Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Thursday, 20 December 2012

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான டெல்லி மாணவிக்கு நீதிகேட்டு - நாடு முழுவதும் எஸ்.எப்.ஐ போராட்டம்..!

0 comments
 பெண்களுக்கு எதிரான அநிதீயை ஒரு போதும் அனுமதியோம்..!

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்ககொரியும், நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி புதுச்சேரி பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைத்திட வலியுறுத்தி புதுச்சேரி பல்கலைகழக இந்திய மாணவர் சங்க கிளை சார்பாக 20/12/2012 காலை 11.00 மணிக்கு புதுவை பல்கலைகழக நுழைவு வாயில் 2இன் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைகழக கிளை தலைவர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார்.
சமர்பனா பல்கலைகழக மாணவி, லேகரி பல்கலைகழக மாணவி, சௌம்யா, சஹீத் ரூமி பல்கலைகழக செயலாளர் (SFI ), அருண்குமார் (SFI )ஆராய்ச்சி மாணவர் பிரதிநிதி, ஆனந்த் (SFI ) புதுவை பிரதேச செயலாளர், அறிவழகன் (SFI)  விழுப்புரம் மாவட்ட செயலாளர் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில்  பல்கலைகழக நிர்வாகிகள் கிரி, வினோத்ராஜ், அகில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பினிஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com