Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 10 September 2012

எஸ்.எப்.ஐ (SFI) - புதிய நிர்வாகிகள் தேர்வு

0 comments
சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்!
இந்திய மாணவர் சங்க மாநாடு சூளுரை..!
இந்திய மாணவர் சங்க 14 வது அகில இந் திய மாநாடு மதுரையில் செப்டம்பர் 4ந் தேதி துவங்கி 7 ம் தேதி வரை நடைபெற்றது. 40 இலட்சம் மாணவர்களின் பிரதிநிதிகளாக இம யம் முதல் குமரி வரை உள்ள மாநிலங்களில் இருந்து 750 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். 

வெள்ளியன்று, மாணவப்பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பதிலளித்து பொதுச்செயலாளர் ரித்தபிரதா பானர்ஜி உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து அடுத்த மூன்றாண்டுகளுக் கான சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 

எஸ்.எப்.ஐ. யின் அகில இந்தியத் தலைவராக வி. சிவதாசன், துணைத்தலைவர்களாக கே.எஸ். கனகராஜ், அபீத் உசைன், நிலஞ்சனா ராய், மதுஜா சென் ராய், ஷிஜு கான், நூர் முகம்மது, பொதுச் செயலாளராக ரித்த பிரதா பானர்ஜி, இணைச் செயலாளர்களாக விக்ரம் சினோத், தேபோ ஜோதி தாஸ், டி.பி. பினீஷ், பி. லட்சும ணய்யா, ஷத்ரூப் கோஷ் ஆகியோரும், மத்திய செயற்குழு உறுப்பினர்களாக ஆனந்த் நாயக், கபில் பரத்வாஜ், ஹோபால் ஆகியோரும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 

உலகெங்கிலும் முதலாளித் துவத்தின் தாக்குதல்களுக்கு எதி ரான போராட்டங்கள் தீவிரம டைந்துள்ள நிலையில், உலகம் முழுவதிலும் மாணவர் இயக்கமும் வீறுகொண்டு எழுந்துவரும் நிலை யில், சோசலிசப் பதாகையை என்றென்றும் உயர்த்திப்பிடித்து முன்னேறுவோம் என இந்திய மாணவர் சங்க அகில இந்திய மாநாடு சூளுரைத்தது.மதுரையில் கடந்த நான்கு நாட் களாக நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- சமீப காலங்களில் எதேச்சதி கார சர்வாதிகார, ஏகாதிபத்திய மற்றும் ஊழலில் திளைத்து வரும் அரசாங்கங்களுக்கு எதிராக உலகு எங்கிலும் மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். முதலாளித்துவத் தின் கொடூரமான நடைமுறைக ளுக்கு எதிராக வெடித்த மாணவர் போராட்டங்கள் துனிசியா, எகிப்து மற்றும் ஏமன் நாடுகளோடு நிற்கா மல் இங்கிலாந்து மற்றும், அமெரிக்காவிலும் தொடர்கின் றன. உலகத்தில் மாணவர் இயக்க வரலாற்றில் சிலி நாட்டு மாணவர் கள் போராட்டம் குறிப்பிடத்தக்க முத்திரையை பதித்துள்ளது. சிலி யில் மாணவர் இயக்கம் கல்வித் துறையில் தனியார் மயத்திற்கும், தாராளமயத்திற்கும் எதிராக நிகழ்த் திய போராட்டம், மாணவர் சமூகத் தை பலப்படுத்துவதோடு இடது சாரிகளுக்கு உத்வேகம் அளிக் கிறது. இந்திய மாணவர் சங்கத்தின் 14வது அகில இந்திய மாநாடு உல கெங்கும் நடைபெறும் மாணவர் கள் மற்றும் முற்போக்கு இயக்கங் களுக்கு ஆதரவைத் தருகிறது. சுதந் திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற முழக்கங்களை முன்வைத் தும், எதிர்காலம் சோசலிசமே என்ற பதாகையை உயர்த்திப்பிடித்தும் முன்னேறுவோம் என சபதம் ஏற்கிறது.
 
மேற்குவங்கம்:

மேற்கு வங்கத்தில் மே 2011ல் பத வியேற்ற திரிணாமுல் காங்கிரஸ் அரசு மக்கள் மீது அடக்குமுறை களை கட்டவிழ்த்துவிட்டு, ஆசிரி யர்கள், பேராசிரியர்கள் என்று அனைத்து தரப்பினரையும் தாக்கிக் கொண்டு இருக்கின்றது. அம்மாநி லத்தில் நடைபெறுகிற ஒடுக்கு முறை, ஊழல், படுகொலை மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன் முறை ஆகியன பொறுப்புள்ள குடி மக்களை உறைய வைத்துள்ளன. இதை எதிர்த்த மேற்கு வங்க மாநில மக்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு முழு ஆதர வையும் மாணவர் சங்க மாநாடு தெரிவிக்கிறது.
பேரவைத்தேர்தலில் மகத்தான வெற்றி
ராஜஸ்தானில் இரண்டாவது பெரிய பல்கலைக் கழகமான ஜோத்பூர் பல்கலைக்கழ கம் மற்றும் 48 கல்லூரிகளிலும், இமாச் சலப் பிரதேசத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 102 இடங்களிலும் இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. இத் தகைய வெற்றி இரு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசு கையாண்டு வரும் மாணவர் விரோதக் கொள்கைக்கு எதி ரான எச்சரிக்கை ஆகும். அத்து டன் இந்த வெற்றி இந்திய மாண வர் சங்கத்தின் மீது மாணவர் சமு தாயம் வைத்திருக்கும் நம்பிக்கை யையும் வெளிப்படுத்துகிறது.

பெண் குழந்தைகள்:

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் கிரா மங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகின்றன. 2011 மக்கள்தொகை கணக் கெடுப்பின்படி, பாலின விகிதம் ஒவ்வொரு 1000 ஆண் குழந்தை களுக்கு 949 பெண் குழந்தைகளா கவே உள்ளது. பெண் குழந்தைக ளின் கல்வி மற்றும் உடல் ஆரோக் கியம் மிகப் பெரிய கேள்விக் குறி யாகவே உள்ளன. பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கான நல விடுதி கள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய 14வது மாநாடு பெண் குழந்தைகளின் பிரச்சனையில் அரசின் அலட்சியப்போக்குக்கு எதிராக வலுவான போராட்டத் தை தொடர்ந்திட உறுதியேற்கிறது.


அந்நிய கல்வி நிறுவனங்களை எதிர்ப்போம் உயர் கல்வியைப் பாதுகாப்போம்..!
 

மாணவர் சங்க அகில இந்திய மாநாடு சூளுரை..!

உயர்கல்வித்துறையை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியுடைய அந்நிய கல்வி நிறுவனங்கள் மசோ தாவை இந்திய மாணவர் சங்க 14 வது அகில இந்திய மாநாடு வலுவாக எதிர்த் துள்ளது. இந்திய மாணவர் சங்க 14வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அந்நிய கல்வி நிறுவனங்கள் மசோதா, 2010, உயர்கல்வி யில் அந்நிய கல்வி நிறுவனங் களின் வரவையும், செயல் பாட்டையும் கண்காணிக் கும். இந்தியாவில் செயல் பட இருக்கிற ஒவ்வொரு அந்நிய கல்வி நிறுவனமும் பல்கலைக்கழக மானியக் குழுச் செயலாளரின் பரிந் துரையின் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட வேண்டும்.

அந்நிய கல்வியை வழங்கு வோர் குறைந்த பட்சம் ரூ.50 கோடி நிதியும் வைத்திருக்க வேண்டும் என்றும், இந் நிதியிலிருந்து உருவாகும் வருவாயில் 75 சதவீதத்தை இந்தியாவில் அந்நிறுவனங் கள் செயல்பட பயன்படுத்த வேண்டும் என்றும் மசோ தாவில் குறிப்பிடப்பட்டுள் ளது. மசோதாவை விரிவாக ஆராயும் போது, கல்வியை பெறுவதில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமிடையே இடைவெளி அதிகரிக்கும் என்று தெரிகிறது.உயர் கல்வித்துறையை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியையுடைய இம் மசோதாவின் எதிர்மறை விளைவுகள் நீண்ட காலங் களுக்கு நீடிக்கும். நமது பொதுக்கல்வித்துறையை தகர்த்து ஒட்டுமொத்த மாண வர் சமூகத்தை பிளவுபடுத் துவதோடு நலிவடைந்த பிரி வினருக்கு சமூகநீதியையும் மறுக்கிறது. இம்மசோதா வின் முக்கிய நோக்கமே அந்நிய பல்கலைக்கழகங் களுக்கும் தனியார்களுக்கும் இந்தியாவில் தங்களது நிறு வனங்களை நிறுவ தங்கு தடையின்றி சுதந்திரம் வழங் குவதேயாகும்.

கல்வியை வணிகப்பொருளாக கரு தும் உலகளாவிய நிறுவனங் களின் நவீன தாராளமய வாதத்தையே இம்மசோதா எதிரொலிக்கிறது. இதனால் இந்திய மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.மாறாக நமது அறிவுத்திறனை தனி யார்களுக்கு தாரைவார்க் கும் முயற்சியாகும். இந்திய மாணவர் சங்கத்தின் 14 வது அகில இந்திய மாநாடு இம் மசோதாவை வலுவாக எதிர்க்கிறது. இம்மசோ தாவை இந்திய மாணவர் சமுதாயம் நிராகரிக்க வேண்டும் என்றும் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

நவீன தாராளமய கொள்கைக்கு எதிர்ப்பு

வளர்ச்சி விகிதத்தில் பெரும் நம்பிக்கை வைத் துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அந்நிய முதலீட்டிற்கு முன்னுரிமை அளிப்பதோடு, நிறுவனங் களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்குகிறது. ஆனால், அதே நேரத்தில் மக்களுக் கான கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் நிதியைச் செலவிட மறுக்கிறது.உலகப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக வளர்ச்சி விகிதம் குறைந்தும் ரூபாயின் மதிப்பு வீழ்ந்தும் வருகிற சூழ்நிலையில், இரண் டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் நவீன தாரா ளமய கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது.

சில்லரை வர்த்தகத்திலும், கல்வியிலும் அந்நிய நேரடி முதலீடு கொண்டு வரப்படுவ தன் மூலமே பிரச்சனை களுக்குத்தீர்வு எட்டப்படும் என அரசு நினைக்கிறது. மக்களுக்கான கொள்கை களை நடைமுறைப்படுத்த இயலாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு எதிரான போராட் டத்தையும், சமத்துவ சமு தாயத்தை நோக்கிய போராட் டத்தையும் இணைந்து நடத்துவோம் என்று மாண வர் சங்க அகில இந்திய 14 வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்துக!

நாட்டின் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிலும் மாணவர் பேரவைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்க அகில இந்திய மாநாடு வலியுறுத்தியுள்ளது. கல்வி நிலைய வளாகங்களில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாடெங்கும் இந்தக்கோரிக்கையை உரத்து முழங்குமாறு அனைத்து மாணவர்களுக்கும் மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்தியில், மாநிலங் களிலும் ஆட்சி நடத்துகிற வலதுசாரி ஆளும் வர்க்க அரசாங் கங்கள் அனைத்துமே மாணவர்களின் ஜனநாயக உரிமை களை நசுக்குகின்றன என குற்றம் சாட்டியுள்ளது. கல்வித் துறையை சூறையாட முயலும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களின் நலன்களுக்கு ஏற்ப அரசாங்கத்தின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப்படுவதை மாணவர்கள் எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பும் அரசுகள், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கல்வி ஜனநாய கத்தை மறுக்கின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக் கழ கங்களில் செனட் சபை மற்றும் சிண்டிகேட் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகளை மத்திய அரசும், பல மாநில அரசுகளும் அவசர சட்டம் இயற்றி பறித்துள்ள நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.

உதாரணத்திற்கு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலத்தில் உள்ள அனைத்து முதன்மையான கல்வி நிறுவனங்களின் ஜனநாயகத்தை முடக்கியுள்ளது. மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்கக்கூட முடியவில்லை.இதே போல கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவிக்கு வந்தவுடனே பல்க லைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் சபைகளுக்கான உரிமைகளைப் பறித்து அவசர சட்டம் இயற்றியது.முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் ஜெ.எம். லிங்டோ தலைமையிலான குழு, மாணவர் பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, கல்வி நிலையங் களில் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பேரவைகள் அவசியம் செயல்பட வேண்டும் என்றும், இதற் காக அவசியம் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது.

ஆனால், தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற் காக பல்வேறு சீர்குலைவு சக்திகள் தேர்தலுக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துகின்றன. லிங்டோ அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான முறையில் திரித்து பிரச்சாரம் செய்ய முயற்சி செய்கின்றன. அதன் மூலம் மாண வர்களின் குரலை நசுக்குவதற்கு முயற்சிக்கின்றன.லிங்டோ அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஓரிரு அம்சங்களை கையில் எடுத்துக்கொண்டு,பல்கலைக்கழகங்களில் பேரவைத் தேர்தலை நடத்தாமல் அறிவிக்கப்படாத ஒரு தடையினை அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. சில ஆண்டுகளாக பல மாநிலங்களில் மாணவர் பேரவைத்தேர்தல் நடக்கவில்லை. இதன் மூலம் ஜனநாயகப்பூர்வமான கல்வி நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து மாணவர்கள் தடுத்து நிறுத்தப்படு கிறார்கள். இதை எதிர்த்து நாடு முழுவதும் வலுவானப் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் கட்டியமைக்கும் என்று தீர்மானம் கூறியுள்ளது.Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com