Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 12 June 2013

இணையதளம், தொலைபேசிகளை கள்ளத்தனமாக கண்காணிக்கிறது அமெரிக்கா!

0 comments

மக்களின் அந்தரங்க உரிமைகள் அமெரிக்க உளவாளிகளின் கைகளில்!
இந்தியா தடுக்க வேண்டும்: எஸ்.எப்.ஐ.


புதுதில்லி, ஜூன் 11- இந்திய மக்கள் உட்பட உலகின் அனைத்துப்பகுதி மக்களின் அந்த ரங்க நடவடிக்கைகளையும் அவர்க ளது தொலைத்தொடர்பு மற்றும் இணையதளச் செயல்பாடுகள் மூலம் அமெரிக்கா கண்காணித்துக் கொண்டிருப்பதாக அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதைத் தடுத்து நிறுத்தும் நட வடிக்கைகளை இந்திய அரசு உடன டியாக மேற்கொள்ள வேண்டுமென இந்திய மாணவர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. நாடுகளின் இறையாண்மையையும் தனி நபர்களின் உரிமைகளையும் நசுக்கும் விதத்தில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இத்தகைய மோசமான வேவுபார்க் கும் நடவடிக்கைகளைஇந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கம், மத்திய குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அமெரிக்காவின் தேசிய பாது காப்பு முகமையானது (என்எஸ்ஏ), இணையதளம் மற்றும் தொலைபேசித் தகவல்களின் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து நபர்களைப் பற்றியும் தகவல்களை கைப்பற்றிக்கொள்கிறது என்று ஊடகச் செய்திகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.வேவுபார்க்கும் நோக்கத்திற்காக அமெரிக்கா அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் தனி நபர்களின் அந்தரங்கங்களில் அத்துமீறி மூக்கை நுழைப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் மூலம், மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான வெரிசான், ஏடிஅண்டு டி, கூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ, ஆப்பிள் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் உளவுபார்க்கும் கருவிகளாகவும் செயல்பட்டுக்கொண்டிருப்பது புலப்பட்டிருக்கிறது. “பிரிசம்” என்ற அமெரிக்க கண்காணிப்புத்திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் கருவிகளாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக கேபிள் லைன்களையும் இவை குறுக்கிட்டு இடைமறித்துள் ளன.அமெரிக்க அரசாங்கத்தால் இவ்வாறு உளவு பார்க்கப்பட்டு வரும் நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய இலக்காக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவால் கள்ளத்தனமாக கண்காணிக்கப்படும் நாடுகளில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை விடவும் அதிகமான அளவில் ஐந்தாவது மிகப்பெரிய இலக்காக இந்தியா இருந்து வருகிறது. அமெரிக்க அரசு இதை நியாயப்படுத்தியுள்ளது. தேசியப் பாதுகாப்பு முகமையானது, ‘வெளிநாட்டவர்களை’ மட்டுமே இப்படி வேவு பார்க்கிறது என்றும், அமெரிக்க குடிமக்களின் அந்தரங்க உரிமை எதையும் மீறிவிடவில்லை என்றும், இதுதொடர்பான அமெரிக்கச் சட்டங்கள் எதையும் மீறிவிட வில்லை என்றும், அமெரிக்க தேசிய நலன் அடிப்படையிலேயே வெளிநாட்டவர்களை வேவு பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ஒபாமாவே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.இணையதளம் என்ற கட்டமைப்பும் அதன் உலகளாவிய நிர்வாகமும் அமெரிக்க வர்த்தகத்துறையின் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது என்பது இப் போது தெளிவாகிறது. இதன் பொருள், இணையதளம் என்ற கட்டமைப்பு அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதே ஆகும்.


உலகளாவிய தகவல் தொடர்புகளில் இணைய தளத்தின் முக்கியத்துவம் அதிகரித்துவரும் நிலையில் இதர நாடுகள் மீதும், அவற்றின் குடிமக்களின் உரிமைகள் மீதும் இப்படிப்பட்ட அத்துமீறிய கட்டுப்பாடு தீவிரமடையும் ஆபத்துக்களும் உள்ளன என்பது தற்போது தெளிவாகிறது.இந்த விவகாரத்தில் இந்தியா, தனது குடிமக்களின் உரிமைகள் மீறப்பட்டிருப்பதையும், தனது இறையாண்மை மீறப்பட்டிருப்பதையும் எதிர்த்து உடனடியாக கடும் கண்டனம் எழுப்பிடவேண்டும்.மைக்ரோசாப்ட், கூகுள், யாஹூ மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் உதவியோடு அமெரிக்கா கள் ளத்தனமாக இந்திய மக்களின் தகவல்களை சேகரித்து வேவு பார்ப் பதற்கு எதிராக இந்திய அரசு கண்ட னக்குரல் எழுப்புவதோடு நின்று விடக்கூடாது; மேற்கண்ட நிறுவனங்களின் சேவைகளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன் படுத்திவரும் நிலையில், அந்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இந்நிறுவனங்கள் நடந்துகொள்ள வேண்டும் என குரல் கொடுக்கும் நாடுகளோடு இந்தியாவும் அவசியம் இணைந்துகொள்ள வேண்டும்.உலகளாவிய இணையதள நிர் வாகத்தை ஜனநாயகப்படுத்துவதற் கும், நாடுகளின் இறையாண்மை மீதும், தனிநபர்களின் உரிமைகள் மீதும் ஏறி நின்று அவற்றை நசுக்க முயற்சிக்கும் அமெரிக்க உளவு ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் இந்தியா அவசியம் குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
                                                                                                            நன்றி :  தீக்கதிர் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com