Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 27 April 2013

சென்டாக் முறைகேடு - உயர்மட்ட விசாரணைக்கு எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்..!

0 comments
பத்திரிக்கை செய்தி: 
காமராஜர் கல்வி உதவி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் செண்டாக் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. கல்வி உதவி நிதி வழங்குவதில் விதிமுறைகளை மீறியும், மாணவரல்லாதவர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் நிதி வழங்கிய மிகப்பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் வங்கி அதிகாரிகள் உயர்கல்வித்துறை ஊழியர்கள் கூட்டுக் கொள்ளை அடித்துள்ளனர். இத்தகைய மிகப் பெரும் மோசடியில் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இது குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம்  வலியுறுத்துகிறது.

 புதுச்சேரி மாநில அரசு சென்டாக்  மாணவர்களுக்கு காலம் கடந்து நிதி உதவி வழங்குவது, சில நேரங்களில் ஒரு பகுதி மாணவர்களுக்கு மட்டும் வழங்குவது போன்ற நடைமுறை தவறுகளுக்கு வாய்ப்பளிக்கிறது.கடந்த 2 ஆண்டுகளாக சென்டாக் மூலம் தனியார் மருத்துவம், பொறியியல் வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை  நிதி உதவி வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளின் நிலுவை தொகை மொத்தம் 37 கோடி ரூபாயில் இதுவரை 3 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுவும் கூட முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, காலதாமதமாக நிதி உதவி வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் அரசு நிதி உதவி வழங்காததால் தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர்களை நிர்பந்தித்து கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

கடன் வாங்கி, சொத்துகளை விற்று படிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவதால், படிப்பை முடித்து பணிக்குச் செல்லும் இளைஞர்களிடம் இயல்பாகவே சமூகப் பொறுப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மாநில அரசு காலதாமதம் இல்லாமல் கல்வி உதவி நிதி உதவி வழங்கவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவும், நடந்துள்ள நிதி மோசடி குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிடவும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.
தலைவர் :                செயலாளர் :
க.ஹரிஹரன்         அ.ஆனந்த்

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com