Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 13 April 2013

வன்முறையை ஏவுகிறது திரிணாமுல் காங் கிரஸ் - எஸ்.எப்.ஐ

0 comments
வன்முறையை ஏவுகிறது திரிணாமுல் காங் கிரஸ் - எஸ்.எப்.ஐ குற்றச்சாட்டு 
 மக்களின் ஆவேசத்தை திசைதிருப்பவே வன்முறையை ஏவுகிறது மம்தா கட்சி:
புதுதில்லி, ஏப்.12-2013

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவர் சுதிப்தா குப்தா கொல்லப்பட்டதால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஆவே சத்தைத் திசைதிருப்புவதற் காகவே, திரிணாமுல் காங் கிரஸ் வன்முறையை ஏவுகிறது என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பாக சங்கத் தின் பொதுச் செயலாளர் ரித்த பிரதா பானர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சுதிப்தா குப்தா போலீஸ் காவலில் இருந்த போது இறந்த சம்பவம் தொடர்பாக சுயேச்சையான நீதிவிசாரணை வேண்டும் என்று நாடு முழுவதும் மாண வர் சங்கத்தின் சார்பில் கிளர்ச் சிகள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க மாநிலம் முழு வதும் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நடைபெற்ற பேரணி யில் சுதிப்தா குப்தா கலந்து கொண்டார்.

அமைதியாக நடைபெற்ற பேரணி மீது காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமான முறை யில் தாக்குதலைத் தொடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோ ரை போலீசார் கைது செய்த னர். சுதிப்தா குப்தா போலீஸ் காவலில் இருந்தபோதுதான் மரணமடைந்தார். அவரது உடல் கூராய்வு சான்றிதழ், அவ ருக்கு ஏற்பட்ட பல காயங்க ளின் விளைவாக இறந்தார் என் பதை உறுதிப்படுத்தியது. அவர் இறந்த விதம் மிகவும் கொடூர மானது. போலீஸ் காவலில் இருந்தபோதுதான் அவர் இறந் தார் என்கிற உண்மை நாடு முழு வதும் உள்ள மக்களின் மன சாட்சியை உலுக்கியது. இது நாட்டு மக்களின் மனித உரிமை கள் மற்றும் ஜனநாயக உரிமை கள் மீதான தாக்குதலாகும். இச் சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மக்கள் வீதி களில் இறங்கி தங்கள் எதிர்ப்பி னைத் தெரிவித்தனர். சுதிப்தா குப்தா மரணம் குறித்து சுயேச் சையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதன் ஒரு பகுதியாக, ஏப் ரல் 9 அன்று தில்லியில் திட்டக் கமிஷன் அலுவலகம் முன்பாக இந்திய மாணவர் சங்கமும் மற் றும் சில அமைப்புகளும் இணைந்து மேற்குவங்க முதல்வர் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தின் போது, கிளர்ச்சிப் போராட் டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் முன்னிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், மேற்குவங்க நிதி அமைச்சருட னான தள்ளுமுள்ளு சம்பவம் நடைபெற்றது. இந்திய மாண வர் சங்கம் இதனை வன்மை யாகக் கண்டிக்கிறது. இந்நிகழ் வினை அது ஏற்கவில்லை.

வெறியாட்டம் : 
ஆயினும் மேற்குவங்க அர சும், திரிணாமுல் காங்கிரசும் சுதிப்தா குப்தா போலீஸ் காவ லில் மரணமடைந்ததனால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஆவேச உணர்ச்சியைத் திசை திருப்பும் நோக்கத்துடன், இந் நிகழ்ச்சியினைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். திட்டக் கமிஷன் அலுவலகம் முன்பு நடந்த நிகழ்வினை சாக் காக வைத்துக்கொண்டு, சுதிப்தா குப்தா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையைப் புறந்தள்ள முடிவு செய்துள்ள னர். இந்திய மாணவர் சங்கம் இதர ஜனநாயக மாணவர் அமைப்புகளுடன் இணைந்து நின்று, இதனை எதிர்க்கும்.கடந்த இரண்டு நாட்களாக மேற்கு வங்கத்தில் மிகவும் கீழ்த் தரமான முறையில் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வன் முறையில் இறங்கியுள்ளார்கள். எல்லாவற்றையும்விட மிக வும் கொடூரமான சம்பவம் என்னவெனில், திரிணாமுல் குண்டர்கள், பிரசிடென்சி பல் கலைக்கழகத்துடன் எவ்வித சம்பந்தமுமே இல்லாதவர்கள், உலகப் புகழ்பெற்ற இப்பல் கலைக்கழகத்தின் வளாகத்திற் குள் முரட்டுத்தனமாகப் புகுந்து, பல்கலைக்கழகத்திலிருந்த மாணவர்களை கண்மூடித்தன மாகத் தாக்கியுள்ளனர். கட்டி டத்தின் பல பகுதிகளைச் சூறை யாடியுள்ளனர். 1913 ஜனவரி 20 அன்று ஜெகதீஷ் சந்திர போஸ் அவர் களால் உருவாக்கப்பட்ட உல கப் புகழ்பெற்ற பாகர் லேபா ரட்டரி எனப்படும் இயற்பியல் ஆய்வுக்கூடத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை; மேலும், மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி, தன் னை இந்திய மாணவர் சங்கத் தின் பொதுச் செயலாளரான ரித்த பிரதா பானர்ஜி தாக்கிய தாக, என் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.

இது முற் றிலும் அடிப்படையற்ற ஜோடிக்கப்பட்ட புகாராகும். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடு முழுவதும் உள்ள மாணவர் சமுதாயம் ஒன்று பட்டு நின்று, சுதிப்தா குப்தா போலீஸ் காவலில் மரண மடைந்தது தொடர்பாக சுயேச் சையான நீதி விசார ணை வேண்டும் என்று கோர வேண் டும் என்று இந்திய மாணவர் சங்கம் மாணவர் சமு தாயத்தை அறைகூவி அழைக்கிறது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com