Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 27 July 2012

இந்திய மாணவர் சங்க அகில இந்திய மாநாடு: புதுவையில் வரவேற்பு குழு அமைப்பு

0 comments
புதுச்சேரி,ஜூலை 23

இந்திய மாணவர் சங்கத் தின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 4 முதல் 10 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இம்மா நாட்டை யொட்டி புதுச் சேரியில் வரவேற்பு குழு அமைப்புக்கூட்டம் நடை பெற்றது.இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் அரிகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணைச் செய லாளர் ரஞ்சித் வரவேற் றார்.சங்கத்தின் தமிழ்மாநில துணை தலைவர் ஸ்டாலின் சிறப்புரையற்றினார்.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் ஆனந்து, சங்கத்தின் முன்னால் தலைவர்கள் பெருமாள், லெனின்துரை ,பிரபுராஜ்,கதிரவன் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.முருகன்,வி.தொ.ச பிரதேச செயலாளர் மணி பாலன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச நிர் வாகிகள் சரவணன், பாஸ் கர், லிகாய் சங்க கல்விக்குழு தலைவர் ராம்ஜி உள்ளிட்ட திரளான கல்வியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண் டனர்.மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக கல்வி யாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, கவுரவ தலைவராக லாஸ் பேட்டை மோதிலால் நேரு தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் உதயகுமார், புரவ லராக பாலமோகனன், செய லாளராக ஆனந்து, பொரு ளாளராக கதிரவன் உள்ளி ட்ட 90பேர் கொண்ட வர வேற்புக்குழு தேர்வு செய் யப்பட்டது.
மாநாட்டில் புதுச்சேரி யிலிருந்து 2ஆயிரம் மாண வர்களை பங்கேற்க செய் வது.மேலும் மாநாட்டை யோட்டி புதுச்சேரியில் ஆகஸ்ட் மாதத்தில் மாண வர் கலைவிழா மற்றும் கல்வி கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.மேலும் கல்வி பிரச்சனைகளை முன்வைத்தும்,   சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகையிலை எதிர்ப்பு, ஈவ்டீசிங் - ராகிங்கிற்கு எதிராக புதுவையின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
Read more...
Thursday, 19 July 2012

மாணவர்களை கேவலப்படுத்திய தனியார் பள்ளி நிர்வாகம்..!

0 comments
THE HINDU மற்றும் NEW INDIAN EXPRESS நாளிதழ்களில் வெளி வந்து உள்ள இரு வெவ்வேறு செய்திகள் நிச்சயம் உங்கள் கவனத்திற்கு வராமலே போய் விடும் அபாயத்தை உணர்ந்தே இந்தப் பதிவு.

முதல் நிகழ்வு பெங்களூருவில் நிகழ்ந்து உள்ளது.RIGHT TO EDUCATION சட்டப்படி 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணைப்படி தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஏழை குழந்தைகளை சொல்ல இயலாத அளவிற்கு கேவலப்படுத்தி உள்ளது அந்த பள்ளி நிர்வாகம்.பள்ளி வழங்க வேண்டிய அடையாள அட்டைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை.கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்ட அவர்கள் வீட்டுப்பாடம் கூட எழுதிவர அனுமதிக்கப்படவில்லை.உச்சகட்ட கொடுமையாக அந்த ஏழைக் குழந்தைகளின் தலைமுடியை வெட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்(PICTURE).தனியார் பள்ளிகள் என்ன புடுங்கின என்று இனி யாரும் கேக்க முடியாது.உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டிக் கொண்டே சாணியில் முங்கி எடுத்த செருப்பைக் கொண்டு அந்த பள்ளி நிர்வாகிகளை அடிக்க வேண்டுமா,வேண்டாமா ?
ஏழைகளின் நலனுக்கு
சட்டம் சாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை இந்த நாட்டில்.
Read more...
Monday, 16 July 2012

“கடுமையான ‘சீர்திருத்தங்களை’ நிறைவேற்றியே தீர வேண்டும்” - இந்திய அரசுக்கு ஒபாமா கட்டளை..!

0 comments
“கடுமையான ‘சீர்திருத்தங்களை’ நிறைவேற்றியே தீர வேண்டும்” அமெ.முதலாளிகளை திருப்திபடுத்துவீர்!
மன்மோகன் அரசுக்கு ஒபாமா கட்டளை
 
அமெரிக்க முதலாளிகளின் சமூகத்தை திருப்தி படுத்தும் விதத்தில் இந்திய அரசு தனது உள்நாட்டில் மிகக்கடுமையான பொருளாதார ‘சீர்திருத்தங்களை’ உடனடியாக மேற்கொண்டே தீரவேண்டுமென அமெ ரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நிர்ப்பந்தித்துள்ளார். சில்லரை வர்த்தகம் உள்பட பல்வேறு துறை களில் அந்நிய நேரடி முதலீடு நுழைய முடியாமல் இருக்கும் சூழ்நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், அதைச் செய்யும்போதுதான் இந் தியாவில் முதலீடு செய்வதற்கான உகந்த சூழ்நிலை நிலவுகிறது எனக் கருத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.வரலாற்றில் முன்னெப்போதையும் விட சமீப ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு இந் தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு மிக மிக நெருக்கமான உறவு கொண்டு கூடிக்குலாவி வருகிறது. அணுசக்தி உடன்பாடு, ராணுவ நெருக்கம், தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகள் தீவிர அமலாக்கம் என பல்வேறு விதங்களில், இந்திய அரசுதனது சுயேச்சையான வெளியுறவுக்கொள்கையை கைவிட்டு, அமெரிக் காவின் இளைய கூட்டாளியாக தன்னை நிலைநாட் டிக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

எனினும், கூட்டணியில் நிலவும் கருத்து முரண் பாடுகள் காரணமாகவும், நாடு முழுவதும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி தொழிற்சங்கமான ஐஎன்டியுசி உள்பட அனைத்து மத்திய தொழிற்சங் கங்களின் வரலாறு காணாத உறுதிமிக்க கூட்டுப் போராட்டங்கள் காரணமாகவும் சில முக்கியத துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக் கும் முடிவினை தற்காலிகமாக மன்மோகன் அரசு தள்ளிப்போட்டு வருகிறது. குறிப்பாக சில்லரை வர்த் தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க இந்த அரசுதீவிர முயற்சி மேற்கொண்டது. எனினும் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளி யிலும் எழுந்த மிகக்கடுமையான எதிர்ப்பின் காரண மாக அந்த முடிவை தற்காலிகமாக தள்ளிவைத் துள்ளது. ஆனாலும் கூட புறவாசல் வழியாக அதற் கான அனுமதியை அளிக்க மன்மோகன் அரசு தீவிர மான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதேபோல வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை, ஓய்வூதியத்துறை, உயர்கல்வித்துறை உள்பட பல் வேறு முக்கியத் துறைகளை அந்நிய பன்னாட்டு பெரும் முதலாளிகளுக்கு முற்றிலும் திறந்துவிடுவ தற்கும் மன்மோகன் சிங் அரசு தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளது.

இதற்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வலுத்துள்ளது. ஆனால், அந்நிய பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு தீனிபோடும் விதத்தில் மேற்கொள்ளப் படும் இந்த முயற்சிகளை உள்நாட்டு அரசியல் சூழல் காரணமாக மன்மோகன் அரசு தற்காலிகமாக தள்ளிப்போட்டிருப்பதைக் கூட அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக் கைகளை உடனடியாக மேற்கொள்ளாததால், இந்தி யாவின் பிரதமர் மன்மோகன் சிங் தனது செயல் திறனை இழந்துவிட்டார் என்றும், அவர் மந்தமாக இருக் கிறார் என்றும் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவி லிருந்து வெளியாகும் ‘டைம்’ ஏடு விமர்சனம் செய்தது.ஒபாமா மிரட்டல்இந்நிலையில், டைம் ஏடு கூறிய அதே கருத்துக் களை வேறு வார்த்தைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு வாஷிங்டனில் ஞாயிறன்று ஒபாமா அளித்த பேட்டியில், இன்றைய உலகப்பொருளாதார நெருக்கடிச் சூழலில் இந்தியா வின் நடவடிக்கைகள், இந்தியா-பாகிஸ்தான் உறவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முனைப்புகள் எனப் பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தியாவில் வெளிநாட்டு முதலாளிகள் முத லீடு செய்வதற்கான சூழல் பாதகமாக இருக்கிறது என்பதை நேரடியான வார்த்தைகளில் கூறாத ஒபாமா, அமெரிக்க முதலாளிகள் சமூகம் இப்படிக் கருதுகிறது என்று கூறினார்.

“அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக உறவில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அமெரிக்க முதலாளிகள். அவர்கள் இந் தியாவில் முதலீடு செய்வதற்கான சூழல் மோசம டைந்து வருவதாகக் கவலைப்படுகிறார்கள். இந்தியா வில் முதலீடு செய்வது கடினமாக இருக்கிறது என்று என்னிடம் கவலையுடன் அவர்கள் தெரிவிக்கிறார் கள். சில்லரை வர்த்தகம் போன்ற ஏராளமான துறை களில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காமல் இந்தியா தயங்கிக்கொண்டிருக்கிறது அல்லது தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியா வளர வேண்டுமானால் இதை அனுமதிக்க வேண்டும்” என்று ஒபாமா தனது பேட்டியில் கூறினார்.எனினும், இந்தியாவில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு எந்த ஒரு தீர்வினையும் அமெரிக்கா கூறப்போவதில்லை என்றும், இந்தியாவின் பொரு ளாதார எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமென் பதை இந்தியர்கள் தீர்மானிக்கவேண்டுமென்றும் அவர் கூறினார். மேலும், “அமெரிக்காவுடன் இந்தியா ஒரு கூட் டாளியாக தொடரவேண்டும். அது நீடிக்கவேண்டுமா னால் மிகக்கடுமையான சீர்திருத்த நடவடிக்கை களை செய்தே தீரவேண்டும். மிகத்தீவிரமான பொரு ளாதார சீர்திருத்த பாதையில் இந்திய அரசு செல்ல வேண்டும்” என்றும் ஒபாமா இந்திய அரசுக்கு கட்டளை பிறப்பித்தார். தனது பேட்டியின்போது இந் திய பிரதமர் மன்மோ கன் சிங்கை வெகுவாகப் புகழ்ந்த பாரக் ஒபாமா, “அவர் எனது நெங்கிய நண்பர்; நெருங் கிய கூட்டாளி. நான் அவரோடு மிக நெருக்கமாக பணியாற்றி வரு கிறேன்”என்றும் குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரம்இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்தும், காஷ்மீர் பிரச்சனை குறித்தும் தனது பேட்டியின்போது ஒபாமா கருத்து தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு வெளியிலிருந்து எந்த ஒரு தீர்வையும் கூறமுடியாது எனக்குறிப்பிட்ட அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த இரண்டு நாடுகளும் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா உள்பட வளரும் நாடுகளோடு மிக நெருங்கிய கூட்டாளியாக செயல்படவும், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரே லியா ஆகிய தனது மிக நெருங்கிய கூட்டாளிக ளோடு மேலும் உறவை வலுப்படுத்திக்கொள்ளவும் தமது அரசு பணியாற்றி வருவதாக ஒபாமா தெரி வித்தார்.
(பிடிஐ)
Read more...
Monday, 9 July 2012

பிரந்திய இடஒதுக்கீட்டை உடனே ரத்து செய்ய வேண்டும் - எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்..!

0 comments
புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்வியில் பிராந்திய இடஒதுக்கீடு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இப் பிரச்சனை பிராந்தியங்க ளுக்கிடையே பகைமை உணர்வை வளர்த்து வருகி றது. இது மிகவும் கவலை யளிப்பதாகும். புதுச்சேரி மாநிலத்தில் +2 மாணவர்க ளின் தேர்ச்சி விகிதத்துக்கு ஏற்ப அரசு கல்வி நிறுவ னங்களில் உயர்கல்விக்கான வாய்ப்பு மிகக் குறைவா கவே உள்ளது.

தேவைக்கு அதிகமாக உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு இடஒதுக்கீடும் மிகக் குறைவானதாகும். ஆகவே, உயர்கல்வியில் இலவச கல்விக்கான வாய்ப்பு குறை வாக உள்ள நிலையில் இதற் கான போட்டி அதிகரித் துள்ளது. இப்பிரச்சனையை தீர்க்க மாநில அரசு கூடுதல் அரசு கல்வி நிறுவனங்களை துவக்கவும், தனியார் கல்வி நிறுவனங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறவும் முன்வர வேண்டும். மேலும் கல்விக்கட்டண உயர்வை முறைப்படுத்திட சட்டம் இயற்றிட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்க ளில் சென்டாக் மாணவர் சேர்க்கைக்காக 2007 வரை யில் எழுத்துத் தேர்வு நடை பெற்று வந்தது. இதனால் சமூக பொருளாதார ரீதி யாக பின்தங்கிய, மற்றும் குறைவான கட்டமைப்பு வசதிகொண்ட கல்வி நிறுவனங்களில் பயின்ற கிராமப்புற மாணவர்க ளுக்கு உயர்கல்வியில் வாய்ப் புகள் மறுக்கப்பட்டன.
 
இந்தப்பின்னணியில் பல்வேறு அரசியல் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கடும் நிர்பந்தத்தால் எழுத்துத் தேர்வு கைவிடப்பட்டு மதிப்பெண் அடிப்படை யில் தகுதித்தேர்வு நடை பெறுகிறது. இதனால் கிரா மப்புற மற்றும் சமூக ரீதி யாகவும் பொருளாதார ரீதி யாகவும் பின்தங்கிய ஏழை மாணவர்களும் உயர்கல்வி வாய்ப்புகளை பெற்று வரு கின்றனர்.எனவே புதுச் சேரி யூனியன் பிரதேசத் தின் பாரம்பரியம், மக்கள் ஒற்றுமையை பாதுகாத்திட உயர் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளித்திட மாநில அரசு உறுதியான நடவ டிக்கை எடுத்திடவும், மாநிலத்தில் தற்போது  எழுந்துள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க மாநில முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.
Read more...
Friday, 6 July 2012

பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி எஸ்.எப்.ஐ போராட்டம்..!

0 comments
கல்வியில் பிரந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,காரைக்கால்,மாஹே,யா
ணம் உள்ளிட்ட பிரதேச மாணவர்களுக்கு உயர்கல்வியில் சமவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.தற்போது மாணவர்களிடேயே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பிரந்திய இடஒதுக்கீட்டை உடனே ரத்து செய்ய வேண்டும்.அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறைகளை போக்க வேண்டும்.கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும்.கல்வி உரிமை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டன கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது.,
புதுச்சேரி கல்வித்துறை அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் அரிகரன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் ஆனந்து,இணை செயலாளர்கள் ரஞ்சித்,சாரதி,வாலிபர் சங்க நிர்வாகிகள் பி.சரவணன்,ஆர்.சரவணன்,கதிரவன்,பிரபுராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.பின்னர் கல்வித்துறை அதிகாரியை  சந்தித்து மாணவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட அதிகாரி கழிவறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக மொபைல் டாய்லட் வசதி செய்து தருகிறேன் என்று உறுதியளித்தார்.முன்னதாக மாணவர்கள் வகுப்புகளை புறகனித்து ஊர்வலமாக சென்று கல்வித்துறை முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Read more...
 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com