Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 19 April 2013

யார் அடுத்த பிரதமர்..?அடிவானத்திலிருந்து கிளம்பும் பாசிச பூதம்..!

0 comments

யார் அடுத்த பிரதமர்..?அடிவானத்திலிருந்து கிளம்பும் பாசிச பூதம்..!
பிரபாத் பட்நாயக்..!

நரேந்திர மோடி ஒரு பாசிஸ்ட் என்று நாம் கூறும்போது, பாசிசம் பற்றிய வரலாறு அறிந்தவர்களுக்கு, அதைப் புரிந்து கொள் வதில் சிரமம் எதுவும் இருக்காது. அவரது தலைமையிலான பிஜேபி கூட்டம், இந்தி யாவில் ஒரு பாசிச ஆட்சியை நிறுவுவதற் கான மூர்க்கத்தனமான முயற்சியில் இறங் கியுள்ளது என்பதையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆர்.எஸ்.எஸ் படை வரிசையின் முக்கியப் புள்ளியான மோடி, 2002 குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதி ரான படுகொலைக் கலவரங்களின் மையப் புள்ளியாகத் திகழ்ந்தவர்; ‘ஹிந்து ராஷ்ட்ரா அமைப்பது என்ற முக்கியமான லட்சியத்துடன், இந்து மதவெறியும், பாசிஸ்ட் கண்ணோட்டமும் கொண்டவர். மறுபுறத்தில், நிதி மூலதனத்தின் ஆதரவு, பாசிச ஆட்சிக்கு முக்கிய தேவையாக இருக்கும் நிலையில், அதனுடன் நெருக்க மான உறவு கொண்டிருப்பவர் அவர்.

பாசிசம்! வரலாற்றில், பாசிசம் முதலில் ஏக போக மூலதனத்திற்கு எதிரான குட்டி பூர்ஷ்வா இயக்கமாகத் தான் தொடங்கி யது. ஆனால், அடுத்த கட்டத்தில், மெள்ள மெள்ள அதனுடன் இணையத் தொடங்கி யது. பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகிய அனைத்துத் தளங்களிலும் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிறுவு வதற்கு பெரும் ஏகபோகங்களின் நிதி உதவி அதற்குத் தேவைப்பட்ட நிலை யில், இந்த இணைப்பு மேலும் இறுகியது. (பாசிசம் என்பது, “மிகவும் பிற்போக்கான, பழிவெறி கொண்ட (சுநஎயnஉhளைவ) நிதி மூல தனப் பிரிவினரின் வெளிப்படையான பயங்கரவாத ஆட்சி” என ஜார்ஜி டிமிட் ரோவ் ‘ஐக்கிய முன்னணி’ என்ற தனது நூலில் வர்ணிக்கிறார்.)

பொருத்தமான மோடி! பாசிசம் குறித்த இந்த இலக்கணத்திற் குள் மோடி கச்சிதமாகப் பொருந்துகிறார். நிதி மூலதனத்தின் முக்கிய புள்ளிகள் மற் றும் கார்ப்பரேட் ஊடகங்களின் ஆதர வுடன், இந்தியாவின் அடுத்த பிரதமர் என் பதற்கான சர்வதேச நிதி மூலதனத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு முயன்று வரு கிறார். இதற்காக, அமெரிக்கா மற்றும் பிரிட் டிஷ் அரசுகளின் தயவினை நாடி அவர் களுடன் மிகவும் நெருங்கி வருகிறார். பாது காப்புத் துறையில் அந்நிய நேரடி மூல தனம் வேண்டும், பொதுத்துறை அனைத் தும் தனியார் மயமாக்கப் படவேண்டும் என்பவையெல்லாம் அந்தத் திசை நோக்கி அவர் எழுப்பும் கோரிக்கைகளே யாகும். இந்தியாவின் முன்னேற்றம் ‘குஜராத் மாடலில்’ அமைய வேண்டும் எனக் கூறு கிறார். இதில் மக்களின் முன்னேற்றம் குறித்தெல்லாம் அவருக்கு கவலை எதுவு மில்லை. (மனித வள மேம்பாட்டுக் குறி யீடுகளில் குஜராத் மாநிலம் மிகவும் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ) அவரைப் பொறுத்த வகையில் வளர்ச்சி என்பது, முதலாளிகள் எதையெல்லாம் செய்ய விரும்புகிறார்களோ, அதையெல் லாம் செய்ய அனுமதிப்பதே. அதாவது, கலப்படமற்ற நவீன-தாராள வாதக் கொள் கைகளே அவரது கொள்கைகள். பாசிசத்தின் ‘வர்க்கத் தன்மை’, ‘வெகு ஜனத் தன்மை’ ஆகிய இரண்டு முக்கிய நிபந்தனைகளையும் அவர் நிறைவு செய் கிறார். அவரது தொடக்கம் குட்டி பூர்ஷ்வா தளத்தில் என்றாலும், பெரும் முதலாளிக் கூட்டத்திற்கான ஆதரவு என்பது அவரது இன்றைய வர்க்கத் தன்மை. குறுகிய அர சியல் கண்ணோட்டம், இனவாதம், நாட் டின் அனைத்துக் கேடுகளுக்கும் இவர் களே காரணம் என்று குறிப்பிட்ட சிறு பான்மையினரை முன் நிறுத்துவது போன்ற தீவிர தேசியவாதம் என, அனைத்து வகையிலும் பாசிசத்தின் வெகுஜனத் தன்மைக்கும் (இவரைப் பொறுத்த வரை இந்து மதவெறி) அவர் பொருந்துகிறார்.

மம்தா ஒரு பாசிஸ்டா? பாசிசப் படை வரிசையில் மோடி யைப் பொருத்துவதில் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்காது. அதே போல் தற் போது ஒளியிழந்து போனாலும், சிவ சேனை குறித்தும் பிரச்சினை இல்லை. ஆனால், இந்திய அரசியல் மேடையில் இன்னொரு விநோதமான காட்சி - அது தான் மம்தா பானர்ஜியும், அவரது திரிணா மூல் காங்கிரசும் - இதில் எப்படி பொருத் துவது? மம்தா எதேச்சாதிகாரப் போக்கு கொண்டவர் தான். ஆனால், ஏகபோக முதலாளித்துவத்தை எதிர்ப்பவரா யிற்றே? சிறுவணிகத்தில் அந்நிய நேரடி மூலதனத்தினை எதிர்த்து ஐ.மு.கூட் டணி அரசை விட்டு வெளியேறியவரா யிற்றே? ஒரு புறம் இடதுசாரிகளை வேர றுக்க நினைத்தாலும், மறு புறத்தில், பல் வேறு பிரச்சனைகளில் இடதுசாரிகளு டன் ஒத்த கருத்துக்களையே கொண்டி ருக்கிறாரே? இவரை எப்படி பாசிஸ்ட் என்று அழைப்பது? பாசிசம் ஏக போக மூலதனத்திற்கு எதிரான இயக்கமாகத்தான் முதலில் தொடங்கியது என ஏற்கனவே குறிப்பிட் டுள்ளோம். அடுத்து ஏகபோக மூலதனத் துடன் இணைவது என்று அது முடிவு செய்த வேளையில், தனது கோஷங்களை மட்டுமல்லாது, தனது சொந்த கட்சி அணியினைரையே ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்கத் தயங்கவில்லை என் பதும் வரலாறு. ஆங்கிலத்தில் ளுஹ என்று அழைக்கப்படும் நாஜி அதிரடிப் படையின் தலைவன் எர்னஸ்ட் ரோம், ‘ஹிட்லருக்கு மிகவும் நெருக்கமானவன். இவனைப் போன்ற பல தலைவர்களை நாஜிப் படை கொன்று குவித்தது. இத்த கைய அரசியல் கொலைகள் வரலாற்றில் ‘நீண்ட வாள்களின் இரவுகள்’ (‘சூiபாவ டிக வாந டடிபே மniஎநள’) என்று அழைக்கப்படு கிறது. நாஜிகள் தேசிய அளவில் அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றிய பின்னர் இதுவெல்லாம் நடந்தது. எதிர்க்கட்சியாக இருந்த போது தேவைப்பட்ட முதலாளித் துவ எதிர்ப்புக் கோஷங்கள் கைவிடப் பட்ட நிலையில், சொந்தக் கட்சியின ரையே கொலை செய்யும் தேவை பாசிஸ் டுகளுக்கு ஏற்பட்டது. அரசியல் அதி காரத்தைக் கைப்பற்றுவதற்கு தங்களுக்கு உதவிய நிதி மூலதனம், ஜேர்மனியின் ராணுவம் போன்றவையுடன் நாஜிகளின் திட்டம் இணைந்த நிலையில் தான், இவையெல்லாம் நடந்தன.
பாசிசத்தை நினைவூட்டும் அம்சங்கள்! பாசிச இயக்கங்கள் தொடக்க காலங் களில் முன் வைக்கும் முதலாளித்துவ எதிர்ப்புக் கோஷங்களுக்கு பெரிய முக்கி யத்துவம் எதுவுமில்லை. மம்தா மற்றும் அவரது திரிணாமூல் கட்சியினைப் பொறுத்த மட்டில், பாசிசப் போக்குக் களை நினைகூட்டும் பல அம்சங்களைக் காண முடியும்.

முதலாவது, மம்தாவின் அடங்காத எதேச்சதிகாரம். கம்யூனிஸ்டுகளை மட்டுமல்லாது, எதிர்ப்பு என்று எது தோன் றினாலும், அதை மூர்க்கத்தனமாக ஒடுக்க நினைக்கும் அவரது விருப்பங்கள். இதில் சிவில் சமூகம் கூட விதி விலக் கல்ல. மாணவர் சங்க தேர்தல்கள் குறித்த அணுகுமுறையும் இவ்வகைப்பட்டதே. சமூகத்தில் ஊழலுக்கு அப்பாற்பட்டு, மிக வும் இலட்சிய உணர்வுடன் சிந்திக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள். விமர்சன பூர்வமான அரசியல் நட வடிக்கை எதிலும் மாணவர்களை ஈடு படாமல் தடுப்பதுதான் மே.வங்கத்தில் மாணவர் சங்கத் தேர்தல்களுக்கு விதிக் கப்பட்டிருக்கும் தடை. இரண்டாவது, பொருளாதாரப் பிரச் சனைகளில் முற்போக்காகப் பேசிக் கொண்டே, உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள். வேலை நிறுத்தங்கள், உழைப்பாளர்களின் உரிமைகளை எதிர்ப் பது. இதனை வலதுசாரி தீவிரவாதம் (சுiபாவ சுயனiஉயடளைஅ) என்று வேண்டுமா னால், அழைக்கலாம். இது தான் பாசிசம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அதா வது, தேசிய அளவில் அதிகாரத்திற்கு வரும் முன்னர் எடுக்கும் நிலை. அதி காரத்திற்கு வந்ததும், வலது சாரி தீவிர வாதம் புறந்தள்ளப்பட்டு, நிதிமூல தனத்துடனும், கார்ப்பரேட் நிறுவனங் களுடனும் இணைப்பு மேலும் இறுக்க மடைகிறது. இந்தக் கட்டத்தில் தனது கொள்கைகளை ஏற்க மறுப்பவர்கள் தனது சொந்த அணியினர் என்றாலும் கூட, பாசிசம் அவர்களை அழிக்கத் தயங் குவதில்லை. எர்னஸ்ட் ரோம் தலைமையி லான அதிரடிப்படை, தொழிலாளர் ஆத ரவு நிலை எடுத்து, சில வேலை நிறுத் தங்களை ஆதரித்து, வேலை நிறுத்தத்தை உடைக்கும் கருங்காலிகளைத் தாக்கியது.

அந்த நிலையில் தான், நாஜிப்படை தனது சொந்தக் கட்சியினர் என்று பாராமல், எர்னஸ்ட் ரோம் மற்றும் அவரைப் போன்ற வர்களைக் கொன்று குவித்தது. மூன்றாவது, பொது வாழ்க்கை தொடர் பான நன்னடத்தையினை மட்டுமல்லாது, அரசியல் சாசன பூர்வமான அம்சங்க ளைக் கூட புறந்தள்ளும் போக்கு. கொல் கத்தாவில் காவல்துறைக் கண்காணிப் பிலிருந்த மாணவர் சங்கத் தலைவர் மரணம் அடைந்த போது, அரசாங்கம் உட னடியாக விசாரணைக்கு உத்தரவிட்டி ருக்க வேண்டும். விசாரணை அறிக்கை வரும் வரை, அமைச்சர்கள் எவரும் கருத் துக் கூறக்கூடாது. ஆனால், உத்தரவிடப் பட்டதோ காவல் துறை விசாரணை. அந்த விசாரணைக்கு மரியாதை எதாவது உண்டா? ஆனால், காவல் துறை கூறு வதுதான் சரி என்று ஊருக்கு முந்தி மம்தா அறிவித்தார். மம்தாவின் பொது வாழ்க்கை மாண்புகள் இவ்வளவு தான். அரசியல் சாசன பூர்வமான அம்சங் களில் கூட அவரது நிலை மிக மோச மானது.

அண்மையில் மே.வங்க அரசிற் கும், மாநில தேர்தல் கமிஷனுக்கும் உள் ளாட்சித் தேர்தல்கள் குறித்த விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. தேர்தல் கமிஷன் நீதி மன்றத்தை அணுகியுள்ளது. நீதிமன்றச் செலவுகளுக்கு மாநில அரசு தான் பணம் கொடுக்க வேண்டும். தேர் தல் கமிஷனுக்கு தனியாக வருமானம் எதுவும் கிடையாது. அரசியல் சாசனத் தின் படி அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷ னின் இச்செலவு குறித்து மம்தா கோபத்தை வெளிப்படுத்துகிறார். மாநில அரசுக்கு எதிரான வழக்கில், தேர்தல் கமி ஷனுக்கு, மாநில அரசு செலவழிக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்புகிறார். இதில் கேள்வி கேட்பதற்கு ஒன்று மில்லை. வழக்கில் எதிரி யார் என்ற பேச் சுக்கே இடமில்லை. அது எவராகவும் இருக்கலாம். இது அரசியல் சாசனச் சட் டத்திற்கு உட்பட்ட விதி. இதில் அடங்கி யிருப்பது மக்கள் வரிப்பணம். ஆனால், அது ஏதோ மாநில அரசின் சொந்தச் சொத்து போல மம்தா பேசுகிறார். வர்க்க உணர்வற்ற பாட்டாளிகள் மத் தியில் அராஜகங்களில் ஈடுபடக்கூடிய ஒரு கூட்டம் (டுரஅயீநn யீசடிடநவயசயைவ) உண்டு. அதைப் போன்றே நடந்து கொள்ளும் சில மாநில அரசுகள் இந்நாட்டில் உள்ளன. அர சியல் சாசனம் குறித்த புரிதலில் கூட, இவர்கள் இந்தக் கூட்டத்தினை ஒத்திருப் பதால், அரசியல் சாசனத்தின் மீது தாக்கு தல் தொடுப்பது, தாங்கள் சொல்வதே உண்மை என்று அகம்பாவமாகக் கூறு வது, சட்ட பூர்வமான வழிகளில் தேர்ந் தெடுக்கப்பட்டு, அதன் பின்னர், அரசியல் சாசனத்தில் தங்களுக்குப் பிடிக்காத சில பிரிவுகளை சட்ட பூர்வமாகவே நீக்கி விடு வது, போன்றவையெல்லாம் பாசிசப் போக்குகளே.

நான்காவது, மார்க்சிய மரபுகளுக்கு வெளியே, எழுத்தாளர்கள் பலர், ‘ஒரே தலைவன்’ என்ற கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பாசிசத் திற்கு மிகவும் பொருந்துகின்ற கருத்து. இதில், அமைப்பு, விதி முறைகள் என்பதற் கெல்லாம் எந்த மரியாதையும் கிடையாது. அதனால் தான் மீறல்களே இங்கு விதி ஆகி விடுகின்றன. `ஹிட்லர் என்ற ஒரே தலைவன் பெயரால், ஜெர்மனியில் நடை பெற்ற நாஜி அராஜகங்கள் இத்தகையவே. இன்றைய மே.வங்கத்தில், அனைத்து அதிகாரம் கொண்ட ஒரு நபர் தலைமை என்பது தான் அமலில் இருக்கிறது. இத யத்தைப் பிழியும் சுதிப்தா குப்தாவின் மர ணம் குறித்து மம்தா வெளியிட்ட ஈவிரக்க மற்ற கருத்துக்களை ஆதரித்து, திரிணா மூல் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும், தொலைக்காட்சியில் களம் இறங்கியது இவ்வகையிலானதே.

கருவிலிருக்கும் பாசிசம்! இவ்வாறு, மம்தா மற்றும் திரிணாமூல் காங்கிரசிற்கு பாசிசக் குணாம்சங்கள் பல இருந்தாலும், அதற்கும் ஏகபோக மூல தனத்திற்குமான இணைப்பு இன்னும் உரு வாகி விடவில்லை. அதே போன்று, தனது வெகு ஜனத்தன்மையினை வலுப்படுத் தும் வகையில், ஒரு குறிப்பிட்ட சிறு பான்மை சமூகப் பிரிவிற்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகள் எதிலும் அது இன்னும் ஈடுபட்டு விடவில்லை. அது இன்னும் முழுமையான பாசிசமாக உரு வாகி விடவில்லை. அதாவது, அது இன் னும் கருவில் இருக்கும் பாசிசமேயாகும். தனி நபர்களையும், கட்சிகளையும், பாசிஸ்டா இல்லையா எனக் கணிக்கும் நடவடிக்கைக்கு பொதுவாகப் பொருள் ஏதுமில்லாமல் இருக்கலாம். ஆனால், இன்றைய இந்திய அரசியல் எதார்த்தத் தில், மாநிலத்தில் இருக்கும் மம்தா போன்ற ஒரு தலைவரோ அல்லது கட் சியோ, தேசிய அளவில் ஒரு பாசிச அமைப்பு ஆட்சி அதிகாரத்தில் அமரும் போது, எளிதாக அவர்கள் கையில் சிக்கு வார்கள். அசலில் அவர்களைப் போன்றே இல்லாவிட்டாலும், அவர்களது இளைய பங்காளிகளாக, அவர்களது தீங்கிழைப் பிற்கு எல்லாம் இசைவுடன் நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள். கம்யூ னிஸ்ட்கள் மீது இவர்கள் ஏவும் அடக்கு முறை காரணமாக, மத்தியிலுள்ள பாசிஸ் டுகள் இவர்களை அரவணைத்துக் கொள் வார்கள். இவர்களது இத்தகைய ‘நற் பணி’க்காக நிதி மூலதனம் இவர்களுக் காக குறிப்பிட்ட அளவில் பணம் செல விடவும் தயங்காது. மொத்தத்தில், இது போன்ற கட்சிகள் அடிப்படையில் இலக்கண ரீதியாக பாசிஸ்டுகளாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், இடது சாரிகளை அடக்கி ஒடுக்குவதன் மூலம் இவர்கள் மாநிலத்தில் இருந்து கொண்டே, மத்திய பாசிஸ்ட் ஆட்சியாளர்களின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும். இந் திய அரசியல் அடிவானத்தில் இவ்வாறு கிளம்பும் பாசிச பூதத்தினை எதிர்த்து இடதுசாரிகள் கடுமையாகப் போராட வேண்டும்.
                                                                                      
                                                                                                     நன்றி : தீக்கதிர் 
                                                                          - தமிழில் : ஆர்.எஸ். செண்பகம், திருநெல்வேலி

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com