Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 14 September 2012

அணு உலை இறக்குமதி ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது - பிரகாஷ் காரத்

0 comments
இந்திய மாணவர் சங்கத்தின் நிலைபாடும் அதுவே..!


இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளை கொண்ட மெகா அணுமின் நிலையங் களை அமைப்பதற்கு நாடு முழு வதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 40 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையங் களை 2020ம் ஆண்டுக்குள் நிறு வப்போவதாக ஐக்கிய முற்போக் குக் கூட்டணிஅரசு அறிவித்தது. இதற்காக பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகள் தேவைப்படுகிறது எனவும் அரசு கூறியது. இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை நியாயப் படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியானது. 


அமெரிக்காவி லிருந்து 10 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள அணு உலைகளை வாங்கிக் கொள்வதாக மன் மோகன்சிங் அரசு அமெரிக்கா விடம் எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்திருந்தது. அமெரிக்க உடன்பாட்டை இனிப்பாக்க செய் யப்பட்ட ஏற்பாடாகும் இது.ஜெய்தாபூர் (மகாராஷ்டிரம்), பகவான் நகரில் சாயா மிதி மிர்த்தி (குஜராத்), ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கோவாடா (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் கூடங்குளம் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் கட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டமிட்டது. தொழில்நுட்ப - பொருளாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இந்த அணுஉலைப்பூங்காக்களில் இறக்குமதி செய்யப்பட்ட பன்முக அணு உலைகளை ஒரே இடத் தில் நிறுவுவதற்கு எதிர்ப்பு எழுந் தது.


அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாடு கையெழுத்தான பிறகு, ஜெய்தாபூரில் 1650 மெகா வாட் திறன்கொண்ட அணு உலைகளை நிறுவுவதற்கான உடன்பாடு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரேவா என்ற நிறுவனத் துடன் கையெழுத்தானது. ஒரே இடத்தில் 6 அணு உலைகளை நிறுவ இந்தத் திட்டம் வகை செய் தது. பிற நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் அணு உலை களோடு ஒப்பிடும்போது, ஐரோப் பிய ‘அழுத்தப்பட்ட’ அணு உலை கள் (இபிஆர்) மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாகும். இத்தகைய அணு உலைகள் இதுவரை பிரான்சிலோ அல்லது உலகின் எந்தப் பகுதியிலுமோ நிறுவப்பட வில்லை. இத்தகைய அணு உலைகளை நிறுவுவதற்கு ஆகும் உண்மையான செலவை அரசு தெரிவிக்கவும் இல்லை

. எனினும், பின்லாந்தில் நிறுவப் பட்ட இபிஆர் அணு உலைகளுக் கான செலவைக் கொண்டு பார்க் கும்போது, 6 பிரான்ஸ் அணு உலைகளை நிறுவுவதற்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரை பரிசோதிக்கப்படாத தொழில்நுட்பத்தை மிக அதிக மான விலையில் வாங்குவதன் மூலம் அணுமின் உற்பத்தி செலவு மிகக் கடுமையாக இருக்கும் என் பது தெளிவு. ஒரு மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அணு உலைகளை நிறுவ ரூ.20 கோடி செலவுபிடிக்கும். அதே நேரத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் செறிவூட்டப்பட்ட கனநீர் அணு உலைகளை உருவாக்க ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி மட்டுமே செலவுபிடிக்கும். இதன் பொருள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7-8 செலவில் தயாரிக்க முடியும் என்பதுதான்.

குஜராத் மற்றும் ஆந்திர மாநி லங்களில் நிறுவ திட்டமிட்டுள்ள அமெரிக்க அணு உலைகளை கொண்ட மெகா அணு உலை பூங்காக்களும் அதீத செலவு பிடிக்கக் கூடிய திட்டங்களே ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை பயன்படுத்து வது என்ற திட்டமே அடிப்படை யில் அதிக செலவுபிடிக்கக் கூடி யது; எரிசக்தி பாதுகாப்பை கேள் விக்குள்ளாக்கக் கூடியது ஆகும்.சமாளிக்க முடியாத அள விற்கு செலவினத்தை ஏற்படுத் தக் கூடிய இறக்குமதிசெய்யப்பட்ட அணு உலைகளை நிறுவும் திட் டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக எதிர்க்கிறது. அழுத்தப்பட்ட அணு உலை களை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு இருக்கும்போது, மென்நீர் அணு உலைகளை இறக்குமதி செய்து நிறுவுவதோ, பிரான்ஸ் நாட்டின் அழுத்தப்பட்ட அணு உலைகளை இறக்குமதி செய்வதோ முற்றிலும் தேவை யற்ற ஒன்றாகும்.


மேலும், மெகா அணுஉலை பூங்காக்களை நிறுவுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பெரும் பகுதி மக்கள், தங்கள் வாழ்விடங் களிலிருந்து தங்களது வாழ்வா தாரத்தை இழந்து வெளியேற வேண்டிய நிலை உள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை விபத்திற்கு பிறகு அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி வலுவாக முன்னுக்கு வந்துள்ளது. புகுஷி மாவில் ஒரே இடத்தில் 6 அணு உலைகளை நிறுவியது என்பது கடுமையான பாதுகாப்பு சிக் கலை உருவாக்கியது என்பது கண்கூடு.இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை கொண்டு அணு மின் நிலைய பூங்காக்களை நிறு வும் உத்தேச திட்டங்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க் கிறது. இந்தப் பின்னணியில் கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனையில் கட்சியின் நிலை பாடு என்ன என்ற கேள்வி எழுப் பப்படுகிறது.

 கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளை கொண்டு துவங்கப்பட உள்ள அணுமின் திட்டத்தை மூட வேண்டும் என்ற கருத்தை கட்சி ஏன் ஆதரிக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. கூடங்குளத்தில் நிறுவப் பட்டுள்ள இரண்டு அணு உலைகள் சம் பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் வேறு மாதிரியான தன்மை கொண்டதாகும். அமெரிக்கா வுடன் அணுசக்தி உடன்பாடு ஏற் படுவதற்கு முன்பே ரஷ்யாவி லிருந்து இந்த இரண்டு அணு உலைகளும் வாங்கப்பட்டுவிட் டன. ஒட்டுமொத்த ரூ.15 ஆயிரம் கோடி செலவில் இரண்டு அணு உலைகளை நிறுவுவதற்கான கட்டுமானப் பணிகள் ஏற் கெனவே நிறைவடைந்துவிட்டன. 

இந்த இரண்டு அணு உலை களையும் மூட வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமானதும் அல்ல. நாட்டு நலனுக்கும் உகந் ததும் அல்ல.ஜெய்தாப்பூர் மற்றும் இதர அணு உலை பூங்காக்கள் பிரச்ச னையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேறுபட்ட நிலையை எடுப்பதாக சிலர் விமர்சிக்கின் றனர். இந்தியாவுக்கு அணு மின் திட்டமே கூடாது மற்றும் இந்தியா வில் அணு உலைகளை நிறுவக் கூடாது என்று வலியுறுத்துவோர் தரப்பிலிருந்து இந்த விமர்சனங் கள் முன்வைக்கப்படுகின்றன.அணுமின் திட்டங்களுக்கு எதி ராக உள்ளூர் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு பிரதான கார ணம் பாதுகாப்பு குறித்த அச்சமே ஆகும்.

 புகுஷிமா பேரழிவுக்கு பிறகு இந்த அச்சம் அதிகமாகி யுள்ளது. தங்களது பகுதிகளில் நிறுவப்படும் அணுமின் திட்டங் களின் பாதுகாப்பு குறித்த மக்க ளின் அச்சத்தில் நியாயம் உள் ளது. அவர்களது கவலை மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு போராட்டங்கள் நடந்தபோதே பாதுகாப்பு குறித்த மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும். அதுவரை அணுமின் திட்டங் களை துவக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. பாதுகாப்பு குறித்த சுயேச்சையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என் றும் கட்சி கூறியது. எனினும், அரசு மற்றும் அணுசக்தித் துறை அத்தகைய ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை. அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத் தின் பாதுகாப்பு தொடர்பான பரிந் துரைகள் அனைத்தும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் அரசு தெளிவு படுத்தவில்லை.

பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கையும் மக்கள் முன்னால் வைக்கப்பட வில்லை.நம்பகத்தன்மையை உரு வாக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண் டும்; பாதுகாப்பு தணிக்கை அறிக் கை மக்கள் முன்னால் வைக்கப் பட வேண்டும்; மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இப்போதும் முன் வைக்கிறது. இவற்றை செய்வ தற்கு பதிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள், அணு உலை கள் நிறுவப்படுவதை எதிர்த்து போராடும் மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவிவிடுகின் றன. போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதை யும், அவர்கள் மீது பெருமளவில் வழக்குப் பதிவு செய்யப்படுவதை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.கூடங்குளத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள இரண்டு அணு உலைகளை மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறவில்லை. அதே நேரத் தில் கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் நிறுவப்படுவதை கட்சி எதிர்க்கிறது. இங்கு மேலும் நான்கு அணு உலைகளை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

 புதிதாக அணுஉலை பூங்காக்களை நிறுவுவதற்கு எதிராக முன்வைக் கப்படும் வாதங்கள் இந்த விஷ யத்தில் கூடங்குளத்திற்கும் பொருந்தும்.அணு உலைகளில் விபத்து ஏற்படுமானால் பாதிக்கப்படும் மக்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான பிரச்சனை யாகும். விபத்துக்கள் ஏற்படு மானால், வெளிநாட்டு விநி யோகஸ்தர்களை பொறுப்பி லிருந்து விடுவிப்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள அணுசக்தி பொறுப்பு சட்டம் நிராகரித்துள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் விதிகள் உருவாக்கப்பட வேண்டும். இந் தச் சட்டத்தில் இடம்பெற் றுள்ள விபத்திற்கு பொறுப்பேற்பது தொடர்பான விதிகளை நீர்த்துப் போகச் செய்ய அரசு முயன்று வருகிறது.

விபத்து தொடர்பாக பொறுப் பேற்பதற்கான விதிகளை ஏற்க வெளிநாட்டு அணு உலை விநி யோகஸ்தர்கள் மறுத்து வருகின் றனர். வெளிநாட்டு அணு உலை கள் கூடாது என்று கூறுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும். விபத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு பொறுப்பேற் கும் உடன்பாடுகளில் வெளி நாட்டு விநியோகஸ்தர்கள் கை யெழுத்திடவில்லையென்றால் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள சட்டம் நீர்த்துப்போய் விடும். கூடங்குளத்தில் புதிய கூடுதலான அணு உலைகளை நிறுவ விரும்பும் ரஷ்ய நிறுவனம் விபத்திற்கு பொறுப்பேற்பது தொடர்பான விதிகளை ஏற்க விரும்பவில்லை. கூடங்குளத்தில் ரஷ்யாவின் கூடுதல் அணு உலைகள் கூடாது என்று வாதிடுவ தற்கு இதுவும் ஒரு காரணமாகும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை பொறுத்தவரை அணுமின் திட்டங்களை ஒரேயடியாக எதிர்க் கவில்லை.

பாதுகாப்பு தொடர் பான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அணுமின் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப, பொருளாதார ரீதியான அனைத்து அம்சங்கள் முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தான் கட்சியின் கருத்தாகும். எனி னும், அணுசக்தி தொடர்பான சர்வதேச அனுபவத்தை, குறிப் பாக புகுஷிமா விபத்திற்கு பிற கான அனுபவத்தை முற்றிலும் கருத்தில்கொள்ள வேண்டும். அணு உலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏற் கெனவே, இயங்கி வரும் அணு உலைகளின் பாதுகாப்பு அம் சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே இயங்கி வரும் அணு உலைகளின் பாது காப்பு குறித்து நியாயமான கவ லை உள்ளது. 1960ல் அமெரிக் கா அளித்த இரண்டு மின் உலை களை கொண்டு இயங்கி வரும் தாராப்பூர் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து கடுமையான அச்சம் உள்ளது. புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலை களை விட இந்த அணு உலைகள் மிகவும் பழமையானவை. புகு ஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலைகளின் அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். புகுஷிமா விபத்திற்கு பிறகு இந்த அணு உலைகள் மூடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.தற்போது இயங்கிக் கொண் டிருக்கும் அணு உலைகள் குறித்து சுயேச்சையான தணிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும். புகு ஷிமா பேரழிவுக்கு பிறகு இந்தியா வில் இயங்கும் அணு உலைகள் குறித்து தணிக்கை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டார்.

எனினும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தினாலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதே யன்றி, சுயேச்சையான அமைப்பு ஒன்றால் நடத்தப்படவில்லை. சுயேச்சையான, சுயாட்சி அதி காரம் கொண்ட அணுசக்தி பாது காப்பு ஒழுங்குமுறை ஆணை யம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை அரசு கொண்டு வராவிட்டால் இந்த நோக்கம் நிறைவேறாது.தற்போது இயங்கிக் கொண் டிருக்கும் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து முழுமை யான ஆய்வு மேற்கொள்ளப் படும் வரை புதிய அணுமின் திட் டங்கள் அமைக்கப்படக் கூடாது. கடுமையான விதிமுறைகளை கொண்ட சுற்றுச்சூழல் தரக்கட்டுப் பாடு மற்றும் பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.அணுசக்தியை முக்கிய திரட்சி யாக கொண்ட அரசின் எரிசக்தித் திட்டத்தை நாங்கள் ஏற்பதற் கில்லை. 

வளர்ந்து வரும் இந்தி யாவில் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி படுகை களை அதிக அளவில் பயன்படுத் துவது, இயற்கை எரிவாயு சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவது மற் றும் சூரிய ஒளி பயன்பாட்டை மேம்படுத்துவது போன்ற திட்டங் கள் அவசியமாகும்.பிரதமரின் அணுசக்தி சார்ந்த மாயையையும், இறக்குமதி செய் யப்பட்ட அணு உலைகளை கொண்டு மெகா அணுமின் திட் டங்களை உருவாக்குவது என்ற திட்டத்தையும் வன்மையாக எதிர்க்கிறோம். இறக்குமதி செய் யப்பட்ட அணு உலைகளுக்கு எதி ரான பல்வேறு மக்கள் திரளின் போராட்டம் தேசிய போராட்டமாக உருவெடுக்க வேண்டியது அவ சியமாகும்.

                                                                                                                       நன்றி: தீக்கதிர்..!

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com