Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Sunday, 9 September 2012

சமூக வருமானங்களையும் சொத்துக்களையும் தனியாருக்கு மாற்றுகிறது மத்திய அரசு பேரா.சி.பி.சந்திரசேகர் குற்றச்சாட்டு

0 comments
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசின் பங்கு இல்லை என்ற நிலையையும் தாண்டி சமூக வரு மானங்களையும், சொத்துக்களையும் தனியார் மூலதனத்துக்கு ஆதரவாக மாற்ற திட்டமிட்ட முயற்சியை அரசு இயந்திரம் மேற்கொண்டு வருகிறது என ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் சி.பி.சந்திரசேகர் கூறினார்.மதுரையில் புதனன்று இந்திய மாணவர் சங்கத்தின் 14வது அகில இந்திய மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது: இந்திய மாணவர் சங்கத்தின் 14 வது மாநாடு சமீபகால வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் நடை பெறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நவீன முதலாளித்துவத்தின் உட்கூறு ஆழமான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. உலகப் பொருளாதாரப் பெரு மந்தக் காலத்திற்குப் பிறகு முதலாளித்துவப் பொருளாதாரமும் அரசிய லும் மாபெரும் சவாலாக இன்று மாறி, மக்க ளின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரமே கேள் விக் குறியாகியிருக்கிறது. முதலாளித்துவ நாடுகளில் வேலையின் மையின் விகிதம் உழைப்பாளர்களின் எண் ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது. பெரு மந்த காலத்தில் 25 சதவீதமாகியிருந் ததை ஒத்ததாக இருக்கிறது.

1930களில் ஜெர்மனியை பாசிசம் ஆட் கொண்டிருந்த காலத்தில் இளைஞர்களின் வேலையின்மை 50 சதவீதமாக இருந்ததை போன்றே இன்றும் இளைஞர்களின் வேலை யின்மை 50 சதவீதத்தை கடந்து உள்ளது. இத் தகைய நிலை தொடர்ச்சியான வேலையின் மையையும், தொழிலாளர் அணியிலிருந்து இளைஞர்களை அதிக காலத்திற்கு வெளி யேற்றும் விதமாகவும் இருப்பதைக் குறிக்கிறது. இத்தகைய சூழலின் விளைவாக எழுந்த போராட்டம், முதலாளித்துவத்திற்கு மாற்றாக நாம் கூறும் சோஷலிசப் பாதையை நோக்கி பயணிப்பது இன்றியமையாததாகும். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சிலி, எகிப்து நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அரசியல் போராட்டம் பல்கலைக் கழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக நிலையற்ற வேலைச் சந்தைக் கும் அவசியமாகக் கருதப்படுகிற கல்வி தனி யார்மயமாக்கப்பட்டு, கட்டணங்கள் உயர்த் தப்பட்டு, தரம் தாழ்ந்து இருப்பதைக் காண் கிறோம். நம்மைப்போன்ற அரசாங்கங்களும் எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றன. உயர்ந்து வரும் வாழ்க்கைத் தரமும் கட்டணக் கொள் ளையின் அதிகரிப்பும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. முன்பு அமெரிக்காவின் நோயாகக் கருதப்பட்டது இன்று உலகையே தாக்கும் தொற்று நோயாகப் பரவி வருகிறது. பெரும்பான்மையானோர் அனைத்தையும் இழக்கின்ற போதிலும் குறைந்த எண்ணிக் கையிலானோர் ஆதாயம் பெறுவது வேலை யின்மை பெருகுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம். அதிபர் ஒபாமா அவர்களின் ஆலோ சகர் ஆலன் க்ருகரின் கூற்றுப்படி கடந்த 30 ஆண்டுகளில் கீழ்தட்டில் உள்ள 99 சதவீத மக்களின் வருமானத்தில் இருந்து 1.1 டிரில்லி யன் டாலர் அளவிற்கான பணம், வெறும் 1 சத வீதமாக உள்ள மேல்தட்டு மக்களுக்கு ஒவ் வொரு ஆண்டும் கைமாறி வருகிறது.

இருப்பினும் சந்தை அடிப்படைவாதத்தை முன்னிறுத்துகிற நவீன தாராளமயம், சந் தையே திறம்பட செயல்படும் பொருளாதார அமைப்பு என்பதோடு இல்லாமல் அந்நிய மற்றும் உள்நாட்டு தனியார் மூலதனத்தின் பங் கையே நியாயப்படுத்துகிறது. வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசின் பங்கு இல்லை என்ற நிலையையும் தாண்டி சமூக வருமானங்களையும், சொத்துக்களை யும் தனியார் மூலதனத்துக்கு ஆதரவாக மாற்ற திட்டமிட்ட முயற்சியை அரசு இயந்திரம் மேற் கொண்டு வருவதைக் காண்கிறோம். நவீன தாராளமயத்தை துhக்கிப் பிடித்த அமெரிக்காவில் பெருமளவிலான கடன் நெருக்கடியின் விளைவாக பெருத்த பின்ன டைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலை நவீன தாராளமய யுகத்தின் இறுதிக் கட்டத் தையே குறிக்கிறது. அமெரிக்காவில் உயர் கல்வியில் அரசு மற்றும் தனியாரின் பங்கு இருந்து வந்தது. 1970 களின் தொடக்கத்தில் நவீன தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. 1980ல் தொடங்கி 2008 வரை பணவீக்கத்தை கணக் கில் எடுத்துக்கொண்டால் - 4 வருட பட்டப் படிப்பிற்கான கட்டணம் பொதுக் கல்வி நிறு வனங்களில் 235 சதவீதமும், தனியார் நிறு வனங்களில் 179 சதவீதமும் உயர்ந்துள்ளது. உயர் கல்விக்காக கடன் பெறுவதைத் தவிர வேறு வழியில்லாத சூழல் உருவாகி இருக் கிறது. இந்நிலை அமெரிக்காவோடு நில்லா மல் பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் உயர் கல்விக்கான வசதிகள் எள்ளளவும் போது மானதாக இல்லை. 18-23 வயதுக்கு உட்பட்ட வர்களில் வெறும் 15 சதவீதத்தினர் மட்டுமே 2009-10ல் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றனர்.

தாழ்த்தப்பட்ட/பழங்குடியினரின் உயர்கல்வி வாய்ப்பு 11.1 சதவீதம் மற்றும் 10.3 சதவீதம் ஆகவே இருக்கிறது. 18-23 வயதிற்கு உட்பட்ட 1 லட்சம் பேருக்கு வெறும் 5 கல்லுhரி மட்டுமே இருக்கும் மாநிலங்கள் அதிகமாக உள்ளன.உயர்கல்வி வாய்ப்புகளில் விரிவாக்கம் இருக்கும் சூழலிலும் இத்தகைய குறைபாடு காணப்படுகிறது. 1990-91 லிருந்து 2007-08ம் ஆண்டு வரை கல்லூரிகளின் எண்ணிக்கை 4900லிருந்து 410 ஆகவும், பல்கலைக்கழகங் களின் எண்ணிக்கை 180லிருந்து 410 ஆக வும், தொழில்துறை நிறுவனம் 900ல் இருந்து 6900 ஆகவும் உயர்ந்துள்ளது. கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் தனியார்களின் ஊடுருவலையே இவை குறிக் கின்றன.

2011 வரை 130 நிகர்நிலைப் பல் கலைக் கழகங்கள் உருவாகி இருக்கின்றன. பல மாநில அரசுகள் தனியார் பல்கலைக் கழ கங்களை ஆதரித்து வருகின்றன. சட்டத்தின் படி எந்த ஒரு கல்வி நிறுவனமும் லாபத்திற் காக செயல்பட இயலாது. உயர்கல்வியில் வணிக நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பான தாக இருக்கும் நிலையிலும் இந்நிறுவனங்கள் வேறு ஒரு பெயரில் லாபம் கொழிக்கும் நிறு வனங்களாகவே இருக்கின்றன. உயர்கல்விக் காக நடைமுறைகளில் அரசு மாற்றம் கொண்டுவரும் என்ற எண்ணத்தின் அடிப்ப டையிலே தனியார் நிறுவனங்கள் கூட்டம் கூட்டமாக பெருகி வருகின்றன. நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக உலகத்தரம் வாய்ந்த கல்வி என்ற பெயரில் உயர்கல்விக்கான நடைமுறைகளை மாற்ற அரசு முயன்று வருகிறது. அந்நிய உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த மசோதா நாடா ளுமன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. 11.02.2000ம் தேதியிட்ட பத்திரிகை குறிப் பின்படி கல்வித்துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்நியர்களால் கல்விச் சேவை வணிகமய மாக்கப்படுவதோடு இங்கு ஈட்டப்படுகிற லாபத்தையும் நாட்டிலிருந்து வெளியேற்ற இக்கொள்கை அடிகோலுகிறது. கல்வித்துறையில், 0.19 மில்லியன் டால ராக தொடங்கிய அந்நிய நேரடி முதலீடு, செப் டம்பர் 2011ல் 448.97 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. லாபத்தை கொண்டு செல்லும் நோக்கோடு வந்துள்ள இம்மூலதனம் பெரும் பாலும் 75 சதவீதம் மொரிஷியஸ் பாதை வாயி லாகவே வந்துள்ளது.

அந்நிய முதலீட்டாளர் களை கவரும் களமாக இந்தியக் கல்வித் துறை மாறியிருக்கிறது. காட் ஒப்பந்தத்தின்படி கல்வியும் சேவை என்பதால் புதிய மசோதா மூலமாக அரசு நடை முறைகளை மாற்ற முயற்சித்து வருகிறது. லாபத்தை வெளியேற்ற நினைக்கும் அந்நிய முதலீட்டாளர்கள், வணிக கல்வி நிறு வனங்கள் உரிமைகளை காக்கும் வகையில் காட் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள விருக்கின்றனர். அந்நியர்களுக்கான களம் உருவாக்கப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் வழிமுறைகள் மாற்றியமைக்கப்படுவதே தற் போது இடம் பெற்று வருகிறது. அந்நியர்களுக் கான முறைகள் மாற்றப்பட்டால் உள்ளூர் தனியார்களுக்கும் பின்னர் அது பொருந்தும். தரமான, ஜனநாயக ரீதியிலான உயர்கல்வி பெறுவதற்கான போராட்டம் என்பது நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமே. அத்தகைய போராட்டத்தை முற்போக்கு மாணவர் இயக்கமான இந்திய மாணவர் சங்கம் தலைமையேற்று நடத்தி வருகிறது. ஆகவே நான் பெருமையோடு உங் களை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com