Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Saturday, 29 September 2012

சாட்டை திரைப்படம் ஒரு பார்வை..!

1 comments
சாட்டை திரைப்படம் ஆசிரியர்-மாணவர் உறவு நிலை குறித்து மறு ஆய்வு செய்யப்படவேண்டிய தருணம் இது..! 
சாட்டை சமூகத்தில் அரசு பள்ளிகளின் இன்றைய நிலை, ஆசிரியர்கள் கற்பித்தல் முறை குறித்தும் , வகுப்பறை என்பது ஒரு வழிசாலையாக இருப்பதை டைரக்டர் அன்பழகன் தெளிவாக சுட்டி காண்பித்து இருக்கிறார். திருவண்ணாமலை அருகே வந்தாரங்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி, இப்பள்ளிக்கு ஆசிரியராக புதிதாக பணியாற்ற வரும் தயா என்ற பெயரில் நடித்திருக்கும் சமுத்திரகனி வருகிறார். வகுப்பறையில் மதிப்பெண் அடிப்படையில் அமர்ந்திருக்கும் மாணவர்களை அவர்கள் விருப்பம் போல் அமரச்சொல்லுவதில் ஆரம்பித்து தினமும் பதினைந்து நிமிடம் தோப்பு கரணம் போட்டால் தூங்கும் மூளை சுறுசுரப்பாக இயங்கும் என்பதில் அராம்பித்து, வகுப்பறையில் பாடம் நடத்தாமல் வட்டி  கணக்கை பார்த்துகொண்டு இருக்கும் தம்பி ராமையா அதனை தட்டி கேட்கும் ஆசிரியர்  தயாவை வகுப்பறையல் மாணவர்கள் மத்தியில் தவறாக பேசுவதும் என காட்சிகளிலும் வசனங்களிலும் மிரட்டி இருக்கிறார் சமுத்திரக்கனி.

வகுப்பறை  ஜனநாயகம் மேம்படுத்த:

வகுப்பறையில் புகார் பெட்டி வைத்து உன்னுடைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்? என மாணவர்களே புகார் பெட்டியில் தாங்கள் விரும்பும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என கூறுவது பேராசிரியர்: நா. மணி தன்னுடைய முதல் நாள் வகுப்பில் நீ விரும்பும் ஆசிரியர்..? என்ற தலைப்பில் எழுத கூறிய போது ஒவ்வொரு மாணவனும் தன்னுடைய பள்ளியில் உள்ள உடற்பயிற்சி ஆசிரியர் தங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக செய்த உதவி என, தான் செய்த தவறை திருத்திய ஆசிரியர் என ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் தனக்கு வரபோகும் ஆசிரியர் குறித்த எதிர்பார்புகளை கோர்வையாக்கி அக்கடிதங்களை தொகுப்பாக பள்ளி கூட தேர்தல் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

வகுப்பறை ஜனநாயகம் குறித்து இன்றைய ஆசிரியர்கள் கவலைபடுவதில்லை என்பதை நையாண்டியாக குறிப்பிடுவதும், சாக்ரடிஸ், ஐன்ஸ்டீன் போன்ற உலக அறிஞர்களை பற்றி பேசுவதும், ஆசிரியர்கள் மீடிங்கில் தம்பி ராமையா ஆசிரியர் தயா மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறுவதும் பதிலுக்கு சமுத்திரகனி இந்த பள்ளியில் நடக்கும் தவறுகளுக்காக இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு ஆசிரியர் மீதும் நான் புகார் கூறுவேன். நீங்கள் கூறும் புகார்கள் என்னை ஒன்றும் செய்யாது ஆனால் நான் குடுக்கும் புகாருக்கு விசாரணை மாணவர்களிடம் போகும் அதையும் மீறி புகார் தர வேண்டும் என்றால் பள்ளியின் எச்.எம். உங்க மீதும் புகார் கொடுப்பேன் என கூறுவது, மாணவர்கள் புகார் பெட்டியில் எழுதி போட்ட கடிதங்களை படிக்க சொல்லி வீசிவிட்டு ஆசிரியர்கள் மீடிங்கில் இருந்து வகுப்பிற்கு பாடம் நடத்த நேரம் ஆகிடுச்சு நான் கெளம்புகிறேன் என்று கூறி வெளியேறுவது ஒரு பொறுப்பான ஆசிரியருக்குரிய கடமையை சரி வர செய்ய மறுக்கும் ஆசிரியர்கள் மீட்டிங் என்றால் வெட்டிக்கதை பேசுவதும் அதில் கொடுக்கும் நொறுக்கு தீனி தின்னுவிட்டு வரும் ஆசிரியர்களுக்கு பலத்த அடி.

வகுப்பறைகளில் மாணவிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் :

செய்முறை தேர்வை காட்டி ஒரு சில வக்கிர புத்தியுடைய ஆசிரியர்கள் மாணவிகள் மீது தொடுக்கும் பாலியல் தொந்தரவு உட்பட அதனை அணுகும் முறை, அவசர அவசரமாக தம்பி ராமையா ஆசிரியர் தயாவை தன்னுடைய ஊர் மக்களை கொண்டு பள்ளியில் இருந்து அடித்து வெளியேற்ற நினைப்பது என அனைத்திலும் இயக்குனர் அன்பழகன் உழைப்பு  மற்றும் சமுத்திரக்கனி நடிப்பு வெளிப்பட்டிருகிறது. அதே போல் ஒவ்வொரு மாணவனின் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் சாட்டை சுழற்றப்பட்டுள்ளது. அதே போல் பள்ளியில் உள்ள பொருட்களை ஊர் மக்கள் தங்கள் வீட்டு விஷேசத்துக்கு எடுத்து செல்ல இனி அனுமதிக்க முடியாது என கூறுவது நமக்கு என் வம்பு என ஒதுங்கிக்கொள்ளும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பொறுப்பான ஆசிரியருகுடைய கடைமையை சரி வர செய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

பள்ளியில் உள்ள ஆசிர்யர்களை ஒருங்கிணைக்க..!

ஒரு சிறந்த பள்ளியை உருவாக்க முதலில் ஆசிரியர்களின் ஒன்றுபட்ட கூட்டு செயல்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் தயா ரோட்டரி கிளப் மூலம்  மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்யும் போதும்  அதில் நாயகன் பழனியை பள்ளியின் மாணவர் தலைவராக நியமிக்க  முற்படும் போதும் பலத்த எதிர்ப்புகள்  கிளம்புகிறது. ஆசிரியர் தயா நாயகன் பழனியை தேர்வு செய்தது அவனுக்குள் உள்ள திறமையை அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அவன் அப்பாவே புரிந்து கொள்ளாத போது தயா வைத்த நம்பிக்கையினால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி  மாணவர்களாலும் போட்டிகளில் வெற்றி  முடியும் அதற்க்கான வாய்ப்புகளை மட்டும் உருவாக்கிகொடுத்தால் போதும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஒரு சிறந்த பள்ளியை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதுடன்  அரசு பள்ளி மாணவர்களாலும்  சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உண்டாக்க வேண்டும்.

அடுத்த இலக்கை நோக்கிய பயணம்:

ஒரே பள்ளியில் 10 ஆண்டுகள் வேலை செய்வதை பெருமையாக கருதும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ஒரு ஆசிரியரின் கடமை கல்வி அறிவு அல்லாத கிராமப்புற மாணவர்களுக்காகவும்,  ஏழ்மையான குடும்பத்தில் இருந்து அரசு பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களுக்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அர்பணிக்க வேண்டும் என்ற உணர்வை அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் விதைக்கிறது.இறுதியாக  ஆசிரியர் தயாவின்  செயல்கள் அனைத்து ஆசிரியர்களையும் அர்பணிப்பு உணர்வோடு பணி செய்ய தூண்டுகிறது. உண்மையில் புரட்சியாளன் என்பவன் ஒரு சிறு வட்டத்தில் அடைந்து விடாமல் தன்னுடைய அடுத்த தேடலுக்கான பயணத்தை நோக்கி பயணிக்கச்செய்கிறது. மாணவர்களை சிறு வட்டத்தில் புதைந்து விடாமல் தன்னுடைய இலக்கை குன்றின் மீது வைக்காதே, இலக்கை வானத்தின் மீது 'வை ' என தேடலுக்கான பயணத்தை சிகரத்தை நோக்கி வையுங்கள் என்று "சாட்டை" சுழற்றப்பட்டுள்ளது.யாருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்குவது?

இன்றைக்கு மத்திய, மாநில அரசுகள் அரசு பள்ளி, கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக விருதுகள் வழங்கப்படுகிறது. பெரும்பாலான விருதுகள் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் மட்டுமே பெறப்படுகிறது. ஆனால் யார் சிறந்த ஆசிரியர் என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்? ஆசிரியர் யாருக்கு பாடம் நடத்துகிறாரோ ( மாணவர்கள் ) அவர்களிடம் நாம் கேட்கிறோமா என்பது ? அவர்கள் தீர்மானிப்பார்கள் யார் சிறந்த ஆசிரியர் என்று? ஒரே பள்ளியில் பத்து, இருபது என வருடக்கணக்கில் வேலை செய்வது முக்கியமல்ல? நாம் பணியாற்றிய காலத்தில் எத்தனை மாணவர்களை சிறந்த ஆசிரியராக, விஞ்ஞானியாக, கிராமபுரங்களில் பணியாற்றும் அல்லது நகர்புறத்தில் சேவை செய்யும் மருத்துவராக, உருவாக்கியிருக்கிறோம்.விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் கழிந்த பிறகும்  இன்னும் இந்நாட்டில் 40 கோடி மக்கள் எழுத படிக்க தெரியாதவர்கள், நாட்டு மக்கள் தொகையில் இன்னுமும் 70% பேர் நாள் ஒன்றுக்கு 20/-ரூபாய்  கூட செலவு செய்ய முடியாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். இப்படி ஏற்றத்தாழ்வு மிகுந்த சமுதாயத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளை பாதுக்காக மட்டுமின்றி அரசு கல்வி நிலையங்களில்  பயிலும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றவும், கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரிய - மாணவ உறவுநிலையை வலுப்படுத்த கரம்கோர்ப்போம்.
                                                                                                  கட்டுரையாளர் : ஆனந்த்,
                                                      இந்திய மாணவர் சங்கம் - புதுச்சேரி பிரதேச குழு.

Read more...
Sunday, 23 September 2012

அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக ஆர்பாட்டம் - எஸ்.எப்.ஐ பல்கலைகழக கிளை

0 comments
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு, கேஸ் மீதான கட்டுபாட்டை நீக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி பல்கலைகழக கிளை சார்பாக மத்திய அரசை கண்டித்து இடது சாரி கட்சிகள் நடத்திய பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக பல்கலை கழக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் புதுவை பிரதேச தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. இப்போராட்டத்திற்கு பல்கலைகழக கிளை நிர்வாகிகள் வினோத்ராஜ், அகில், கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, எஸ்.எப்.ஐ. பிரதேச செயலளார் ஆனந்த் மற்றும் ரஞ்சித் வாழ்த்தி பேசினர். நிறைவாக பல்கலைகழக கிளை நிர்வாகி ஜிஜோஷ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைகழக மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Read more...
Thursday, 20 September 2012

ஆசிரியரை நியமிக்க கோரி பள்ளிகல்வித்துறையை - எஸ்.எப்.ஐ முற்றுகை..!

0 comments
புதுச்சேரி கூடபாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளிதுவங்கி நான்கு மாதங்கள் ஆகியும் ஆங்கில பாடத்திற்கு இது வரை ஆசிரியர் நியமிக்காததை கண்டித்து 18/09/2012 அன்று காலை கல்வித்துறையை இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் மற்றும் து.தலைவர் ரஞ்சித் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம். பின்னர் கல்வி துறை இயக்குனர் வல்லவனை சந்தித்து பேசியவுடன் இரண்டு நாட்களில் ஆங்கில ஆசிரியர் நியமிக்கபடுவார் என உறதி அளித்தவுடன் போராட்டம் வாபஸ். மேலும் புதுச்சேரியில்  இருபதுக்கும்  மேற்பட்ட அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது, அதனையும் உடனடியாக நிரப்பாவிடில் இந்திய மாணவர் சங்கம் கல்வி அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தும் என்பதை புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கையோடு தெரிவிப்பதாக இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் கூறினார்.
Read more...
Saturday, 15 September 2012

சாலைகளை சீரமைக்ககோரி - எஸ்.எப்.ஐ போராட்டம்

0 comments
சாலைகளை சீரமைக்ககோரி லாஸ்பேட்டை நாவலர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு  -  போராட்டம் 

 புதுச்சேரி 10/09/2012:-

இந்திய மாணவர் சங்கம் லாஸ்பேட்டை நாவலர் பள்ளி சார்பாக
வகுப்புகளை புறக்கணித்து நேதாஜி சிலை அருகே சாலை  மறியலில் 
ஈடுபட்டனர்.லாஸ்பேட்டை  குண்டும் - குழியுமாக உள்ள ஏர்போர்ட் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி இந்திய மாணவர் சங்க செயலாளர் ஆனந்த்  தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more...
Friday, 14 September 2012

அணு உலை இறக்குமதி ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது - பிரகாஷ் காரத்

0 comments
இந்திய மாணவர் சங்கத்தின் நிலைபாடும் அதுவே..!


இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளை கொண்ட மெகா அணுமின் நிலையங் களை அமைப்பதற்கு நாடு முழு வதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 40 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையங் களை 2020ம் ஆண்டுக்குள் நிறு வப்போவதாக ஐக்கிய முற்போக் குக் கூட்டணிஅரசு அறிவித்தது. இதற்காக பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகள் தேவைப்படுகிறது எனவும் அரசு கூறியது. இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை நியாயப் படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியானது. 


அமெரிக்காவி லிருந்து 10 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள அணு உலைகளை வாங்கிக் கொள்வதாக மன் மோகன்சிங் அரசு அமெரிக்கா விடம் எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்திருந்தது. அமெரிக்க உடன்பாட்டை இனிப்பாக்க செய் யப்பட்ட ஏற்பாடாகும் இது.ஜெய்தாபூர் (மகாராஷ்டிரம்), பகவான் நகரில் சாயா மிதி மிர்த்தி (குஜராத்), ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கோவாடா (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் கூடங்குளம் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்கள் கட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டமிட்டது. தொழில்நுட்ப - பொருளாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இந்த அணுஉலைப்பூங்காக்களில் இறக்குமதி செய்யப்பட்ட பன்முக அணு உலைகளை ஒரே இடத் தில் நிறுவுவதற்கு எதிர்ப்பு எழுந் தது.


அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாடு கையெழுத்தான பிறகு, ஜெய்தாபூரில் 1650 மெகா வாட் திறன்கொண்ட அணு உலைகளை நிறுவுவதற்கான உடன்பாடு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரேவா என்ற நிறுவனத் துடன் கையெழுத்தானது. ஒரே இடத்தில் 6 அணு உலைகளை நிறுவ இந்தத் திட்டம் வகை செய் தது. பிற நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் அணு உலை களோடு ஒப்பிடும்போது, ஐரோப் பிய ‘அழுத்தப்பட்ட’ அணு உலை கள் (இபிஆர்) மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாகும். இத்தகைய அணு உலைகள் இதுவரை பிரான்சிலோ அல்லது உலகின் எந்தப் பகுதியிலுமோ நிறுவப்பட வில்லை. இத்தகைய அணு உலைகளை நிறுவுவதற்கு ஆகும் உண்மையான செலவை அரசு தெரிவிக்கவும் இல்லை

. எனினும், பின்லாந்தில் நிறுவப் பட்ட இபிஆர் அணு உலைகளுக் கான செலவைக் கொண்டு பார்க் கும்போது, 6 பிரான்ஸ் அணு உலைகளை நிறுவுவதற்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரை பரிசோதிக்கப்படாத தொழில்நுட்பத்தை மிக அதிக மான விலையில் வாங்குவதன் மூலம் அணுமின் உற்பத்தி செலவு மிகக் கடுமையாக இருக்கும் என் பது தெளிவு. ஒரு மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அணு உலைகளை நிறுவ ரூ.20 கோடி செலவுபிடிக்கும். அதே நேரத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் செறிவூட்டப்பட்ட கனநீர் அணு உலைகளை உருவாக்க ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடி மட்டுமே செலவுபிடிக்கும். இதன் பொருள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7-8 செலவில் தயாரிக்க முடியும் என்பதுதான்.

குஜராத் மற்றும் ஆந்திர மாநி லங்களில் நிறுவ திட்டமிட்டுள்ள அமெரிக்க அணு உலைகளை கொண்ட மெகா அணு உலை பூங்காக்களும் அதீத செலவு பிடிக்கக் கூடிய திட்டங்களே ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை பயன்படுத்து வது என்ற திட்டமே அடிப்படை யில் அதிக செலவுபிடிக்கக் கூடி யது; எரிசக்தி பாதுகாப்பை கேள் விக்குள்ளாக்கக் கூடியது ஆகும்.சமாளிக்க முடியாத அள விற்கு செலவினத்தை ஏற்படுத் தக் கூடிய இறக்குமதிசெய்யப்பட்ட அணு உலைகளை நிறுவும் திட் டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக எதிர்க்கிறது. அழுத்தப்பட்ட அணு உலை களை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு இருக்கும்போது, மென்நீர் அணு உலைகளை இறக்குமதி செய்து நிறுவுவதோ, பிரான்ஸ் நாட்டின் அழுத்தப்பட்ட அணு உலைகளை இறக்குமதி செய்வதோ முற்றிலும் தேவை யற்ற ஒன்றாகும்.


மேலும், மெகா அணுஉலை பூங்காக்களை நிறுவுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பெரும் பகுதி மக்கள், தங்கள் வாழ்விடங் களிலிருந்து தங்களது வாழ்வா தாரத்தை இழந்து வெளியேற வேண்டிய நிலை உள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை விபத்திற்கு பிறகு அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி வலுவாக முன்னுக்கு வந்துள்ளது. புகுஷி மாவில் ஒரே இடத்தில் 6 அணு உலைகளை நிறுவியது என்பது கடுமையான பாதுகாப்பு சிக் கலை உருவாக்கியது என்பது கண்கூடு.இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை கொண்டு அணு மின் நிலைய பூங்காக்களை நிறு வும் உத்தேச திட்டங்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க் கிறது. இந்தப் பின்னணியில் கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனையில் கட்சியின் நிலை பாடு என்ன என்ற கேள்வி எழுப் பப்படுகிறது.

 கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளை கொண்டு துவங்கப்பட உள்ள அணுமின் திட்டத்தை மூட வேண்டும் என்ற கருத்தை கட்சி ஏன் ஆதரிக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. கூடங்குளத்தில் நிறுவப் பட்டுள்ள இரண்டு அணு உலைகள் சம் பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் வேறு மாதிரியான தன்மை கொண்டதாகும். அமெரிக்கா வுடன் அணுசக்தி உடன்பாடு ஏற் படுவதற்கு முன்பே ரஷ்யாவி லிருந்து இந்த இரண்டு அணு உலைகளும் வாங்கப்பட்டுவிட் டன. ஒட்டுமொத்த ரூ.15 ஆயிரம் கோடி செலவில் இரண்டு அணு உலைகளை நிறுவுவதற்கான கட்டுமானப் பணிகள் ஏற் கெனவே நிறைவடைந்துவிட்டன. 

இந்த இரண்டு அணு உலை களையும் மூட வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமானதும் அல்ல. நாட்டு நலனுக்கும் உகந் ததும் அல்ல.ஜெய்தாப்பூர் மற்றும் இதர அணு உலை பூங்காக்கள் பிரச்ச னையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேறுபட்ட நிலையை எடுப்பதாக சிலர் விமர்சிக்கின் றனர். இந்தியாவுக்கு அணு மின் திட்டமே கூடாது மற்றும் இந்தியா வில் அணு உலைகளை நிறுவக் கூடாது என்று வலியுறுத்துவோர் தரப்பிலிருந்து இந்த விமர்சனங் கள் முன்வைக்கப்படுகின்றன.அணுமின் திட்டங்களுக்கு எதி ராக உள்ளூர் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு பிரதான கார ணம் பாதுகாப்பு குறித்த அச்சமே ஆகும்.

 புகுஷிமா பேரழிவுக்கு பிறகு இந்த அச்சம் அதிகமாகி யுள்ளது. தங்களது பகுதிகளில் நிறுவப்படும் அணுமின் திட்டங் களின் பாதுகாப்பு குறித்த மக்க ளின் அச்சத்தில் நியாயம் உள் ளது. அவர்களது கவலை மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு போராட்டங்கள் நடந்தபோதே பாதுகாப்பு குறித்த மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும். அதுவரை அணுமின் திட்டங் களை துவக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. பாதுகாப்பு குறித்த சுயேச்சையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என் றும் கட்சி கூறியது. எனினும், அரசு மற்றும் அணுசக்தித் துறை அத்தகைய ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை. அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத் தின் பாதுகாப்பு தொடர்பான பரிந் துரைகள் அனைத்தும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் அரசு தெளிவு படுத்தவில்லை.

பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கையும் மக்கள் முன்னால் வைக்கப்பட வில்லை.நம்பகத்தன்மையை உரு வாக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண் டும்; பாதுகாப்பு தணிக்கை அறிக் கை மக்கள் முன்னால் வைக்கப் பட வேண்டும்; மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இப்போதும் முன் வைக்கிறது. இவற்றை செய்வ தற்கு பதிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள், அணு உலை கள் நிறுவப்படுவதை எதிர்த்து போராடும் மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவிவிடுகின் றன. போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதை யும், அவர்கள் மீது பெருமளவில் வழக்குப் பதிவு செய்யப்படுவதை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.கூடங்குளத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள இரண்டு அணு உலைகளை மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறவில்லை. அதே நேரத் தில் கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் நிறுவப்படுவதை கட்சி எதிர்க்கிறது. இங்கு மேலும் நான்கு அணு உலைகளை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

 புதிதாக அணுஉலை பூங்காக்களை நிறுவுவதற்கு எதிராக முன்வைக் கப்படும் வாதங்கள் இந்த விஷ யத்தில் கூடங்குளத்திற்கும் பொருந்தும்.அணு உலைகளில் விபத்து ஏற்படுமானால் பாதிக்கப்படும் மக்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான பிரச்சனை யாகும். விபத்துக்கள் ஏற்படு மானால், வெளிநாட்டு விநி யோகஸ்தர்களை பொறுப்பி லிருந்து விடுவிப்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள அணுசக்தி பொறுப்பு சட்டம் நிராகரித்துள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் விதிகள் உருவாக்கப்பட வேண்டும். இந் தச் சட்டத்தில் இடம்பெற் றுள்ள விபத்திற்கு பொறுப்பேற்பது தொடர்பான விதிகளை நீர்த்துப் போகச் செய்ய அரசு முயன்று வருகிறது.

விபத்து தொடர்பாக பொறுப் பேற்பதற்கான விதிகளை ஏற்க வெளிநாட்டு அணு உலை விநி யோகஸ்தர்கள் மறுத்து வருகின் றனர். வெளிநாட்டு அணு உலை கள் கூடாது என்று கூறுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும். விபத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு பொறுப்பேற் கும் உடன்பாடுகளில் வெளி நாட்டு விநியோகஸ்தர்கள் கை யெழுத்திடவில்லையென்றால் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள சட்டம் நீர்த்துப்போய் விடும். கூடங்குளத்தில் புதிய கூடுதலான அணு உலைகளை நிறுவ விரும்பும் ரஷ்ய நிறுவனம் விபத்திற்கு பொறுப்பேற்பது தொடர்பான விதிகளை ஏற்க விரும்பவில்லை. கூடங்குளத்தில் ரஷ்யாவின் கூடுதல் அணு உலைகள் கூடாது என்று வாதிடுவ தற்கு இதுவும் ஒரு காரணமாகும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யை பொறுத்தவரை அணுமின் திட்டங்களை ஒரேயடியாக எதிர்க் கவில்லை.

பாதுகாப்பு தொடர் பான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அணுமின் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப, பொருளாதார ரீதியான அனைத்து அம்சங்கள் முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தான் கட்சியின் கருத்தாகும். எனி னும், அணுசக்தி தொடர்பான சர்வதேச அனுபவத்தை, குறிப் பாக புகுஷிமா விபத்திற்கு பிற கான அனுபவத்தை முற்றிலும் கருத்தில்கொள்ள வேண்டும். அணு உலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏற் கெனவே, இயங்கி வரும் அணு உலைகளின் பாதுகாப்பு அம் சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே இயங்கி வரும் அணு உலைகளின் பாது காப்பு குறித்து நியாயமான கவ லை உள்ளது. 1960ல் அமெரிக் கா அளித்த இரண்டு மின் உலை களை கொண்டு இயங்கி வரும் தாராப்பூர் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து கடுமையான அச்சம் உள்ளது. புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலை களை விட இந்த அணு உலைகள் மிகவும் பழமையானவை. புகு ஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலைகளின் அனுபவம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். புகுஷிமா விபத்திற்கு பிறகு இந்த அணு உலைகள் மூடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.தற்போது இயங்கிக் கொண் டிருக்கும் அணு உலைகள் குறித்து சுயேச்சையான தணிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும். புகு ஷிமா பேரழிவுக்கு பிறகு இந்தியா வில் இயங்கும் அணு உலைகள் குறித்து தணிக்கை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டார்.

எனினும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தினாலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதே யன்றி, சுயேச்சையான அமைப்பு ஒன்றால் நடத்தப்படவில்லை. சுயேச்சையான, சுயாட்சி அதி காரம் கொண்ட அணுசக்தி பாது காப்பு ஒழுங்குமுறை ஆணை யம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை அரசு கொண்டு வராவிட்டால் இந்த நோக்கம் நிறைவேறாது.தற்போது இயங்கிக் கொண் டிருக்கும் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து முழுமை யான ஆய்வு மேற்கொள்ளப் படும் வரை புதிய அணுமின் திட் டங்கள் அமைக்கப்படக் கூடாது. கடுமையான விதிமுறைகளை கொண்ட சுற்றுச்சூழல் தரக்கட்டுப் பாடு மற்றும் பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.அணுசக்தியை முக்கிய திரட்சி யாக கொண்ட அரசின் எரிசக்தித் திட்டத்தை நாங்கள் ஏற்பதற் கில்லை. 

வளர்ந்து வரும் இந்தி யாவில் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி படுகை களை அதிக அளவில் பயன்படுத் துவது, இயற்கை எரிவாயு சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவது மற் றும் சூரிய ஒளி பயன்பாட்டை மேம்படுத்துவது போன்ற திட்டங் கள் அவசியமாகும்.பிரதமரின் அணுசக்தி சார்ந்த மாயையையும், இறக்குமதி செய் யப்பட்ட அணு உலைகளை கொண்டு மெகா அணுமின் திட் டங்களை உருவாக்குவது என்ற திட்டத்தையும் வன்மையாக எதிர்க்கிறோம். இறக்குமதி செய் யப்பட்ட அணு உலைகளுக்கு எதி ரான பல்வேறு மக்கள் திரளின் போராட்டம் தேசிய போராட்டமாக உருவெடுக்க வேண்டியது அவ சியமாகும்.

                                                                                                                       நன்றி: தீக்கதிர்..!
Read more...
Monday, 10 September 2012

எஸ்.எப்.ஐ (SFI) - புதிய நிர்வாகிகள் தேர்வு

0 comments
சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்!
இந்திய மாணவர் சங்க மாநாடு சூளுரை..!
இந்திய மாணவர் சங்க 14 வது அகில இந் திய மாநாடு மதுரையில் செப்டம்பர் 4ந் தேதி துவங்கி 7 ம் தேதி வரை நடைபெற்றது. 40 இலட்சம் மாணவர்களின் பிரதிநிதிகளாக இம யம் முதல் குமரி வரை உள்ள மாநிலங்களில் இருந்து 750 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். 

வெள்ளியன்று, மாணவப்பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பதிலளித்து பொதுச்செயலாளர் ரித்தபிரதா பானர்ஜி உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து அடுத்த மூன்றாண்டுகளுக் கான சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 

எஸ்.எப்.ஐ. யின் அகில இந்தியத் தலைவராக வி. சிவதாசன், துணைத்தலைவர்களாக கே.எஸ். கனகராஜ், அபீத் உசைன், நிலஞ்சனா ராய், மதுஜா சென் ராய், ஷிஜு கான், நூர் முகம்மது, பொதுச் செயலாளராக ரித்த பிரதா பானர்ஜி, இணைச் செயலாளர்களாக விக்ரம் சினோத், தேபோ ஜோதி தாஸ், டி.பி. பினீஷ், பி. லட்சும ணய்யா, ஷத்ரூப் கோஷ் ஆகியோரும், மத்திய செயற்குழு உறுப்பினர்களாக ஆனந்த் நாயக், கபில் பரத்வாஜ், ஹோபால் ஆகியோரும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 

உலகெங்கிலும் முதலாளித் துவத்தின் தாக்குதல்களுக்கு எதி ரான போராட்டங்கள் தீவிரம டைந்துள்ள நிலையில், உலகம் முழுவதிலும் மாணவர் இயக்கமும் வீறுகொண்டு எழுந்துவரும் நிலை யில், சோசலிசப் பதாகையை என்றென்றும் உயர்த்திப்பிடித்து முன்னேறுவோம் என இந்திய மாணவர் சங்க அகில இந்திய மாநாடு சூளுரைத்தது.மதுரையில் கடந்த நான்கு நாட் களாக நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- சமீப காலங்களில் எதேச்சதி கார சர்வாதிகார, ஏகாதிபத்திய மற்றும் ஊழலில் திளைத்து வரும் அரசாங்கங்களுக்கு எதிராக உலகு எங்கிலும் மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். முதலாளித்துவத் தின் கொடூரமான நடைமுறைக ளுக்கு எதிராக வெடித்த மாணவர் போராட்டங்கள் துனிசியா, எகிப்து மற்றும் ஏமன் நாடுகளோடு நிற்கா மல் இங்கிலாந்து மற்றும், அமெரிக்காவிலும் தொடர்கின் றன. உலகத்தில் மாணவர் இயக்க வரலாற்றில் சிலி நாட்டு மாணவர் கள் போராட்டம் குறிப்பிடத்தக்க முத்திரையை பதித்துள்ளது. சிலி யில் மாணவர் இயக்கம் கல்வித் துறையில் தனியார் மயத்திற்கும், தாராளமயத்திற்கும் எதிராக நிகழ்த் திய போராட்டம், மாணவர் சமூகத் தை பலப்படுத்துவதோடு இடது சாரிகளுக்கு உத்வேகம் அளிக் கிறது. இந்திய மாணவர் சங்கத்தின் 14வது அகில இந்திய மாநாடு உல கெங்கும் நடைபெறும் மாணவர் கள் மற்றும் முற்போக்கு இயக்கங் களுக்கு ஆதரவைத் தருகிறது. சுதந் திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற முழக்கங்களை முன்வைத் தும், எதிர்காலம் சோசலிசமே என்ற பதாகையை உயர்த்திப்பிடித்தும் முன்னேறுவோம் என சபதம் ஏற்கிறது.
 
மேற்குவங்கம்:

மேற்கு வங்கத்தில் மே 2011ல் பத வியேற்ற திரிணாமுல் காங்கிரஸ் அரசு மக்கள் மீது அடக்குமுறை களை கட்டவிழ்த்துவிட்டு, ஆசிரி யர்கள், பேராசிரியர்கள் என்று அனைத்து தரப்பினரையும் தாக்கிக் கொண்டு இருக்கின்றது. அம்மாநி லத்தில் நடைபெறுகிற ஒடுக்கு முறை, ஊழல், படுகொலை மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன் முறை ஆகியன பொறுப்புள்ள குடி மக்களை உறைய வைத்துள்ளன. இதை எதிர்த்த மேற்கு வங்க மாநில மக்களின் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு முழு ஆதர வையும் மாணவர் சங்க மாநாடு தெரிவிக்கிறது.
பேரவைத்தேர்தலில் மகத்தான வெற்றி
ராஜஸ்தானில் இரண்டாவது பெரிய பல்கலைக் கழகமான ஜோத்பூர் பல்கலைக்கழ கம் மற்றும் 48 கல்லூரிகளிலும், இமாச் சலப் பிரதேசத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 102 இடங்களிலும் இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. இத் தகைய வெற்றி இரு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசு கையாண்டு வரும் மாணவர் விரோதக் கொள்கைக்கு எதி ரான எச்சரிக்கை ஆகும். அத்து டன் இந்த வெற்றி இந்திய மாண வர் சங்கத்தின் மீது மாணவர் சமு தாயம் வைத்திருக்கும் நம்பிக்கை யையும் வெளிப்படுத்துகிறது.

பெண் குழந்தைகள்:

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் கிரா மங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகின்றன. 2011 மக்கள்தொகை கணக் கெடுப்பின்படி, பாலின விகிதம் ஒவ்வொரு 1000 ஆண் குழந்தை களுக்கு 949 பெண் குழந்தைகளா கவே உள்ளது. பெண் குழந்தைக ளின் கல்வி மற்றும் உடல் ஆரோக் கியம் மிகப் பெரிய கேள்விக் குறி யாகவே உள்ளன. பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கான நல விடுதி கள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய 14வது மாநாடு பெண் குழந்தைகளின் பிரச்சனையில் அரசின் அலட்சியப்போக்குக்கு எதிராக வலுவான போராட்டத் தை தொடர்ந்திட உறுதியேற்கிறது.


அந்நிய கல்வி நிறுவனங்களை எதிர்ப்போம் உயர் கல்வியைப் பாதுகாப்போம்..!
 

மாணவர் சங்க அகில இந்திய மாநாடு சூளுரை..!

உயர்கல்வித்துறையை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியுடைய அந்நிய கல்வி நிறுவனங்கள் மசோ தாவை இந்திய மாணவர் சங்க 14 வது அகில இந்திய மாநாடு வலுவாக எதிர்த் துள்ளது. இந்திய மாணவர் சங்க 14வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அந்நிய கல்வி நிறுவனங்கள் மசோதா, 2010, உயர்கல்வி யில் அந்நிய கல்வி நிறுவனங் களின் வரவையும், செயல் பாட்டையும் கண்காணிக் கும். இந்தியாவில் செயல் பட இருக்கிற ஒவ்வொரு அந்நிய கல்வி நிறுவனமும் பல்கலைக்கழக மானியக் குழுச் செயலாளரின் பரிந் துரையின் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட வேண்டும்.

அந்நிய கல்வியை வழங்கு வோர் குறைந்த பட்சம் ரூ.50 கோடி நிதியும் வைத்திருக்க வேண்டும் என்றும், இந் நிதியிலிருந்து உருவாகும் வருவாயில் 75 சதவீதத்தை இந்தியாவில் அந்நிறுவனங் கள் செயல்பட பயன்படுத்த வேண்டும் என்றும் மசோ தாவில் குறிப்பிடப்பட்டுள் ளது. மசோதாவை விரிவாக ஆராயும் போது, கல்வியை பெறுவதில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமிடையே இடைவெளி அதிகரிக்கும் என்று தெரிகிறது.உயர் கல்வித்துறையை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியையுடைய இம் மசோதாவின் எதிர்மறை விளைவுகள் நீண்ட காலங் களுக்கு நீடிக்கும். நமது பொதுக்கல்வித்துறையை தகர்த்து ஒட்டுமொத்த மாண வர் சமூகத்தை பிளவுபடுத் துவதோடு நலிவடைந்த பிரி வினருக்கு சமூகநீதியையும் மறுக்கிறது. இம்மசோதா வின் முக்கிய நோக்கமே அந்நிய பல்கலைக்கழகங் களுக்கும் தனியார்களுக்கும் இந்தியாவில் தங்களது நிறு வனங்களை நிறுவ தங்கு தடையின்றி சுதந்திரம் வழங் குவதேயாகும்.

கல்வியை வணிகப்பொருளாக கரு தும் உலகளாவிய நிறுவனங் களின் நவீன தாராளமய வாதத்தையே இம்மசோதா எதிரொலிக்கிறது. இதனால் இந்திய மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.மாறாக நமது அறிவுத்திறனை தனி யார்களுக்கு தாரைவார்க் கும் முயற்சியாகும். இந்திய மாணவர் சங்கத்தின் 14 வது அகில இந்திய மாநாடு இம் மசோதாவை வலுவாக எதிர்க்கிறது. இம்மசோ தாவை இந்திய மாணவர் சமுதாயம் நிராகரிக்க வேண்டும் என்றும் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

நவீன தாராளமய கொள்கைக்கு எதிர்ப்பு

வளர்ச்சி விகிதத்தில் பெரும் நம்பிக்கை வைத் துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அந்நிய முதலீட்டிற்கு முன்னுரிமை அளிப்பதோடு, நிறுவனங் களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்குகிறது. ஆனால், அதே நேரத்தில் மக்களுக் கான கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் நிதியைச் செலவிட மறுக்கிறது.உலகப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக வளர்ச்சி விகிதம் குறைந்தும் ரூபாயின் மதிப்பு வீழ்ந்தும் வருகிற சூழ்நிலையில், இரண் டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் நவீன தாரா ளமய கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது.

சில்லரை வர்த்தகத்திலும், கல்வியிலும் அந்நிய நேரடி முதலீடு கொண்டு வரப்படுவ தன் மூலமே பிரச்சனை களுக்குத்தீர்வு எட்டப்படும் என அரசு நினைக்கிறது. மக்களுக்கான கொள்கை களை நடைமுறைப்படுத்த இயலாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நவீன தாராளமயக் கொள்கைக ளுக்கு எதிரான போராட் டத்தையும், சமத்துவ சமு தாயத்தை நோக்கிய போராட் டத்தையும் இணைந்து நடத்துவோம் என்று மாண வர் சங்க அகில இந்திய 14 வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்துக!

நாட்டின் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிலும் மாணவர் பேரவைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்க அகில இந்திய மாநாடு வலியுறுத்தியுள்ளது. கல்வி நிலைய வளாகங்களில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாடெங்கும் இந்தக்கோரிக்கையை உரத்து முழங்குமாறு அனைத்து மாணவர்களுக்கும் மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்தியில், மாநிலங் களிலும் ஆட்சி நடத்துகிற வலதுசாரி ஆளும் வர்க்க அரசாங் கங்கள் அனைத்துமே மாணவர்களின் ஜனநாயக உரிமை களை நசுக்குகின்றன என குற்றம் சாட்டியுள்ளது. கல்வித் துறையை சூறையாட முயலும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களின் நலன்களுக்கு ஏற்ப அரசாங்கத்தின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப்படுவதை மாணவர்கள் எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பும் அரசுகள், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கல்வி ஜனநாய கத்தை மறுக்கின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக் கழ கங்களில் செனட் சபை மற்றும் சிண்டிகேட் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகளை மத்திய அரசும், பல மாநில அரசுகளும் அவசர சட்டம் இயற்றி பறித்துள்ள நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.

உதாரணத்திற்கு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலத்தில் உள்ள அனைத்து முதன்மையான கல்வி நிறுவனங்களின் ஜனநாயகத்தை முடக்கியுள்ளது. மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்கக்கூட முடியவில்லை.இதே போல கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவிக்கு வந்தவுடனே பல்க லைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் சபைகளுக்கான உரிமைகளைப் பறித்து அவசர சட்டம் இயற்றியது.முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் ஜெ.எம். லிங்டோ தலைமையிலான குழு, மாணவர் பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, கல்வி நிலையங் களில் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பேரவைகள் அவசியம் செயல்பட வேண்டும் என்றும், இதற் காக அவசியம் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது.

ஆனால், தேர்தல் நடத்துவதை தவிர்ப்பதற் காக பல்வேறு சீர்குலைவு சக்திகள் தேர்தலுக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துகின்றன. லிங்டோ அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான முறையில் திரித்து பிரச்சாரம் செய்ய முயற்சி செய்கின்றன. அதன் மூலம் மாண வர்களின் குரலை நசுக்குவதற்கு முயற்சிக்கின்றன.லிங்டோ அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஓரிரு அம்சங்களை கையில் எடுத்துக்கொண்டு,பல்கலைக்கழகங்களில் பேரவைத் தேர்தலை நடத்தாமல் அறிவிக்கப்படாத ஒரு தடையினை அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. சில ஆண்டுகளாக பல மாநிலங்களில் மாணவர் பேரவைத்தேர்தல் நடக்கவில்லை. இதன் மூலம் ஜனநாயகப்பூர்வமான கல்வி நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து மாணவர்கள் தடுத்து நிறுத்தப்படு கிறார்கள். இதை எதிர்த்து நாடு முழுவதும் வலுவானப் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் கட்டியமைக்கும் என்று தீர்மானம் கூறியுள்ளது.Read more...
Sunday, 9 September 2012

சமூக வருமானங்களையும் சொத்துக்களையும் தனியாருக்கு மாற்றுகிறது மத்திய அரசு பேரா.சி.பி.சந்திரசேகர் குற்றச்சாட்டு

0 comments
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசின் பங்கு இல்லை என்ற நிலையையும் தாண்டி சமூக வரு மானங்களையும், சொத்துக்களையும் தனியார் மூலதனத்துக்கு ஆதரவாக மாற்ற திட்டமிட்ட முயற்சியை அரசு இயந்திரம் மேற்கொண்டு வருகிறது என ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் சி.பி.சந்திரசேகர் கூறினார்.மதுரையில் புதனன்று இந்திய மாணவர் சங்கத்தின் 14வது அகில இந்திய மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது: இந்திய மாணவர் சங்கத்தின் 14 வது மாநாடு சமீபகால வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் நடை பெறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நவீன முதலாளித்துவத்தின் உட்கூறு ஆழமான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. உலகப் பொருளாதாரப் பெரு மந்தக் காலத்திற்குப் பிறகு முதலாளித்துவப் பொருளாதாரமும் அரசிய லும் மாபெரும் சவாலாக இன்று மாறி, மக்க ளின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரமே கேள் விக் குறியாகியிருக்கிறது. முதலாளித்துவ நாடுகளில் வேலையின் மையின் விகிதம் உழைப்பாளர்களின் எண் ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது. பெரு மந்த காலத்தில் 25 சதவீதமாகியிருந் ததை ஒத்ததாக இருக்கிறது.

1930களில் ஜெர்மனியை பாசிசம் ஆட் கொண்டிருந்த காலத்தில் இளைஞர்களின் வேலையின்மை 50 சதவீதமாக இருந்ததை போன்றே இன்றும் இளைஞர்களின் வேலை யின்மை 50 சதவீதத்தை கடந்து உள்ளது. இத் தகைய நிலை தொடர்ச்சியான வேலையின் மையையும், தொழிலாளர் அணியிலிருந்து இளைஞர்களை அதிக காலத்திற்கு வெளி யேற்றும் விதமாகவும் இருப்பதைக் குறிக்கிறது. இத்தகைய சூழலின் விளைவாக எழுந்த போராட்டம், முதலாளித்துவத்திற்கு மாற்றாக நாம் கூறும் சோஷலிசப் பாதையை நோக்கி பயணிப்பது இன்றியமையாததாகும். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சிலி, எகிப்து நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அரசியல் போராட்டம் பல்கலைக் கழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக நிலையற்ற வேலைச் சந்தைக் கும் அவசியமாகக் கருதப்படுகிற கல்வி தனி யார்மயமாக்கப்பட்டு, கட்டணங்கள் உயர்த் தப்பட்டு, தரம் தாழ்ந்து இருப்பதைக் காண் கிறோம். நம்மைப்போன்ற அரசாங்கங்களும் எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றன. உயர்ந்து வரும் வாழ்க்கைத் தரமும் கட்டணக் கொள் ளையின் அதிகரிப்பும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. முன்பு அமெரிக்காவின் நோயாகக் கருதப்பட்டது இன்று உலகையே தாக்கும் தொற்று நோயாகப் பரவி வருகிறது. பெரும்பான்மையானோர் அனைத்தையும் இழக்கின்ற போதிலும் குறைந்த எண்ணிக் கையிலானோர் ஆதாயம் பெறுவது வேலை யின்மை பெருகுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம். அதிபர் ஒபாமா அவர்களின் ஆலோ சகர் ஆலன் க்ருகரின் கூற்றுப்படி கடந்த 30 ஆண்டுகளில் கீழ்தட்டில் உள்ள 99 சதவீத மக்களின் வருமானத்தில் இருந்து 1.1 டிரில்லி யன் டாலர் அளவிற்கான பணம், வெறும் 1 சத வீதமாக உள்ள மேல்தட்டு மக்களுக்கு ஒவ் வொரு ஆண்டும் கைமாறி வருகிறது.

இருப்பினும் சந்தை அடிப்படைவாதத்தை முன்னிறுத்துகிற நவீன தாராளமயம், சந் தையே திறம்பட செயல்படும் பொருளாதார அமைப்பு என்பதோடு இல்லாமல் அந்நிய மற்றும் உள்நாட்டு தனியார் மூலதனத்தின் பங் கையே நியாயப்படுத்துகிறது. வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசின் பங்கு இல்லை என்ற நிலையையும் தாண்டி சமூக வருமானங்களையும், சொத்துக்களை யும் தனியார் மூலதனத்துக்கு ஆதரவாக மாற்ற திட்டமிட்ட முயற்சியை அரசு இயந்திரம் மேற் கொண்டு வருவதைக் காண்கிறோம். நவீன தாராளமயத்தை துhக்கிப் பிடித்த அமெரிக்காவில் பெருமளவிலான கடன் நெருக்கடியின் விளைவாக பெருத்த பின்ன டைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலை நவீன தாராளமய யுகத்தின் இறுதிக் கட்டத் தையே குறிக்கிறது. அமெரிக்காவில் உயர் கல்வியில் அரசு மற்றும் தனியாரின் பங்கு இருந்து வந்தது. 1970 களின் தொடக்கத்தில் நவீன தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. 1980ல் தொடங்கி 2008 வரை பணவீக்கத்தை கணக் கில் எடுத்துக்கொண்டால் - 4 வருட பட்டப் படிப்பிற்கான கட்டணம் பொதுக் கல்வி நிறு வனங்களில் 235 சதவீதமும், தனியார் நிறு வனங்களில் 179 சதவீதமும் உயர்ந்துள்ளது. உயர் கல்விக்காக கடன் பெறுவதைத் தவிர வேறு வழியில்லாத சூழல் உருவாகி இருக் கிறது. இந்நிலை அமெரிக்காவோடு நில்லா மல் பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் உயர் கல்விக்கான வசதிகள் எள்ளளவும் போது மானதாக இல்லை. 18-23 வயதுக்கு உட்பட்ட வர்களில் வெறும் 15 சதவீதத்தினர் மட்டுமே 2009-10ல் உயர்கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றனர்.

தாழ்த்தப்பட்ட/பழங்குடியினரின் உயர்கல்வி வாய்ப்பு 11.1 சதவீதம் மற்றும் 10.3 சதவீதம் ஆகவே இருக்கிறது. 18-23 வயதிற்கு உட்பட்ட 1 லட்சம் பேருக்கு வெறும் 5 கல்லுhரி மட்டுமே இருக்கும் மாநிலங்கள் அதிகமாக உள்ளன.உயர்கல்வி வாய்ப்புகளில் விரிவாக்கம் இருக்கும் சூழலிலும் இத்தகைய குறைபாடு காணப்படுகிறது. 1990-91 லிருந்து 2007-08ம் ஆண்டு வரை கல்லூரிகளின் எண்ணிக்கை 4900லிருந்து 410 ஆகவும், பல்கலைக்கழகங் களின் எண்ணிக்கை 180லிருந்து 410 ஆக வும், தொழில்துறை நிறுவனம் 900ல் இருந்து 6900 ஆகவும் உயர்ந்துள்ளது. கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் தனியார்களின் ஊடுருவலையே இவை குறிக் கின்றன.

2011 வரை 130 நிகர்நிலைப் பல் கலைக் கழகங்கள் உருவாகி இருக்கின்றன. பல மாநில அரசுகள் தனியார் பல்கலைக் கழ கங்களை ஆதரித்து வருகின்றன. சட்டத்தின் படி எந்த ஒரு கல்வி நிறுவனமும் லாபத்திற் காக செயல்பட இயலாது. உயர்கல்வியில் வணிக நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பான தாக இருக்கும் நிலையிலும் இந்நிறுவனங்கள் வேறு ஒரு பெயரில் லாபம் கொழிக்கும் நிறு வனங்களாகவே இருக்கின்றன. உயர்கல்விக் காக நடைமுறைகளில் அரசு மாற்றம் கொண்டுவரும் என்ற எண்ணத்தின் அடிப்ப டையிலே தனியார் நிறுவனங்கள் கூட்டம் கூட்டமாக பெருகி வருகின்றன. நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக உலகத்தரம் வாய்ந்த கல்வி என்ற பெயரில் உயர்கல்விக்கான நடைமுறைகளை மாற்ற அரசு முயன்று வருகிறது. அந்நிய உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த மசோதா நாடா ளுமன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. 11.02.2000ம் தேதியிட்ட பத்திரிகை குறிப் பின்படி கல்வித்துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்நியர்களால் கல்விச் சேவை வணிகமய மாக்கப்படுவதோடு இங்கு ஈட்டப்படுகிற லாபத்தையும் நாட்டிலிருந்து வெளியேற்ற இக்கொள்கை அடிகோலுகிறது. கல்வித்துறையில், 0.19 மில்லியன் டால ராக தொடங்கிய அந்நிய நேரடி முதலீடு, செப் டம்பர் 2011ல் 448.97 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. லாபத்தை கொண்டு செல்லும் நோக்கோடு வந்துள்ள இம்மூலதனம் பெரும் பாலும் 75 சதவீதம் மொரிஷியஸ் பாதை வாயி லாகவே வந்துள்ளது.

அந்நிய முதலீட்டாளர் களை கவரும் களமாக இந்தியக் கல்வித் துறை மாறியிருக்கிறது. காட் ஒப்பந்தத்தின்படி கல்வியும் சேவை என்பதால் புதிய மசோதா மூலமாக அரசு நடை முறைகளை மாற்ற முயற்சித்து வருகிறது. லாபத்தை வெளியேற்ற நினைக்கும் அந்நிய முதலீட்டாளர்கள், வணிக கல்வி நிறு வனங்கள் உரிமைகளை காக்கும் வகையில் காட் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள விருக்கின்றனர். அந்நியர்களுக்கான களம் உருவாக்கப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் வழிமுறைகள் மாற்றியமைக்கப்படுவதே தற் போது இடம் பெற்று வருகிறது. அந்நியர்களுக் கான முறைகள் மாற்றப்பட்டால் உள்ளூர் தனியார்களுக்கும் பின்னர் அது பொருந்தும். தரமான, ஜனநாயக ரீதியிலான உயர்கல்வி பெறுவதற்கான போராட்டம் என்பது நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமே. அத்தகைய போராட்டத்தை முற்போக்கு மாணவர் இயக்கமான இந்திய மாணவர் சங்கம் தலைமையேற்று நடத்தி வருகிறது. ஆகவே நான் பெருமையோடு உங் களை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Read more...

மதுரையில் எஸ்.எப்.ஐ அகில இந்திய மாநாடு - மாணவர்கள் லட்சியப் பேரணி

0 commentsமதுரை,செப்.4-

இந்தியாவில் ஈடு இணையற்ற மாணவர் சங்கமாய், மாணவர்களின் நலனுக்காகப் போராடும் சங்கமாக திகழும்  இந்திய மாணவர் சங்கத்தின்  14வது அகில இந்திய மாநாடு மதுரை யில்  பேரணி, பொதுக்கூட்டத்து டன் செப்- 4 ம் தேதி துவங்கியது. சுதந்திர போராட்ட பாரம்பரியம் கொண்ட   இந்திய மாணவர் சங்கத் தின் அகில இந்திய மாநாடு கூடல் மாநகராம் மதுரையில் செப்4 ம் தேதி முதல் 7ம் தேதி வரை  நடைபெறு கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 750 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்  இம்மா நாட்டில் கலந்து கொண்டுள்ள னர்.

கல்வி வணிகமயத்திற்கு எதிராக வும் கல்வித்துறையை முற்றிலும் மத்திய அரசாங்கத்திற்குகீழ் கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், கல்வி வளாகத்தில் ஜனநாயக உரி மைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை வலுப்படுத்தவும் அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தவும் மதுரையில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்க அகில இந்திய மாநாடு வியூகங்களை வகுக்க உள்ளது.பொது கல்வியை பலப்படுத்திட வும், கல்வி நிலையங்களில் ஜனநாயக உரிமையை காத்திட வலியுறுத்தியும் செப்டம்பர்4ம் தேதி  மதுரை  தயிர் மார்க்கெட்டிலிருந்து மாணவர்க ளின் லட்சியப் பேரணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அண் ணாதுரை தொடக்கி வைத்தார்.
தமி ழகத்தின் பாரம்பரிய கலை, பண் பாட்டு நிகழ்வுகளோடு மாணவர்கள் பேரணியில் அணிதிரண்டு வந்தனர். அனைவருக்குமான பொதுக்கல்வி யைப் பலப்படுத்த வேண்டும் என்ற முழக்கத்துடனும், அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்துடனும் கைக ளில் பதாகைகளை ஏந்தி பேரணியில் மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் அனைத்துக்கல்லூரி களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவியர் இப்பேரணி யில் திரண்டு வந்தனர். அவர்களுடன் மாநாட்டிற்கு வந்துள்ள இந்தியா வின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

14 வது மாநாட்டைக் குறிக்கும் வகையில் 14 பிரம்மாண்டமான வெண்கொடிகளை ஏந்தி அணி வகுக்க, சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கே.பிஜூ எம்.பி., பொதுச் செயலாளர் ரித்த பிரதா பானர்ஜி, துணைத் தலைவர் சிவதாசன், மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், செயலாளர் ஜோ.ராஜ்மோகன், உள்ளிட்ட தலைவர்கள் அணி வகுத் தனர். ஆந்திர பிரதேசத்திலிருந்து வரு கை தந்த நூற்றுக்கணக்கான மாண வர்கள், பீகார், கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம், ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து நூற்றுக் கணக்கான மாணவர்கள் அவரவர் மொழிகளில் கல்வியை காப்போம்.

தேசம் காப்போம், எல்லோருக்கும் கல்வி கொடு எல்லோருக்கும் வேலை கொடு, கல்வியை வியாபார மயமாக் காதே என உணர்ச்சிமிகு முழக்க மிட்டவாறே மதுரை வீதிகளில் அணிவகுத்தனர்.அதைத்தொடர்ந்து தமிழகத்திலி ருந்து வெண் சீருடை அணிந்த பல் லாயிரம் மாணவ- மாணவியர் அணி வகுத்தனர். மாவட்ட வாரியாக பல்லாயிரக்கணக்கான மாணவ- மாணவியர், தப்பாட்டத்துடனும், ஆட்டம்பாட்டத்துடனும் கோரிக்கை முழக்கங் களை முழங்கி யவாறே பேரணியாய் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்து சுமார் 25 ஆயிரம் மாண வர்கள் இந்த மாபெரும் பேரணியில் பங்கேற்றனர். வழி நெடுகிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், சிஐடியு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், மூட்டா, அரசு ஊழியர் சங்கம், அறிவியல் இயக்கம், காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் முழக்க மிட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

மதுரை மாநகர மக்கள் சார் பிலும்,தொழிற்சங்கங்கள் சார்பி லும் பல்வேறு இடங்களில் மாணவர் சங்கப் பேரணிக்கு உற்சாக வரவேற் பளிக்கப்பட்டது.  இதையடுத்து கீழமாசிவீதி, வடக்குமாசிவீதி வழியாக பேரணி மேல-வடக்கு மாசிவீதி சந்திப்பிற்கு  சென்றடைந் தது.அங்கு அமைக்கப் பட்டுள்ள மாணவ தியாகிகள் நினைவு மேடை யில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு சங்கத் தின் அகில இந்தியத் தலைவர் பி.கே. பிஜு எம்.பி தலைமை வகித்தார். மாநிலச்செயலாளர் ஜோ.ராஜ் மோகன் வரவேற்புரையாற்றினார்.  இந்திய மாணவர் சங்க முன் னாள் அகில இந்திய தலைவர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி துவக்கவுரை யாற்றினார்.

சுதந்திரப்போராட்ட வீரரும், மாநாட்டு வரவேற்புக்குழு கௌரவத்தலைவருமான  என்.சங்கரய்யா, டி.கே.ரங்கராஜன் எம்.பி., மாணவர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் ரித்தபிரதா பானர்ஜி, அகில இந்திய துணைத் தலைவர்  சிவதாசன், சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாணவர் சங்க மாநிலத்தலைவர் கே.எஸ். கனகராஜ், மாநிலச்செயலாளர் ஜோ. ராஜ்மோகன்  ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். திருப்பூர் லெஜிம் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி   நடைபெற்றது. மாநாடு துவக்கம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை அரங்கில்  தியாகிகள் சோமு - செம்பு நகரில் தியாகிகள் பாஸ்கரன் - சுபாஷ் சக்கரவர்த்தி அரங்கத்தில்  செப்டம்பர் 5 ம் தேதி  காலை 9 மணியளவில் தோழர் பி.ராமமூர்த்தி சிலையிலிருந்து எடுத்து வரப்படும் அகில இந்திய மாநாட்டின் தியாகி கள் நினைவு ஜோதி, கொடி பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியும், கொடி யேற்றமும் நடைபெறுகிறது. அகில இந்திய தலைவர் பி.கே.பிஜு எம்.பி. 
Read more...
Saturday, 1 September 2012

Sfi 14th All India Conference Flag March Starts from Kerela..!

0 comments
SFI 14 th All India Conference Flag march starts from kerela kannur district from the place of Student Matyr's of Koothaparamba with thousands of students Revolutionary Greetings. The Sfi All India Conference flag march headed by the Com. Sivadasan, All India Joint Secretary and Inaugurated by Com.E.P.Jayaraman and in presence of Com. P.K.Biju.
Read more...

இந்திய மாணவர் சங்க மாநாடு கொடிப்பயணம் துவங்கியது

0 comments
மதுரையில் செப்டம்பர் 4ம் தேதி துவங்க வுள்ளஇந்திய மாண வர் சங்கத்தின் 14வது அகில இந்திய மாநாட்டில் ஏற்றப்பட வுள்ள வெண்கொடியை எடுத்து வரும் பயணம், கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள கூத்துப்பரம்பில் கல் விக்கான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளின் நினைவிடத் திலிருந்து வெள்ளியன்று பேரெழுச்சியுடன் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர் சங்க அகில இந்திய இணைச் செயலா ளர் சிவதாசன் தலைமையிலான குழுவினரிடம், சங்கத்தின் கொடியை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் இ.பி. ஜெயராஜன் உணர்ச்சிமிகு முழக்கங்களுக்கிடையே எடுத்துக் கொடுத்தார். செப்டம்பர் 2ம் தேதி கோவை மாவட்டம் வாளையார் வந்து சேரும் பயணக்குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் படுகிறது. மாநாட்டை நோக்கி கும்பகோணத்திலிருந்து குழந் தைகள் நினைவு ஜோதிப்பயணம் செப்டம்பர் 1 காலை 10 மணிக்கு துவங்குகிறது.
Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com