளைவே இன்று தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அப்படியே இரண்டுமடங்காக உயர்ந்துள்ளது. தற்போது  தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை   70  ஆரம்ப பள்ளிகள்  58 நடுநிலைப்பள்ளிகள் 107 உயர்நிலை பள்ளிகள் 68 மேல்நிலைப்பள்ளிகள்.


அரசிடம்  அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த வேண்டும் என்று கேட்டால் அவர்கள் நாங்கள் உயர்த்தியுள்ளோம் என்று வாய்கூசாமல் சொல்வார்கள்..... அரசுப்பள்ளிகளில்  கடந்த 15 ஆண்டுகளில்  புதியதாக பள்ளிகளை துவங்கியதாக சரித்திரம் கிடையாது. ஆனால் அரசாங்கம் ஓர் புதிய யுக்தியை கடைபிடிக்கின்றனர். புதியதாக கல்வி நிலையங்களை துவங்கினால் கட்டிடம் கட்ட அரசுக்கு கூடுதல் பணம் செலவிடவேண்டிய நிலைமை ஏற்படும். எனவே  புதுச்சேரியல் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தலாம் என்று முடிவு எடுத்தனர்தரம் உயர்த்துவது என்பது உயர்நிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்றுவது நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்துவது தான் தரம் உயர்வாம்?. ஆட்சியாளர்கள் அதைதான் தரம் உயர்வு என்று கூறுகின்றனர்.

பள்ளியின் தரம் உயர்த்தினால் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதலில் பள்ளியின் வகுப்பறைகளை அதிகப்படுத்தவேண்டும், ஆசிரியர்  எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பாற்றாக்குறை 1500க்கும் மேல் உள்ளது, கழிவறைகளை அதிகப்படுத்த வேண்டும், மேல்நிலைப்பள்ளியென்றால் ஆய்வகங்களை ஏற்படுத்தவேண்டும், ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்,  அதையெல்லாம் செய்யாமல் பள்ளியின் தரத்தை மட்டும் உயர்த்த உத்தரவிட்டால் அரசு பள்ளியின் தரம் எப்படி உயரும்? புதுவையில் இதற்கு பல பள்ளிகள்  உதாரணமாக கூறலாம் . கரிக்கலாம்பாக்கம், கோர்க்காடு, கிரும்பாம்பாக்கம், பாகூர் கஸ்தூரிபாய் பள்ளி வில்லியனூர் உறுவையார், கதிர்காமம், இலாசுபேட்டை வள்ளலார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என பல பள்ளிகள்.   ஆனால் என்.ஆர் அரசு ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளி கட்டிடங்களை பாதுகாக்கவும், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிப்பதற்கு அரசிடம் பணம் இல்லை. ஆனால் புதியதாக ஹோட்டல் கட்டினால் கோடிக்கணக்கில் மானியமாம். சுற்றுளாவை மேம்படுத்த கடற்கறையை பளிங்கு கற்கலால் அழகுபடுத்த கோடிக்கணக்கில் செலவிட பணம் இருக்காம்.

தனியார் பள்ளியின் வளர்ச்சியும் மாணவர்கள் உரிமை பரிப்பும்

தொழிலாளர்களுக்கு கூட தொழிற்சாலையில் 8 மணிநேரம் தான் வேலை என்கின்ற சட்டம் இருக்கின்றது. ஆனால் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக 9-10, 11-12 வகுப்பு மாணவர்களுக்கு 16 மணிநேர வேலை நேரமாக இருக்கின்றது. காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை விடுமுறை கிடையாது, உறவினருடனும் நண்பர்களுன் உரையாட முடியாது, அன்றாட நிகழ்வுகளுக்கு மாறாக, இயற்க்கைக்கு எதிராக ஓர் இயந்திரத்தனமாக தனியார்மயம் மாணவர்களை மாற்றி வருகின்றது. குறிப்பாக பொதுத் தேர்விற்கு தயாராகும் மாணவர்களின் நிலைமை சொல்ல முடியாதவை. கிட்டதட்ட 18 மாதங்கள் பொது தேர்வுக்காக மாணவர்களை இயந்திரம் போல மாணவர்களின் உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராகவும் நடத்துகின்றனர். தனியார் பள்ளிகள் 100 சதமான தேர்ச்சி பெற்றாக வேண்டும், அடுத்த ஆண்டு முழுமையான மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்கின்ற லாப வெறியோடு மாணவர்களை பயன்படுத்துகின்றனர். மறுபக்கம் அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை, சரியானமுறையில் ஊக்குவிப்பும் பயிற்சியும் இல்லாதது சிறப்பு வகுப்புகள் கிடையாது. இப்படியாக அரசு பள்ளி மாணவர்கள் எப்படி தனியார் பள்ளி மாணவர்களிடம் போட்டிப்போடமுடியும். எப்போது அரசு பள்ளி தனியார் பள்ளிக்கு இணையாக மாறும்எப்போது அரசு உயர் அதிகாரிகள் பிள்ளைகளும்,  சட்டமன்ற உறுப்பினர்களுடைய வாரிசுகளும், அரசு பள்ளியின் ஆசிரியர் பிள்ளைகளும் அரசு பள்ளியில் தான் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் தான் அரசு பள்ளியின் கல்வி தரம் தனியார் பள்ளிக்கு இணையாக மாறுமே தவிர வேறு வழியே இல்லை.

புதுச்சேரியில் உயர் கல்வி பறிப்பும் அரசின் தனியார் மயக்கொள்கையும்

புதுச்சேரியில் ஒரு ஆண்டுக்கு  சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் பணிரெண்டாம் வகுப்புகளை முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். அவர்களுக்கு உயர்கல்வி அளிக்க அரசாங்கம் அரசு கல்லூரிகளில் 4000 மாணவர்களுக்கு மட்டும் தான் இது வரை வழிவகை செய்துள்ளது. மீதம் உள்ளவர்கள்  உயர்கல்வி பெற தனியார் கல்வி நிறுவனங்களை  நாடிச்செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. புதுச்சேரியில் ஒரேஒரு அரசு மருத்துவக்கல்லூரி தான் உள்ளது. ஆனால்  9 தனியார் மருத்துவக்கல்லூரி. புதுச்சேரியில் அரசு பொறியியல் கல்லூரி கிடையாது. அரசு உதவிபெரும் பொறியியல் கல்லூரிதான் இரண்டு உள்ளது. அதுவும் தனியார் கல்லூரியை விட அதிக கட்டணம். பொறியியல் படிப்பை புதுச்சேரியில் இலவசமாக படிக்க முடியாது. ஆனால் ஆளும் அரசு அரசாங்கம் உயர்படிப்பை இலவசமாக படிக்கலாம் என்று சட்டசபையில் அறிவிப்பார்கள். 13 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் .  5 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,  9 தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள். அரசு B.Ed. கல்லூரி கிடையாது 27 தனியார் B.Ed. கல்லூரிகள். அதபோல் ஒரே ஒரு அரசு D.T.Ed.  கல்லூரி ஆனால் 50 தனியார் D.T.Ed. கல்லூரிகள்.  இதில் இருந்து பார்த்தால் உயர்கல்வியில் தனியார்மயத்தையும் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் தான் உயர்கல்வி கிடைக்கும் புதுச்சேரியில்.

            புதுச்சேரியில் மத்திய பல்கலைகழகம் வரலாற்று சிறப்புமிக்க அக்கல்லூரியில் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் ஆர்வத்துடனும் பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கிய பல்வேறு வல்லுனர்களை உருவாக்கிய கல்லூரி, எப்போது பல்கலைகழகத்தில் தேர்வில் மதிப்பெண்பட்டியல் பிரச்சனை வந்து அது சம்பந்தமாக ஊழியர் படுகொலை நடந்ததோ அன்று தொடர்ந்து பல்கலைகழகம் துணை வேந்தரின் தன்னிச்சையான முடிவுகள் முதல் தூரோகம் 2007 - 2008ம் ஆண்டு தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு புதுச்சேரியில்  பல ஏழை எளிய மாணவர்கள் அரசாங்க பள்ளியில் தமிழ் வழியில் படித்து கல்லூரியல் சேரும் போது திடீர் என்ற அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் தான் தேர்வுகள் எழுதவேண்டும என்று பல்கலைகழக முடிவு. இம்முடிவால் இன்றும் பல மாணவர்கள் அவர்களின் பட்டப்படிப்பை முடிக்க முடியாத சுழ்நிலை.

2012-13 கல்வி ஆண்டில் சென்ற ஆண்டை விட 100 சதமானம்  கட்டண உயர்வு 2012 ஆண்டுக்கு முன்பு 3000 இருந்தால் எந்த படிப்பையும் படிக்கலாம் ஆனால் இப்போது குறைந்தபட்சம் 20,000 பணம் இருந்தால் தான் பல்கலைகழகத்தில் படிக்க முடியும் நிலைமை.  இது பல ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பறிக்கும் நடவடிக்கை. பல்கலைகழகத்தில் கட்டண உயர்வு எம்பில் படிப்பு நீக்கம், கொலைவழக்கு, கட்டிட வேலையில் ஊழல், ஆட்கள் நியமிப்பதில் குளறுபடி, மத்திய பல்கலைகழகம் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு உயர்கல்வி தரும் வாய்பை நசுக்குகின்றதுபுதுவை அரசும் அதை மௌனமாக வேடிக்கை பார்க்கின்றதுஆனால் கடந்த 5 அண்டுக்கு முன்பு புதுவை அரசு அறிவித்த மாநில பல்கலைகழகம் அமைப்பதாக சட்டசபையில் அறிவித்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக தான் அரசு பல்லைக்கழகம் அமைப்பதாக உறுதியளித்தது. கடந்த சட்ட சபை கூட்டதில்  முதல்வர் மாநில பல்கலைக்கழகம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பல்கலைகழகத்தை உடனே துவங்க அனைத்து ஜனநாயக இயக்கங்களும் ஒன்று சேர்ந்து போராட்டக்களத்தில் இறங்காமல் மாநில பல்கலைகழகம்          சாத்தியமில்லை. 
"போராடி நாம் தோற்றதில்லை, போராடாமல் நாம் வென்றதில்லை."
                                        து.கதிரவன்,
                                        SFI முன்னால் செயலாளர்,
                                        புதுச்சேரி பிரதேச குழு.
                                        நன்றி : SFIன் புதியபாதை

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com