Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 20 June 2012

டைம்ஸ் ஆப் இந்தியா அவதூறு செய்தி - மாணவர் சங்கம் கண்டனம்

0 comments

‘டைம்ஸ்ஆப்இந்தியா’பத்திரிகையின் அவதூறுச் செய்திக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கே.எஸ்.கனகராஜ், செயலாளர் ஜோ.ராஜ் மோகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:2012 ஜூன் 19 தேதிய ‘டைம்ஸ் ஆப் இந் தியா’ நாளிதழில் 3ம் பக்கத்தில் ‘உடயளா அயசமள சநடியீநniபே டிக ஊடிடடநபந’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி யுள்ளது. அதில் ஜூன் 18 அன்று பச் சையப்பன் கல்லூரி மாணவர்களால் சென்னை மாநகர பேருந்து தாக்கப்பட் டது என்றும், அதில் பலர் காய மடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது என்றும், இதற்கு அடிப்படைக் காரணம் 2011, மார்ச் 7 அன்று நடந்த எஸ்.எப்.ஐ. ஆதரவு மாணவர் மீதான தாக்குதல் மற் றும் அதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் கல்லூரி வளாகத்திலேயே போராட்டம் நடத்தியது. அப்போராட் டம் வன்முறையாக மாறியது. அதிலிருந்து இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகின் றன என்று எழுதப்பட்டுள்ளது.மேற்கண்ட செய்தியினை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக மறுக்கிறது.

இது பொய்யான செய்தி ஆகும். டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிடுவதை போல எத் தகைய நிகழ்வும் நடக்கவில்லை. இந்திய மாணவர் சங்கமும் அப்படியொரு சம் பவத்திற்காக அச்சமயத்தில் கல்லூரிக்குள் போராட்டம் நடத்தவில்லை. மேலும் சமூகத்தின் எந்தத் தரப்பிலிருந்து வன் முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அதை எஸ்.எப்.ஐ கண்டித்தே வந்துள்ளது.மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப் பன் கல்லூரிகள் முறையே அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் ஆகும். இக்கல்லூரியில் சென்னையில் உள்ள சாதாரண, உழைப்பாளி மக்களின் வீட்டு பிள்ளைகள் பயின்று வருகின்றனர். போதிய ஆசிரியர் இன்மை, அடிப்படை வசதிகள் இன்மை, மாணவர்களின் பன் முகத்திறனை வளர்க்க வாய்ப்பின்மை, ஆய்வகம், விளையாட்டு மைதானம் மற் றும் உபகரணங்கள் பற்றாக்குறை ஆகி யவை முக்கியப் பிரச்சனைகளாக உள் ளன.சிறப்பான உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பின்மையே, மாணவர்களை கல்வி நிலையத்தின் அன்றாட நடவடிக்கை களில் ஒன்றிணைய விடாமல் தடுத்து, திசை திருப்புகிறது. வன்முறை உள்ளிட்ட சமூக சீர்குலைவு நடவடிக்கைகளை நோக்கி மாணவர்கள் தள்ளப்பட, இதுவே அடிப்படை காரணம் என்று இந்திய மாண வர் சங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத டைம்ஸ் ஆப் இந்தியா, இந்திய மாணவர் சங்கத்தின் மீது அப்பட்டமான பொய்யையும் அவதூறை யும் செய்தியாக வெளியிட்டுள்ளது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையின் இந்த நெறியற்ற செயலை இந்திய மாண வர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள் ளனர்.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com