Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 8 December 2012

DYFI நடத்தும் தேசம் விற்பனைக்கு அல்ல நடைபயணம் - மாணவர் சங்கம் உற்சாக வரவேற்ப்பு..!

0 comments
" நாடு விற்பனைக்கு அல்ல"
 ஊழலுக்கு எதிராக நாங்களும் பங்கேற்போம் வாலிபர் சங்கத்தோடு மாணவர் சங்கத்தினரும் பேரணியில்...!


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் ஊழலுக்கு எதிரான, இயற்கை கனிம வளங்களை பாதுக்காக்க கோரி நடைபெறும் நடைபயணத்திற்கு புதுச்சேரி கல்வித்துறை அருகே நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்ப்பு அளித்தனர். ஊழலுக்கு எதிராக மாணவர்களும் வாலிபர்களோடு இணைந்து நிற்கிறோம் என்று பறைசாற்றும் வகையில் இந்திய மாணவர் சங்கம் தோழர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தோடு 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடைபயணத்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய மாணவர் சங்க புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆனந்த் , து.தலைவர் ரஞ்சித் மற்றும் நிர்வாகிகள் ஜீவானந்தம் ரஞ்சித், பவித்ரன், அஜித், சபேஷ், ஆனந்த், வின்னரசன், துரைராஜ் மற்றும் திரளான மாணவர் சங்க தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக புதுச்சேரி வினோபா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், புதுச்சேரி பிரதேச குழு சார்பில் நடைபயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. அதில்  உலகப்புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோவின் வரிகளான 
"தடம் பார்த்து  நடப்பவன் மனிதன் 
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் " என்ற வரிகள் அடங்கிய  நினைவு கேடயம் நடைபயணத்தில் பங்கேற்ற வாலிபர் சங்க தோழர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com