Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Tuesday, 30 October 2012

யார் இந்த மலாலா - நாங்களும் மலாலா தான்..?

1 comments

மலாலா யூசுப்சாய் புகைப்படம் ஒன்றை அண்மையில் பார்த்தேன். எனது இளமைக்காலத்தை நினைவுபடுத்தியது அவரது முகம். என்ன வியப்பு என்றால் எனது தோழிகள் பலரும் அவ்வண்ணமே உணர்ந்தது தான். ஓரளவு நெருக்கமாகத் தென்பட்ட உருவ ஒற்றுமை மட்டிலுமே காரண மல்ல, நாங்களும் மலாலா என்று கருதிக் கொண்டதற்கு. அந்த வலிகள் தான் நாங்களும் மலாலா என்று உணர்ந்ததற்குக் காரணம்.மலாலா யூசுப்சாய் ஒரு 14 வயது சிறுமி. பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் கல்வி பயில்பவர். எங்களது இளமைக் காலத்தில் பெரும்பான்மையான பெண் குழந்தைகளைப் போலவும், தற்போது எங்களது பிள்ளைகளைப் போலவும், அவளும் பள்ளிக்குச் சென்று படிக்கும் ஒரு குழந்தை. அது ஒரு சாதாரண குற்றமல்ல. அதைவிடவும் அவள் இழைத்த இன்னும் பெரிய குற்றம் என்னவெனில், தனது வயதையொத்த மற்ற பெண் குழந்தைகளையும் அவள் படிக் கத் தூண்டியது தான். குற்றங்கள் புரிந்தோர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதுவும், மத அடிப்படைவாதிகள் வாழும் பூமியில் நடக்குமா? எனவே அவள் தண் டிக்கப்பட்டாள். சுடப்பட்டாள். அவளோடு சேர்ந்து வேறு இரண்டு சிறுமிகளுக்கும் படுகாயம். மலாலா இப்போது தனது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.ஆஃப்கானிஸ்தானில், இப்போது அதிகமாக பாகிஸ்தானிலும், பெண்கள் கல்வி பெறுவது மிகவும் அரிதாகி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி வேலைகளின் தயவில், தலிபான் மற்றும் இதர அடிப்படைவாத சக்திகள் புற்றீசல் போல் வேகமாக வளர்ந்துவிட்டதில் பெண் கல்வி என் பது ஒரு ஜீவ மரண போராட்டமாகிப் போனது. மிரட்டல்களுக்குப் பணியாத பெண்கள் மிகக்கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அமிலம் வீசி முகங்கள் சிதைக்கப்பட்டன; பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்; சிலர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தார் பெரும் தொல்லைகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

இவை எல்லாம் வீடியோ எடுக்கப் பட்டு "செய்தி" பரப்பப்பட்டது. பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் ஆளுகையும், வன்முறையும் பரவி வருவதன் பின்னணியில் இத்தகைய நடப்புகள் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. கொடுமைக்கு உள்ளாகியுள்ள முதல் பெண் அல்ல மலாலா, கடைசி பெண்ணுமல்ல! தங்களது செய்கைகளை நியாயப்படுத்த அடிப்படைவாதிகள் மதத்தையும், மத நூல்களையும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய போக்கு ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. பெண் கல்வி என்பது எப்போதும் சவாலான ஒரு விஷயம் தான். இந்தியாவில் நாம் அறியாததா? பழங்காலத்தைச் சொல்லவில்லை, அப்போது சூத்திரர்களோடு பெண்களுக்கும் (பஞ்சமர்களுக்கும் சேர்த்து), கல்வியை விடுங்கள், வேதங்களைக்காதால் கூடக் கேட்பதற்குத் தடை இருந்தது. பெண்கள் போராடினர். அப்போதே ஒரு கார்க்கி இருந்தார். கடந்த நூற்றாண்டில் சாவித்ரிபாய் ஃபுலே இருந்தார். இன்றோ, நமக்கு பெயர் தெரியாத எத்தனையோ போராளிகள் இருக்கின்றனர். ஒரிசாவைச் சேர்ந்த அந்த தலித் பெண்ணை நினைவிருக்கிறதா, ஒரு பெண், அதிலும் ஒரு தலித் பெண், படிக்கக் கூடா தென தனது கிராமத்தைச் சார்ந்த உயர்சாதியினரால் அனுமதி மறுக்கப்பட்ட பெண். அவள் இந்தத் தடையை எதிர்த்தாள்; போராடினாள். கடைசியில், காவல்துறையின் பாதுகாவலோடு அவள் தனது படிப்பைத் தொடரமாநில அரசு ஏற்பாடு செய்யுமாறு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. பள்ளிக்கு அவள் சைக்கிளில் செல்லும் போது, கூடவே இரண்டு காவல்துறையினரும் தமது சைக்கிளில் அவளுக்குக் காவலாக உடன் செல்லும் காட்சி பரவசம் ஊட்டியது. அதே நேரத்தில், இப்படியான நிலை நீடிக்கிறதே என்பதையும் அது எடுத்துக் காட்டியது.ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பெண், மிகவும் புத்திசாலி மாணவி இருந்தாள். அப்போது அவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண் டிருந்தாள். தேர்வுக் கட்டணம் செலுத்த அவ ளுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அவளது தாய் வீட்டு வேலைகள் செய்து வந்த பெண்மணி. தனது பெண்ணுக்குத் தேவைப்படும் அந்தத் தொகை அவளது சக்திக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. நகரம் முழுக்க அலைந்து பணத்தைத் திரட்டிவிட லாம் என்று நினைத்து அந்த மாணவி அலைந்ததுதான் மிச்சம், ஒன்றும் கைகூடவில்லை. தனது அத்தை தனக்கு உதவக்கூடும் என எண்ணினாள். முப்பது கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றாள், நிராசையோடு திரும்பினாள். அடுத்த நாள், நம்மையும் நிலைகுலையச் செய்துவிட்டுச் சென்று விட்டாள் வெறும் நூறு ரூபாய் தான் அவளுக்குத் தேவைப்பட்டது. அதற்கு விலையாகத் தன்னுயிரையே கொடுத்துவிட்டாள் அந்த பேதைப் பெண்.கேரளத்தின் அந்த இரண்டு பெண் களைப் பற்றி நாம் அறிவோம். அவர்கள் பக்கம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றனர் இருவரும். பொறியியல் கல்லூரியில் சேர்ந்தனர். சும்மா இருப்பவர்களை எல்லாம் அழைத்து கார் வாங்கக் கடன் தருகிறேன், வாருங்கள் என்று நச்சரிக்கும் வங்கிகள், இந்தப் பெண்களுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்துவிட்டன. கடனுக்காக அடமானம் வைக்க சொத்து பத்து இருக்கிறதா என்று கேட்டன வங்கிகள். அந்தப் பெண்களிடம் அப்படி எந்த சொத்தும் கிடையாது. அவர்களால் வழங்க முடிந்த ஒரே விஷயம் அவர்களது உயிர் தான். அதைக் கொடுத்தனர், அடுக்குமனைக் குடியிருப்புகளின் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டனர். இங்கிலாந்து நாட்டில், டோனி பிளேர் பிரதமராக ஆகிறவரை, கல்வி என்பது இலவசமாகத் தான் இருந்தது. புதிய தொழிலாளர் கட்சியின் பிரதிநிதியான அவர் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டார்.

அது மக்களுக்கு மிகப்பெரிய அடியாக வந்து விழுந்தது. எவ்வளவு அதிகம் என்றால், பெண்கள் நடனம் ஆடிப் பொருள் ஈட்ட முனைந்தனர். பள்ளி கட்டணத்திற்கான அளவு பவுண்ட் (பணம்) சேர்க்க கம்பு நடனம், ஆடை அவிழ்ப்பு நடனம் என தங்களது மனசாட்சியின் குரலுக்கு எதிராக ஆடி னர். வேறு சிலர் பள்ளிக் கல்விக்காகத் தங்களது சினை முட்டைகளைக் கூட விற்றனர். பெண்கள் சந்திக்க வேண்டியது இந்தக் கொடுமைகள் மட்டும் தான் என்றில்லை. இத்தகைய பெண்கள் எல்லோருமே மலாலாக்கள் தான். பாலியல் தொல்லைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்போர் உள்ளனர். பாலியல் தொல்லைகள் என்பது, ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கதையில் பணவீக்கத்தின் அளவைக் கூட விஞ்சுவதாகும். ஆனால் நமது அரசியல் தலைவர்களில் சிலர் என்ன பேசுகிறோம் என்பது குறித்த எச்சரிக்கை கூட இல்லாத அளவுக்குப் பேசும் திமிரோடு கருத்துக்களை முன்வைக்கின்றனர். பரிவர்த்தனை (மாற்றம்) குறித்து அனல் பறக்க பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தலைவர் (மம்தாபானர்ஜி), பையன்களும் பெண்களும் சுதந்திரமாகக் கலந்து பழகும் இன்றைய போக்கு தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்கிறார். நூடுல்ஸ் சாப்பிடுவதால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்கிறார் அவரது சகோதரர் ஒருவர். அடுத்து ஒருவர், தாம் பின் தங்கி விடக் கூடாது என்று முந்திக்கொண்டு, பெண் களை மிக இளம் வயதிலேயே கல்யாணம் கட்டிக் கொடுத்துவிடுவது நல்லது என்று ஆலோசனை சொல்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இழைக்கப்பட்டதற்கும், இப்போது இழைக்கப்படுவதற்கும் பெண்களே காரணம் என்ற கருத்தை முன் வைப்பதில் இவர்களுக்குள் எத்தனை கருத்து ஒற்றுமை! பெண்கள் அணிந்து கொள்ளும் உடை ஆகட்டும், அவர்களது பழகும் தன்மை ஆகட்டும், இதெல்லாம் தான் காரணம் என்பது அவர்களது பார்வை. கைக்குழந்தை முதல், எண்பது வயதைக் கடந்த மூதாட்டிகள் வரை பாலியல் பலாத் காரத்திற்குத் தப்புவதில்லை என்பது இவர்கள் கண்ணில் எல்லாம் படவில்லையா, அல்லது கண் அவிந்து போயிற்றா? பழியைப் பெண்கள் மீது போடு. முடியுமானால் அவர்கள் பிறக்கும் முன்பாகவே கூட அவர்களைக் கொன்றுவிடு. பாதிக்கப்பட்டவர்களுக்கே தண்டனையை வழங்கு. குற்றவாளிகளைத் தப்ப விடு.பேருந்துகள், பாதாள ரயில், ரயில், ஆட்டோ பயணங்களில், நடந்து போகையில், நிற்கையில், வகுப்பறைகளில், பணியிடங்களில், ஏன், வீடுகளில், எங்காவது ஒரு இடத்தில் பாதுகாப்பு உண்டா பெண்களுக்கு? கருவறைக்குள்ளும் கிடையாது, வெளியுலகத்திலும் கிடையாது! இந்த ஆணாதிக்க சமூகம் சிறுமிகளுக்கும், பெண் களுக்கும் பாதுகாப்பாக விட்டு வைத்திருக்கும் ஒரே இடம் - கல்லறை! நாங்கள் எல்லோருமே மலாலாக்கள் தான்!இந்தத் தடைகளை எல்லாம் சமாளித்துக் கொண்டு தான் பெண்கள் படிப்பைத் தேடி வெளியே வருவது. அவர்களது போராட்டம், சாதி, மதம் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படைவாதங்களுக்கும் எதிரா னது. அடிப்படைவாதிகள் ஏகாதிபத்தியத் திற்கு சாதகமாயிருப்பது போலவே, ஏகாதிபத்தியமும் அடிப்படைவாதத்திற்கு ஒத்திசைவாயிருக்கிறது.

இரண்டுமே வேலை யில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன. அந்தக் கொடுமைகளை எதிர்த்து முறியடிப்பதன் மூலமே எல்லோருக்குமான ஓர் சமதையான வாழிடமாக இந்த உலகத்தை நாம் உருவாக்க முடியும். மலாலா இந்தப் போராட்டத்தில் ஒரு முன்னுதாரணம். அவள் அடிப்படைவாதிகளுக்கு எதிராகப் போராடப் புறப்பட்டவள். இப்போது தனது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையும், வசதிகளும் மலாலாவின் உயிரைக் காக்க உதவக்கூடும். ஆனால், அவள் கனவுகண்ட ஒரு சமூ கத்தை நாம் எப்படி சமைக்க முடியும்? அதுவும் ஓர் அவசர சிகிச்சை தேவைப்படும் விஷயம் தான். நீங்களும் வந்து சேருங்கள். சமூகம் என்கிற அந்த நோயாளியை உடனே ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சேருங்கள். அறுவை சிகிச்சையை மேற் கொள்ளுங்கள்; அடிப்படை மாற்றத்தை உறுதி செய்யுங்கள். நாம் தான் மருத்துவர்கள், நாமே செவிலியர்கள். நாமே மலாலாக்கள். இந்தப் புற்று நோயை மருந்துகள் கொண்டும், அறுவைக் கத்தி கொண்டும் நம்மால் குணப்படுத்தி விட முடியும்.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசிதமிழில்: எஸ்.வி.வேணுகோபாலன்...
Read more...
Tuesday, 23 October 2012

வீரமங்கை வேலுநாச்சியார் என்கிற உதாரண வீரம்!

0 comments

விடுதலைப் போரில் பெண்கள் - 21857 ஆம் ஆண்டு வெடித்து துவங்கி இரண்டு ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியான கலகங்கள்தான் இந்தியாவின் முதல் விடுதலை போராட்டம் என்று அறியப்பட்டது. வெள்ளையர்கள் இதை சிப்பாய் கலகம் என்று பதிவு செய்தனர். ஆனால் 1700 ஆம் ஆண்டு  இறுதியிலும் 1800ஆம் ஆண்டு  துவக்கத்திலும் தென்னிந்தியாவில் இந்த போராட்டங்களுக்கு இணையாக, எழுச்சி மிகுந்த போராட்டங்கள் நடந்தன.

போராட்டத்திற்கு திட்டமிட்டவர்கள், செயல்படுத்தியவர்கள் மற்றும் பல்வேறு மக்கள் பிரிவை சேர்ந்த தேசபக்தர்கள் தென்னிந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மட்டுமின்றி நாட்டு விடுதலைக்காக இந்தியா முழுவதும் நடைப்பெற்ற போராட்டங்களின் வரலாற்றிலும் தங்கள் ஆளுமை முத்திரையப் பதித்துவிட்டுச் சென்றனர்.  வீரன் வேலுதம்பி, பழசிராஜா, வேலுநாச்சியார், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என இவர்களின் பட்டியல் பெரியது. வீரம் நிறைந்த்து. உத்வேகம் கொள்ளச்செய்வது.

இந்த மண்ணிற்காக தங்கள் உயிரையே அர்ப்பனம் செய்த இந்த தேசபக்தர்களின் புகழ்மிக்க வீரச்செயல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற தனித்தனியான வீரசாகசங்களாகவே பலகாலம் கருதப்பட்டு வந்தது. இது சரியான சித்தரிப்பு அல்ல என்பதை பின்பு வந்த ஆய்வுகள் தெரிவித்தன. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றுடன் மஹாராஸ்டிரத்தையும் உள்ளடக்கிய பகுதி முழுவதும் பரவியிருந்த ஒரு விரிவான இயக்கத்தின் பகுதியாகவே இப்போராட்டங்கள் நடைபெற்றன. பல போராளிகளுக்கு இடையில் இடையிறா தொடர்பு இருந்தது. இந்த கூற்று உண்மையாக இருந்த காரணத்தினால்தான் வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலியின் படை உதவி கிடைத்தது.   

இந்திய விடுதலைப் போராட்டம் கோடிக்கணக்கான மக்கள் திரளுடன் நடந்தது தொழிற்புரட்சிக்குப்பின் வந்த நவீன அரசியல் காலத்தில்தான். எனினும், மன்னராட்சி காலத்தில்கூட மக்களை வெள்ளையர்களுக்கு எதிராக திரட்டிய சம்பவங்கள் பல நடந்ததுண்டு. அதில் மறக்க முடியாத தடம் பதித்தவர்தான் வேலுநாச்சியார் ஆவார்.

1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் பெண் பேதம் இல்லாமல் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி கல்வி கற்பதிலும் வேலு நாச்சியார் திறமை மிக்கவர்தான். பத்து மொழிகள் தெரியும். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். தன்னுடைய 16 வது வயதில் 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை திருமணம் செய்துகொண்டார். முத்து வடுகநாதர் என்பவர் சிவகங்கை பாளையத்தை ஆண்ட மன்னர் ஆவார். 1749ல் இவரின் தந்தைய இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பிரிட்டிஷ் கும்பெனி கேப்டன் கோப் போர் தொடுத்து மதுரையை கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பெனி படைகளுக்கு சிவகங்கை மீது கோபமும் தீராப்பகையும் எழுந்தது.

இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு ஸ்டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாதர் சிவகங்கை சார்பாக கும்பினியருக்கு திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான். அவனது நோக்கம் எப்படியும் சிவகங்கையை பணியவைக்க வேண்டும் என்பதுதான். அவனது தூதை முத்துவடுகர் மறுத்ததால் கான்சாகிப் மூலம் கொலை மிரட்டலும் விட்டுப்பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1963ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்து சிவகங்கை மீது போர் தொடுத்து சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்து கான்சாகிப்பையும் விரட்டினார்.

இந்த சமயத்தில் வெள்ளைய படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தறுமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்கு தறுமாறும் செய்திவந்தது. அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து எதிரிகளின் துப்பாக்கி மற்றும் பீரங்கிப்படை மீது போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் வடுகநாதரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை என சமாதானம் பேசினர். அதை உண்மையென வடுகநாதர் நம்பினார். சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த 1772 ஜூன் 25 ஆம்தேதி காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர். இதையறிந்த வெள்ளையரக்ள் காளையர் கோவிலுக்கு முத்துவடுகநாதரைக் கொல்ல பான்சோர் என்ற தளபதியின் கீழ் ஒரு படையை அனுப்பியது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாதரை பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். வடுகநாதரின் மூத்த மகளும் கொல்லப்பட்டார்.

இந்த சமயத்தில் இந்திய நாடு முழுவதும் ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஒரு புதிய சட்டத்தை விதித்திருந்தது. இதனை பயன்படுத்தியே பல நாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இந்த அடிப்படையில் ஆண் வாரிசு இல்லாத சிவகங்கையை தன்னுடன் இணைப்பதாக அறிவித்து ஆக்கிரமித்தது.

கனவன் படுகொலையை தொடர்ந்து வேலுநாச்சியார் நாட்டின் பொறுப்பை ஏற்றார். வெள்ளையரக்ள் தொடர்ந்து போர்தொடுத்ததால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார். வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் நுட்பமானவர். நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். 

கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். வேலு நாச்சியார் வரவில்லையா? என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். அந்த வீரமங்கையின் உருது மொழித் திறமையையும், அறிவு சாதுர்யத்தையும், விடுதலை வேட்கையையும் கண்டு ஆச்சர்யப்பட்டார் ஹைதர் அலி, அவரிடம் தனது வேதனைகளையும் இலட்சியத்தையும் விளக்கினார் வேலுநாச்சியார். எல்லாவற்றையும் கேட்ட ஹைதர் உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். 

ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார் வீரமங்கை. இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராய பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினர்.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட ஏற்பாடு செய்தார். கணவன் இறந்த பின்னும் மூட நம்பிக்கைகளை கடைபிடிக்காமல் தனது கழுத்தில் விலைமதிப்புக் கொண்ட திருமாங்கல்யத்தை சுமந்த ராணி, உடையாள் மீதுள்ள பாசத்தால் தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை வணங்க கூட்டம், கூட்டமாக பெண்கள் வருவது வழக்கம். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் வீரமங்கை வேலுநாச்சியார். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வேலுநாச்சியாரும் அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.

வெட்டுண்டு விழுந்தார்கள் ,துடித்து உயிர் அடங்கினார்கள். வால்வீச்சில் தப்பித்து பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு நெடுந்தூரம் ஓடினார்கள். சிவகங்கை கோட்டை மீது பறந்த அருவருப்பான ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. சிவகங்கை நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். பலகாலம் தொடர்ந்து ஆட்சி நடத்தினார்.

1793ல்  அன்பு நிறைந்த இதயம் கொண்ட வேலு நாச்சியாருக்கு தனது பேத்தியின் மரணத்தால் துயரம் அதிகமானது. அதன் பிறகு விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட, மதிநுட்பம் கொண்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

அந்த மகத்தான வீரமங்கையின்  இறுதிப்போராட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட
மற்றும் ஒரு வீராங்கனை பற்றி நாம் பிறகு பேசலாம். போர்களத்தில் வெற்றிக்காக அவள் தன்னையே அர்ப்பனம் செய்தவள். அவள் பெயர் குயிலி..

                                                                                                  நன்றி:தோழர்.எஸ்.ஜி.ரமேஷ்பாபு,
                                                                                                                கட்டுரையாளர் 
                                                                                                   http://natputanramesh.blogspot.in
Read more...
Friday, 19 October 2012

6வது நாளாக புதுவை பல்கலைகழகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..!

0 comments
19/10/2012 புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பருவ தேர்வின் போது 50/- ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் தற்போது  75/- ரூபாயாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி பல்கலைகழகத்தின் தேர்வு கட்டண உயர்வை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்  மற்றும் தாகூர் கலை கல்லூரி மாணவர்கள் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு எஸ்.எப்.ஐ புதுவை பிரதேச து.தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார், போராட்டத்தை வாழ்த்தி பிரதேச செயலளார் ஆனந்த் பேசினார். மேலும் இப்போராட்டத்தில் கல்லூரியின் மாணவர் சங்கம் நிர்வாகிகள் சதீஷ், ஆனந்த், பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Read more...
Tuesday, 16 October 2012

4 வது நாளாக மாணவர்கள் போராட்டம் - புதுச்சேரி பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு..!

0 comments

16/10/2012 புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பருவ தேர்வின் போது 50/- ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் தற்போது  75/- ரூபாயாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி பல்கலைகழகத்தின் தேர்வு கட்டண உயர்வை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு எஸ்.எப்.ஐ புதுவை பிரதேச து.தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார், போராட்டத்தை வாழ்த்தி பிரதேச செயலளார் ஆனந்த் பேசினார். மேலும் இப்போராட்டத்தில் கல்லூரியின் மாணவர் சங்கம் நிர்வாகிகள் சதீஷ், ஆனந்த், பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Read more...
Monday, 15 October 2012

கேரள மாணவர் பேரவை தேர்தல் - எஸ்.எப்.ஐ வெற்றி..!

0 comments

கேரள பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடந்த மாணவர் பேரவை தேர்த லில் இந்திய மாணவர் சங் கம்(எஸ்எப்ஐ) எழுச்சிமிகு வெற்றிபெற்றது. இதோடு கேரளத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், தொழில்நுட்ப கல்வி நிறு வனங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் இந்திய மாணவர் சங்கம் தனது வெற்றிக்கொடியை பட் டொளி வீசிப் பறக்கச் செய் துள்ளது. கண்ணூர், கோழிக் கோடு மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழகங்களில் மிகப்பெரும்பான் மையான கல்லூரிகளிலும், பாலி டெக்னிக்களிலும் ஏற் கனவே எஸ்எப்ஐ மகத்தான வெற்றிபெற்றது. 


இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கேரள பல்கலைக்கழகம் மற் றும் மகாத்மா காந்தி பல் கலைகழக மாணவர் பேர வை தேர்தலில் எஸ்எப்ஐ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்றுள்ளது.கேரள பல்கலைக் கழகத்தில் 46கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 38கல்லூரிகளை எஸ்எப்ஐ கைப்பற்றியது. 55கவுன்சிலர் இடங்களில் 46 இடங்கள் எஸ்எப்ஐக்கு கிடைத்தது. 12 கல்லூரி களில் அனைத்து இடங் களையும் போட்டியின்றி எஸ்எப்ஐ கைப்பற்றியது. திருவனந்தபுரம் அரசு பெண்கள் கல்லூரியில் அனைத்து இடங்களையும் எஸ்எப்ஐ கைப்பற்றியது. கடந்த ஆண்டு இந்தக் கல் லூரியில் எஸ்எப்ஐ சில இடங்களை இழந்தது.

இதை வைத்து சில பத்திரி கைகள் புளகாங்கிதம் அடைந்தன. காஞ்சிரம்குளம் கேஎன் எம் அரசு கல்லூரியையும் வர்க்கலா எஸ்என் கல்லூரி யையும் எஸ்எப்ஐ மீண்டும் கைப்பற்றியது. மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திலும் ஈடு இணையற்ற வெற்றியை எஸ்எப்ஐ பெற்றுள்ளது. கடந்த முறை மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் எர்ணாகுளம், மகாராஜாஸ் கல்லூரி தலைவர் பதவியை இழந்தது. ஆனால் இம் முறை எஸ்எப்ஐ எதிராளி களை ஏமாற்றத்திற்கு உள் ளாக்கி அனைத்து இடங் களையும் கைப்பற்றியது. பொது இடங்களில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்எப்ஐ வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். மகாத்மா காந்தி பல் கலைக்கழத்திற்கு உட்பட்ட 90கல்லூரிகளில் 73 கல்லூரி களில் எஸ்எப்ஐ பெரும் வெற்றிபெற்றது. எர்ணா குளத்தில் 5கல்லூரி மாண வர் பேரவைகளையும், ஆலப்புழையில், காயம் குளம் எம்எஸ்எம் கல்லூரி பேரவையையும் கேரள மாணவர் யூனியனிட மிருந்து எஸ்எப்ஐ மீண்டும் கைப்பற்றியது. காவல்துறை யினர் ஒருபுறம் கொடிய தாக்குதல்களைக் கட்ட விழ்த்து விட்டனர். மறு புறம் வலதுசாரி ஊடகங் கள் பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டனர். இதை மீறி எஸ்எப்ஐ இந்த ஜொலிக்கும் வெற்றியை பெற்றுள்ளது. “மக்கள் கல்வி, மதச்சார்பற்ற கல் லூரி வளாகம்” என்ற கோஷத்தை உயர்த்திப் பிடித்து எஸ்எப்ஐ தேர் தலைச் சந்தித்தது. ஏற்கனவே நடந்த தேர் தலில் கண்ணூர் பல்கலைக் கழகத்தில் 40கல்லூரிகளில் 30 கல்லூரிகளை எஸ்எப்ஐ கைப்பற்றியது. 20கல்லூரி களில் எஸ்எப்ஐக்கு போட்டியில்லை. 40 கவுன் சிலர்களில் 40பேர் எஸ் எப்ஐயை சேர்ந்தவர்கள் ஆவர். கோழிக்கோடு பல் கலைகழகத்திற்கு உட்பட்ட 87 கல்லூரிகளில் 58 கல் லூரிகளில் எஸ்எப்ஐ மிக அதிக இடங்களை கைபற்றி சிறப்பு மிகு வெற்றிபெற்றது.

இடதுசாரி இயக்கத்தை தகர்க்க ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்த விட்ட ஒஞ்சி யம் மண்ணில் மடப்பள்ளி அரசு கல்லூரியில் எஸ் எப்ஐ இதுவரையில்லாத வரலாற்று சிறப்புமிகு வெற்றிபெற்றது. கோழிக் கோடு பல்கலைக்கழகத்தில் 108 கவுன்சிலர் இடங்களில் 76 இடங்களை எஸ்எப்ஐ பெற்றது. ஸ்ரீ சங்கராச்சாரியா பல் கலைக்கழகத்தின் கீழ் உள்ள 8 கல்லூரிகளிலும் எஸ் எப்ஐ வெற்றிபெற்றது. இதில் நான்கு கல்லூரிகளில் எஸ் எப்ஐக்கு போட்டியில் லை. 55 பாலிடெக்னிக்களில் 45 பாலிடெக்னிக்களில் எஸ்எப்ஐ வெற்றிபெற்றது.
                                                                                                                   நன்றி : தீக்கதிர்..!
Read more...

3வது நாளாக ஸ்ட்ரைக் - தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு..!

0 comments
13/10/2012 புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பருவ தேர்வின் போது 50/- ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் தற்போது  75/- ரூபாயாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி பல்கலைகழகத்தின் தேர்வு கட்டண உயர்வை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று (13/10/2012) மூன்றாவது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர். புதுச்சேரி மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக இந்திய மாணவர் சங்க து.செயலாளர் கதிரவன் தலைமையில் வகுப்பு புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதே போல் இந்திய மாணவர் சங்கம் அறைகூவளையடுத்து புதுச்சேரி தாகூர் கலை கல்லூரி மாணவர்கள் 8ஆண்டுக்கு பின் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்புகளை புறக்கணித்தனர்.மேலும் நாளையும் மாணவர்கள் வகுப்புகளை அரசு கல்லூரி மாணவர்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
Read more...
Friday, 12 October 2012

தேர்வு கட்டண உயர்வு - கல்லூரி மாணவர்கள் எஸ்.எப்.ஐ சார்பில் போராட்டம்..!

0 comments

12/10/2012:  புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பருவ தேர்வின் போது 50/- ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் தற்போது  75/- ரூபாயாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி பல்கலைகழகத்தின் தேர்வு கட்டண உயர்வை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் செயலளார் ஆனந்த் தலைமையிலும், அதேபோல் புதுச்சேரி தவளகுப்பம் ராஜீவ் காந்தி அரசு கலை கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்க து.தலைவர் ரஞ்சித் தலைமையிலும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இப்போராட்டத்தில் மதகடிப்பட்டு அரசு கல்லூரி மாணவர் சங்க தோழர்கள் அன்பரசு, அருண், பிரித்விராஜ் ஆகியோர் பங்கேற்றனர். புதுச்சேரி தவளகுப்பம் கலைகல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் இளையபெருமாள், ரஞ்சித்குமார் மற்றும் திரளான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் வருகின்ற திங்கள்கிழமை (15/10/2012)  அன்று உயர்த்தப்பட்ட புதுச்சேரி பலகலைகழக  தேர்வு கட்டணத்தை உடனடியாக வாபஸ் பெற கோரி  தாகூர் கலை கல்லூரி, கதிர்காமம் இந்திரா காந்தி  அரசு கலைகல்லூரி,மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் அரசு கலை கல்லூரி, தவளகுப்பம் ராஜீவ் காந்தி அரசு கலை கல்லூரி மற்றும் புதுச்சேரி அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என்பதை இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கையோடு தெரிவித்து கொள்கிறது.
Read more...
Thursday, 11 October 2012

புதுச்சேரி பல்கலைகழக தேர்வு கட்டண உயர்வு - வாபஸ் பெற எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்..!

0 comments
பத்திரிக்கை செய்தி:

11/10/2012 புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பருவ தேர்வின் போது 50/- ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் தற்போது  75/- ரூபாயாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி பல்கலைகழகத்தின் தேர்வு கட்டண உயர்வை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி அனைத்து அரசு கல்லூரி மாணவர்களும்  காலவரையின்றி வகுப்புகளை புறக்கணித்து பல்கலைகழகத்திற்க்கு  எதிராக போராட்டத்தில்  ஈடு பட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. 
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com