Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Friday, 29 June 2012

புதுச்சேரி பல்கலைகழக பிரச்சனை - பிரதமர் தலையிட எஸ்.எப்.ஐ கோரிக்கை..!

0 comments
புதுச்சேரி மத்திய பல்கலைகழக கட்டண உயர்வை எதிர்த்து மணவர்கள் சங்கங்கள் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 
இந்திய மாணவர் சங்க புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆனந்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியது வருமாறு,புதுச்சேரி பல்கலைகழகத்தில் உணவு கட்டண உயர்வை தொடர்ந்து கல்விகட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.குறிப்பாக இந்திய நாட்டு தலைநகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தை விட 50முதல் 60 மடங்குவரை கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.பல்கலைகழக மாணவர்கள் உள்ளும்,வெளியும் அரசியலில் ஈடுபடக்கூடாது என சர்வாதிகார உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
 
மிகப்பெரிய
ஜனநாயக நாடான இந்தியாவில் தான் புதுச்சேரி மத்திய பல்கலைகழகம் இருக்கிறதா என்ற ஐயமும் எழுகிறது.பல்கலைகழக துணைவேந்தர் தரின் பணிக்காலம் முடிந்த பின்னும் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.இககாலத்தில் மத்திய மனிதவளத்துறை வழிகாட்டுதலை மீறி பல்கலைகழகத்தில் முக்கிய நிர்வாக முடிவுகள் மேற்கொள்ளபடுகிறது.கட்டுமான பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுகிறது.மதிப்பெண் மோசடியை கண்டுபிடித்த பல்கலைகழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கு மந்த நிலையில் உள்ளது.புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைகழகம் இணைக்கப்படவில்லை.இதை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து பொராடி வருகிறது.இப்பிரச்சனை குறித்து  புதுச்சேரிக்கு வருகைதரும் பிரதமர் மன்மோகன்சிங் அவரகள் உரிய முறையில் தலையிட்டு தீர்வு காண மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.மேலும் பிரதமர் சென்ற பின்னர் பல்வேறு மாணவர் இயக்கங்கiயும்,ஜனநாயக இயக்கங்களையும் இணைத்து  அதற்கான போராட்டத்தை நடத்த எ°எப்ஜ தீர்மாணித்துள்ளது.

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com