Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 20 May 2013

சென்னையில் எஸ்.எப்.ஐ மாநில மாநாடு - வரவேற்புக் குழு அமைப்பு

0 comments
சென்னையில் மாணவர் சங்க 23வது மாநில மாநாடு 175 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைப்பு:
சென்னை, மே 18 -

இந்திய மாணவர் சங்கத் தின் 23வது மாநில மாநாடு ஆகட்22 முதல் 24 வரை சென்னையில் நடைபெறு கிறது. இதையொட்டி 175 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. உலக மய கொள்கை அமலாக்கப் பட்ட அந்த கட்டத்தில் நடை பெற்ற மாணவர் சங்க மாநாடு, கல்வி கடும் நெருக்கடிக்குள்ளாகும், வியாபார மயமாகும் என்று எச்சரித்தது. அது தற்போது அசுர வேகத்தில் நடந்து கொண்டி ருக்கிறது.கட்டாய நன்கொடை தடுப்பு சட்டம், மாணவர் சேர்க்கையில் ஒற்றைச்சாளர முறை ஆகியவை மாணவர் சங்கத்தின் போராட்டத்தால் ஆட்சியாளர்கள் கொண்டு வந்தனர். அரசுக் கல்லூரிகளை பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளாக மாற்றும் முடிவை எதிர்த்து 62 நாட்கள் நடை பெற்ற போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இது மாணவர் சங்க வரலாற் றில் மைல்கல்லாக அமைந்தது.

பள்ளிகளில் ஆசிரிய ரும், கரும்பலகையும் கேட்டு பள்ளி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்ட போதும், சமச்சீர் கல்வி கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகை யிட்ட போதும் அரசு ஏவிய அடக்கமுறைகளை அஞ்சாது எதிர்கொண்டது மாணவர் சங்கம். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித் தன. சமர்ச்சீர் கல்வி அமலுக்கு வந்தது; பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.விடுதிகளை மேம்படுத்தவும், அங்குள்ள மாணவர் களின் உணவுப்படியை உயர்த்தவும், ராணி மேரி கல்லூரியை காக்கவும் என ஏராளமான போராட்டங் கள் கடந்த 20 ஆண்டுகளில் சென்னை நகரில் நடந்துள்ளது. இந்த போராட்டங்கள் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு உந்தி தள்ளி கொண்டு சென்றன என்றால் அது மிகையாகாது.

ஆட்சியாளர்களின் கல்விக் கொள்கைக்கு எதிராக, மாணவர்களின் கல்வி உரி மைக்காக நடைபெறும் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக சென்னையில் நடைபெறும் போராட்டங் கள் உள்ளன. அத்தகைய போராட்ட பாரம்பரிய மிக்க சென்னையில் 20 ஆண்டு களுக்கு பிறகு மாநாடு நடை பெற உள்ளது.
அதீத கோஷங்களா லும், உணர்ச்சியை தூண்டி விடும் திசைதிருப்பல்களுக்கு மத்தியில் மாணவர்களை சரியான திசைவழியில் அழைத் துச் செல்ல இந்த மாநாடு நடைபெறுகிறது. இதற்கு 175பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - மாணவர் ஒற்றுமை ஓங்குக என்பது மாணவர் சங்கத்தின் முழக் கங்களில் ஒன்று. அதற் கேற்ப, இந்த வரவேற்புக் குழுவில் சுமார் 35 பேராசிரி யர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். கல்வி யாளர்கள், ஆய்வாளர்கள், திரைக்கலைஞர்கள், திருநங் கைகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாண வர்கள், பத்திரிகையாளர் கள், தொழிற்சங்கத் தலை வர்கள் என பல தரப்பினரை யும் உள்ளடக்கியதாக வர வேற்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது.

வரவேற்புக்குழுவின் கவுரவ தலைவராக தமிழக மாணவர் இயக்க முன்னோடிகளில் ஒருவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா, தலைவராக முனைவர் எம்.சீனிவாசன், செயலாளராக மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பி.ஆறுமுகம், பொருளாளராக சிஐடியு மயிலை பகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புரவலர்களாக டி.கே. ரங்கராஜன் எம்.பி., க.பீம் ராவ் எம்எல்ஏ, கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், முனைவர் வே.வசந்தி தேவி, வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் ஆகியோரும், 57 துணைத்தலைவர்களும், 57 துணைச் செயலாளர்களும், உறுப்பினர்களாக 56 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்டத்தலைவர் ம. செல்லக்குமார் தலைமை யில் நடைபெற்ற இந்தக்கூட் டத்தில், மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், செயலா ளர் ஜோ.ராஜ்மோகன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
                                                                                                            நன்றி: தீக்கதிர் 
Read more...
Wednesday, 15 May 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியா? இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

0 comments
                                                    பத்திரிக்கை செய்தி                     தமிழ்நாடு  - மே 15,2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழி என்ற அரசின் முடிவுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள் ளது.சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். கனகராஜ், மாநிலச் செயலாளர் ஜோ. ராஜ்மோகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டில் 320 அரசுப் பள்ளிகளில் ஆங் கில வழி வகுப்புகளை தமி ழக அரசு அறிமுகப்படுத்தி யதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டிலிருந்து அரசு தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை ஆங்கிலவழி வகுப்பு கள் தொடங்கப்படும் என அதிமுக அரசு சட்டப் பேர வையில் அறிவித்ததற்கு இந் திய மாணவர் சங்கம் கண் டனத்தைத் தெரிவித்துள் ளது.

ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றால்தான் அறிவு மேம்படும் என்பது அபத்தமானது. அறிவியல் நடைமுறைக்கு புறம்பான ஒன்று.உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் தாய்மொழியே பயிற்று மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் உள்ளது. தாய்மொழியால் மட்டுமே சுயமாகவும் ஆழமாகவும் சிந்தனை திறனை மேம் படுத்த முடியும் என பல் வேறு ஆய்வுகளும் நிரூபித் துள்ளன.உலகம் முழுவதும் இணைப்பு மொழியாக இருந்து வருகின்ற ஆங்கில மொழியின் தேவையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவசியமான ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆங்கில மொழியை ஒரு பாடமொழியாக திறன் மிகுந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுவதும் இதை மேம்படுத்துவதும் அவசியம். அதற்கான முயற் சியை அரசு மேற்கொள்ள வேண்டும்.தாய்மொழி வழிக்கல்வி என்பது கட்டாயமாக்கப் பட வேண்டும் என தொ டர்ந்து இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட முற் போக்கு அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந் துள்ளன. ஆனால் தமிழ கத்தை ஆட்சிசெய்துள்ள திமுக - அதிமுக ஆகிய இரண்டு ஆட்சியிலும் இது புறக்கணிக்கப்பட்டு வந் துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத் தில் கல்வியாளர் முத்துக் குமரன் கொடுத்த பரிந்துரை யில் தாய்மொழி வழிக்கல் வியே பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்ற முக்கியமான சரத்தும் பரிந் துரைக்கப்பட் டது. ஆனால் சமச்சீர் கல்வி திட்டம்தான் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனாலும் இது போன்ற முக்கியமான பரிந் துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வில்லை. ஆகவே தமிழக அரசு தனித் தனி பள்ளிக் கல்வி வாரியங் களை ஒருங்கிணைத்து அதி காரம் கொண்ட பொது பள் ளிக் கல்வி வாரியத்தை உரு வாக்குவது உட்பட முழுமை யான சமச்சீர் கல்வியை தமி ழக அரசு நடைமுறைப் படுத்தவேண்டும்.அரசு பள்ளிகளில் ஆங் கிலவழிக் கல்வி என்ற அர சின் முடிவு தமிழ் மொழிக்கு சவக்குழி வெட்டுவது என்று தான் பொருள். ஆகவே அரசு இம்முடிவை உடன் கைவிட வேண்டுமென இந் திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலத் தலைவர்                                                                  மாநிலச் செயலாளர்  கே.எஸ். கனகராஜ்                                                                              ஜோ. ராஜ்மோகன்
Read more...
Friday, 3 May 2013

Clash in JEE-JIPMER Entrance Examination Date - SFI - DYFI Protest

0 comments
Clash in JEE-JIPMER Entrance Examination Date - SFI - DYFI Protest to change the date of examination:
sfi - dyfi puducherry protest in front of Jipmer campus to change the entrance examination date, due to JEE Entrance examination and Jipmer entrance examinaton held up on JUNE 2, 2013. Students who applied for both Medical & Engineering never get a chance to appear in both the exams and never get a alternate choice of education. We the Sfi demands the JIPMER administration to change the date of examination because of students from various part of the country applies for both the exam will be affected. So we the Sfi kindly requests the JIPMER administration to change the date. Previous year the same problem occurs in the Entrance Exam, at that time the Director. Mr.Suubha Rao had changed the date of entrance examination, but now the present Director Mr. T.S.Ravikumar denied the demand of Political Parties, Student Organisation and also the Parent Student Association. We the Sfi & Dyfi made a protest in front of the Jipmer Campus and 30 of the both Sfi & Dyfi protestors were arrested.

  
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com