Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 21 June 2013

மருத்துவ கல்லூரி நிர்வாகிகளிடம் - சரணடைந்தார் முதல்வர் ரங்கசாமி..!

0 comments
தனியார் மருத்தவ கல்லூரிகளில் 50சதவீத  இடஓதுக்கீடு வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் முற்றுகை போராட்டம்:
 
தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு வழங்கவேண்டிய 50சதவீத இடங்களை வழங்காததை கண்டித்தும், அக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யக்கோரி மாணவர், வாலிபர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
 
மணகுளவிநாயகர், அறுபடைவீடு, மகாத்மா காந்தி, வெங்கடேஸ்வரா, லட்சுமி நாராயணா உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு வழங்கவேண்டிய 50சதவீத இடங்கள் வழங்குவதற்கு பதில் குறைவான இடங்களையே ஒவ்வொரு ஆண்டும்  வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசின் 50சதவீத இடங்களை வழங்க மறுத்துவரும் இக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைதலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்து, வாலிபர் சங்க பிரதேசத்தலைவர் இரா.சரவணன் நிர்வாகிகள் யோகராஜ், அருள், மவூரியா  உள்ளிட்ட  மாணவர்கள், வாலிபர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக முற்றுகையில் ஈடுபட முயன்ற மாணவர்களை  காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 
 
தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் நடைபெறுவதையொட்டியே  இப்போராட்டம் நடைபெற்றது.
 
அடிபணிந்தார்  முதலமைச்சர் ரங்கசாமி:
 
இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு திட்டமிட்டபடி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் புதுச்சேரி வணிகவரி துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தனியார் மருத்துவ கல்லூரிகள் புதுச்சேரி அரசுக்கு கடந்த ஆண்டு வழங்கிய அதே 265 இடங்களையே வழங்கியுள்ளனர். 50 சதவீதம் அரசு இடஒதுக்கீட்டை தனியார் மருத்துவ கல்லூரிகள் வழங்கும் என்று புதுச்சேரி மாணவர்கள் எதிர்பார்த்த நிலையில் வெறும் 27% சதவீதம் மட்டுமே தனியார் கல்வி நிறுவனத்திடம் பெற்றுள்ளார். அண்டை மாநிலமான தமிழகத்தில் 60% சதவீதம் பெறும்போது புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகள் துவங்கும் போது 80% சதவீதம் தருவதாக உறுதி கூறியே கல்வி நிறுவனத்தை துவங்கியவர்கள் தற்போது அரசு விதிகளை காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர் என்பது வேதனைக்குள்ளான விஷயம்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com