Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis

 
Wednesday, 27 June 2012

கருமேகங்கள் நமது பொருளாதாரத் தைச் சூழ்ந்துள்ளன - சீத்தாராம் யெச்சூரி..!

0 comments

உள்நாட்டிற்கு உதவாத உத்திகள்!
சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகை யில் கருமேகங்கள் நமது பொருளாதாரத் தைச் சூழ்ந்துள்ளன. கடந்த பத்தாண்டு களில் வளர்ச்சிவிகிதம் மிகக்குறைந்து காணப்படுகிறது. பணவீக்கமும் விலை வாசியும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. தொழில் உற்பத்திக்கான குறியீடு, அதிலும் குறிப்பாக உற்பத்தித் துறையில் கீழ் நிலைக்கு சமீபத்தில் இறங் கியுள்ளது. சென்சக்ஸ் புள்ளிகள் தற்போது 24சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இவை நம் நாட்டில் வேலையின்மை அதிகரிப்பதற்கு தவிர்க்கவியலாத பாதிப் புக்களை உருவாக்கியுள்ளன. அமைப்பு சார்ந்த துறையில் மட்டும் குறைந்தபட்சம் 123 பஞ்சாலைகளும் நூற்பாலைகளும் மூடப்பட்டு 44,681 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நம் நாட்டில் விவசாயத் துறையினை அடுத்து பெரிய துறையான, ஜவுளித் தொழிலில், 45 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக ‘ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன் சில்’ (ஹயீயீயசநட நுஒயீடிசவ ஞசடிஅடிவiடிn ஊடிரnஉடை) தெரிவித்துள்ளது. நம் நாட்டின் 65சதவீதம் ஆடை ஏற்றுமதி, அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய யூனியனுக்குமே செய்யப் படுகிறது. இவ்விரண்டு நாடுகளுமே இன்று கடுமையான பொருளாதார மந்தத் தின் விளிம்பில் நிற்பதால், இந்தியாவின் நிலை இன்னும் மோசமடையக் கூடும்.

ஐரோப்பிய யூனியன்?

ஐரோப்பிய யூனியனில், நிவாரணம் அளித்து மீட்டெடுக்க வேண்டிய நான் காவது நாடாக, ஸ்பெயின் காணப்படு கிறது. ஐரோப்பிய நிதித்துறைத் தலைவர் கள் 100 பில்லியன் யூரோக்களுக்கான மீட்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள் ளனர். ஐரோப்பிய நிதி நிலைத்தன்மை பாதுகாப்பு அமைப்பின் நிதிக் கையிருப்பு, இப்போது 440 பில்லியன் யூரோ மட்டுமே. இவ்வமைப்பு, ஏற்கெனவே அயர்லாந் திற்கு 18 பில்லியன் யூரோ, போர்ச்சுக்கல் லிற்கு 26 பில்லியன் யூரோ மற்றும் கிரீ ஸிற்கு 145 பில்லியன் யூரோ மீட்புத் தொகை வழங்கியுள்ளது. ஐரோப்பிய நிலைத்தன்மை பாதுகாப்பு ஏற்பாட்டில் (நுரசடியீநயn ளுவயbடைவைல ஆநஉhயnளைஅ) 500 பில்லியன் யூரோ வரை கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ஸ்பெயினுக்கு வழங்கவிருக்கும் மீட்புத் தொகையைக் கணக்கில் கொண்டால், நிதியத்தில் எஞ்சியிருப்பது 30 சதவீதம் மட்டுமே. வேறு வார்த்தைகளில் கூறுவ தானால், ஐரோப்பிய மண்டலத்தின் நெருக்கடி இன்னும் மோசமாகி ஐரோப்பிய யூனியனின் இருத்தலையே அச்சுறுத்து வதாக மாறியுள்ளது.

இந்தியாவின் மீது...
இந்நெருக்கடியின் பாதகமான விளை வுகளை இந்தியா சந்திக்குமெனவும், அதன் அலைகள் நம்மை பெரிதளவில் பாதிக்குமெனவும், இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் எச்சரித்துள் ளார். இருப்பினும், இது எதையும் கண்டு கொள்ளாமல், வணிக அமைச்சகம் ஜூன் 4 அன்று கூடுதலான அந்நிய வர்த் தக கொள்கையினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதிக்காக ரூ. 1200/- கோடி மதிப்பீட்டில், பல்வேறு அறிவிப்புக் கள் வெளியிடப்பட்டுள்ளன. 2011-12-ஆம் ஆண்டில் ஏற்றுமதி 303.7 பில்லியன் டாலர்களை, அதாவது, 21 சதவீத வளர்ச் சியை எட்டியது. ரூபாய் மதிப்புக் குறைவு ஏற்றுமதிச் சந்தையில் நமக்கு இம்முறை உதவவில்லை. ரூபாய் மதிப்பு பெருமளவு சரிந்தும் கூட, இந்த ஆண்டு ஏற்றுமதி 3.2 ரூ சரிந்துள்ளது. பொதுவாக, ரூபாயின் வீழ்ச்சியினால் நம் நாட்டுப் பொருட்கள் அந்நிய நாடுகளில் மலிவாகக் கிடைக்கும். எனவே, விற்பனையின் அளவு அதிகரிக் கும். இருப்பினும், உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் ஏற்பட்ட கிராக்கி மந்தத்தினால், அது சாத்தியமாக வில்லை. ஏற்றுமதி, 360 பில்லியன் டாலர் என வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில், ஐ.மு.கூட்டணி அரசு, ஏற்றுமதியை அதி கரிக்க ஏழு அம்ச உத்தியை உருவாக்கி யிருப்பது வேடிக்கையானதே. 2010-ல் 13.8 சதவீத வளர்ச்சியை எட்டிய உலக வர்த்தகம் 2011-ல் 5 சதவீத மாகக் குறைந்துள்ளது.

அது 2012-ல், 3.7 சதவீதமாகக் குறையும் என உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளது. இத னால், தங்களது பொருளாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பல நாடுகள் வர்த்தக நடைமுறைகளை கட்டுப்படுத் தும். இவை நமது ஏற்றுமதியில் பாதக மான விளைவுகளை உருவாக்கும். இந்நிலையில் ஏற்றுமதிக்காக ஒதுக்கப் பட்டுள்ள 1200 கோடி ரூபாய், ஏற்றுமதி யாளருக்கு உதவுமே ஒழிய ஏற்றுமதியின் அளவை அதிகரிக்காது. அதற்கு அந்நிய மண்ணில் நமது பொருட்களுக்கான கிராக்கி வளர வேண்டும். உள்நாட்டில் பட் ஜெட் சலுகைகளை அளிப்பதன் மூலம், அந்த கிராக்கியினை உருவாக்க இயலாது. கூடுதலாக, ஏற்றுமதியின் வளர்ச்சிக்காக (ஆடை ஏற்றுமதியில்) இந்தியாவின் உற் பத்தித்துறை, சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் போட்டியை சமா ளிக்க வேண்டியுள்ளது. எனவே, இத்த கைய சலுகைகள் இந்திய ஏற்றுமதியாளர் களின் லாபப் பங்கினைப் பாதுகாக்க மட் டுமே உதவும். மறுபுறத்தில், இது தேவை யில்லாமல், நிதிப் பற்றாக்குறையை பெருமளவு உயர்த்தும்.

அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்!

நமது பொருளாதார மந்தத்தை மாற்று வதற்கான செயலில் இறங்குவதற்கு பதி லாக ஐ.மு.கூட்டணி-2, இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் சர்வதேச நிதிமூல தனத்திற்கும் பெருமளவிலான லாபத் தைப் பெருக்கித் தரும் முனைப்பில் இருக் கிறது. இவை, சமீபத்திய காங்கிரசின் செயற்குழுக் கூட்டத்தின் முடிவின்படி அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களில் இடம் பெற்றுள்ளன. பெருமளவிலான அந்நிய நிதியின் பங்களிப்போடு பென் ஷன் நிதி தனியார்மயமாவதற்கான முயற்சி தென்படுகிறது. அதே போன்று, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய மூலதனத் தின் பங்களிப்பை உயர்த்துவது, அந்நிய வங்கிகளுக்கு இந்திய தனியார் வங்கி களை எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குவது ஆகியவை விரைவில் செயல்படுத்தப்படவிருக்கின்றன. 2004 முதல் நவீன தாராளவாத வரைபடத்தில் இத்தகைய சீர்திருத்தங்கள் இடம் பெற் றிருந்தன. இருப்பினும், ஐ.மு.கூட்டணி-1ல் இடம் பெற்றிருந்த இடதுசாரிக் கட்சி கள் அவற்றை தடுத்து நிறுத்தினர். இத னால், 2008 உலக நிதித்துறை சரிவி லிருந்து இந்தியப் பொருளாதாரம் பாது காக்கப்பட்டது. அத்தகைய பாதுகாப்பு வளையம் தற்போது இல்லை.

சரியான பாதை நோக்கி...
உள்நாட்டு கிராக்கியை அதிகப்படுத்து வதன் மூலமே இந்தியப் பொருளாதாரத் தைப் புனரமைக்க முடியும். கட்டுக்கடங் காத விலைவாசி உயர்வாலும், பொரு ளாதார ஏற்றத் தாழ்வுகளினாலும், கிராக்கி உறிஞ்சப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களில் ஊக வர்த்தகத்தினை தடை செய்வதன் மூலமே, இவற்றை மாற்றியமைக்க இயலும். கட்டமைப்பில் குறிப்பிடும் படியான பொது முதலீடுகளை செய்யும் போதே, அதிக அளவிலான வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கிட முடியும். கடந்த 2011-12 பட்ஜெட்டில் பற்றாக்குறை ரூ. 5.22 லட்சம் கோடி. ஆனால், வாரி வழங்கப்பட்ட வரிச்சலு கைகள் மட்டும் ரூ. 5.28 லட்சம் கோடி. இவ்வாண்டு அவற்றைத் திரும்பப் பெறு வதன் மூலம் மட்டுமே, நாட்டுக்கு மிகவும் தேவைப்படும் கட்டமைப்பிற்கான முத லீட்டிற்கு நிதி ஆதாரத்தினை உருவாக்கி விட முடியும். இத்தகைய சலுகைகளை வாரி வழங்குவதற்கு பதிலாக வரிகளை முறை யாக வசூல் செய்தால், பட்ஜெட் பற்றாக் குறையை ஒரு புறம் குறைப்பதோடு, மறுபுறம் பெருமளவிலான பொது முதலீடு களையும் செய்ய இயலும். இதன் அடுத்த கட்டமாக வேலை வாய்ப்பு உருவாக்கப் படுவதோடு மொத்த உள்நாட்டு கிராக்கி பெருமளவில் உயர்த்தப்படும். இதனால் நமது பொருளாதாரம் ஆரோக்கியமான புனரமைப்புப் பாதையில் பயணிக்கும். முதலாளிகளின் லாபத்தினை மேலும் அதிகரிப்பதற்கு உதவும் வகையில், வரிச் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலமே, பொருளாதாரத்தை புனரமைக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையினை ஐ.மு.கூட்டணி-2 அரசு கைவிட்டால் மட்டுமே இது சாத்தியம்.

தமிழில் : ஜெ.விஜயா, மதுரை நன்றி : ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்(11.06.2012)

Leave a Reply

 
SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com