Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 24 April 2013

தலைநகரில் அதிகரித்து பாலியல் குற்றங்கள் - ஈரல்க்குலை நடுங்குகிறது..!

0 comments
ஈரல்க்குலை நடுங்குகிறது - தீக்கதிர் தலையங்கம்:

தலைநகர் தில்லியிலிருந்து அடுத்தடுத்து வரும் செய்திகள் ஈரல்க்குலையை அறுப்பது போல் உள்ளன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பேருந்தில் ஒரு கொடூரமான கும்பலால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இது தேசத்தின் மனச் சாட் சியை உலுக்குவதாக அமைந்தது. நாடு முழு வதும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன. 
 
இந்நிலையில் தலைநகர் தில்லியில் 5 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்துள்ள கொடுமையை கண்டிக்க அகராதியில் வார்த்தைகள் இல்லை. ஏதுமறியா அந்த பூப்போன்ற மழலையை கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து இருவர் பாலியல் ரீதியாக கொடூரமான சித்ர வதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பிஞ்சின் பிறப்பு உறுப்பிலிருந்து மெழுகு வர்த்தி, சிறிய பாட்டில் போன்றவற்றை மருத்து வர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துள் ளனர். மிருகத்தனம், காட்டுமிராண்டித்தனம் என்று எந்த வார்த்தைகளாலும் இந்த இழி செயலை கண்டித்தாலும் மனது ஆறவில்லை. புதிய வார்த்தைத்தான் கண்டுபிடிக்க வேண்டி யுள்ளது. இந்தப் பிரச்சனையில் தில்லி மாநகர காவல் துறை காட்டியுள்ள அலட்சியமும் அகம்பாவமும் சகிக்கமுடியாததாக உள்ளது. புகார் கொடுக்கச் சென்ற அந்தப் பெண்ணின் பெற்றோரை அலைக்கழித்துள்ளனர். அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் தான் குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடந்த சிறுமியை கண்டுபிடித்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விஷயம் வெளியே வந்தவுடன் சிறு தொகையை கொடுத்து அமுக்கி விட பார்த் துள்ளனர் காவல்துறையினர். பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க வக்கற்ற போலீசார் இதைக் கண்டித்துப் போராடும் பெண் களிடம் கைநீளம் காட்டுவது வெட்கக் கேடானது.

இதுகுறித்த செய்திகள் வெளிவந்து கொண் டிருக்கும் அதே நேரத்தில், தில்லியில் 13 வயது மாணவி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய் துள்ள செய்தி வெளிவந்துள்ளது. இந்தக் கோரத் தால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இத்தகைய கொடுமைகளைத் தடுக்க இயலாத சமூகம் தன்னை நாகரிக சமுதாயம் என்று கூறிக்கொள்வதற்கான தார்மீகத் தகுதியை இழந்துவிடுகிறது. 2001ம் ஆண்டு முதல் கடந்த பத்தாண்டுகளில் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடுமை 336 சத வீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை 48 ஆயிரத்து 338 குழந் தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக் கப்பட்டுள்ளனர். அண்மைக்காலத்தில் பெண்கள், குழந்தை களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தலைநகர் தில்லி உள்பட நாட்டின் பலபகுதிகளில் அதி கரித்துள்ளன. குடியரசுத் தலைவர், பிரதமர், காங் கிரஸ் தலைவர் சோனியாகாந்தி என பலரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுமட்டும் போதாது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் உடனுக்கு டன் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் மேன் மையான, நாகரிகமான பெண்களை மதிக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு பன் முனைப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

                                                                                                   நன்றி: தீக்கதிர் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com