Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 28 November 2012

மம்தா பானர்ஜி சகிப்புத் தன்மை அற்றவர் - மார்க் கண்டேய கட்ஜு..!

0 comments
நவ. 26,2012

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சகிப்புத் தன்மை அற்றவர் என்றும், மற்றவர்கள் பேச்சை கேட்க அவர் தயாராயில்லை என் றும் இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்க் கண்டேய கட்ஜு குற்றம் சாட்டினார். விமர்சிக்கும் உரிமை மக் களுக்கு உண்டு. விமர்சனங் களை தாங்க முடியாதவர்க ளுக்கு அரசியலில் நீடிக்க உரிமையில்லை. அவர் தன் னைச் சுற்றி ஆமாம் சாமி கள் சூழ்ந்திருப்பதையே விரும்புகிறார் என்றும் அவர் கூறினார்.கொல்கத்தா பிரஸ் கிளப்பில் காளிதாஸ் - காலிப் பவுண்டேசன் ஏற் பாடு செய்த எழுத்தாளர் சுனில் கங்குலி பற்றி நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.தனிப்பட்ட முறையில் நேர்மையானவர், சாதாரண மக்களுக்காகப் பேசக் கூடியவர் என்பதால், முன்பு அவரைப் பாராட்டியதாக கட்ஜு கூறினார். ஆனால் அவரிடம் சகிப்புத்தன்மை இல்லை. மற்றவர் கூறுவதை கேட்க அவர் தயாராயில் லை. அருகில் உள்ளோர் அனைவரும் ஆமாம் சாமிக ளாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அர சை நடத்த ஒருவருக்கு நல்ல ஆலோசகர்கள் வேண்டும். இதை அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியரே கூறியுள்ளார். கூடாது என்று கூறக் கூடிய வர்களும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.தீர்மானிக்க வேண்டி யது அரசின் பொறுப்பு என் பதில் ஐயமில்லை. ஆனால் அத்தகைய முடிவுகள் திட மான, ஆரோக்கியமான ஆலோசனைகளின் பேரில் எடுக்கப்பட வேண்டும். அதற்கு அதிகாரிகள் அச்ச மின்றிப் பணியாற்ற வேண் டும் என்றும் அவர் கூறி னார்.

குஜராத் வளர்ந்துள்ளதா?


குஜராத் வளர்ச்சி அடைந்து வருவதாக மம்தா பானர்ஜி பாராட்டியதை அவர் கடுமையாகச் சாடி னார். ஊட்டச்சத்துக் குறை வால் மடியும் குழந்தைக ளின் எண்ணிக்கை குஜராத் தில் மிக அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார். நல்ல சாலைகளும், ஆலை களும் மட்டும் வளர்ச்சி ஆகாது. மம்தா அவ்வாறு கூறுவது அவரது முதிர்ச்சி யின்மையைக் காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.கட்ஜு, இவ்வாறு மம் தாவை விமர்சிப்பது முதல் முறை அல்ல. 2012 ஆகஸ்ட் 12 அன்று மம்தாவின் ஆட் சியை நாஜிக்களின் ஆட்சியு டன் இணைத்து விமர்சித் துப் பேசினார். அரசு இயந் திரத்தை மம்தா ஆட்சி தவ றான வழிகளில் அப்பட்ட மாகப் பயன்படுத்துகிறது என்றும், அரசியல் சட்ட உரிமை, மனித உரிமை களை தயங்காமல் மீறுகி றது என்றும் அவர் விமர்சித் திருந்தார்.
 
                                                                                                    நன்றி: தீக்கதிர் 
Read more...
Monday, 26 November 2012

Sfi organise a massive March to Parliament

0 comments
The SFI CEC organised a Press Conference today at SFI Central Office. The Press Conference was addressed by General Secretary Ritabrata Banerjee and President V Sivadasan.

Press Note:

The Central Executive Committee of Students’ Federation of India met in New Delhi on 22nd and 23rd of November. THE CEC decided to organise a massive March to Parliament on 6th of March, 2013 protesting the neo liberal designs of the Central government and the monumental attacks it is spearheading against the common man of the country in general and the student community in particular in the name of carrying ‘reforms’. The Central Demands of the march will be –Increase spending for equitable access to Quality Education; Resist Commercialisation and Centralisation of Education; Ensure Democratic Rights. The CEC decided that in order to conduct extensive campaigns at the ground level it will be publishing a booklet explaining the dimensions and consequences of the attack and demands concerning the march. Seminars, conventions at all states will be organised by 15th of January. Signature campaign and other state level agitational programmes will be organised. Before the march there will be state level gatherings throughout the country. The entire three month long campaign will culminate with an impressive gathering on 6TH of March at New Delhi with students in large numbers from different parts of the country pouring in at the capital and marching to the parliament.

The CEC decided to organise Convention for Professional, Technical and Private Institutions students in Thiruvananthapuram, Kerala on 5th and 6th of January, 2013. The CEC also decided to organise The Girls Convention at Shimla, Himachal Pradesh in June and the University Students Convention at Hyderabad, Andhra Pradesh in July, 2013.

The CEC congratulated the Tamilnadu state organisation for a successful conduction of our 14th All India Conference at Madurai in September 2012.The CEC also congratulated the Kerala Committee for its stupendous performance in all the University Union elections of the state amidst all sorts of obstacles.The Andhra Committee was also congratulated for the victory registered at the Hyderabad Central University Union elections against a united opposition of all shades and hues.The CEC expressed its revolutionary solidarity to SFI Central Secretariat member and state President of Himachal Pradesh Kapil Bhardwaj who have 58 false and fabricated cases filed against him. The state administration of Himachal has been the mastermind behind such attacks.The CEC also expressed its revolutionary solidarity to CEC member R S Balamurali OF Kerala who along with 16 other comrades was in Jail for the last three weeks. Comrade Balamurali could not attend the CEC meeting as he was in jail. The UDF Government has been extremely sincere in piling one after another false cases and charges against our comrades in Kerala.The CEC expressed its steely resolve to stand in firm solidarity with the struggling Bengal comrades who are facing an unprecedented attack from the state administration and the Trinamool Congress in Bengal. A nationwide campaign in solidarity with the comrades of West Bengal where the democracy is in peril will also be conducted in this period.

The CEC decided to form a Cyber Space Sub Committee in order to utilise the cyber space at full length for campaign purpose. Comrade Aravind Kunjunni from Kerala is appointed as the incharge of this subcommittee.
Read more...
Friday, 23 November 2012

நவீன சமையல் கூடத்தை திறக்ககோரி மாணவர்கள் நூதன போராட்டம் :

0 comments

புதுச்சேரி, நவ. 22-நவீன சமையல் கூடத்தை திறக்க கோரி மாணவர்கள் உணவு சமைக்கும் போராட் டம் நடத்தினர்.புதுச்சேரி இலாஸ்பேட் டையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டி முடிக் கப்பட்ட நவீன சமையல் கூடம் திறக்கபடாததை கண் டித்தும், உடனடியாக சமை யல் கூடத்தை திறக்ககோரி யும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இலாஸ்பேட்டை உழ வர் சந்தை அருகில் அமைந் துள்ள நவீன சமையல்கூடம் எதிரில் நடைபெற்ற போரட் டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செய லாளர் ஆனந்து தலைமை தாங்கினார். துணை தலை வர் ரஞ்சித், நிர்வாகிகள் ஜெகன், பவித்திரன், சபேஷ், ஆனந்து, அரவிந்த் உள் ளிட்ட திரளான மாணவர் கள் பங்கேற்றனர்.

இயக்குநரிடம் முறையீடுபோராட்டம் நடத்திய இடத்திற்கு வருகை தந்த புதுச்சேரி கல்வித்துறை இயக் குநர் வள்ளவனை சந்தித்து மாணவர் சங்க நிர்வாகிகள் முறையிட்டனர். மாணவர் சங்க நிர்வாகிகளிடம் இன் னும் இரண்டு வாரத்தில் சமை யல் கூடத்தை திறக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர் உறுதிய ளித்தார்.முன்னதாக நாவளர் நெடுஞ்செழியன் பள்ளி மாண வர்கள் வகுப்புகளை புறக் கணித்து இப்போராட்டத் தில் ஈடுபட்டனர்.


Read more...
Tuesday, 20 November 2012

பால்தாக்கரேக்கு என்னால் இரங்கல் தெரிவிக்க முடியாது..?

0 comments
தாக்கரேக்கு ஏன் என்னால் இரங்கல் தெரிவிக்க இயலாது?
பால் தகரேயின் மரணத்திற்கு அநேகமாக ஒபாமாவையும் விளாடிமிர் புடினையும் தவிர எல்லோரும் இரங்கல் தெரிவித்துவிட்டனர். இறந்தவர்கள் குறித்து நல்ல வார்த்தை சொல்வது ன்றொரு மரபு நமக்குண்டல்லவா? ஆனால்
இறந்து போனார் என்பதற்காகக்கூட என்னால் இந்த மனிதனைப் பற்றி நல்லவார்த்தை கூற இயலாது என்கிறார் நமது மரியாதைக்குரிய நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு.

அதற்கு அவர் சுட்டும் காரணம் தாக்கரேயின் "மண்ணின் மைந்தர்" கொள்கைதான். அது நமது அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அடிப்படை மனித நெறிகளுக்கே அப்பாற்பட்டது. அப்படி மண்ணின் மைந்தர்கள்தான் இங்கே வாழமுடியும் என்றால் பில்கள், கோண்டாக்கள், சந்தாலிகள், தோடர்கள்தான் இங்கே வாழ இயலும். இந்தியத் துணைக்கண்டமும் வட அமெரிக்காவைப்போல ஒரு குடியேறிகளின் நாடு என்பதை மறந்து விடலாகாது என்கிறார் கட்ஜு. ஆரியர்கள் மட்டுமல்ல திராவிடர்களும் கூட ஒரு வகையில் இன்னும் பழமையான வந்தேறிகள்தானே.

தாக்கரேயின் அரசியலுக்கு ஜனநாயக நெறிமுறைகளில் இடமில்லை. குண்டர்கள், உதிரிகள் ஆகியோரைத் திரட்டி ஒரு வெறுப்பு அரசியலைக் கட்டமைத்தவர் தாக்கரே. அவரது முதல் இலக்கு தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தொடங்கியது. தொழிற்சங்கங்களும் கம்யூனிசமும் மராத்தா வலிமையைப் பலவீனமாக்கும் என்பது தாக்கரேயின் இட்லர் இரசியல். அடுத்து அந்த இலக்கு தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை நோக்கித் திரும்பியது. தமிழ் உழைக்கும் வர்க்கம் இலக்காக்கப்பட்டது. அடுத்து அவரது இலக்கு முஸ்லிம்கள். பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் ஏற்பட்டக் கலவரத்தில் சிவசேனா ரவுடிக் கும்பல்கள் முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தன. ஶ்ரீகிருஷ்ணா ஆணையம் தாக்கரேயைக் குற்றம் சாட்டியும், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும் சாகும்வரை காவல்துறை தாக்கரேயை நெருங்கவில்லை. மலேகான் குண்டு வெடிப்பில் கைதான சாமியாரிணி பிரக்ஞா தாகூர், இராணுவ அதிகாரி உபாத்யாயா போன்ற பயங்கரவாதிகளின் பின் இந்துச் சமூகம் திரள வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்தார் தாக்கரே. ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் , தீவிரவாதக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் பின்னால் முஸ்லிம் சமூகமே திரளவேண்டும் என இங்கே ஒரு முஸ்லிம் தலைவர் வாய்திறக்க இயலுமா?

தாக்கரேயின் அடுத்த இலக்கு பீஹாரிகள் முதலான புலம்பெயர் தொழிலாளிகள் மீது திரும்பியது.

இலக்குகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்த தாக்கரே தனது குண்டர் அரசியலையும், கொடும் வெறுப்புப் பேச்சுக்களையும் மட்டும் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை.

இட்லரை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசிய தாக்கரேயைத் தன் ரோல்மாடல் எனச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் ஒரு இயக்கம் காலூன்ற முயற்சிக்கும் இத்தருணத்தில், கட்ஜுவின் இக்கட்டுரை நம் கவனத்திற்குரியதாகிறது. 
                                                                                     நன்றி: தீக்கதிர் 
Read more...
Saturday, 10 November 2012

ரேசன் முறையை ஒழித்துக்கட்ட மன்மோகன் அரசு சதி..?

0 comments
பொருளுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் அமல் ரேசன் முறையை ஒழித்துக்கட்ட மன்மோகன் அரசு சதி


புதுதில்லி, நவ. 9,2012

நாட்டின் ஏழை, எளிய மற்றும் நடுத் தர மக்களின் அடிப்படை வாழ்வாதார மாக விளங்குகிற பொது விநியோக முறை யை படிப்படியாக ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோ கிப்பதற்கு பதிலாக , அதற்குரிய தொகை யை நேரடியாகப் பணமாகவே கொடுத்து விடுவது என தீர்மானித்துள்ளது. இத்திட்டம் 2013 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது. முதல்கட்டமாக 2013 ஜனவரி 1ல் 51 மாவட்டங்களில் அமலுக்கு வரும் இத்திட்டம், 2013 ஏப்ரல் 1ம் தேதிக்குள் 18 மாநிலங்களிலும், 2014 ஏப்ரல் 1க்குள் எஞ்சியுள்ள 16 மாநிலங்களிலும் அம லுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்துகிறோம் என்ற பெயரில் அனைத்துவிதமான மானியங்களையும் வெட்டுவது என்ற அறிவிப்புகளை அடுத்தடுத்து மன்மோகன் சிங் அரசு அறிவித்தவண்ணம் உள்ளது.

ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பொருள் விநியோகிப்பதற்காக அரசு அளித்து வரும் மானியங்கள்அனைத்தையும் வெட்ட வேண்டுமென கேல்கர் குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதை உட னடியாக செயல்படுத்தவும் முடிவு செய் துள்ளது. ரேசன் பொருட்களுக்குப் பதிலாக அரசாங்கம் மக்கள் கையில் நேரடியாக பணமே அளிக்கிறது என்று விளம்பரம் செய்து, மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் இத்திட்டத்தின் பின்னணியில், ரேசன் கடைகளில் இனிமேல் பொருட்கள் வழங்கப்படாது என்கிற ஒரு பயங்கர மான தாக்குதல் காத்திருக்கிறது. மிகப் பெருவாரியான ஏழை, எளிய மக்கள் தங் களது அன்றாட உணவுக்கு ரேசன் பொருட்களையே நம்பியிருக்கும் நிலை யில், ரேசன் பொருளுக்கு அரசு என்ன மானியம் கொடுக்கிறதோ அந்தத்தொ கையை மக்கள் கையில் கொடுப்பதால், வெளிச்சந்தையில் அதை வைத்து எப் பொருளையும் வாங்க முடியாத நிலை மைக்குத் தள்ளப்படுவார்கள். ரேசன் கடைகள் மூடப்படுவதால் வெளிச்சந் தையில் உணவுதானியங்கள் உள்பட அனைத்துப் பொருட்களின் விலையும் மிகக்கடுமையாக அதிகரிக்கும்.

 பிரதமர் அலுவலகம் அறிவித்தவுட னேயே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உடனடியாக அமைச்சரவைக் கூட்டப் பட்டு இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. கேரளத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை உடனடி யாக கூட்டிய முதலமைச்சர் உம்மன் சாண்டி, “கேரளத்தில் வறுமைக்கோட் டுக்கு மேலே உள்ளவர்களுக்கு 2 ரூபாய்க்கு வழங்கப்படும் 9 கிலோ அரிசிக்கான மானியத்தை அவர்களின் வங்கிக்கணக் கில் சேர்த்துவிடுவோம்” என்று கூறி யுள்ளார். அரிசி கிலோவுக்கு 6 ரூபாய் 90 பைசா வீதம் அரசு மானியம் அளிக்கிறது. இந்தத்தொகை, கார்டுதாரர்களின் வங் கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 6 ரூபாய் 90 பைசாவை எடுத்து, அவர்கள் வெளி மார்க்கெட்டில் 1 கிலோ அரிசி வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே திட்டம்.நாட்டில் வெளிச்சந்தையில் எந்தக் கடையிலும் வெறும் 6 ரூபாயை வைத்து ஒரு கிலோ அரிசி வாங்க முடியாது என் பதே உண்மை. எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்த திட்டத்தை துவக் கத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறது.

                                                                                                                      நன்றி : தீக்கதிர் 
Read more...
Tuesday, 6 November 2012

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தேர்தல்-எஸ்எப்ஐ மகத்தான வெற்றி....!!

0 comments
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தேர்தல்...
மூன்றாவது முறையாக எஸ்எப்ஐ மகத்தான வெற்றி....!!

2012 - 13ம் ஆண்டிற்கான ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் இந்திய மாணவர் சங்கத்திற்கான (எஸ்எப்ஐ) தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர் மாணவர்கள். இந்த தேர்தலின் போது, கல்வியை வியாபாரமாக்கியிருப்பதோடு, ஊழலின் கூடாரமாகவும் மாறியுள்ள காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு    எ
திரான   பிரச்சாரம் வலுவாக நடைபெற்றது. அதே நேரத்தில் வகுப்பு வாதத்தை உருவாக்கி, தேசத்தின்இறையாண்மையை கேள்விக்குறியாக்கி வரும்பாரதியஜனதா கட்சியின் செயல்களையும் மாணவர்கள் மத்தியில் இந்திய மாணவர் சங்கம் அம்பலப்படுத்தியது. மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எஸ்எப்ஐ தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டத்தின் விளைவாக மாணவர்கள் மத்தியில் எஸ்எப்ஐ மீண்டும் வலுவான ஆதரவு தளத்தை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தற்போது ஹைதராபாத்மத்தியபல்கலைக்கழக மாணவர் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளது. இதன்மூலம், கல்வி வியாபாரமாகி வருவதற்கும், மதவெறியைத் தூண்டும் இடமாக மாறுவதற்குமான தங்களது எதிர்ப்பை மாணவர்கள் வலுவாக பதிவு செய்துள்ளனர்.மொத்தமுள்ள 44 உறுப்பினர்களுக்கான போட்டியில் இந்திய மாணவர் சங்கம் 28 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

இதில், ஐந்தாம் ஆண்டு உருதுப் பட்டம் படித்து வரும் ஷேக் அம்ஜத் பாஷா தலைவராகவும், எம்.டெக் முதலாமாண்டு படித்து வரும் வசிஸ்தா ரெட்டி துணைத் தலைவராகவும், எம்.சி.ஏ. மூன்றாமாண்டு படிக்கும் அரவிந்த் குமார் பொதுச் செயலாளராகவும், மூன்றாமாண்டு ஐஎம்ஏ சமூக அறிவியல் படிக்கும் வானி பிரஷம்சா கூடுதல் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, இரண்டாமாண்டு மருத்துவ அறிவியல் படிக்கும் உமா பாரதியும் ( ஜிஎஸ்சிஏஎஸ்எச் பிரதிநிதி), பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணியான ஏபிவிபி விளையாட்டு மற்றும் கலாச்சார செயலாளர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.இந்தத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம், ஏபிவிபி, அம்பேத்கர் மாணவர்கள் சங்கம் - என்எஸ்யு மற்றும் தெலுங்கானா மாணவர்கள் சங்கம் - பிஎஸ்எஃப் - டிஎஸ்யு - டிஎஸ்எஃப் ஆகியவை போட்டியிட்டன. முந்தைய தேர்தலைப் போல் அல்லாமல், இந்த தேர்தலில், தத்துவார்த்தம், அரசியல் நிலை மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, கல்வித்துறையில் வியாபார நோக்கோடு நுழையும் அந்நியக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்க துடிக்கும் மத்திய அரசின் மசோதா குறித்தும், மாணவர்களுக்கெதிராக தற்போது மத்திய அரசு மற்றும் முந்தைய அரசான தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடைப்பிடித்து வந்த கொள்கைகள் குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கல்விச்சாலைகளில் வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் பிஜேபியின் கொள்கைகள் குறித்தும், அனைவருக்கும் கல்வி திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதன் அவசியம் குறித்தும் கருத்தரங்கங்கள்,விவாதங்கள்மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை இந்திய மாணவர் சங்கம் நடத்தியது.

இதன்பலனாக, இந்த இரு கூட்டணிகளின் கொள்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தீர்ப்பை ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் அளித்துள்ளனர்.கல்வியை வர்த்தகமயமாக்கல் மற்றும் மத்தியத் துவப்படுத்துதலை மையமாகக் கொண்டுள்ள காங்கிரசின் கொள்கைகளை புரிந்து கொண்டுள்ள மாணவர்கள் அதனை தூக்கியெறியும் வகையில், அதன் மாணவர் சங்கமான என்எஸ்யுஐ தோற்கடித்துள்ளனர். இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசின்சிக்கனநடவடிக்கையின் காரணமாக கல்விக் கட்டணத்தை 300 சதவிகிதம் அதிகரிக்க ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த 2011 - 12ம் கல்வியாண்டில் நூற்றுக்கணக்கான மாணவர்களைத் திரட்டி இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது. இதனையடுத்து கடந்த மார்ச் 2012ம் ஆண்டு நடந்த பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது.ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் வெற்றி என்பது இலகுவாக எட்டப்படவில்லை. இப்பல்கலைக்கழகத்தில் அடையாள அரசியல் மிக ஆழமாக வேறூன்றியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடுகையில், இப்பல்கலைக்கழகம் தான் அடையாள அரசியலில் முதலிடம் உள்ளது. இங்கு முதலில் தலித் இயக்கங்கள் மிகத்தீவிரமாக இருந்தன. தற்போது, தெலுங்கானா தொடர்பான இயக்கங்கள் அதிகரித்து வருகின்றன. தெலுங்கானா பிரச்சனையின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. மேலும்,தெலுங்கானாதொடர்பான ஒரு நிலையான முடிவை எடுக்காமல், ஆந்திராவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதற்கான முக்கிய காரணமாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை கடுமையாக விமர்சித்தனர். அதேசமயம், கடந்த பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த இந்திய மாணவர் சங்கம் மற்றும் அம்பேத்கர் மாணவர் சங்கம் இடையே பிரிவு ஏற்பட்டது. இந்த இரு சங்கங்களும் இணைந்து கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டு சங்கத் தேர்தலை சந்தித்து அதிக இடங்களைப் கைப்பற்றின. இந்தத் தேர்தலில் இதேபோன்று பல பிரச்சனைகளை எதிர்கொண்ட இந்திய மாணவர் சங்கம், மாணவர்கள் பேராதரவால் பெருவாரியாக வெற்றியைப் பெற்றது.இந்த ஆண்டு தெலுங்கானாவை ஆதரிக்கும் சங்கங்களான தெலுங்கானா மாணவர்கள் சங்கம், பகுஜன் மாணவர் முன்னணி, பழங்குடியின மாணவர் அமைப்பு மற்றும் தலித் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து மூன்றாவது முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கின. அதேபோல், இந்திய மாணவர் சங்க கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற அம்பேத்கர் மாணவர் சங்கம் காங்கிரசின் என்எஸ்யுஐ சங்கத்துடன் கூட்டணி வைத்து ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டது. வழக்கம்போல், பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணியான ஏபிவிபி தனித்தே போட்டியிட்டது.

மேலும், அக்டோபர் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் முன்னணியில் இருந்த இந்திய மாணவர் சங்கத்தினரின் வெற்றியை சீர்குலைக்கும் நோக்கில் தனது சித்துவேலைகளைக் பல்வேறு அமைப்புகள் காட்டின. எனினும், அக்டோபர் 25ம் தேதி நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய மாணவர் சங்கத்தினரின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்திய மாணவர் சங்கங்களில் இருந்தவர்களின் சிறப்பான செயல்பாடு இச்சங்கத்தின் மீது மாணவர்களின் நம்பிக்கையை பெற்று தந்தது. இத்தேர்தல் இதற்கு முந்தைய தேர்தல்களை விட மிகவும் சிறப்பானதாகும். கடந்த 2007ம் ஆண்டு முதல் மாணவர் சங்கத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் கூட்டணி—யில் போட்டியிட்டு வருகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தனித்துப் போட்டியிட்டு மிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஊழல் கறைபடிந்த காங்கிரசின் மாணவரணியையும், மதவாதத்தை மூலதனமாக கொண்ட பாரதிய ஜனதாவின் மாணவரணியையும் தோற்கடித்த இந்திய மாணவர் சங்கத்தினரை எஸ்எப்ஐயின் ஆந்திரப் பிரதேச மாநிலக்குழு தலைவர் மற்றும் செயலாளர் பாராட்டியுள்ளனர்.மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு, மாணவர் விரோதக் கொள்கை மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளில் ஈடுபட்டு வரும் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
 
                                                                                                    நன்றி: தீக்கதிர்...!
Read more...
Friday, 2 November 2012

ரிலையன்ஸ் கொள்ளைக்கு பிரதமர் துணை போகிறார்-பிரகாஷ் காரத் கேள்வி ?

0 comments
 பெட்ரோலிய அமைச்சகத்தை ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பறித்தது ஏன்? 
புதுதில்லி, நவ. 1-2012
கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகைகளில் ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மிகப்பெ ரும் கொள்ளைக்கு ஆதரவாக மன்மோகன்சிங் அரசு செயல்படு கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.இந்த வாரத் துவக்கத்தில் அமைச் சரவை மாற்றம் என்ற பெயரில் சில மாறுதல்களைச் செய்த பிரதமர் மன்மோகன் சிங், பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்ப் பால் ரெட்டியை மாற்றிவிட்டு வீரப்ப மொய்லியை நியமித்துள் ளார். இந்த மாற்றத்தின் பின்னணி யில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்ப்பந்தம் இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வளங்களை கொள்ளையடிக்க:
நாட் டின் வளங்களையெல்லாம் தங்கு தடையின்றி கொள்ளையடிப்பதற்கு பன்னாட்டு, உள்நாட்டு பெருமுத லாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு தாராளமாக வழி வகை செய்துதரும் காங்கிரஸ் கூட் டணி அரசு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையில் ஒட்டு மொத்த வளத்தையும் கொள்ளை யடிப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனத் திற்கு உதவும் விதமாகவே அமைச் சரை மாற்றியுள்ளது.இந்தப்பின்னணியில், நாட்டின் மிகப்பெரும் இயற்கை எரிவாயு வளம் நிறைந்த பகுதியான ‘கே.ஜி. பேசின்’ என அழைக்கப்படும் கிரு ஷ்ணா-கோதாவரி இயற்கை எரி வாயுப் படுகைகளை முழு வீச்சில் கொள்ளையடிப்பதற்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சட்ட விரோதமான வழிகளில் உதவி செய்ய அரசு துணைபோகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. 

பிரகாஷ் காரத் கேள்வி..?
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகைகளில் நடக்கும் கொள்ளை குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனை எழுப்பி வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதலே இப்பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைவிடாமல் எழுப்பி வருகிறார் கள். எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அளவிற்கு எரிவாயு விலை உயர்த்தப்பட்டது; தான் உற்பத்தி செய்கிற எரிவாயுவுக்கு மிக அதிக மாக செலவாகிறது என்று கணக் கை மிகைப்படுத்திக்காட்டி, மிக அதிகபட்சமான விலையை நிர்ண யிக்க வேண்டுமென அரசை நிர்ப் பந்தித்து, திட்டமிட்டு ஒரு விலை உயர்வை ஏற்படுத்தி (தங்கம் முலாம் பூசிய கவரிங்கை விற்பது போல) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறு வனம் கொள்ளை லாபம் அடித்தது; இதன் விளைவாக மின்சாரம் மற் றும் உரங்களின் விலை அதிகரித்தது போன்ற அனைத்தையும் பற்றி மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பெட்ரோலி யத்துறை அமைச்சருக்கும் பிரதம ருக்கும் ஏராளமான கடிதங்கள் எழு தப்பட்டுள்ளன. கடைசியாக 2011 மே மாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் தபன்சென், பிர தமருக்கு கடிதம் எழுதினார். ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிர்ப்பந்திப்பதை ஏற்று எரிவாயு விலை ஒருபோதும் அதிகரிக்கப் படக்கூடாது என அக்கடிதத்தில் தபன்சென் வலியுறுத்தியிருந்தார். பிரதமர் அலுவலகம் இதில் தலை யிட்டது; ரிலையன்ஸ் நிறுவனத்தின் விலை உயர்வு கோரிக்கையை பெட் ரோலிய அமைச்சகம் நிராகரித்த பின்னரும் கூட, ரிலையன்ஸ் நிறு வனத்தின் வேண்டுகோளை பரிசீ லனை செய்ய வேண்டும் என்று அந்த அமைச்சகத்திற்கு பரிந்து ரைப்பதாகவே பிரதமர் அலுவல கத்தின் தலையீடு அமைந்தது. இந்தப்பின்னணியிலேயே, பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு அமைச்சகத்திலிருந்து ஜெய்ப் பால் ரெட்டி மாற்றப்பட்டிருப்பது பல்வேறு கடுமையான கேள்வி களை எழுப்புகிறது.

பெரும்முதலாளிகளுக்கு சலாம் போடும் மத்திய அரசு :
இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவ னத்திடமிருந்து எப்படிப்பட்ட நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்குள் வேலைசெய்து கொண்டிருக்கிறது என்பது இங்கே அப்பட்டமாக அம்பலமாகிறது.பெட்ரோலியத்துறைக்கு புதி தாக பொறுப்பேற்றுள்ள அமைச் சர், மிக விரைவான முடிவுகளை எடுக்கப்போவதாக அறிவித்துள் ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை கள் ஏற்கெனவே துவங்கிவிட்டன.இதில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஒட்டுமொத்த நாடே கவனித்துக்கொண்டிருக்கிறது. மக்களின் நலன்களைக் காவுகொ டுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்கு உதவும் விதமாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்வதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.ரிலையன்ஸ் நிறுவனம் கேட்ப தைப்போல இயற்கை எரிவாயு விலையை பிரதமரோ ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசாங்கமோ உயர்த்தக்கூடாது. ஒப்பந்தப்படி அதற்கான காலம் 2014 ஏப்ரல் மாதத் திலேயே வருகிறது. அதேபோல, தனது மூலதனச்செலவு அதிகரித்து விட்டதாகக் கூறி அரசாங்கத்திடமி ருந்து, கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கை ஒருபோதும் ஏற்கப் படக்கூடாது. மேற்கண்ட நிறுவனத் தின் மூலதனச் செலவு மற்றும் உற் பத்தி செய்யப்பட்ட எரிவாயுவின் அளவு உள்ளிட்ட அனைத்தையும் பற்றி மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்தின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு, தபன்சென் எம்.பி., எழுதிய கடி தத்தின் நகலையும் பிரகாஷ் காரத் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
                                                                                                      நன்றி : தீக்கதிர் 
Read more...
Thursday, 1 November 2012

மாணவர் போராட்டம் வெற்றி..!தேர்வு கட்டணம் குறைப்பு ..!

0 comments
01/11/2012:
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதுச்சேரி முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் புதுச்சேரி பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வை ரத்து  செய்ய வலியுறுத்தி இந்திய  மாணவர் சங்கம் தலைமையில்  போராட்டம் நடத்தியதை  தொடர்ந்து தற்போது புதுச்சேரி பல்கலைகழக துணைவேந்தர் தரீன் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளின் தேர்வு கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளார்.புதுச்சேரி பல்கலைகழகத்தின் தேர்வு கட்டணம் 50/-ரூபாயிளிருந்து தற்போது 75/- ரூபாயாக இந்த கல்வி ஆண்டிலிருந்து  உயர்த்தப்படுவதாக பல்கலைகழக  நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம்  கடந்த ஒரு வாரமாக  வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்  நடத்தியதை தொடர்ந்து புதுச்சேரி பல்கலைகழக துணை வேந்தர் தரீன் 75/- ரூபாயாக  உயர்த்தப்பட்ட கட்டணம் தற்போது 60/- ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பது மாணவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கும் இந்திய மாணவர்  சங்கத்திற்கும் கிடைத்த வெற்றி.எனினும் புதுச்சேரி பல்கலைகழக துணை வேந்தர் தரீன் பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் இந்திய மாணவர் சங்கம்  வலியுறுத்துகிறது.இந்திய மாணவர் சங்கத்தின் அழைப்பையேற்று போராட்டம் நடத்திய அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும்,மாணவர் சங்க கல்லூரி கிளை நிர்வாகிகளுக்கும்  இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி  பிரதேச குழு சார்பாக வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறோம்.

தலைவர்                                                                                      செயலாளர் 
க.ஹரிஹரன்                                                                          அ.ஆனந்த் 

                                                                                                                     
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com