
கல்வியில் பிரந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர்
சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,காரைக்கால்,மாஹே,யா
ணம்
உள்ளிட்ட பிரதேச மாணவர்களுக்கு உயர்கல்வியில் சமவாய்ப்பை ஏற்படுத்தும்
வகையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.தற்போது மாணவர்களிடேயே
பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பிரந்திய இடஒதுக்கீட்டை உடனே
ரத்து செய்ய வேண்டும்.அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறைகளை
போக்க வேண்டும்.கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர
வேண்டும்.கல்வி உரிமை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.தனியார் கல்வி
நிறுவனங்களின் கட்டன கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது.,
புதுச்சேரி
கல்வித்துறை அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க
பிரதேச தலைவர் அரிகரன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் ஆனந்து,இணை
செயலாளர்கள் ரஞ்சித்,சாரதி,வாலிபர் சங்க நிர்வாகிகள்
பி.சரவணன்,ஆர்.சரவணன்,கதிரவன்,பிரபுராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட
மாணவர்கள்
இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.பின்னர் கல்வித்துறை அதிகாரியை சந்தித்து
மாணவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட
அதிகாரி கழிவறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக மொபைல் டாய்லட் வசதி செய்து
தருகிறேன் என்று உறுதியளித்தார்.முன்னதாக மாணவர்கள் வகுப்புகளை புறகனித்து
ஊர்வலமாக சென்று கல்வித்துறை முன்பு போராட்டத்தில்
ஈடுப்பட்டனர். |
|
|