Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 31 January 2013

புதுச்சேரியில் மாணவியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயற்சி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

0 comments

புதுச்சேரியில் மாணவியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயற்சி
குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

புதுச்சேரி, ஜன. 30-

கல்லூரி மாணவியை பாலியல் தொழிலுக்கு உட் படுத்த முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர் - வாலிபர் சங்கங் கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவண்ணாமலையை சேர்ந்தவர் மாணவி சூர்யா. (பெயர் மாற்றப்பட்டுள் ளது) இவர் புதுச்சேரி அடுத்து பாகூரில் உள்ள ஆல்பா பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக் கிறார். இங்கு விடுதி வார்ட னாக உள்ளவர் சந்திரா.

இவர் மாணவியை பாலியல் தொழிலில் உட்படுத்த முயன் றுள்ளார்.இது தொடர்பாக மாண வியின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாக நடவ டிக்கை எடுக்காமல் சந்திரா விற்கு ஆதரவாக செயல் பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மாணவியின் பெற் றோறை கல்லூரி நிர்வாகம் அடியாட்கள் வைத்து மிரட் டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப் பட்ட மாணவியின் பெற் றோர் பாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளரை சந் தித்து புகார் அளித்துள்ள னர். ஆனால் காவல்துறை யும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை .எனவே நடவடிக்கை எடுககாத காவல்துறையை கண்டித்தும், உடனே குற்ற வாளிகளை கைது செய்யக் கோரி இப்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து, வாலி பர் சங்க பிரதேச செயலா ளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கிர். .வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச் செல் வன்,மாநிலக்குழு உறுப்பி னர் பிரபுராஜ்,பிரதேச பொருளாளர் ஆர்.சரவ ணன், நிர்வாகிகள்,ரஞ்சித், வழக்கறிஞர் தட்சணா மூர்த்தி, கதிரவன்,பாகர், விஜி,அழகப்பன்,சண்முகம் உள்ளிட்ட திரளான வாலி பர்கள்,மாணவர்கள் இப் போராட்டத்தில் பங்கேற் றனர்.

                                                                                                 நன்றி: தீக்கதிர் 

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com