Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 29 January 2013

ஆல்பா பொறியியல் கல்லூரியில் மாணவியை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி:

0 comments
ஆல்பா பொறியியல் கல்லூரியில் மாணவியை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த - கடத்த முயற்சி


புதுச்சேரி பாகூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதுமான உள்கட்டமைப்பும், போதுமான தகுதியான ஆசிரியர் இல்லாமலும் ஆல்பா பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியின் மாணவியர் விடுதி, புதுவை நகரம் பிருந்தாவனத்தில் ஒரு சிறு வீட்டில் எந்த வித அடிப்படை வசதிகள் இல்லாமல் வெறும் 12மாணவியர்களை கொண்டு இயங்கிவந்தது. இதில் வார்டனாகவும், சமையல் பெண்ணாகவும் சந்திரா என்ற பெண்மணி வேலைபார்கிறார். இவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இவ்விடுதியில் திருவண்ணாமலையை சார்ந்த மாணவி ஒருவர் தங்கி படித்து வருகிறார். இவரை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த சந்திரா முயற்சித்துள்ளார்.29/10/2012 அன்று மாணவிக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து துபாயில் உள்ள ஒருவருக்கு போனில் தொடர்புகொண்டு பேசுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதை அறிந்த மற்ற மாணவியர் தட்டிகேட்டு அந்த மாணவியை மீட்டுள்ளனர். இச்சம்பவத்தை மாணவியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது கல்லூரி நிர்வாகம் வார்டன் சந்திராவுக்கு சாதகமாக இருந்ததும் குற்றம் செய்த வார்டன் சந்திராவை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். உடனே பெற்றோர்கள் இம்மாணவியை கிருமாம்பாக்கத்தில் சிறிது காலமும், பின்பு பாகூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்தனர்.அங்கும் அவருக்கு பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து வார்டன் சந்திரா தொந்தரவு கொடுத்துள்ளார். 24/12/2012அன்று வார்டன் சந்திரா மற்றும் அவரது ஆட்கள் மாணவியை கடத்த முயற்சித்துள்ளனர். இச்சம்பவத்தை பாகூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்த போது துணை ஆய்வாளர் கலைச்செல்வன் இது சினிமா பாணியில் உள்ளது என்றும் ஏளனம் செய்து கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு வழக்கு பதிவு செய்ய காலம் கடத்தினார். இறுதியாக நிர்பந்ததுக்கு பிறகு 4/1/2013அன்று எப்.ஐ.ஆர்.(FIR) பதிவு செய்யப்பட்டது. வழக்கை நீர்த்து போக செய்ய பொய்யான சாட்சிகள், போலியான ஆவணங்கள் தயார் செய்து கல்லூரி நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து பாகூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் முயற்சி செய்கிறார்.

காவல் துறையும், கல்லூரி நிர்வாகத்தின் அடியாட்களும் திருவண்ணாமலையில் உள்ள மாணவியின் உறவினருக்கும், பெற்றோருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். மாணவியின் குடும்பத்தார் தேசிய மகளிர் ஆணையத்திடமும், புதுவை தலைமை செயலாளரிடமும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளனர்.



Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com