Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Monday, 16 July 2012

“கடுமையான ‘சீர்திருத்தங்களை’ நிறைவேற்றியே தீர வேண்டும்” - இந்திய அரசுக்கு ஒபாமா கட்டளை..!

0 comments
“கடுமையான ‘சீர்திருத்தங்களை’ நிறைவேற்றியே தீர வேண்டும்” அமெ.முதலாளிகளை திருப்திபடுத்துவீர்!
மன்மோகன் அரசுக்கு ஒபாமா கட்டளை
 
அமெரிக்க முதலாளிகளின் சமூகத்தை திருப்தி படுத்தும் விதத்தில் இந்திய அரசு தனது உள்நாட்டில் மிகக்கடுமையான பொருளாதார ‘சீர்திருத்தங்களை’ உடனடியாக மேற்கொண்டே தீரவேண்டுமென அமெ ரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நிர்ப்பந்தித்துள்ளார். சில்லரை வர்த்தகம் உள்பட பல்வேறு துறை களில் அந்நிய நேரடி முதலீடு நுழைய முடியாமல் இருக்கும் சூழ்நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், அதைச் செய்யும்போதுதான் இந் தியாவில் முதலீடு செய்வதற்கான உகந்த சூழ்நிலை நிலவுகிறது எனக் கருத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.வரலாற்றில் முன்னெப்போதையும் விட சமீப ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு இந் தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு மிக மிக நெருக்கமான உறவு கொண்டு கூடிக்குலாவி வருகிறது. அணுசக்தி உடன்பாடு, ராணுவ நெருக்கம், தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகள் தீவிர அமலாக்கம் என பல்வேறு விதங்களில், இந்திய அரசுதனது சுயேச்சையான வெளியுறவுக்கொள்கையை கைவிட்டு, அமெரிக் காவின் இளைய கூட்டாளியாக தன்னை நிலைநாட் டிக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

எனினும், கூட்டணியில் நிலவும் கருத்து முரண் பாடுகள் காரணமாகவும், நாடு முழுவதும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி தொழிற்சங்கமான ஐஎன்டியுசி உள்பட அனைத்து மத்திய தொழிற்சங் கங்களின் வரலாறு காணாத உறுதிமிக்க கூட்டுப் போராட்டங்கள் காரணமாகவும் சில முக்கியத துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக் கும் முடிவினை தற்காலிகமாக மன்மோகன் அரசு தள்ளிப்போட்டு வருகிறது. குறிப்பாக சில்லரை வர்த் தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க இந்த அரசுதீவிர முயற்சி மேற்கொண்டது. எனினும் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளி யிலும் எழுந்த மிகக்கடுமையான எதிர்ப்பின் காரண மாக அந்த முடிவை தற்காலிகமாக தள்ளிவைத் துள்ளது. ஆனாலும் கூட புறவாசல் வழியாக அதற் கான அனுமதியை அளிக்க மன்மோகன் அரசு தீவிர மான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதேபோல வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை, ஓய்வூதியத்துறை, உயர்கல்வித்துறை உள்பட பல் வேறு முக்கியத் துறைகளை அந்நிய பன்னாட்டு பெரும் முதலாளிகளுக்கு முற்றிலும் திறந்துவிடுவ தற்கும் மன்மோகன் சிங் அரசு தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளது.

இதற்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வலுத்துள்ளது. ஆனால், அந்நிய பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு தீனிபோடும் விதத்தில் மேற்கொள்ளப் படும் இந்த முயற்சிகளை உள்நாட்டு அரசியல் சூழல் காரணமாக மன்மோகன் அரசு தற்காலிகமாக தள்ளிப்போட்டிருப்பதைக் கூட அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக் கைகளை உடனடியாக மேற்கொள்ளாததால், இந்தி யாவின் பிரதமர் மன்மோகன் சிங் தனது செயல் திறனை இழந்துவிட்டார் என்றும், அவர் மந்தமாக இருக் கிறார் என்றும் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவி லிருந்து வெளியாகும் ‘டைம்’ ஏடு விமர்சனம் செய்தது.ஒபாமா மிரட்டல்இந்நிலையில், டைம் ஏடு கூறிய அதே கருத்துக் களை வேறு வார்த்தைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு வாஷிங்டனில் ஞாயிறன்று ஒபாமா அளித்த பேட்டியில், இன்றைய உலகப்பொருளாதார நெருக்கடிச் சூழலில் இந்தியா வின் நடவடிக்கைகள், இந்தியா-பாகிஸ்தான் உறவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முனைப்புகள் எனப் பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தியாவில் வெளிநாட்டு முதலாளிகள் முத லீடு செய்வதற்கான சூழல் பாதகமாக இருக்கிறது என்பதை நேரடியான வார்த்தைகளில் கூறாத ஒபாமா, அமெரிக்க முதலாளிகள் சமூகம் இப்படிக் கருதுகிறது என்று கூறினார்.

“அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக உறவில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அமெரிக்க முதலாளிகள். அவர்கள் இந் தியாவில் முதலீடு செய்வதற்கான சூழல் மோசம டைந்து வருவதாகக் கவலைப்படுகிறார்கள். இந்தியா வில் முதலீடு செய்வது கடினமாக இருக்கிறது என்று என்னிடம் கவலையுடன் அவர்கள் தெரிவிக்கிறார் கள். சில்லரை வர்த்தகம் போன்ற ஏராளமான துறை களில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காமல் இந்தியா தயங்கிக்கொண்டிருக்கிறது அல்லது தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியா வளர வேண்டுமானால் இதை அனுமதிக்க வேண்டும்” என்று ஒபாமா தனது பேட்டியில் கூறினார்.எனினும், இந்தியாவில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு எந்த ஒரு தீர்வினையும் அமெரிக்கா கூறப்போவதில்லை என்றும், இந்தியாவின் பொரு ளாதார எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமென் பதை இந்தியர்கள் தீர்மானிக்கவேண்டுமென்றும் அவர் கூறினார். மேலும், “அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட் டாளியாக தொடரவேண்டும். அது நீடிக்கவேண்டுமா னால் மிகக்கடுமையான சீர்திருத்த நடவடிக்கை களை செய்தே தீரவேண்டும். மிகத்தீவிரமான பொரு ளாதார சீர்திருத்த பாதையில் இந்திய அரசு செல்ல வேண்டும்” என்றும் ஒபாமா இந்திய அரசுக்கு கட்டளை பிறப்பித்தார். தனது பேட்டியின்போது இந் திய பிரதமர் மன்மோ கன் சிங்கை வெகுவாகப் புகழ்ந்த பாரக் ஒபாமா, “அவர் எனது நெங்கிய நண்பர்; நெருங் கிய கூட்டாளி. நான் அவரோடு மிக நெருக்கமாக பணியாற்றி வரு கிறேன்”என்றும் குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரம்இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்தும், காஷ்மீர் பிரச்சனை குறித்தும் தனது பேட்டியின்போது ஒபாமா கருத்து தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு வெளியிலிருந்து எந்த ஒரு தீர்வையும் கூறமுடியாது எனக்குறிப்பிட்ட அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த இரண்டு நாடுகளும் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா உள்பட வளரும் நாடுகளோடு மிக நெருங்கிய கூட்டாளியாக செயல்படவும், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரே லியா ஆகிய தனது மிக நெருங்கிய கூட்டாளிக ளோடு மேலும் உறவை வலுப்படுத்திக்கொள்ளவும் தமது அரசு பணியாற்றி வருவதாக ஒபாமா தெரி வித்தார்.
(பிடிஐ)

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com