Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 9 June 2013

அந்நிய பல்கலைக்கழக வசதிக்காக இந்திய கல்வி முறையை மாற்ற சதி..!

0 comments
அந்நிய பல்கலைக்கழக வசதிக்காக இந்திய கல்வி முறையை மாற்ற
சதி - மாணவர் சங்கத்தலைவர் குற்றச்சாட்டு..!


திருநெல்வேலி, ஜூன் 2-

இந்தியாவில் நுழையும் அந்நிய பல்கலைக்கழகங் களின் வசதிக்கேற்ப இந்திய கல்வி முறையை மாற்ற மத் திய அரசு சதி செய்கிறது என்று இந்திய மாணவர் சங்கத் தலைவர் ரித்த பிரதா பானர்ஜி குற்றம் சாட்டியுள் ளார்.நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில 7நாள் பயிற்சி வகுப்பு நடை பெற்ற வருகிறது. பயிற்சி வகுப்பிற்கு மாணவர் சங்க மாநில நிர்வாகி ராஜ்மோகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் வரவேற் றுப் பேசினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன், இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகி கனக ராஜ், முன்னாள் மாநில தலைவர் ஸ்ரீராம், பேராசிரி யர் பொன்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.எஸ்எப்ஐ அகில இந்திய தலைவர் ரித்த பிரதா பானர்ஜி கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:-பிஜேபி தலைமையி லான அரசும் சரி காங்கிரஸ் தலைமையிலான அரசும் சரி கல்விக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில் லை. தேவையான நிதி ஆதா ரம் இல்லையென்று அவ்வரசு கள் சொல்வது உண்மை யல்ல. 2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தில் மாவட் டத்திற்கு ஒரு பல்கலைக்கழ கம் கட்டலாம் கிராமம் தோறும் பள்ளிகள் கட்ட லாம். கல்விக்குப் போதிய நிதியை ஒதுக்கிட அவர் களுக்கு அரசியல் துணிவு இல்லை என்பதுதான் உண் மை. அவர்களின் கல்விக் கொள்கை சந்தையின் கட் டளைக்கு அடிபணிகிறது. அரசு கல்விக் கொள்கை யைத் தீர்மானிக்க அம்பானி -பிர்லா தலைமையிலான குழுவை நியமித்தது. யுபிஏ அரசு தொழிலதிபர் சாம் பிட்ரோடா தலைமையி குழு அமைத்துள்ளது. அரசுகள் வேறானாலும் அவைகளின் கல்விக் கொள் கைகள் வேறுவேறல்ல. புதிய தாராளமய நடவடிக் கைகள் கல்வியை அப்பட்ட மான வணிகமாக்கியுள்ளது. யுபிஏ-2 அரசு இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. கல்வி மேலும் மேலும் வணிகமயமாவதும் கல்வி அதிகாரங்கள் மையப்படுத் தப்படுவதும் அன்றட நிகழ்வுகளாகிவிட்டன.அந்நிய பல்கலைக்கழக நுழைவுச் சட்ட முன் வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. 140 அந்நிய பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் முத லீடு செய்ய தயாராக உள்ள தாக அரசு பட்டியல் இடு கிறது. இதில் எந்த பல் கலைக்கழகமும் தரமிக்கவை அல்ல என்பதுமட்டுமல்ல அவற்றில் 44 பல்கலைக் கழகங்கள் அந்தந்த நாட் டில் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டவை. அவர் கள் வசதிக்காக இந்திய கல்வி முறையை மாற்றுவ தற்கு நிர்ப்பந்தம் தரப்படு கிறது. இந்தியாவில் 10+2+3 என்ற கட்டமைப்பு உள் ளது. அமெரிக்காவில் 10+2+4 என்ற அமைப்பு உள்ளது. அ ந் நிய பல்கலைக்கழகங் களுக்கு ஏதுவாக இந்தியா விலும் 10+2+4 அமைப்பை கொண்டுவர பகீரத முயற்சி நடைபெறுகிறது. தில்லி பல்கலைக்கழகத்தில் கல்வி யாளர்களின் எதிர்ப்பையும் மீறி பட்டபடிப்பு நான் காண்டு பட்டபடிப்பாக மாற்றப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங் களை ஒழுங்குபடுத்த நாடு விடுதலை பெற்று இன்று வரை செயல்பட்டுவரும் ருழுஊ, ஹஐகூநுஊ, ஆஊஐ போன்ற நிறு வனங்களுக்கு மாற்றாக உயர்கல்விக்கான தேசிய குழு என்ற ஒற்றைக் கண் காணிப்புக்குழு முன்வைக் கப்படுகிறது. 7 பேர் கொண்ட இக்குழுவை பிரதமர், எதிர் க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதி பதியுடன் கலந்து கொண்டு அமைப்பாராம். இம்முயற்சி மாநில அரசுகளின் கல்வி குறித்த ஜனநாயக உரிமை மீதான தாக்குதலாகும். கல்வி 1973 வரை மாநில பட்டிய லில் இருந்தது. 1973ல் அவசரகால கட்டத்தில் கல்வி பொதுப்பட்டி யலுக்கு மாற்றப்பட்டது.


இன்று கல்வியை மத்திய அரசு பட்டியலுக்கு மாற் றிட முயற்சி செய்யப்படு கிறது. இதற்கு எதிரான மாணவர் இயக்கங்கள் நசுக் கப்படுகிறது.கல்வி வளாகங்கள் அர சியலுக்கு அப்பாற்பட்ட வையாக இருக்க வேண்டும் என்று சொல்வதன் நோக் கம் இதுதான். அரசியல் நாட்டின் கல்விக்கொள்கை களைத் தீர்மானிக்கிறபோது மாணவர் இயக்கங்கள் அர சியலற்றைவையாக எப்படி இருக்க முடியும்? புதிய தாராளமய கல்விக்கொள் கைக்கு எதிராக மாணவர் கள் அணி திரள்கிறபோது அவர்கள் தாக்கப்படுகிறார் கள். பல மாணவர்கள் அத்த கைய போராட்டத்தில் தங்களது உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள்.மேற்கு வங்கத்தில் காவல்துறையின் தாக்குதலுக்கு பலியான மாணவர் சங்கத்தின் தலை வர் சுதீப்தே குப்தா உள் ளிட்டு இதுவரை எஸ்.எப்.ஐ 261 தோழர்களை இழந் திருக்கிறது. தியாகிகள் இறக் கலாம். அவர்களது சித்தாந் தங்கள் அழிவதில்லை. இன்றைய காலகட்டத்தில் வீரமிக்க பல போராட்டங் களை நாம் நடத்தவேண்டி யுள்ளது. தமிழகத்தில் அதற் கான வாய்ப்பும்,நம்மிடம் தேவையான வலுவும் உள் ளது.நம்மையும், நம் எதிரியையும் சரிவர தெரிந்து கொண்டு கல்வியின் மீதான தாக்குதலை எதிர்கொள் வோம்.  

நன்றி: தீக்கதிர் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com