Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 31 January 2013

புதுச்சேரியில் மாணவியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயற்சி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

0 comments

புதுச்சேரியில் மாணவியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயற்சி
குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

புதுச்சேரி, ஜன. 30-

கல்லூரி மாணவியை பாலியல் தொழிலுக்கு உட் படுத்த முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர் - வாலிபர் சங்கங் கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவண்ணாமலையை சேர்ந்தவர் மாணவி சூர்யா. (பெயர் மாற்றப்பட்டுள் ளது) இவர் புதுச்சேரி அடுத்து பாகூரில் உள்ள ஆல்பா பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக் கிறார். இங்கு விடுதி வார்ட னாக உள்ளவர் சந்திரா.

இவர் மாணவியை பாலியல் தொழிலில் உட்படுத்த முயன் றுள்ளார்.இது தொடர்பாக மாண வியின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாக நடவ டிக்கை எடுக்காமல் சந்திரா விற்கு ஆதரவாக செயல் பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மாணவியின் பெற் றோறை கல்லூரி நிர்வாகம் அடியாட்கள் வைத்து மிரட் டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப் பட்ட மாணவியின் பெற் றோர் பாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளரை சந் தித்து புகார் அளித்துள்ள னர். ஆனால் காவல்துறை யும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை .எனவே நடவடிக்கை எடுககாத காவல்துறையை கண்டித்தும், உடனே குற்ற வாளிகளை கைது செய்யக் கோரி இப்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து, வாலி பர் சங்க பிரதேச செயலா ளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கிர். .வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச் செல் வன்,மாநிலக்குழு உறுப்பி னர் பிரபுராஜ்,பிரதேச பொருளாளர் ஆர்.சரவ ணன், நிர்வாகிகள்,ரஞ்சித், வழக்கறிஞர் தட்சணா மூர்த்தி, கதிரவன்,பாகர், விஜி,அழகப்பன்,சண்முகம் உள்ளிட்ட திரளான வாலி பர்கள்,மாணவர்கள் இப் போராட்டத்தில் பங்கேற் றனர்.

                                                                                                 நன்றி: தீக்கதிர் 
Read more...
Wednesday, 30 January 2013

புதுச்சேரி ஆல்பா பொறியியல் கல்லூரிய கண்டித்து SFI - DYFI போராட்டம்..!

0 comments
ஆல்பா பொறியியல் கல்லூரியில் மாணவியை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த - கடத்த முயற்சி: SFI - DYFI போராட்டம்..!



புதுச்சேரி பாகூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதுமான உள்கட்டமைப்பும், போதுமான தகுதியான ஆசிரியர் இல்லாமலும் ஆல்பா பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியின் மாணவியர் விடுதி, புதுவை நகரம் பிருந்தாவனத்தில் ஒரு சிறு வீட்டில் எந்த வித அடிப்படை வசதிகள் இல்லாமல் வெறும் 12மாணவியர்களை கொண்டு இயங்கிவந்தது. இதில் வார்டனாகவும், சமையல் பெண்ணாகவும் சந்திரா என்ற பெண்மணி வேலைபார்கிறார். இவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இவ்விடுதியில் திருவண்ணாமலையை சார்ந்த மாணவி ஒருவர் தங்கி படித்து வருகிறார். இவரை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த சந்திரா முயற்சித்துள்ளார்.29/10/2012 அன்று மாணவிக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து துபாயில் உள்ள ஒருவருக்கு போனில் தொடர்புகொண்டு பேசுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதை அறிந்த மற்ற மாணவியர் தட்டிகேட்டு அந்த மாணவியை மீட்டுள்ளனர். இச்சம்பவத்தை மாணவியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது கல்லூரி நிர்வாகம் வார்டன் சந்திராவுக்கு சாதகமாக இருந்ததும் குற்றம் செய்த வார்டன் சந்திராவை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். உடனே பெற்றோர்கள் இம்மாணவியை கிருமாம்பாக்கத்தில் சிறிது காலமும், பின்பு பாகூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்தனர்.அங்கும் அவருக்கு பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து வார்டன் சந்திரா தொந்தரவு கொடுத்துள்ளார். 24/12/2012அன்று வார்டன் சந்திரா மற்றும் அவரது ஆட்கள் மாணவியை கடத்த முயற்சித்துள்ளனர். இச்சம்பவத்தை பாகூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்த போது துணை ஆய்வாளர் கலைச்செல்வன் இது சினிமா பாணியில் உள்ளது என்றும் ஏளனம் செய்து கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு வழக்கு பதிவு செய்ய காலம் கடத்தினார். இறுதியாக நிர்பந்ததுக்கு பிறகு 4/1/2013அன்று எப்.ஐ.ஆர்.(FIR) பதிவு செய்யப்பட்டது. வழக்கை நீர்த்து போக செய்ய பொய்யான சாட்சிகள், போலியான ஆவணங்கள் தயார் செய்து கல்லூரி நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து பாகூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் முயற்சி செய்கிறார்.

காவல் துறையும், கல்லூரி நிர்வாகத்தின் அடியாட்களும் திருவண்ணாமலையில் உள்ள மாணவியின் உறவினருக்கும், பெற்றோருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். மாணவியின் குடும்பத்தார் தேசிய மகளிர் ஆணையத்திடமும், புதுவை தலைமை செயலாளரிடமும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளனர்.

புதுச்சேரி காவல்துறையை கண்டித்தும் ஆல்பா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு மாணவர் வாலிபர் சங்கத்தின் செயலாளர்கல் ஆனந்த், சரவணன் கூட்டாக தலைமை தாங்கினர். இப்போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில குழு உறுப்பினர் தமிழ்செல்வன், மற்றும் பிரபுராஜ், இந்திய மாணவர் சங்க து.தலைவர் ரஞ்சித் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Read more...

உள்நோக்க அரசியலுக்காக கமல் படத்திற்கு தடை?

0 comments
கருத்துச்சுதந்திரத்திற்கு தடை விதிப்பதா ? 

கருத்துச் சுதந்திரத்திற்காகவும் கலை வெளிப்பாட்டு உரிமைக்காகவும் எப்போதும் நிற்கிற SFI கமல்ஹாசனின் விஸவரூபம் படத்திற்கு அரசு தடையாணை பிறப்பித்திருப்பதை உறுதியாக எதிர்க்கிறது. உயர்நீதிமன்றம் அந்தத் தடை தொடர்வதற்கு அனுமதித்துத் தீர்ப்பளித்திருப்பது குறித்து தனது கவலையையும் இந்திய மாணவர் சங்கம்  தெரிவித்துக்கொள்கிறது.


கலை இலக்கியவாதிகளின் படைப்புச் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுக்கிற எஸ்.எப்.ஐ, அதே நேரத்தில் அவர்களது சமூகப் பொறுப்பையும் உயர்த்திப்பிடிக்கிறது. கருத்து சுதந்திரமும் கலைஞனின் பொறுப்புணர்வும் ஒரு நானயத்தின் இரு பக்கங்கள்.இக்கண்ணோட்டத்துடன் விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்த பிரச்சனைகளை எமது சங்கம் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறது. படம் தொடர்பான நிகழ்ச்சிப்போக்குகள் ஆரோக்கியமற்ற திசையில் போவது ஆழ்ந்த கவலையை அளிப்பதாக இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் முன்கூட்டியே பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவர்கள் படத்தில் தங்களது எதிர்ப்புக்குரிய காட்சிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போது கமல்ஹாசன் படத்தில் சில காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டிருப்பதாக வந்துள்ள தகவல் வரவேற்கத்தக்கது. கமல்ஹாசன் இந்த முடிவுக்கு வந்திருப்பதை இஸ்லாமிய அமைப்புகள் பரிசீலிக்க வேண்டும். அரசும் தனது பிடிவாதமான உடும்புப்பிடி நிலையைக் கைவிட வேண்டும் என்றும் சங்கம் கருதுகிறது. இத்தகைய போக்கு தொடர்வது, எதிர்காலத்தில் அரசியல் - சமூக விமர்சனங்கள் உள்பட எப்படிப்பட்ட கருத்துகளையும் கலை ஆக்கங்களில் சொல்ல இயலாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் என்றும் SFI அஞ்சுகிறது.

இதனிடையே, புதனன்று காலையில் படம் திரையிடப்பட்ட அரங்குகளில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்துள்ளன. ரசிகர்கள் விரட்டப்பட்டதாகவும், அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள் கிழிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வழக்கு முடிவுறாத நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையாணையை நியாயப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட தாக்குதல்கள் திட்டமிட்டு உள்நோக்க அரசியல் காரணமாக தொடுக்கப்படுகிறதோ என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆகவே, ஒரு கலைப்படத்தின் நிறைகுறைகளை மக்கள் தாங்களே பார்த்து முடிவு செய்வதற்கான உரிமையைப் பறிப்பது போன்ற இந்தத் தடையாணையை இனியும் நீட்டிக்காமல் விலக்கிக்கொள்ள வேண்டும், மாநிலம் முழுவதும் ரசிகர்கள் அச்சமின்றிப் படம்பார்க்கிற வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசை இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

Read more...
Tuesday, 29 January 2013

ஆல்பா பொறியியல் கல்லூரியில் மாணவியை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி:

0 comments
ஆல்பா பொறியியல் கல்லூரியில் மாணவியை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த - கடத்த முயற்சி


புதுச்சேரி பாகூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதுமான உள்கட்டமைப்பும், போதுமான தகுதியான ஆசிரியர் இல்லாமலும் ஆல்பா பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியின் மாணவியர் விடுதி, புதுவை நகரம் பிருந்தாவனத்தில் ஒரு சிறு வீட்டில் எந்த வித அடிப்படை வசதிகள் இல்லாமல் வெறும் 12மாணவியர்களை கொண்டு இயங்கிவந்தது. இதில் வார்டனாகவும், சமையல் பெண்ணாகவும் சந்திரா என்ற பெண்மணி வேலைபார்கிறார். இவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இவ்விடுதியில் திருவண்ணாமலையை சார்ந்த மாணவி ஒருவர் தங்கி படித்து வருகிறார். இவரை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்த சந்திரா முயற்சித்துள்ளார்.29/10/2012 அன்று மாணவிக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து துபாயில் உள்ள ஒருவருக்கு போனில் தொடர்புகொண்டு பேசுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதை அறிந்த மற்ற மாணவியர் தட்டிகேட்டு அந்த மாணவியை மீட்டுள்ளனர். இச்சம்பவத்தை மாணவியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது கல்லூரி நிர்வாகம் வார்டன் சந்திராவுக்கு சாதகமாக இருந்ததும் குற்றம் செய்த வார்டன் சந்திராவை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். உடனே பெற்றோர்கள் இம்மாணவியை கிருமாம்பாக்கத்தில் சிறிது காலமும், பின்பு பாகூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்தனர்.அங்கும் அவருக்கு பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து வார்டன் சந்திரா தொந்தரவு கொடுத்துள்ளார். 24/12/2012அன்று வார்டன் சந்திரா மற்றும் அவரது ஆட்கள் மாணவியை கடத்த முயற்சித்துள்ளனர். இச்சம்பவத்தை பாகூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்த போது துணை ஆய்வாளர் கலைச்செல்வன் இது சினிமா பாணியில் உள்ளது என்றும் ஏளனம் செய்து கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு வழக்கு பதிவு செய்ய காலம் கடத்தினார். இறுதியாக நிர்பந்ததுக்கு பிறகு 4/1/2013அன்று எப்.ஐ.ஆர்.(FIR) பதிவு செய்யப்பட்டது. வழக்கை நீர்த்து போக செய்ய பொய்யான சாட்சிகள், போலியான ஆவணங்கள் தயார் செய்து கல்லூரி நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து பாகூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் முயற்சி செய்கிறார்.

காவல் துறையும், கல்லூரி நிர்வாகத்தின் அடியாட்களும் திருவண்ணாமலையில் உள்ள மாணவியின் உறவினருக்கும், பெற்றோருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். மாணவியின் குடும்பத்தார் தேசிய மகளிர் ஆணையத்திடமும், புதுவை தலைமை செயலாளரிடமும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளனர்.



Read more...
Saturday, 12 January 2013

SFI-DYFI 3ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு கலைவிழா,15/01/ 2013

0 comments

இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி லாஸ்பேட்டை அசோக் நகரில் வருகின்ற 15/01/2013 காலை முதல் இரவு 10.00மணி வரை அனைவரும் வருக என அன்போடு SFI-DYFI அசோக்நகர் கிளை சார்பில் கேட்டுகொள்கிறோம்.


Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com