Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 22 June 2013

கல்விக் கட்டணக்கொள்ளை எதிர்த்துப் போராட்டம் - காவல்துறையினர் கொடூரத் தாக்குதல்..!

0 comments
சென்னையில்  கல்விக் கட்டணக்கொள்ளையை எதிர்த்துப் போராட்டம் : 
கூடுதல் கல்விக் கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் வட- தென் சென்னை மாவட்டக்குழு சார்பில் புதனன்று (ஜூன் 19) பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாநிலத் துணைச்செயலாளர் ரெ.ஸ்டாலின், வடசென்னை மாவட்டச் செயலாளர் த.சித்தார்த்தன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் செல்லக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரையில் கல்விக் கட்டணக்கொள்ளையை எதிர்த்துப் போராட்டம் : மாணவர்கள் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதல்

கல்விக்கட்டணக் கொள்ளையைத் தடுக்கக் கோரிய மாணவர்களை கொடூரமாகத் தாக்கும் போலீசார்.

மதுரை. ஜூன் 19-   
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகா ரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரையில் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங் கத்தினர் மீது காவல்துறையி னர் கொடூரத்தாக்குதலை நடத் தினர். தனியார் கல்வி நிலையத் தின் பாதுகாவலர்கள் போல காவல்துறையினர் மாணவிகள் மீதும் நடத்திய காட்டுமிராண் டித்தனத்தைக் கண்ட பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர்.கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தினை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகா ரத்தை ரத்து செய்ய வேண்டும். இச்சட்டத்தை அமல்படுத்தும் கல்வி நிலையங்களின் பட்டி யலை தமிழக அரசு வெளியிட வேண்டும். நீதிபதி சிங்கார வேலர் குழு உயர்த்திய தனியார் பள்ளிகளின் கல்விக்கட்ட ணத்தை வாபஸ் பெற வேண் டும். தனியார் பள்ளிகளின் கட் டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்கக் கோரி மதுரையில் புதனன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவிகளை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர்.
 
தாய்மொழி வழிக்கல்வியைத் தமிழக அரசு உறுதிப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட் டக்கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார் பில் முற்றுகைப்போராட்டம் புதனன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மதுரையில் மாணவர் சங்க மாநிலத்துணைச்செயலாளர் வி.மாரியப்பன் தலைமையில், மாநகர் மாவட்டச்செயலாளர் எஸ்.அர்ஜீன், புறநகர் மாவட் டச்செயலாளர் எம்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மலர் விழி, மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், பாவெல், ஜென்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். தல்லாகுளத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத் தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணை யர் ஜெயபால், காவல்துறை ஆய்வாளர் மோகன் தலைமை யிலான குழு தடுத்து நிறுத்தி யது. ஆனால், மாணவர்கள் முழக்கங்களுடன் முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் தாக்குதல் : இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆணையர் ஜெயபால், மாணவர் சங்க மாநிலத் துணைச்செயலாளர் வி.மாரியப் பனை தாக்கினார். இதனைக் கண்டித்த மாணவர்களை, காவல்துறை ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட காவல்துறையினர் காண்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இத்தாக்குதலைத் தடுத்த மாணவிகளையும் தர தரவென்று இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றி தள்ளினர். ஆனாலும், வீரஞ்செரிந்த கோரிக்கை முழக்கங்களை தொடர்ந்து எழுப்பியவாறு அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்களை, ஒவ்வொரு வரையும் காவலர்கள், சட்டை யைப் பிடித்து தரதரவென்று இழுத்துச்சென்று காவல் துறை வாகனத்தில் தள்ளி கைது செய்தனர். கல்விக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் போராடுவது காவல்துறைக்கும் சேர்த்து தான். அதற்காகப் போராடும் மாணவர்களைப் பாராட்டாமல் தாக்குவது காட் டுமிராண்டித் தனம் என்று மக்கள் கூறினர். 

கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளி- கல்லூரிகள் அடிக்கும் கொள்ளை :  மாவட்டக் கல்வி அலுவலகங்களை முற்றுகையிட்டு எஸ்எப்ஐ போராட்டம்
திருவாரூர், ஜூன் 19 - 
தனியார் கல்வி நிலையங் களில் நடைபெறும் கட்ட ணக் கொள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், தமிழக கல்வித்துறையைக் கண்டித்தும், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் தனியார் பள்ளிகளில் ஏழை- எளிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட் டை கறாராக அமல்படுத்தக் கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் புதனன்று முதன் மைக் கல்வி அலுவலகங் களை முற்றுகையிட்டனர்.தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்போராட் டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.

திருவாரூர்:
திருவாரூரில், கட்டணக் கொள்ளையைத் தடுக்கா மல் செயலிழந்து கிடக்கும், முதன்மைக்கல்வி அலுவ லர் அலுவலகத்திற்கு மலர் வளையம் வைத்தும்- அஞ் சலி செலுத்தியும் நூதனப் போராட்டம் நடைபெற் றது.மேலும், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன் தலைமை யில், மாணவர்கள் சாலை யில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். அப்போது காவல்துறைக் கும் மாணவர்களுக்கும் இடையே சிறிதுநேரம் தள் ளுமுள்ளு ஏற்பட்டு அப் பகுதி பரபரப்பானது.மாணவர் சங்க நிர்வாகி கள் பிரகாஷ், நன்மாறன், பிடல் காஸ்ட்ரோ, முத்துச் செல்வன், திருநாவுக்கரசு, கஸ்தூரி, வினோதினி, சுலக் சனா உட்பட நூற்றுக்க ணக்கான மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் நான்கு மாணவிகள் உட்பட 27 மாணவர்களை காவல் துறையினர் கைது செய் தனர்.

தஞ்சாவூரில் மாணவர்களைக் கேவலமாகப் பேசிய போலீசார்:
தஞ்சாவூரில் முதன் மைக் கல்வி அலுவலர் அலு வலகத்திற்கே, மாணவர் களைத் தடுத்து நிறுத்திய போலீசார், தரையில் அமர் ந்து போராட்டம் நடத்திய மாணவர்களை வலுக்கட் டாயமாக அப்புறப்படுத் தினர். மேலும், காவல்துறை துணைக்கண்காணிப்பாள ரான அர்ச்சுணன், மாண வர் சங்கத் தலைவர்கள் வி. கரிகாலன், அ.பாலச்சந்தர் உள்ளிட்டோரை ஒருமை யிலும், கேவலமாகவும் பேசி யதுடன், போராட்டத்தை யும் கொச்சைப்படுத்தினார்.மாணவர்களின் கோரிக் கையை ஆதரித்து, இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிமாறன், கா.அன்பு ஆகியோரையும் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர். 7 மாணவி யர் உட்பட 22 பேரை அவர் கள் கைது செய்தனர். போலீ சாரின் அராஜகத்தைக் கண் டித்து, மாணவர்கள் தங்க ளின் மதிய உணவைப் புறக் கணித்து கண்டனம் 
தெரிவித்தனர்.

நாகையில்80 பேர் கைது : 
நாகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்று கைப் போராட்டத்தில் பங்கேற்று, 12 மாணவியர் உட்பட 80 பேர் கைதாகினர்.சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன் போராட்டத்திற்குத் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் வ.சிங்கார வேலன் சிறப்புரையாற்றி னார். நாகை நகரச் செய லாளர் க.வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் அன்புராஜ், குமரவேல், சுரேஷ், சிவனேசன், மகேந் திரன், ஸ்டீபன்ராஜ் உள் ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றி னர். நாகை நகரின் கல்லூரி கள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற் றைச் சேர்ந்த மாணவ - மாணவியர் கலந்து கொண் டனர்.

திருச்சிராப்பள்ளி :  
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநகரச் செயலாளர் பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர் சரவ ணத்தமிழன், மாவட்ட நிர்வாகிகள் பெரியசாமி, காமாட்சி, ஸ்ரீமதிநாராயணன் ஆகியோர் உரையா ற்றினர்.முன்னதாக ஊர்வலமும் நடைபெற்றது.

காஞ்சிபுரம்: 
கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும், அதிக கல்விக்கட்டணங்களை வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் புதனன்று (ஜூன் 19) செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கு.அசோக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் ஜோஸ்பின் விஜி, மாவட்டச் செயலாளர் பகத்சிங்தாஸ், க.ஜீவானந்தம், ஸ்டாலின் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கோவை: 
தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை கண்டித்து: முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்


தனியார் பள்ளி கல்லூரிகளில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் புதனன்று கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 10 முதல் 40 சதவிகிதம் வரை கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வதற்கு தமிழக அரசின் கட்டண நிர்ணயக்குழுவான நீதிபதி சிங்காரவேலர் குழு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கட்டாய நன்கொடை கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் பள்ளிகள், மேலும் கொள்ளையடிக்க துணைபோகும் மேற்கண்ட உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீட்டை பெருவாரியான பள்ளிகள் அமல்படுத்தவில்லை. எனவே, இப்பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இட ஒதுக்கீட்டின் படி சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை கல்வி நிலைய வளாகத்தின் தகவல் பலகையில் அனைவரும் பார்க்கும் வண்ணம் வெளியிட வேண்டும். அரசு பள்ளிகளில் ஆங்கில மொழியை பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்ற தமிழக அரசின் அறிவிப்பை கண்டித்தும் புதனன்று முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்தது.இதன் ஒருபகுதியாக, கோவை, டவுன்ஹால் மணிகூண்டு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளி சீருடைகள் அணிந்து, மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நிசார் அகமது தலைமையில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். பின்னர், முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இதையடுத்து, காவல்துறை ஆணையாளர் மனோகரன், ஆய்வாளர்கள் கணேசன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை மட்டும் கைது செய்ய முயன்றனர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும், மாணவர்களின் எதிர்ப்பை மீறி சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், மாவட்டச் செயலாளர் தீபக்சந்திரகாந்தி, துணைச் செயலாளர் தென்றல் உள்ளிட்ட நிர்வாகிகள் 15 பேரை மட்டும் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மாணவர்களின் இம்முற்றுகை போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மிரட்டிய ஆய்வாளர்:
இதனிடையே, மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை மட்டும் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்ற பின்பு, காவல்துறை ஆய்வாளர் சீனிவாசன், போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை மிரட்டும் தொனியில் பேசினார். ஆனால், இம்மிரட்டலுக்கு அஞ்சாத மாணவர்கள், கொள்ளையடிக்கும் கல்வி நிலையங்களுக்கு சென்று முதலில் நீங்கள் மிரட்டுங்கள். எங்களை மிரட்டும் வேலையில் ஈடுபடாதீர்கள் என ஆவேசமாக தெரிவித்தனர். இதனால், மேற்கொண்டு செய்வதறியாத ஆய்வாளர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

நாமக்கல்
இதேபோல், கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் பாடை கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.உச்சிமகாளி கண்டன உரையாற்றினார். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கே.நவீன்ராஜ், எம்.நாகேஸ்வரன், மோகனப்பிரியா, ஆஷா, அஜீத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
                                                                                                         நன்றி:தீக்கதிர்..!

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com